You are on page 1of 1

நான் ஒரு பறக்கும் தட்டானால் (கற்பனைக் கதை) ஆண்டு 4

பறவையைப் போல் வானில் சிறகடித்துப் பறக்க அனைவரும் விரும்புவர்.


அதுபோல் தான் நானும். ஒருவேளை நான் பறக்கும் தட்டானால்
எப்படியிருக்கும் என்று நினைத்ததுண்டு.

நான் பறக்கும் தட்டானால் பறவைகளைவிட வானில் அதி உயரத்தில்


பறந்து மகிழ்வேன். பூமியை விட்டு வின்வெளியில் கிரகம் விட்டு கிரகம்
பயணிப்பேன். என்னால் விமானத்தை விட அதி வேகமாக பயணிக்க
முடியும். மின்னல் வேகத்தில் ஒளியின் வேகத்தை மிஞ்சும் அசுரனாய்ப்
பறப்பேன்.

வின்வெளி வீரர்கள் இனி என்னைப் பயன்படுத்தி வின்வெளியில்


பயணிக்கலாம். என்னால் அவர்களை செவ்வாய் கிரகத்திற்கு மிகக்
குறுகிய நேரத்தில் கொண்டுச் சேர்க்க முடியும். இதனால் அவர்களின்
நேரமும் சக்தியும் மிச்சப்படும்.

அதோடு மட்டுமின்றி, என்னைப்போல் நிறைய பறக்கும் தட்டுகள்


உருவானால் சாதாரண மக்களும் என்னுடன் பயணித்து வின்வெளியின்
அழகைக் கண்டு இரசிக்க முடியும். மனிதர்களின் வின்வெளிப் பயணம்
இனி சுலபமாகிவிடும். அவர்கள் நினைத்த மாத்திரத்தில் பூமியை விட்டு
வேறு கிரகங்களுக்குப் பயணிப்பது சாத்தியமாகும்.

ஒருவேளை இந்த கற்பனை நிஜமானால், இனி மனிதர்கள் இந்த பூமியைத்


தவிர்த்து செவ்வாய் போன்ற கிரகங்களில் குடியேறுவது சாத்தியமாகும்.
இந்த கனவு நினைவேற நான் ஒரு கருவியாக இருப்பதில் பெருமைக்
கொள்வேன்.

You might also like