You are on page 1of 3

பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி

சிற்றுண்டி தினவிழா அறிக்கை

       கடந்த 30.7.2011 வெள்ளியன்று பத்தாங் மலாக்க தமிழ்ப்பள்ளியில் சிற்றுண்டி


தினம் சிறப்பாக நடைந்தேறியது.பள்ளியிலுள்ள எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும்
மற்றுமின்றி பெற்றோர்களும் இச்சிற்றுண்டி  தினம் சிறப்பாக நடைப்பெறுவதற்கு
ஒத்துழைப்பு நல்கினர்.

       ஒருவாரத்திற்கு முன்பே ஆசிரியை கமலம் கூப்பன்களைத் தயாரித்து


எல்லோரிடமும் விற்பனைச் செய்தார். அன்றைய தினம் அனைவரும் பணத்திற்குப்
பதிலாகக் கூப்பன்களையே பயன்படுத்த வேண்டும். சிற்றுண்டி தினத்தன்று
ஆசிரியர்களும், மாணவர்களும் நிறைய உணவுகளைச் சமைத்து எடுத்து வந்திருந்தனர்.
எட்டு உணவு கூடாரமும் இரண்டு கேளிக்கை விளையாட்டுக் கூடாரமும்
அமைக்கப்பட்டிருந்தது.

       ஒவ்வொரு கூடாரத்திற்கும் இரண்டு பொறுப்பாசிரியர்களும்  பத்து


மாணவர்களும் நியமிக்கப்பட்டனர். உணவுகள் ஒவ்வொரு கூடாரத்திற்கு ஏற்ப தனித்
தனியே வகைப்படுத்தப்பட்டன. அவை கோழி சம்பல்,’நாசி ஆயாம்’,’நாசி லேமாக்’,
தோசை, இட்டிலி, விரைவு உணவான ‘பெகர்’, ‘நாகெட்’, ’ஹொட் டோக்’, குளிர்
பானங்கள், மற்றும் பழங்களும் உள்ளடங்கும். உணவுகள் மிக சுத்தமாகவும் மற்றவை
ஈர்க்கும் வண்ணமுமாய் இருந்தது. விலை பட்டியலும் ஒட்டப்பட்டியிருந்தது.

       இரு கூடாரங்களில் கேளிக்கை விளையாட்டுகள் தயார் செய்யப்பட்டன. இதற்கு


கூப்பன் 50 சென்னும், கூப்பன் ரி.மா 1.00 பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
காலை மணி 10.00 க்குச் சிற்றுண்டி தினம் ஆரம்பமாகியது. வருகை புரிந்திருந்த
பெற்றோரும், மாணவர்களும், ஆசிரியர்களும், கூப்பன்களைக் கொண்டு அவரவருக்குப்
பிடித்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து வாங்கினர். வியாபாரம் நன்றாகச் சூடுப்பிடித்தது.

       பல மாணவர்கள் விரைவு உணவுகளை அதிகமாக வாங்கி உண்டனர்.


ஏனென்றால், அவ்வுணவு சுடசுட பொரித்துத் தரப்பட்டது. இருப்பினும், ‘நாசி ஆயாம்’,
‘நாசி லேமாக்’ போன்றவற்றை அதிகமானோர் விரும்பி வாங்கினர். குளிர் பானங்கள் பல
வர்ணங்களில் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் இருந்ததால், மாணவர்கள் விரும்பி
வாங்கினர்.
      ஆண் மாணவர்கள் பெரும்பாலோர் விளையாட்டு கூடாரங்களைச் சூழ்ந்து
கொண்டனர். மாணவர்களும் விளையாட்டுகளை குதூகலத்தோடு விளையாடி
மகிழ்ந்தனர். பெற்றோர்கள் உணவுகளை வட்டிற்கு
ீ எடுத்துச் செல்ல பொட்டலம்
கட்டினர்.

     மதியம் 1.00 மணிக்குச் சிற்றுண்டி தினம் ஒரு நிறைவுக்கு வந்தது.


பொறுப்பாசிரியர்களும் மாணவர்களும் தத்தம் கூடாரங்களைப் பிரித்து, அவ்விடத்தைச்
சுத்தம் செய்தனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் உணவு பொட்டலங்களோடு வடு

திரும்பினர். இச்சிற்றுண்டி தினத்தின் வழி பள்ளிக்குப் பெரும் லாபம் கிட்டியது.
இத்தினத்தின் வழி மாணவர்கள் வியாபார நடைமுறைகளைத் தெள்ளத் தெளிவாகப்
புரிந்து கொண்டனர்.

அரிக்கைத் தயாரித்தவர்,                                                 12.8.2011


.........................................
( ராஜா த/பெ பெரியசாமி )
செயலாளர்,
சிற்றுண்டி தின ஏற்பாட்டுக் குழு,

உரை - புறப்பாட நடவடிக்கையினால் ஏற்படும் நன்மைகள்

           மதிப்பிற்குரிய தலைமையாசிரியர் அவர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே


உங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கம். இப்பொன்னாளில், புறப்பாட
நடவடிக்கையினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி உங்கள் முன் பேச வாய்ப்பளித்த
ஆசிரியருக்கு நன்றி.

அவையோர்களே,

          புறப்பாட நடவடிக்கை மாணவர் பருவத்தில் இன்றியமையாததாக


விளங்குகின்றது. வகுப்பில் கல்வியைப் பயிலும் மாணவர்கள் வகுப்பிற்கு வெளியே
மற்ற திறன்களைக் கைவரப் பெறுவதற்குப் பள்ளிப் புறப்பாட நடவடிக்கை பெரிதும்
துணைப்புரிகிறது.

நாளைய தலைவர்களே,

         பள்ளிப்புறப்பாட நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடுவதால், அவர்கள்


அடையும் நன்மைகள் எண்ணிலடங்கா. சீருடை இயக்கங்களில் மாணவர்கள்
ஈடுபடுவதன் மூலம் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. உதாரணமாக,
கூடாரம் அமைத்தல், அணிவகுப்புப் பயிற்சி மற்றும் பிற நடவடிக்கைகளில்
கலந்துக்கொள்ளும் பொழுது மாணவர்கள் பிறரை மதித்தல், ஒற்றுமை, கட்டொழுங்கு,
தன்னம்பிக்கை, நாட்டின் மீ து விசுவாசம், பிறர்பால் அன்பு செலுத்துதல் போன்ற
நற்பண்புகள் மேலோங்கச் செய்கின்றது.மாணவர்கள் இவ்வாரான பண்புகளை கற்று,
பின்பற்றும் பொழுது அவன் ஒரு சிறந்த நற்குடிமகனாகத் திகழச் செய்ய புறப்பாட
நடவடிக்கை முக்கிய பங்காற்றுகின்றது.

அறிவுக்களஞ்சியங்களே,
           தொடர்ந்து, மொழிக்கழகங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் அவர்கள்
மொழியாற்றலை வளர்த்துக் கொள்வதுடன் தலைமைத்துவ பண்பும் மேலோங்குகிறது.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பதற்கேற்ப மாணவர்களின் ஆற்றலை
மேலும் ஊக்கப்படுத்த மொழிக்கழகங்கள் துணைப்புரிகின்றன. எடுத்துக்காட்டாக,
மாணவர்கள் கழகங்களில் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின்
மொழியாற்றலை வெளிப்படுத்தவும், வளர்த்துக்கொள்ளவும் முடிகின்றது.
அதுமற்றுமின்றி, மொழி கழகத்தில் ஒரு மாணவன் தலைவர் பொறுப்பு வகிக்கும்
பொழுது அவனுள் தன்னொழுக்கம், கட்டளை இடுதல், கட்டொழுங்கைக் காத்தல்,
பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல் போன்ற பண்புகள் இணைந்தே வர வாய்ப்புண்டு.

இளம் விளையாட்டு வரர்களே


ீ ,

         “ ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா ” என அன்றே


பாரதியார் பாடியுள்ளார். உடல் நலத்தைப் பேண விளையாட்டு ஒரு முக்கியமானதாக
விளங்குகிறது. புறப்பாட நடவடிக்கையில் விளையாட்டில் கலந்து கொள்ளும்
மாணவர்கள் தங்களின் உடலை உறுதி செய்து கொள்ள முடிகிறது. ஆரோக்கியமாக
வாழ உடற்பயிற்சி முக்கியம் என சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கு
வலியுறுத்தப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் நேரத்தை நல்வழியில்
செலவிடவும், அவர்கள் விளையாட்டில் தங்களின் திறனை வெளிப்படுத்தவும்
முடிகிறது. உதாரணமாக, நமது நாட்டு பூப்பந்து விளையாட்டு வரர்
ீ டத்தோ லீ சொங் வே
ஒரு நேர்காணலில் தனது இந்த வெற்றிக்குக்  காரணம் தனது சிறுவயதிலிருந்தே
புறப்பாட நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான் எனக் கூறினார்.

அன்பார்ந்த மாணவர்களே,

         ஆகவே மாணவர்களே, ஒரு மனிதனை உருவாக்குவது பள்ளிப் புறப்பாட


நடவடிக்கையாகும். நற்பண்புள்ளவனாகவும் , தன்னலம் கருதா மாந்தனாகவும்
உருவாக பள்ளி புறபாட நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கின்றது.ஆகையால்,
ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் புறப்பாட நடவடிக்கையில் ஈடுபட்டு மேன்மை பெற
வேண்டும் என கூறி, நன்றியையும் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.
நன்றி,வணக்கம்.

You might also like