You are on page 1of 4

ஜோன்
!
ஜோனி !, ”
என்று

ஒருமுறைக்குப் பலமுறை ரகு த செல்லப் பிராணியான

நாய்க்குட்டியை அழைத்தான்.

ஓடி வந்த நாய்க்குட்டியை அணைத்து முத்தமிட்டான். தன் நாயிடம் விளையாடிக்


கொண்டே இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்ததை நினைக்கலானான்.

இரவு நிலாவின் வெளிச்சம் கிராமத்துக்கே ஒளி தந்தது. ரவியும் மாலனும் ஆழ்ந்த


தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

“ வவ்! வவ்வவ்! ,” என்று இரு மணி நேரம் கத்திக் கொண்டிருந்த நாய்க்குட்டியின் சத்தம்
ரவியின் தூகத்தையும் மாலனின் தூக்கத்தையும் கெடுத்தது.
திடுக்கிட்டு எழுந்த இருவரும்,

“ நாளை இரவுக்குள் இதை ஒரு வழி செய்திடனும், ” என்று திட்டமிட்டனர்.

எழுந்து காலைக் கடன்களை முடிந்த ரவியும் மாலனும் முதல் வேளையாக


அத்தெருவில் இருந்த நாய்க்குட்டிக்கு உணவை கிராமத்திலுள்ள கிணறுவரை போட்டுக்
கொண்டே சென்றனர்.

உணவின் நறுமணத்தில் ஏமார்ந்த நாய்க்குட்டி உணவைச் சாப்பிட்டுக்கொண்டே


கிணற்றை அடைந்தது.

இதுதான் சமயம் என்று எண்ணிய இருவரும் ‘லபக்’ என்று பிடித்தனர். தங்களின்


வலையின் மாட்டிய நாய்க்குட்டியைப் பார்த்துச் சிரித்தனர்.

‘தொப்’ என்ற ஓசை. நாய்க்குட்டி நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.


அவர்களோ, “ இன்றோடு தொல்லை ஒழிந்தது,” என்றனர்.

அப்பக்கமாக வந்த ரகுக்கு சத்தம் செவியில் எட்டியது.

“ என்ன சத்தம் ” என்று மெல்ல சிந்தித்துக் கொண்டே சத்தம் நோக்கிய இடத்திற்கு நடை
போட்டான்.

ரவியோ, “ரகு எதற்கு இங்கே வருகின்றான்?,” என்று மாலனிடம் கேள்வி கேட்டான்.

திரும்பிப் பார்த்து, “ ஐயோ! பார்க்கிறானே,” என்றுமாலனிடம் பதற்றத்தோடுகூறினான்.


அருகில் ஒழிந்தவாறே பார்வையிட்டான் மாலன்.

“குளிருதா! இரு உன்னை வெளியே எடுக்கிறேன்.” என்று கூறியவன் வாலியை எடுத்து


அக்கிணற்றுக்குள் நுழைத்துக் காப்பாற்றினான்.

தனது நன்றியைக் கூற அந்நாய்க்குட்டி ரகுவின் கையை நக்கியது.

ஆக்கம்: சந்தியா ( தேசிய வகை பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி )

You might also like