You are on page 1of 6

தன்கதை / சுயசரிதை

1. சுத்தம் – தொழிற்சாலையின் சூழல்

2. பயம் – பெரிய இயந்திரங்கள் – அறுவை சிகிச்சை செய்வது போல்

3. நிம்மதி – பெட்டியில் அடைத்தல் – நீண்ட உறக்கம்

4. வியப்பு – வெளியுலகைப் பார்த்தல் – அழகான காட்சிகள், குளிர்ச்சியான

காற்று, இதமான வாசம்

5. தைரியம் – நண்பர்களின் துணை

6. பிரிவு – கதறி அழுதல் (யாருக்கும் விளங்கவில்லை)

7. மனம் நடுங்கியது – போகும் இடத்தில் காத்திருக்கும் ஆபத்தை எண்ணி

8. கூச்ச்ம் – தொடும்பொழுது

9. களைப்பு / வலி – பயன்பாடு

10. பெருமை /மகிழ்ச்சி

11. தற்கால நிலை


நான் ஒரு பேனா (மாதிரி 1)

நான் பலருக்கு எழுதுவதற்கு உதவுவேன். என்னை யார் எறு தெரிகிறதா? நான்தான்

பேனா. என் பெயர் ‘பார்க்கர்’. நான் அமெரிக்காவில் உள்ள ஒரு தொழிற்சாலையில்

பிறந்தேன். தனித்தனியாக இருந்த என்னைப் பணியாளர்கள் ஒன்று சேர்த்து உயிர்

கொடுத்தனர். பின்னர், என்னையும் என் நண்பர்களையும் கப்பல் மூலமாக

மலேசியாவிற்கு இறக்குமதி செய்தனர்.

நான் மலேசியாவில் உள்ள ஒரு புத்தகக் கடையில் காட்சிக்கு ஒரு கண்ணாடி

பெட்டியில் வைக்கப்பட்டேன். அங்கு நான் மிகவும் கவர்ச்சியாக இருந்தேன். அங்குள்ள

பணியாளர்கள் என் மேனியில் விலைப் பட்டியலை ஒட்டினர். என் விலை ரி.ம 150

ஆகும். ஓரிரு வாரங்கள் கடந்தோடின. ஒரு நாள் ஓர் இளைஞர் அந்தக் கடைக்கு வந்தார்.

அவர் என்னை வாங்கிச் சென்றார்.

அன்று முதல் அவர் எனக்கு எஜமானியானார். அவர் எங்குச் சென்றாலும் என்னை

அவருடைய சட்டைப் பையில் அணிந்துச் செல்வார். அவர் என்னை எழுதுவதற்குப்

பயன்படுத்துவார். அவர் என்னை மிகவும் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்தார்.

நான் அவருக்கு நெருங்கி தோழனாகி விட்டேன். என் உயிர் உள்ளவரை நான் என்

எஜமானுக்குச் சேவை செய்வேன். நான் அவரை எவ்வேளையிலும் வெறுக்க மாட்டேன்.


நான் ஒரு பேனா (மாதிரி 2)

சிறுவர் முதல் முதியோர் வரை என்னை எழுதப் பயன்படுத்துவார்கள். என் பெயர்

‘ஸ்தபிலோ’. என்னைப் பொதுவாகப் பேனா என்று கூப்பிட்டாலும் எனக்குச் சிறப்பாகப் பல

பெயர்கள் இருக்கின்றன. அவை பார்க்கர், டன்ஹில், யூத் போன்றவையாகும்.

நான் பிரிட்டன் நாட்டுத் தொழிற்சாலை ஒன்றில் பிறந்தேன். என்னைப் போலவே

ஆயிணக்கானவர்கள் அங்கே தயாராகி உலகெங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நானும்

அங்கிருந்து கப்பல் வழியாகப் பினாங்குத் துறைமுகத்தை வந்தடைந்தேன்.

ஒரு வியாபாரி என்னையும் என் உடன் பிறப்புக்களையும் வரவழைத்திருந்தார். எங்களை

அவரது கடைக்கே கொண்டுவந்து வாடிக்கையாளர்களிடம் பேரம் பேசி விற்று

விற்றார்.கோலாலம்பூரிலுள்ள ஒரு கடையில் பல நண்பர்களுடன் சேர்த்து எங்களையும்

விற்பனைக்கு வைத்து விட்டார். பல இனத்தவர்கள் அன்றாடம் எங்களைப் பார்த்துப்

பூரிப்படைந்தனர்.

ஒரு நாள் திரு.மண ீயம் என்பவர் என்னை வாங்கி தன் மகன் ராமுவிற்குப் பரிசாக

கொடுத்தார். ராமு என்னை மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான். ராமு ஒவ்வொரு

நாளும் என்னைப் பயன்படுத்துவான். என் பசிக்கு உணவாக அவ்வப்போது மை கொடுப்பான்.

மூன்று வருடங்கள் ஓடி மறைந்தன.

ஒரு நாள் ராமு கவனக்குறைவாக என்னைத் தன் மேசை மீ து வைத்துவிட்டு வெளியே

சென்று விட்டான். அச்சமயம் தற்செயலாக அங்கு வந்த ரானுவின் தம்பி மேசை மீ து இருந்த

எடுக்க முயன்றபோது நானும் அதோடு உருண்டு வந்து கீ ழே விழுந்தேன். அவ்வளவுத்தான் என்

உடம்பில் பல காயங்கள் ஏற்பட்டு நான் விகாரமாகக் காட்சியளித்தேன்.

அங்கு வந்த ராமு என்னைப் பார்த்து முகம் சுளித்தான். நான் பெருமூச்சி விட்டு

கொண்டேன். என்னை வட்டின்


ீ மூளையில் போட்டு விட்டான். நான் இன்னும் அங்கேயே

கேட்பாரற்றுக் கிடக்கிறேன்.
நான் ஒரு குடை (மாதிரி 3)

நான் குப்பை மேட்டிலே குடியிருக்கிறேன். தேடுவோர் யாருமில்லை. திரும்பி

பார்க்க ஒருவரில்லை. எனது அன்றைய நிலையை எண்ணிப் பார்த்து ஏங்குகிறேன். என்

கதையைக் கேளுங்கள்ல; கூறுகிறேன்.

ஜப்பானிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் என்னையும் என் நண்பர்கள் பல

நூற்றுக் கணக்கானவர்களையும் உருவாக்கினார்கள். எங்கள் எல்லோரையும் ஒன்று

சேர்த்து லாரி ஒன்றின் மூலமாக கப்பல் துறைமுகத்திற்கு அனுப்பினார்கள். நாங்கள்

அங்கிருந்து கப்பலில் ஏற்றப்பட்டோம். பின்னர் சில நாள் பிரயாணத்திற்குப் பின்

மலேசியா கோலகிள்ளான் வந்தடைந்தோம்.

துறைமுகத்திலிருந்து லாரி மூலமாக ஒரு கடைக்கு கொண்டுவரப்பட்டோம்.

கடையில் உள்ளவர்கள் எங்களை அழகாக அடுக்கி வைத்தனர். அங்கே வந்த ஒருவரின்

கண்களில் நானே முதலில் பட்டேன். அவர் என்னை வாங்கி தன் மகனுக்குப் பிறந்தநாள்

பரிசாகக் கொடுத்தார். அப்பையனும் என்னை மிக ஆசையாக வத்திருந்தான். என்னை

மழை வெயிலுக்கு உபயோகிப்பான்.

ஒரு நாள், நான் நன்றாக நனைந்திருந்தேன். அவன் என்னை புத்தகப் பையுள்

வைக்காமல் பேருந்தில் கண்ணாடி ஓரத்தில் செருகினான். இறங்கும் போது என்னை

மறந்து விட்டான். பேருந்து நடத்துனர் என்னைக் கவனித்து விட்டார். அவர் என்னைத்

தன் மகனுக்குக் கொடுத்தார். அவனும் என்னை மிக அன்பாக வைத்திருந்தான். ஆனால்

விதி யாரை விட்டது. ஒரு நாள், அவ்வட்டில்


ீ இருந்த எலிகளுக்கு நான் உணவாகி

விட்டேன்.

மறுநாள் என் நிலையைக் கண்டு அப்பையன் கண்ண ீர் வடித்தான். பின்னர்,

சிலநாள் மூலையில் கிடந்தேன். அவன் தந்தை என்னைத் தூக்கி இங்கே வசினார்.


இப்போது என் நிலையை எண்ணி இங்கே கலங்குகிறேன். என் வேதனையைத் தீர்க்க

யாரும் உண்டோ?
நான் ஒரு பந்து (மாதிரி 4)

நான் ஒரு பந்து. என் பெயர் ‘ஹீரோ’. நான் வட்ட்மாக இருப்பேன். நான் பல

வர்ணங்களில் இருப்பேன். நான் பேராக்கிலுள்ள பந்து தொழிற்சாலையில் பிறந்தேன். நான்

பிறக்கும்போது என்னுடன் சில நண்பர்களும் பிறந்தனர்.

என்னையும் என் நண்பர்களையும் செய்து முடித்த பின்பு, எங்களைப் பெரிய

பெட்டியில் வைத்தனர். அந்த பெட்டிகள் நாங்கள் உறங்குவதற்கு ஏற்ற வகையில்

அமைக்கப்பட்டிருந்தன.

ஒருநாள் நானும் என் நண்பர்களும் பெட்டியில் கொண்டிருந்த பொழுது, திடீரென

பேச்சு சத்தம் கேட்டுக் கண்விழித்தோம். வெளியில் நின்றுகொண்டிருந்த இருவர் என்னையும்

என் உடன் பிறப்புகளையும் நெகிரி மாநிலத்திற்குக் கொண்டு செல்ல விரும்புவதாகப் பேசி

கொண்டார்கள்.

தொடர்ந்து எங்கள் அனைவரையும் பெட்டிகளில் அடைத்து சிறப்புமிகு சிரம்பான்

நகரத்திற்குக் கொண்டு சென்றனர். என்னையும் என் நண்பர்களையும் ஒரு சீனர் கடையில்

அழகான ஓர் இடத்தில் அடுக்கி வைத்தனர். கடைக்கு வருபவர்கள் எங்களில் யாரைப்

பிடிக்கிறதோ அவரை வாங்கிச் செல்பவர். ஒருநாள் ஒரு பெண்மணி என்னையும் என்

நண்பர்களையும் சுற்றும் முற்றும் பார்த்தார். இறுதியாக என்னைத் தேர்ந்தெடுத்தாள்.

என்னுடைய விலை ரிங்கிட் மலேசிய 10 ஆகும்.

அவள் தன் தம்பி பிறந்தநாளுக்காக என்னை பரிசாகக் கொடுத்தான். அவள் தம்பியின்

பெயர் சிவா. அவன் தினந்தோறும் என்னைப் பயன்படுத்துவான். மாலை வேளைகளில் தன்

நண்பர்களுடன் என்னை வேகமாக உதைப்பான். மைதானத்திற்குச் சென்று விளையாடுவான்.

அவன் வட்டிலுள்ள
ீ தம்பி தங்கைகளும் என்னைப் பயன்படுத்துவர். இருப்பினும், நான்

அவர்கள் மீ து சினம் கொள்ளவில்லை.

இன்றோடு என்னை வாங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் முன்னைப்

போலவே உறுதியாக இருக்கிறேன். தொடர்ந்து என் கடமையை நல்ல முறையில் செய்து

வருகிறேன்.

You might also like