You are on page 1of 25

வழிகாட்டிக் கட்டுரை 1

சிரித்த முகத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தார் ஆசிரியை குமாரி கலைமகள். இரவுச் சந்தையாய்


மாறியிருந்த வகுப்பறையில் அமைதி நிலவியது. மாணவர்கள் அவரவர் இடத்தில் அமர்ந்தனர். பெயர் மட்டும்
கலைமகள் அல்ல. அவர் 'பார்ப்பதற்கும் கலைமகள் போல் அழகு சிலையாய் காட்சியளிப்பார். தினமும் 'பள்ளிக்குச்
சேலை அணிந்துவரும் அவரை மாணவர்களின் கண்கள் எப்போதும் பார்த்துக் கொண்டேதான் இருக்கும்.

"மாலாவை இன்னும் காணவில்லை. இன்னிக்கு அவளால் எல்லாரும் திட்டு வாங்க போறோம்", என்று
யாழினியின் ஆழ்மனது கூறியது. பயத்தால் அவள் உடல் நடுங்கியது. மாலா பள்ளிக்குப் போகவில்லை. வீட்டின்
முன் கவலையுடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் மனதை எதோ ஒன்று வாட்டிக் கொண்டிருந்தது. "அந்தப்
பொருள் இல்லாமல் நான் எப்படிப் 'பள்ளிக்குப் போறது!", என்று தன் மனதிற்குள் புலம்பினாள்.

நடந்தவற்றை ஆசிரியரிடம் 'சொல்லிடலாம் என்று துணிச்சலுடன் பள்ளிக்குப் புறப்பட்டாள். பள்ளியை


நெருங்க நெருங்க அவளின் பயமும் அதிகரித்தது. வகுப்பறையை வந்தடைந்தாள். குமாரி கலைமகள்
கடுங்கோபத்தில் இருந்தார். மாலாவின் மீது கொண்ட கோபம் சக நண்பர்களின் மீது திரும்பியது.

'டக்..டக்..டக்... கதவைத் தட்டினாள் மாலா. அவளைக் கண்டதும் சக நண்பர்களின் முகத்தில் புன்னகை


பூத்தது. வாங்க அக்கா! இதுதான் பள்ளிக்கு வர நேரமா? சரி... தமிழ்மொழி தேர்வு தாளு எல்லாம் 'எங்க?", என்று
குமாரி கலைமகள் மாலாவிடம் வினவினார். நேற்றுப் பள்ளியில் அரையாண்டுத் தேர்வு நடைபெற்றது.
மாணவர்களின் தமிழ்மொழி விடைத்தாள்கள் அனைத்தையும் மாலா சேகரித்தாள். தேர்வுத் தாள்
அனைத்தையும் குமாரி 'கலைமகளிடம் ஒப்படைக்கப் பணிக்கப்பட்டது.

"என்னை மன்னிச்சிருங்க தீச்சர். 'பரிட்சை தாளு எல்லாம் எங்க வச்சேனு தெரியல! எல்லாம் என்
தப்புதான்”, என்று 'கண்ணீர் விடத் தொடங்கினாள் மாலா. ' " பரிட்சை தாளு காணாம போச்சா? இது எவ்வளவு
பெரிய பிரச்சனை தெரியுமா? இன்னிக்கு உன்ன என்ன பன்னுறேனு பாரு!", என்று பிரம்பை எடுத்தார் குமாரி
கலைமகள்.

"வணக்கம் கலைமகள். இது உங்க வகுப்பின் பரிட்சை தாளுதானே. சிற்றுண்டிச்சாலையிலே கிடந்துச்சு",


என்று தேர்வுத் தாளை வழங்கிச் சென்றார் பள்ளியின் தலைமையாசிரியர். "நல்லவேளை தேர்வுத் தாள்
'கிடைச்சது. கடவுளுக்கு நன்றி சொல்லுங்க. இனிமேலாவது பொறுப்பா இருங்க", என்று கூறி பிரம்பை எடுத்த
இடத்திலேயே வைத்தார் குமாரி கலைமகள்.

வழிகாட்டிக் கட்டுரை 2
விடிந்தால் பானு அத்தையின் பிறந்தநாள். அப்பாவின் செல்லமான தங்கைதான் பானு அத்தை
மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கோல குபு பாருவிற்குச் சென்றுவிட்டார். அணிச்சலையும்
அம்மா செய்த பலகாரங்களையும் பத்திரமாக அப்பாவின் மகிழுந்தில் ஏற்றினோம். இரவு 9.00 மணிக்குத்
தெமெர்லோவிலிருந்து கோல குபு பாருக்கு அப்பாவின் வண்டி இறக்கைக் கட்டி பறந்தது.

எனக்கும் அமுதாவுக்கும் வாயெல்லாம் பல்லாக இருந்தது. அது சொல்ல முடியாத ஆனந்தம்.


"பானு கிட்ட சொல்லிட்டீங்களா?", இனிய குரலில் கேட்டார் அம்மா. "சொல்ல வேண்டாம் வேணி.
அதிர்ச்சியாக இருக்கட்டும்", என்றார் அப்பா. "மாமா, அத்தையைப் பார்தது
் எவ்வளவு நாளாகிவிட்டது",
என்று ஏக்கத்துடன் சொன்னேன்.

"மாமா, நம்மை பழத்தோட்டத்திற்கு அழைத்துச் செல்வார்", பரபரப்பாக இருந்த அமுதா


கூறினாள். கோத்தோங் ஜெயாவைத் தாண்டி பாத்தாங் காளி சாலையில் வண்டி செல்லத் தொடங்கியது.
ஒரே கும்மிருட்டு. பாம்பு போன்ற சாலையில் வண்டி வலைந்து வலைந்து போனது. "அடடா! பெட்ரோல்
தீரந
் ்துவிடும் போலிருக்கிறதே!" என்று அம்மா சொன்னதைக் கேட்டு எங்களின் இதயத்தில் இடி
விழுந்தது.

சற்று நேரத்தில் மகிழுந்து மூச்சுத் திணறி சாலையோரத்தில் நின்றது. கண்ணைக் கட்டிக்


காட்டில் விட்டது போல இருந்தது எனக்கு. எங்களின் நல்ல நேரம் மழையும் பெய்ய ஆரம்பித்தது.
கைப்பேசி அவசர அழைப்பு மட்டுமே என்று காட்டியது. வெகு நேரமாகியும் சாலையில் எந்தவொரு
வாகனமும் வரவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் இருந்தார் அப்பா. திடீரென்று ஒரு மகிழுந்து
எங்களுக்கு முன் வந்து நின்றது. எங்களின் பயம் மேலும் அதிகரித்தது.

"அப்பா! அங்க பாருங்க! அத்தை மாமா!’’, என்று அமுதா இன்பத்தில் துள்ளினாள். இன்ப
அதிர்ச்சியில் நாங்கள் அனைவரும் சில மணித்துளிகள் மூச்சுவிடவும் மறந்துவிட்டோம். மாமா அப்பாவை
ஏற்றிக் கொண்டு கோத்தோங் ஜெயாவில் உள்ள பெட்ரோனுக்குச் சென்றார். ஒரு நெகிழி கலனில்
பெட்ரோல் வாங்கி வந்தார்கள் அவர்கள் இருவரும். அப்பாவின் மகிழுந்தில் பெட்ரோல் ஊற்றினார்கள்.

நானும் அமுதாவும் மாமாவின் மகிழுந்தில் ஏறிக் கொண்டோம். இரண்டு வண்டிகளும் கோலகுபு


பாருவை நோக்கி புறப்பட்டன. இன்ப அதிர்சச
் ி கொடுக்க நினைத்த இரு குடும்பங்களின் திட்டமும்
ஏமாற்றத்தில் முடிந்தது. திட்டமிட்டபடி நள்ளிரவில் அத்தையின் பிறந்தநாளைக் கொண்டாடினோம்.
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததற்குக் காரணமும் அந்தத் தெய்வம்தான் என்று
எண்ணியவாறே கண்களை மூடினேன்.
வழிகாட்டிக் கட்டுரை 3

பள்ளி முடிந்து வந்ததும் கடமைக்காகச் சோறு சாப்பிட்டுவிட்டு மீன் பிடிக்கக் கிளம்பினார்கள்


சராவும் அவனது தம்பிகளும். "எவ்வளவு சொன்னாலும் திருந்தவே மாட்டிங்களா நீங்க?", உரத்தக் குரலில்
தன் கோபத்தை வெளிப்படுத்தினார் திருமதி மாலா.

செவிடன் காதில் ஊதிய சங்குப் போல எதையும் கண்டுக்கொள்ளாமல் அவர்கள் வீட்டிலிருந்து


கிளம்பினார்கள். இது 'வழக்கமாய் நடப்பதுதான். தலையில் தொப்பியை அணிந்து கொண்டு வீரநடை
போட்டான் சரா. அவன் தம்பிகளும் பின் தொடர்நத
் னர். ஆளுக்கொரு வலையையும் புட்டியையும் கையில்
எடுத்துச் சென்றனர்.

"அந்த இடம் ஆபத்தான 'இடமில்லையா?", என்று விநோட் தன் 'அண்ணனிடம் கேட்டான்.


"இளங்கன்று பயமறியாது தம்பி!", என்று விடையளித்தான் சரா. அனைவரும் குளத்தை வந்தடைந்தனர்.
குளத்தின் கரையோரத்தில் வலையைவிட்டு அலசினான் சரா.

"பாத்தியா சண்டை மீன்!", என்று பெருமிதம் கொண்டான் சரா. தம்பிகளும் அண்ணனைப்


போல் 'வலையைவிட்டு அலசினர். "ஐயோ! ப்ப்பப் ்..பாம்பு!", என்று அலறிக் கொண்டு ஓடினான் அரசன்.
கருநிற பாம்பு ஒன்று அவர்களைப் பார்தது
் 'படமெடுத்துக் கொண்டிருந்தது. அவர்கள் மூவரும்
தலைத்தெறிக்க ஓடி வீட்டை அடைந்தனர். மூச்சு வாங்க நடந்ததை அம்மாவிடம் கூறினர்.

"அம்மா! இனிமேல் நாங்க மீன் 'பிடிக்கவே போக மாட்டோம். உங்க பேச்ச மீற மாட்டோம்", என்று
கண்கலங்கினர். '"எவ்வளவு சொல்லியும் திருந்தாத 'பசங்க இன்னிக்குத் திருந்திட்டானுங்க.
கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும்”, என்று முணுமுணுத்துக் கொண்டே தன் அறைக்குள் சென்றார்
திருமதி மாலா. சற்று நேரத்தில் சராவின் அப்பாவும் வீட்டை வந்தடைந்தார். தான் கொண்டு வந்த ஒரு
நெகிழிப் பாம்பைப் பத்திரமாக அலமாரிக்குள் எடுத்து வைத்தார்.
வழிகாட்டிக் கட்டுரை 4

"அங்கிள் எனக்கு இந்த ஐஸ்கிரீம் வேணும்", என்று ஆவலுடன் கேட்டாள் மீயாழ். மெலிந்த உடல்,
தலையில் தொப்பி. பழைய மிதிவண்டி. ஆனால், கண்களில் ஏதோ சூழ்ச்சி தெரிந்தது. "ம்ம்ம்.. விரைவா
எடுங்க நேரமாச்சு", என்று கட்டளையிட்டார் ஐஸ்கிரீம் வியாபாரி திரு.கோ.

"எப்பவும் ஏன் இந்த இடத்திற்கு வந்தா மட்டும் நேரமாச்சு நேரமாச்சுனு சொல்றாரு?", என்று
யோசிக்கத் தொடங்கினான் கனியன் பூங்குன்றன். கடந்த வாரம் பக்கத்து ஊரில் போதைப் பொருளால்
தயாரிக்கப்பட்ட பனிக்கூழ்களை வழங்கி குழந்தைகளைக் கடத்திய செய்தி அவன் நினைவுக்கு வந்தது.

அரக்கப் பரக்க அங்கிருந்து கிளம்பினார் திரு.கோ. "அங்க வீடுகள் எதுவும் இல்ல. அப்புறம்
எதற்கு அந்த வழியா வேகமா போறாரு", என்று முணுமுணுத்தாள் மீயாழ். "ஆனந்த். இன்னிக்கும்
அங்கிள் அந்தக் காட்டு வழியாகத்தான் போறாரு பாரு", என்று ஆச்சரியத்துடன் கூறினாள்
அழகோவியா.

"இன்னிக்கு நாம் அவரை பின் தொடர்ந்து போவோம். எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறோம்",


என்று கனியன் | பூங்குன்றன் கூற அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். அவர்கள் இதற்கு பின்னால்
உள்ள ஆபத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை.

ஒரு குடிசை வீட்டைச் சென்றடைந்தார் திரு. கோ. வாண்டுகளும் அவரைப் பின் தொடர்ந்து
சென்றனர். வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்தத
் னர். அவர்களை அறியாமலேயே
அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
அந்த ஓட்டை வீட்டில் பசியால் வாடியிருந்த தன் ஊனமுற்ற தாயுக்குத் திரு. கோ சோறு ஊட்டிக்
கொண்டிருந்தார். ஏழ்மையிலும் தன் அம்மாவைப் பராமரிக்கும் திரு. கோவை எண்ணி சிறுவர்கள்
பெருமிதம் கொண்டனர்.
வழிகாட்டிக் கட்டுரை 5

மாலை நேர தென்றல் காற்று வீடெங்கிலும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது.


ஆறிப்போன செய்திகளை ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தார் திரு.குமார். "அண்ணா , நாளைக்குப்
பரிட்சை. எனக்கு இந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுங்க", என்று தன் அன்பான அண்ணனிடம்
கேட்டாள் இமையழகி.

மாலை முழுவதும் விளையாடி பின் சுத்தபத்தமாய் குளித்துவிட்டு நெற்றியில் திருநீற்றுடன்


படிக்க அமர்ந்தார்கள் அவர்கள் இருவரும். திருமதி. தேவி வழக்கம் போல் துணிகளைத் தைக்க
ஆரம்பித்தார். "சங்கு, தென்றல், பந்தம், பம்பரம் போன்றவை இனவெழுத்துகளைக் கொண்ட
சொற்களாகும்", என்று தன் அன்பு தங்கைக்கு விளக்கமளித்தான் அதியமான்.

"அவருக்கும் வேலை இல்லை. ரிட்டையர் ஆயிட்டாரு. எப்படியாவது பிள்ளைகளை நல்லா படிக்க


வைக்கனும்", என்று கண்கலங்கினார் திருமதி தேவி. நாளிதழை மேசையின் மீது வைத்தார் திரு.குமார்.
தட்டுத்தடுமாறி எழுந்து நின்றார். நீரிழிவு நோய் அதன் வேலையைக் காட்டியது.

"நாளையிலிருந்து நான் வேலைக்குப் போக போறேன் தேவி. ஒரு வெட்டு கிடச்சிருக்கு. வீடடு
் ல
சும்மா இருக்குறதுக்கு மரமாவது வெட்டுவோம். கொஞ்சம் காசாவது கிடைக்கும். ஏற்கனவே செஞ்ச
வேலைதானே. பிள்ளைங்க படிச்சு முடிச்ச பிறகுதான் எனக்கு ஓய்வு", என்று சொல்லியவாறு தன்
அறையை நோக்கி நடந்தார். தன் கணவரின் தியாகத்தை எண்ணி கண் கலங்கினார் திருமதி தேவி.
குழந்தைகள் எதையும் கண்டு கொள்ளாமல் படித்துக் கொண்டிருந்தனர்.
வழிகாட்டிக் கட்டுரை 6

பள்ளி மண்டபம் மணப்பெண்ணைப் போல் காட்சியளித்தது. மேடையெங்கும் வண்ண


விளக்குகள் மினுமினுத்துக் கொண்டிருந்தன. மாணவர்கள் யாவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீநத
் ிக்
கொண்டிருந்தனர். "தொடர்ந்து, திறப்புரையாற்ற காவல் துறையின் சிறப்பு அதிகாரி திரு.முகிலன்
அவர்களை அன்போடு அழைக்கிறோம்", என்று இனிமையான குரலில் அறிவிப்புச் செய்தார் அவைத்
தலைவர்.

"ஐயோ! என்னை விட்டுட்டுப் போகிறீர்களே!", என்று கதறினேன். இதுபோல் பல முறை என்


வாழ்வில் நடந்துள்ளது. என்னுடைய அலட்சியப் போக்கினால், பல முறை பல நல்ல வாய்ப்புகளைக் கூட
இழந்திருக்கிறேன்.

சுறுசுறுப்பின் எதிர்ச்சொல்லாக இருந்தேன். எதையும் ஆறப் போட்டுதான் செய்வேன். குறித்த


நேரத்தில் எங்கும் சென்றதாக வரலாறு கிடையாது. அன்று பள்ளியின் பரிசளிப்பு விழா. நான் மூன்று
படைப்புகளில் இருந்தேன். மனதில் அவ்வளவு மகிழ்ச்சி. இருந்தும் வழக்கம்போல் காற்பந்து
விளையாடிவிட்டுத் தாமதமாக வீடு திரும்பினேன்.

வீட்டில் அனைவரும் தயாராக இருந்தனர். வெகு நேரம் காத்திருந்து மகிழுந்தில் ஏறினர்.


"தாமதமாகிறதே! போய்ச் சேர்வதற்குள் நிகழ்ச்சி முடிந்துவிடும் போலிருக்கிறது..!", என்று தம்பி மனதில்
முணுமுணுத்தான். "முகிலன் ஏறி விட்டானா?", என்று கேட்டார் அப்பா.
"இன்னும் இல்லை அப்பா! அவனை வீட்டுக்குள்ளேயே விட்டுப் பூட்டிவிட்டேன். அவன்
எப்பொழுதுமே இப்படித்தான். நேரத்தோடு புறப்படுவதே கிடையாது!", என்று அக்கா மனவேதனையுடன்
கூறினார். "நீங்க புறப்படுவது போல வண்டியை விடுங்கள்.", என்றார் அம்மா.

ஆனால், அப்பா அப்படிச் செய்யவில்லை. அன்று என்னை வீட்டிலேயே விட்டுச் சென்றார். அன்று
மாறினேன். என் தவற்றை உணர்நதே
் ன். காலத்தை மதித்தேன். அதனால் இன்று அனைவரும் மதிக்கும்
காவல் அதிகாரியாக உங்கள் முன் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். மாணவர்களே! நீங்களும்
மாறுங்கள். வாழ்வில் முன்னேறுங்கள். காலம் பொன் போன்றது.

வழிகாட்டிக் கட்டுரை 7
துரியோதனன் கர்ணனைப் போல அவர்கள் நல்ல நண்பர்கள். அவர்கள் இருவரும் படிப்பில்
கெட்டி. விளையாட்டில் சொல்லவே வேண்டாம். யாழவன் மிகவும் பொறுமையானவன். மறவனோ அதற்கு
எதிர்மறையானவன்.

யாழவன் நல்லவன்தான். ஆனால், சில வேளைகளில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்க


மாட்டான். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று நினைத்ததைச் சாதித்துவிடுவான்.
"பிறந்தநாள் வாழ்த்துகள் யாழவா!'’, 5 வள்ளுவர் மாணவர்கள் வாழ்தது
் க் கூறினர்.

"நன்றி நண்பர்களே! இன்று மாலை ஆறு மணிக்கு என் வீட்டில் எனக்கு பிறந்தநாள்
செய்கிறார்கள். எல்லாரும் வந்துருங்க", என்று மிக மகிழ்ச்சியுடன் கூறினான் யாழவன். "யாழவா! இந்தா
என்னோட சின்ன பரிசு", என்று ஓர் அழகிய பரிசை நீட்டினான் மறவன்.

"மிக்க நன்றி மறவா! எனக்காக ஒன்று செய்வீயா?", என்று கேட்டான். "என்ன செய்யனும்?",
என்று ஆர்வத்துடன் கேட்டான் மறவன். "இன்று பள்ளியின் அருகிலுள்ள ஆற்றில் குளிக்க போகலாமா?
மிகவும் ஆசையாக இருக்கின்றது", என்று ஆவலுடன் கேட்டான் யாழவன்.

"விளையாடாத யாழவா! அந்த ஆறு மிகவும் ஆபத்தானது. அது ஆள் விழுங்கி ஆறுனு என்
அம்மா சொல்லிருக்காங்க", என்று மறவன் எச்சரித்தான். “யாரு என்ன சொன்னாலும் இன்று
என்னுடைய ஆசையை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும்", என்று யாழவன் மனதில் முணுமுணுத்துக்
கொண்டான்.

மாலை வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான் மறவன். "ஐயோ! அம்மா .. உதவி!
உதவி!", என்று யாரோ அலறும் சத்தம் மறவன் காதில் விழுந்தது. யாழவன் ஆற்றில் தத்தளித்துக்
கொண்டிருந்தான். மறவன் துடிதுடித்துப் போனான். "எத்தனையோ தடவை சொல்லியாச்சு! இப்ப கத்தி
என்ன பயன்? என்று முணுமுணுத்துக் கொண்டே ஆற்றில் குதித்தான் மறவன்.

மறவனுக்குத் தன்னைக் காப்பாற்றி கொள்ளும் அளவுக்கு மட்டுமே நீச்சல் தெரிந்திருந்தாலும்


தன் உயிர் நண்பனைக் காப்பாற்ற துணிச்சலுடன் நீந்தினான். யாழவனைக் கட்டியணைத்தவாறே
"பெரியவங்க பேச்சைக் கேட்டாத்தானே!", என்று கத்தினான் மறவன். யாழவனைக் கரைக்குக்
கொண்டுவர கடுமையாகப் போராடினான்.

ஆற்றின் நீரோட்டம் வேகமாக இருந்ததால் நீந்துவதற்குக் கடினமாக இருந்தது. ஆற்று நீர்


இருவரையும் அடித்துச் சென்றது. மறவனால் முடியவில்லை . தோல்வியுற்றான். உயிர் நண்பன் தன் கண்
முன்னே நீரில் மூழ்குவதைப் பார்த்தான். நண்பனின் பிறந்தநாள் இறந்தநாளாக மாறிவிட்டதை எண்ணி
கதறி அழுதான்.

செய்தியைச் சொல்ல யாழவன் வீட்டை நோக்கி புயலோட்டம் ஓடினான் மறவன். அதிர்ந்து


போனான். நண்பர்கள் புடை சூழ அணிச்சல் வெட்டிக் கொண்டிருந்தான் யாழவன். "ஏன் மறவா லேட்டு?
சட்டையெல்லாம் ஈரமா வேற இருக்கு?", என்று யாழவன் கேட்டான். பதில் ஒன்றும் சொல்லாமல்
சிலையாய் நின்றான் மறவன்.
வழிகாட்டிக் கட்டுரை 8

க்ரீங்க்ரீங்! பள்ளி மணி ஒலித்தது. கூட்டை விட்டுப் பறக்கும் பறவைகள் போல மாணவர்கள்
பள்ளியை விட்டுப் பறக்கத் தொடங்கினர். சில மாணவர்கள் வரிசையாகச் சென்றனர். சிலர்
குடுகுடுவென ஓடினர். இன்னும் சில மாணவர்கள் பள்ளிக்கு முன் உள்ள பேருந்து நிற்குமிடத்தில்
காத்துக் கொண்டிருந்தனர்.

அன்று பங்குனி வெயிலின் சீற்றம் அதிகமாக இருந்தது. மாணவர்களை ஏற்றிச் செல்ல


வாகனங்கள் வந்த வண்ணமாய் இருந்தன. திடீரென டமார்! என்ற சத்தம் கேட்டது. இளங்கதிர்
சாலையில் இரத்தக் காயங்களுடன் விழுந்து கிடந்தான். அவன் அருகே அவனை மோதிய மகிழுந்து
நின்று கொண்டிருந்தது.

அங்கே நின்று கொண்டிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சிக்குள்ளாயினர். "எப்பவும்


இங்க இருக்கிற பள்ளி பாதுகாவலரு எங்க போய்டாருன்னு தெரியலியே?" என்று பதற்றத்துடன் கேட்டார்
பள்ளியின் மாணவர் நல ஆசிரியை திருமதி இந்திரா.
"பாதுகாவலர் இன்று முடிந்தார்", என்று ஒரு மாணவன் மனதில் முணுமுணுத்துக் கொண்டான்.
"எங்க அந்தப் பாதுகாவலர்? இப்படி நடந்திருக்கக் கூடாதே! மாணவர்கள் சாலையைக் கடக்கும் போது
அவர் கூட இல்லாமல் எங்கு போனார்?", என்று சினத்துடன் கேட்டார் தலைமையாசிரியர்.

"உன்னோட போனை எடுத்து மருத்துவமனைக்குச் சொல்லு!" என்று ஆசிரியர் திரு கணேசன்


தன் தம்பியிடம் கூறினார்."வேண்டாம். எனக்கு ஒன்னும் இல்லை. சின்ன காயம்தான். பாதுகாவலருக்கு
என்ன ஆச்சினு பாருங்க", என்று கூறிக்கொண்டே மெல்ல எழுந்தான் இளங்கதிர்.

அனைவரும் மகிழுந்தை நோக்கி ஓடினர். ஒரு வினாடி அனைவரின் இதயத்துடிப்பும் நின்று


போனது. மகிழுந்தின் அடியில் பள்ளியின் பாதுகாவலார் இறந்து கிடந்தார். தலையில் பலத்த காயம்.
அவரின் வெள்ளை நிறச் சட்டை சிவப்பு நிறமாய் மாறியிருந்தது.

இளங்கதிரின் கண்களில் கண்ணீர் மல்கியது. "என் தவறுதான். சாலையில் விளையாட்ட


இருந்துவிட்டேன். என்னைக் காப்பாற்றி விட்டு அவர் இறந்து விட்டார். அவர் மட்டும் இல்லை என்றால்
நான் இன்று இறந்து போயிருப்பேன்", என்று தலைமையாசிரியரைக் கட்டியணைத்துக் கொண்டு
அழுதான் இளங்கதிர்.
வழிகாட்டிக் கட்டுரை 9

அறுசுவை மணம் காற்றில் மிதந்து வந்தது. சமையலறையில் சட்டிக்கும் கரண்டிக்கும் போர்


நடந்து கொண்டிருந்தது. அந்த ஒலி பசியை மேலும் தூண்டியது. பசியோடு வந்த காவல் அதிகாரிகள்
தங்களுக்கு விருப்பமான உணவைக் கூறினர். அவற்றை ஒரு புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார்
திரு குமார்.

திரு.கவி நாளிதழ் வாசிக்கத் தொடங்கினார். திரு.இரவி உணவு அட்டையைப் பார்தது


் க்
கொண்டிருந்தார். திரு. அமரும் திரு. சசியும் அளவளாவிக் கொண்டிருந்தனர். சமையலறையில் இரு
சமையல்காரர்கள் மளமளவென சமைத்துக் கொண்டிருந்தனர்.

உணவு வருவதற்குச் சற்றுத் தாமதமாகியது. வந்திருந்த நான்கு அதிகாரிகளும் கடையை


நோட்டமிட்டனர். கடையைப் பரிசோதிக்கத் தொடங்கினர். கடையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த
திருமதி சித்திக்குக்கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை .

அரைமணி நேரம் ஆகியும் உணவு வரவில்லை . பசியில் வாடிக் கொண்டிருந்த காவல்


அதிகாரிகள் கடுங்கோபத்தில் இருந்தனர்.

"அவரிடம் உண்மையைச் சொல்லி விடலாமா? முதலாளிக்குத் தெரிந்தால்...", என்று பயத்தால்


முணுமுணுத்தார் திருமதி சித்தி. கடுங்கோபத்தில் இருந்த காவல் அதிகாரிகள் திருமதி சித்தியை
அழைத்து, " இங்கு என்ன நடக்கிறது?", என்று ஆவேசத்துடன் கேட்டனர்.
"ஐயா, அது..வந்து... உண்மையைச் சொல்லிறேன். கடையிலே இப்போதான் கேஸ் முடிஞ்சது.
இப்போ கேஸ்காரன் வந்துருவான். கொஞ்சம் காத்திருங்க" என்று சித்தி சொல்லி முடிக்க காவல்
அதிகாரிகள் சினத்துடன் அக்கடையை விட்டு வெளியேறினர்.
வழிகாட்டிக் கட்டுரை 10

மூங்கில் தோட்டமும் மூலிகை வாசமும் நிறைந்த ஓர் அடர்ந்த காடு அது. கதிரவன் உறங்கச்
செல்லும் நேரம் அது. "நாம் எப்படியாவது இந்தக் காரியத்தில் வெற்றிப் பெற வேண்டும்", என்று
உறுதியாகக் கூறினார் எங்கள் தளபதி.

நானும் பிரவினும் அவர் கூறுவதைக் கண்ணுங் கருத்துமாய்ச் செவி சாய்த்தோம். போலிஸ் வலை
வீசி தேடிக் கொண்டிருக்கும் திருட்டுக் கும்பல் தான் நாங்கள். பல கொலை, கொள்ளைகளைப் புரிந்து
போலிஸ் கண்களில் மண்ணைத் தூவிய கும்பல்தான் இது. இந்தக் கும்பலில் புதியதாக
இணைந்தவன்தான் நான்.

இன்று ஒரு செல்வந்தர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளோம். இரவில்


வேட்டையாடுவதுதான் எங்கள் வழக்கம். படகில் ஏறி பயணம் செய்தோம். நாங்கள் குறிவைத்த அந்தச்
செல்வந்தரின் வீடு ஆற்றங்கரையோரம் இருந்தது.

"அதோ! அந்த வீடுதான்", என்று மகிழ்ச்சியுடன் கூறினார் தளபதி. "அது மட்டும் எனக்கு
கிடைச்சதுனா! நான் இவ்வளவு நாளாகக் கஷ்டப்பட்டது வீண் போகாது", என்று மனதிற்குள் கூறிக்
கொண்டேன்.

படகில் இருந்து இறங்கினோம். தளபதியும் பிரவினும் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே
சென்றனர். நான் வெளியே காவலுக்கு இருந்தேன். வெகு நேரம் ஆகியும் உள்ளே சென்றவர்கள் வெளியே
வரவில்லை. வீட்டினுள் ஏதோ சத்தம் கேட்டது. நான் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்.
"ஏதோ பேச்சுக் குரல் கேட்குதே! அடப்பாவிகளா! குத்தி கொலையே செஞ்சிடானுங்களே!",
என்று மனம் கலங்கினேன். திடீரென்று அவ்வீட்டைக் காவல் அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். நான்
சற்றும் பயப்படவில்லை . என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினேன்.

"கைகளைத் தூக்கு!", என்று கட்டளையிட்டேன். தளபதியும் பிரவினும் என்னையும் எனக்குப்


பின்னால் இருந்த போலிஸ் பட்டாளத்தையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். "துரோகி! நீ போலிஸா? கூட
இருந்தே குளிப்பறிச்சிட்டியே", என்று சினத்துடன் கூறினார் தளபதி.

"இத்தன நாளா உன்னத்தான் தேடிகிட்டு இருந்தேன். எங்களுக்கே தண்ணீ காட்டுறியா?


கான்ஸ்டபல், அரஸ்ட் இம்", என்று கட்டளையிட்டேன். இத்தனை நாள் நான் சிரமப்பட்டது வீண்
போகவில்லை . ஒரு பெரிய திருட்டுக் கும்பலைப் பிடித்துவிட்டேன். என் வேட்டை தொடரும்.
பயிற்சி 1: வழிகாட்டி கட்டுரை 1

பயிற்சி 2 : வழிகாட்டி கட்டுரை 2


பயிற்சி 3: வழிகாட்டி கட்டுரை 3
பயிற்சி 4 : வழிகாட்டி கட்டுரை 4
பயிற்சி 5 : வழிகாட்டி கட்டுரை 5

பயிற்சி 6 : வழிகாட்டி கட்டுரை 6


பயிற்சி 7 : வழிகாட்டிக் கட்டுரை 7
பயிற்சி 8 : வழிகாட்டிக் கட்டுரை 8

You might also like