You are on page 1of 4

நான் ஒரு நீர்ப்புட்டி

நான் மனிதனால் உருவாக்கப்பட்டேன். நான் பல வடிவங்களிலும் வர்ணங்களிலும் இருப்பேன். என்னை


மனிதர்கள் பயன்படுத்துவர். குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் என்னை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். என்னுள் நீர்
இருக்கும். இப்பொழுது தெரிகிறதா நான் யாரென்று ? ஆம், நான்தான் நீர்ப்புட்டி.

நான் ஜொகூர் பாருவில் உள்ள ஒரு நீர்ப்புட்டி தொழிற்சாலையில் பிறந்தேன். என்னுடன் சேர்ந்து பல
ஆயிரக்கணக்கான நண்பர்களும் பிறந்தார்கள். நான் உருளை வடிவில் இருப்பேன். நான் வெள்ளை மற்றும் கருப்பு
நிறத்தில் இருப்பேன். என்னுள் இருக்கும் நீர் வெளியாகாமல் இருக்க என் தலைப் பகுதியில் வட்டமான மூடியைப்
பொருத்தியுள்ளனர்.

ஒரு நாள் என்னையும் என் நண்பர்களையும் பெட்டியில் அடுக்கி வைத்தனர். பிறகு, எங்களைக் கனவுந்தில்
ஏற்றினர். அப்போது ஓட்டுனர் ஒருவர் கோத்தா திங்கியில் உள்ள எக்கோன்சேவ் எனும் பேரங்காடிக்குக் கொண்டு
செல்வதாக உரையாடிக் கொண்டிருந்தது என் செவிக்கு எட்டியது. கனவுந்தும் நகர்ந்தது. நாங்கள் இருட்டில்
இருந்ததால் கிடுகிடுவென பயத்தால் நடுங்கினோம்.

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எங்களை அப்பேரங்காடியில் இறக்கினர். அப்பேரங்காடியின்


உரிமையாளர் பணம் கொடுத்து வாங்கினார். அதன் பிறகு, அக்கடையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் என்னையும்
என் நண்பர்களையும் ஒரு நீண்ட கூடையில் அடுக்கி வைத்தார். எங்கள் மீது ரி.ம 25 எனும் விலை ஒட்டப்பட்டது.

ஒவ்வொரு நாளும் அப்பேரங்காடிக்கு அதிகமானோர் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். ஆனால்,


அதுவரை நானும் சில நண்பர்களும் யாருடைய கண்களுக்கும் தென்படாமல் அங்கேயே இருந்தோம். ஒரு நாள் சிறுவன்
ஒருவன் தன் அம்மாவோடு அப்பேரங்காடிக்கு வந்தான். அவனுடைய நீர்ப்புட்டி உடைந்ததால் புதியதாக ஒன்றை
வாங்குவதற்கு அங்கு வந்தான். சுற்றும் முற்றும் பார்த்த அவன், இறுதியில் காந்தம் இரும்பைக் கவர்வது போல நான்
அவனுடைய மனதை ஈர்த்தேன். நான்தான் வேண்டும் என்று குரங்குப் பிடியாக அவனுடைய அம்மாவிடம் பிடிவாதம்
பிடித்தான். அவரும் வேறுவழியில்லாமல் என்னைப் பணம் கொடுத்து வாங்கினார். அச்சிறுவன் மிகவும் உச்சிக்
குளிர்ந்தான்.

என் எஜமான் என்னைச் சுத்தமாகக் கழுவி காய வைத்தார். மறுநாள் காலையில் பள்ளிக்குச் செல்லும் போது
என்னுள் நீரை நிரப்பி எடுத்துச் சென்றார். நான் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் அவருடைய நண்பர்கள் பலர் என்
அழகை இரசித்தனர். என் எஜமான் தன் நண்பர்களிடம் என் அருமை பெருமைகளை எடுத்துக் கூறினார். ஒவ்வொரு
நாளும் என் எஜமான் என்னை மறவாமல் பள்ளிக்குக் கொண்டு செல்வார். அவருக்குத் தாகம் எடுக்கும் போது என்னுள்
இருக்கும் நீரை அருந்திக் கொள்வார். மேலும், பிரத்தியேக வகுப்பிற்குச் சென்றாலும் என்னைக் கையோடு கொண்டு
செல்வார். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தோடு பயணம் மேற்கொண்டாலும் என்னுள் நீரை நிரப்பிக் கொண்டு எடுத்துச்
செல்வார். என் எஜமான் கண் இமை காப்பது போல் என்னை மிகவும் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்
கொள்கிறார்.

வருடங்கள் உருண்டோடின. நானும் நிறம் மாறினேன். என் எஜமான் இடைநிலைப் பள்ளிக்குச்


செல்லவிருப்பதால் என்னை மறுபயனீடு செய்யும் குப்பைத்தொட்டியில் வீசி புதிய நீர்ப்புட்டி ஒன்றை வாங்கினார். என்
வாழ்க்கை இத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், அவ்வழியே அட்டைகளையும்
புட்டிகளையும் சேகரித்துக் கொண்டிருந்த ஓர் ஏழை முதியவர் என்னையும் அவர் வைத்திருந்த நெகிழியில் போட்டார்.
வீட்டிற்குச் சென்றதும் அம்முதியவரும் அவருடைய பேரனும் நெகிழியில் இருந்த புட்டிகளைத் தரம் பிரித்தனர்.
அப்போது அச்சிறுவன் நான் இன்னும் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால், அவன் என்னை ஒரு கைவினைப்
பொருளாக மாற்றி வைத்துக் கொண்டான்.

நான் ஒரு பென்சில்

சிறுவர் முதல் முதியவர் வரை என்னை எழுதப் பயன்படுத்துகிறார்கள். என் பெயர் 2B. என்னைப் பொதுவாக
பென்சில் என்று குறிப்பிட்டாலும் எனக்குச் சிறப்பாகப் பல பெயர்கள் இருக்கின்றன. அவை ஸ்தெட்லர், பைலெட் 
போன்றவையாகும்.
      

நான் ஜெர்மனி  நாட்டுத் தொழிற்சாலை ஒன்றில் பிறந்தேன். என்னைப் போலவே ஆயிரக்கணக்கானாவர்கள்


அங்கே தயாராகி உலகெங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் அங்கிருந்து கப்பல் வழியாக பினாங்குத்
துறைமுகத்தை வந்தடைந்தேன்.
      ஒரு வியாபாரி என்னையும் என் உடன் பிறப்புகளையும் வரவழைத்திருந்தார். எங்களை அவரது கடைக்கே
கொண்டு வந்து வாடிக்கையாளார்களிடம் பேரம் பேசி விற்று விட்டார். மலாக்காவிலுள்ள ஒரு கடையில் பல
நண்பர்களுடன் சேர்த்து விற்பனைக்கு வைத்துவிட்டார். பல இனத்தவர்கள் அன்றாடம் எங்களைப் பார்த்துப்
பூரிப்படைவர்.

    ஒரு நாள் திரு.சுரேஷ் என்னை வாங்கி தன் மகன் பாலாவிற்குப் பரிசாகக் கொடுத்தார். பாலா என்னை மிகவும்
மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.ஒவ்வொரு நாளும் என்னைப் பயன்படுத்துவார். என் கூர்மை குறைந்து விட்டால்
என்னைத் திருகிக் கூர்மையாக்குவார்.

ஒரு நாள் சிவா கவனக் குறைவாக என்னைத் தன் மேசை மீது வைத்து விட்டு வெளியே சென்று விட்டார்.
அவ்வமையம் தற்செயலாக அங்கு வந்த பாலாவின் தம்பி மேசை மீதிருந்த புத்தகத்தை எடுக்க முயன்ற போது நானும்
அதோடு உருண்டு வந்து கீழே விழுந்தேன். அவ்வளவுதான் என் உடம்பில் பல காயங்கள் ஏற்பட்டு நான் விகாரமாகக்
காட்சியளித்தேன். பாலா என்னைப் பார்த்து முகம் சுழித்தான். பெருமூச்சு விட்டான். இன்னும் அங்கேயே கேட்பாரற்றுக்
கிடக்கின்றேன்.

நான் ஒரு பாடப்புத்தகம்

‘அன்று வள்ளுவன் கையிலே நான் ஓர் எழுத்தோலை, இன்று மாணவன் கையிலே நான் ஒரு பாடப்புத்தகம்”
ஆம், மாணவர்களே! நான்தான் ஒரு பாடப்புத்தகம். வானவில்லின் ஏழு வர்ணங்கள்தான் என் முகப்பின் அடையாளங்கள்.

நனிச்சிறந்த ஆசிரியர்களின் எழுத்து வண்ணத்தில் உதித்தேன். என்னுடன் பல உடன்பிறப்புக்கள் பிறந்தனர்.


மலேசியாவின் பிரபலமிக்க உமாபதிப்பகம் என்னை அச்சடித்தது. “தமிழ்மொழி ஆறாம் ஆண்டு” என்று தலைப்பிட்டு
என்னை வெளியிட்டனர். என் மேல் ரிம.12.00 விலை அச்சடிக்கப்பட்டிருந்தாலும் மலேசியக் கல்வியமைச்சால்
மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவேன் என்பதை அறிந்தேன்.என் உடன்பிறப்புகள் புடைசூழ என்னைக்
கனவுந்தில் ஏற்றினர். கருவறையில் காத்திருக்கும் சிசுவைப்போல நாங்கள் கனவுந்தில் அடைக்கப்பட்டோம்.

கனவுந்தின் கும்மிருட்டு என்னைக் கலங்கவைத்தது. ஓடிக்கொண்டிருந்த கனவுந்து திடீரென்று ஓரிடத்தில்


நிற்பதை நான் உணர்ந்தேன். ஒவ்வொரு பெட்டியாகக் கீழே எங்களை இறக்கி வைத்தனர். “சுங்கை ராயா தமிழ்ப்பள்ளி”
என்று சுவரில் எழுதப்பட்ட எழுத்துகள் என்னைப் பணிவாய் வரவேற்றன. அத்தமிழ்ப்பள்ளியின் கம்பீரமான தோற்றம்
என்னை மகிழ்ச்சிப்படுத்தியது. தமிழில் செப்பிக்கொண்டே என்னைப் பதிவேட்டில் பதிந்தார் ஆசிரியர் திரு. தினகரன்.
ஒவ்வொரு மாணவரும் வரிசையில் நின்று பாடப்புத்தகங்களை வாங்கிச்சென்றனர். என் இளம்தேகத்தை ஒரு
கரம் பற்றி நிற்பதை உணர்ந்தேன். முத்துபற்கள் பளிச்சென சிரிக்க, கரங்கள் இரண்டும் என்னைத் தழுவிப்பார்ப்பது
ஆறாம் ஆண்டு மாணவியான கவிகா என்பதை உணர்ந்தேன். அவர்தான் என் எஜமான் என்றுபிறகுதான் தெரியவந்தது.
என் மேனிக்கு மேலாடையாக நெகிழி அட்டையை அணிவித்தாள் மாணவி கவிகா. தமிழ்மொழி தருணத்தின்போது
என்னை மறவாமல் பயன்படுத்துவாள். என்னுள் இருக்கும் கதைகள், கவிதைகள், தகவல்களைப் படித்து இன்புறுவாள். என்
மேனியின் ஏடுகளை வேகமாக புரட்டும்பொழுது எனக்கு வலி ஏற்படும். அதனை நான் அவளுக்காகப்
பொறுத்துக்கொள்வேன்.

கண்ணின் இமைக்காப்பதுபோல் என்னை அவள் பார்த்துக்கொள்வாள். என் மேனியில் ஒரு கிறுக்கல்கள்கூட விழாமல்
பாதுகாக்கும் அவளின் அன்பு என்னைச் சில வேளைகளில் கிரங்கடித்துவிடும். என்னையும் என் எஜமானையும்
எவ்வேளையும் பிரித்துவிடாதே இறைவா என்று நான் இறைஞ்சும் வேளையில்தான் அந்தத் துயரச் செய்தி என்
காதுகளுக்கு எட்டியது. “யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிந்தவுடன் உங்கள் பாடப்புத்தகங்களை என்னிடம்
ஒப்படைத்துவிடவேண்டும்” என்று ஆசிரியர் திரு. தினகரனின் கட்டளை என்னை நிலைகுழையவைத்தது.

ஓராண்டுக்கு மட்டும்தான் என் எஜமான் என்னைக் குத்தகைக்கு வாங்கியுள்ளார் என்பதைஉணர்ந்தேன் நான். மரணத்தின்
நாட்களை எண்ணிக்கொண்டு வாழும் நோயாளியைப்போல் என் எஜமானின் குத்தகை முடிவுறும் நாட்களை
எண்ணிக்கொண்டு வாழ்கிறேன்.

நான் ஒரு காலணி

கண் விழித்தேன். கண்கள் என் உரிமையாளரைத் தேடின. ஒரே இருட்டு. என் நெஞ்சம் பயத்தால் படபடத்தது.
இருட்டிலிருந்து எப்படியாவது வெளியே வர வேண்டும் என்று தவித்தேன். அங்கும் இங்கும் முட்டிக் கொண்டேன். நான்
குப்பைத் தொட்டினுள் இருப்பதை உணர்ந்தேன். என் நினைவலைகள் கரைபுரண்டோடுகின்றன. என் கதையை உங்களிடம்
கூறுவதன் வழி மன அமைதியடைவேன். நான் ஒரு காலணி. நான் மலேசியாவில் ஷா ஆலமில் பிறந்தேன். என் பெயர்
அடிடாஸ். மல்லிகைப் பூ போன்று வெள்ளை நிறத்தில் அடிபட்டு, குத்துப்பட்டு உருவாக்கப்பட்டேன்.

  அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தாலும் துணையுடன் அடைக்கப்பட்டிருந்தேன் என்ற மகிழ்வு


ஒருபுறம். என்னுடன் ஆயிரக்கணக்கான நண்பர்களும் பிறந்தார்கள். ஒரு நாள், ஷா ஆலமிலிருந்து குளுவாங் எனும்
ஊருக்கு ஒரு கனரக வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டோம். அங்கு ஒரு பெரிய கடையில் எங்களை இறக்கினார்கள்.
அக்கடைக்காரர் எங்களைக் கண்ணாடி அலமாரியில் முறையாக அடுக்கி வைத்தார். அந்தக் கடைக்குப் பலர் வந்து
சென்றனர். இப்படியே பல நாட்கள் ஓடின. நான் மிகவும் மகிழ்ச்சியாக என் நண்பர்களுடன் அளவளாவிக்
கொண்டிருந்தேன். நாங்கள் வானம்பாடிகளாக வாழ்ந்து வந்தோம்.

   ஒரு நாள், ஒரு சிறுமி தன் தாயுடன் அங்கு வந்தாள். என்னைக் கூர்ந்து நோக்கினாள். தன் தாயின் காதில்
கிசுகிசுத்தாள். அவர் அந்தக் கடைக்காரரிடம் என்னைச் சுட்டிக் காட்டி என் மதிப்பை விலை பேசினார். இறுதியில்,
என்னை விலைகொடுத்து வாங்கினார். என் கன்னத்தில் ஏதோ வழிந்தோடியது போல் இருந்தது. தொட்டுப் பார்த்தேன்.
சந்தேகமில்லை. அஃது என் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர்தான். என் சகோதரிகளை விட்டுப் பிரிய
மனமில்லாமல் கவலையுடன் அச்சிறுமியுடன் சென்றேன். என் உரிமையாளரின் அரவம் கேட்டு நான் எண்ண
அலைகளிலிருந்து விடுபட்டேன்.

  என் உரிமையாளர் ஒவ்வொரு புதன்கிழமையும் என்னைத் தரமான ஷாம்புவால் குளிப்பாட்டுவார். வெள்ளைப்


பூசி என்னை வெயிலில் உலர வைப்பார். இதமான வெயிலின் ஒளியில் நான் குளிர்காய்ந்து கொண்டிருப்பேன். நான்
எப்பொழுதும் தூய்மையாக இருப்பேன். என் உரிமையாளர் என்னை எங்குச் சென்றாலும் தம் காலில் அணிந்து
கொள்வார். நானும் அவருக்கு இரவு பகல் பாராமல் உழைத்தேன்.

    எனக்கு வயது ஏறிக்கொண்டே போனது. வயதானதால் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதை
என் எஜமானியான அச்சிறுமி கவனித்தார். நான் இன்னும் பல நாட்களுக்கு உழைக்க மாட்டேன் என்று முடிவு செய்து
அருகில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் வீசினார். அவர் என்னை வீசிய வேகத்தில் என் தேகம் முழுவதும்
காயம்பட்டு, வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருக்கிறேன். பார்த்தீர்களா என் பரிதாப நிலையை!

You might also like