You are on page 1of 1

திறந்த முடிவு கட்டுரைக்கான புள்ளி அமைப்பு 1.

பத்தி - பத்தி அமைப்பு முறைக்குப் புள்ளிகள்


வழங்கப்படுகின்றன. இப்பகுதியில் பத்திகள் முறையாகவும் சரியான அளவிலும் இருக்க
வேண்டும். குறைந்தது 7 பத்திகளாவது இருத்தல் வேண்டும். ஒரு பத்தியில் 3 - 5 வாக்கியங்கள்
இடம் பெறலாம். 2. வாக்கியம் - வாக்கியம் அமைத்தல் என்பது கட்டுரைக்கான
அடிப்படையாகும். மாணவர்கள் கட்டுரையில் அமைத்திருக்கும் வாக்கியங்களுக்கும் புள்ளிகள்
வழங்கப்படுகின்றன. ஒரு வாக்கியம் குறைந்தது 5 சொற்களுக்கு மேல் இருக்க வேண்டும். 3.
சொல்வளம் - கட்டுரையில் சொல்வளம் என்பது முக்கியமானது. கலைச்சொற்கள்,
அருஞ்சொற்கள் போன்றவற்றை பயன்படுத்தி கட்டுரை எழுதிதல் அவசியம். 4. நிறுத்தற்குறிகள்
- கட்டுரையில் நிறுத்தற்குறி பயன்பாட்டிற்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. முற்றுப்புள்ளி,
காற்புள்ளி போன்றவற்றை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். 5.
எழுத்துப்பிழைகள் - எழுத்துப்பிழைகள்/இலக்கணப் பிழைகள் கட்டுரையில் எழுதுதல் கூடாது.
புள்ளிகள் குறைக்கப்படும். எழுத்துப்பிழைகள் குறைவாக இருப்பின் இந்தப் பகுதியில்
மாணவர்களுக்குப் புள்ளிகள் அதிகமாகக் கிடைக்கும். 6. கருத்து - திறந்த முடிவு கட்டுரையில்
கருத்துகள்தான் மிக முக்கியம் வாய்ந்தவையாகும். ஒவ்வொரு கட்டுரையிலும் குறைந்தது 5
கருத்துகள் இடம் பெறுதல் அவசியம் ஆகும். அந்தக் கருத்துகள் ஒவ்வொன்றும் தெளிவாக
விளக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் சான்றுகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். முதன்மை
கருத்து - துணைக்கருத்து - எடுத்துக்காட்டு ஒரு சொல் கட்டுரையாக இருந்தாலும்,
தன்கதையாக இருந்தாலும் புள்ளிகள் இப்படித்தான் வழங்கப்படுகின்றன. வடிவக்
கட்டுரைகளுக்கு மட்டும் வடிவத்திற்குத் தனியாகப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்:
கே.பாலமுருகன் (தமிழ் மொழி சிறப்பு ஆசிரியர்)

Mine coins - make money: http://bit.ly/money_crypto

You might also like