You are on page 1of 1

கைத்தொழில் கற்பதனால் ஏற்படும் நன்மைகள்

கைத்தொழில் என்பது ஏதேனுமொரு உற்பத்தியை விற்பனைக்கு


அனுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் தொழிலாகும். பாய் பின்னுதல், அலங்கார
பொம்மைகள் செய்தல், கைவினைப் பொருட்கள் செய்தல், மின்னியல்
சாதனங்களை பழுதுபார்தத் ல், போன்ற பல கைத்தொழில் செயற்பாடுகள்
அடங்கும். அனைவரும் கைத்தொழில் கற்றுக் கொள்வதன் மூலம் பல பயன்களை
அடைந்து கொள்ளலாம்.
இன்றைய சூழ்நிலையில் படித்தோர் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக
வேலையில்லாப் பிரச்சினை காணப்படுகின்றது. கைத்தொழில் கற்றுக்
கொள்வதன் மூலம் வேலையில்லாப் பிரச்சினை குறைக்கப்படுவதுடன், தனிமனித
வருமானமும் அதிகரிக்கின்றது. எதிர்கால வாழ்ககை ் குறித்து கவலை
கொள்பவர்கள் ஒவ்வொருவரும் தமக்கான ஒரு தொழிலை மேற்கொள்ளுவது
வளமான வாழ்விற்கு சிறந்ததாகும்.
கைத்தொழிலானது நாட்டின் பொருளாதாரத்தின் மேம்பாட்டிற்கு
உறுதுணையாக இருக்கின்றது. சுற்றுலாத்துறையில்தான் அதிகளவிலான
கைத்தொழில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தனிமனிதனின் ஆற்றல்
கைவினைப் பொருளாக மாற்றம் காணும் போது சந்தையில் அதற்கென ஒரு
விற்பனை மதிப்புக் கிடைக்கின்றது. இதனால் தனிமனிதன் வறுமையிலிருந்து
விடுபடுவதோடு நட்டின் பொருளாதாரமும் சிறந்த நிலை அடைய கைத்கொழில்
துணைபுரிகிறது.
கைத்தொழில் ஒவ்வொருவரும் சுயகாலில் நிற்கும் மனக்கடப்பட்டைக்
கொடுக்கின்றது. இதனால், அரசாங்க வேலைக்கு மட்டுமே காத்திருக்கும்
மனப்போக்கும் சபடித்தப் படிப்புக்கு மட்டுமே வேலை என்ற சிந்தனையும்
மாறுகிறது. இன்றையச் சூழலில் வேலையில்லோர் பணம் ஈட்ட பல சமுதாய
சீர்கேடுகளில் ஈடுபடுகிறார்கள். கைத்தொழில் இருப்பின் தவறான வழியில் பணம்
ஈட்டாமல் சுயமாக சம்பாதித்து மற்றவர்களுக்கும் பயனாக விளங்கிட முடியும்.
கிராமப் பொருளாதாரத்தில் கைத்தொழில் முக்கியப் பங்காற்றி வருகின்றது.
அதிகளவிலான கைத்தொழில் மூலப்பொருட்கள் இயற்கையாகக் கிடைக்கக்
கூடியவையாகவும் மறுசுழற்சி செய்யக்கூடியப் பொருளாகவும் உள்ளன.
உதாரணமாகப் பயன்படாத மரக்கட்டையில் சிறு சிற்பம் செய்வதும் பழைய
நெகிழிப் பொருட்களை உறுக்கிப் புதியதாகப் பொருள் வடிவமைப்பதாகும்.
இதனால் சுற்றுச்சூழல் மாசடைதல் கைத்தொழிலால் தடுக்கப்படுகின்றது.
வறுமையின் பிடியில் வாடுபவர்களைக் கைத்தொழில் என்றும்
கைவிட்டதில்லை. இன்றையக் காலச் சூழலுக்கு ஏற்றாற்போல் கைத்தொழிலை
வளர்க்க அரசாங்கம் ‘திவேட்’ மூலம் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
ஆகவே, அதன் மூலம் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டால் அது காலம்
முழுவதும் நம்மை வளமாக வாழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.

You might also like