You are on page 1of 3

இயற்கையின் கொடையாய் பெற்ற வளங்களை கடந்து அதன் முக்கியத்துவம்

கருதாத மனிதன், எதிர்நோக்கும் மிக முக்கியமான அபாயங்களில் ஒன்று பேரிடர். எந்த

இடம், எந்த நேரம், எந்த நாள் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத ஒரு


அடையாளத்தோடு ஒவ்வொரு பொழுதிலும் ஏதேனும் ஒரு பேரழிவு எங்கேனும்

நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று நாம் அறிவோம்.

தன்னை மறந்து மனிதன் எப்போது இயற்கையை புறக்கணிக்க


ஆரம்பித்தானோ அந்த தருணத்திலிருந்தே இயற்கையும் மனிதர்களை புறந்தள்ளி

கொண்டிருகின்றன என்பதற்கு உதாரணம் தான் பேரிடர் என்பது. ஆம், இவ்வகைய

சிக்கலுக்கு மனிதனே காரணம் என்று கூறுகையில், எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

மனிதர்களின், பல்வேறு அடிப்படை தேவைக்காக இயற்கை வளங்கள் இன்று

அழிக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணத்தால் மரங்கள், காய்கள் பயிர்கள்,

வயல்வெளிகள், பூக்களென்று நம்முடைய சுற்றுப்புறம், நம்முடைய கண்களை விட்டுக்

கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது.

முன்னேற்றம், அதன் போக்கில் பயணிக்கும் நாகரீகம் ஆகியவைகளுடைய

ஆதிக்கத்தால் இயற்கை வளங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. காடுகளிலும்,

மலைகளிலுள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதாலும், சுற்றுப்புறத்தின் பசுமை

அழிந்ததாலும், பெய்யும் மழை குறைந்ததாலும், அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

மேலும், தற்போது அங்கங்கே வெள்ளம் ஏற்படுகிறது. இதன் காரணம் இந்த உலகம்

தன் அழகை மட்டுமல்ல, தன் உடைமையையும் சிறிது சிறிதாக இழந்து

கொண்டிருக்கிறது.

காற்று மாசுபடுதல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

வாகனங்களும், தொழிற்சாலைகளும் விடும் நச்சுப் புகைகள் வாயுமண்டலத்தில் கலந்து

அமில மழைகளை உண்டாக்குகின்றன. இது உயிர்களுக்கு ஆபத்தை

விளைவிக்கின்றது. மேலும் ஓசோன் படலமும் தேய்ந்து கொண்டிருக்கிறது. இதனால்,

உலகம் வெப்பமயமாகி வருகிறது. தொழிற்சாலைகள் திட, திரவ, வாயு கழிவுகளை

பெருமளவில் வெளியேற்றுகின்றன. இதனால் சுற்றுப்புறம் பெருமளவில்

பாதிப்படைகின்றது. தொழிற்சாலைக் கழிவுகளால் மனிதனுக்கு புற்றுநோய், நரம்பு


மண்டலம் பாதிப்பு, உடல் உறுப்பு பாதிப்படைதல் போன்ற பல்வேறு இன்னல்கள்

வருகின்றன.

தொடர்ந்து, நீர்நிலைகளில் துணி துவைத்தல், கால்நடைகளை

குளிப்பாட்டுதல், குப்பைகளை ஆற்றில் கொட்டுதல், தொழிற்சாலைக் கழிவுகளை

கலத்தல் போன்ற செயல்களால் நீரானது மாசடைகின்றது. நீர்வாழ் உயிரினங்களும்

மடிய தொடங்குகிறது. சுத்தமான நீரை பருகாமலும், சுத்தமான நீரில் குளிக்க

இயலாதனாலும் மனிதர்களுக்குப் பல்வேறு வகையான தொற்று நோய்கள் வருகின்றன.

அண்மைக்காலமாக உலகையே உலுக்கிய நிகழ்வு இன்னும் தொடர்ந்து

கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் உலகில் பல லட்ச கணக்கான உயிர்களை பலி


கொண்டு இன்னமும் மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கின்ற ஒரு தொற்று

நோயாகும். உலக வரலாற்றில் தசாப்தங்கள் தோறும் தொற்றுநோய்கள் உருவாகி அதிக

மக்களை பலி கொள்வது இயற்கையாகும்.மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு

மிகவேகமாக பரவுகின்ற இந்த வைரஸ் ஆனது 2020 இல் உலகமெங்கும் பரவியது.

இதன் தாக்கத்தால் உலகின் விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து


தற்காலிகமாக தடைப்பட்டதுடன் நாடுகள் தமது எல்லைகளையும் மூடின இதனால்

சரவதேச வர்த்தகம் சுற்றுலாத்துறை என்பன வீழ்ச்சி கண்டன. இத்தகைய சிக்களுக்கு

மனிதனே காரணமாக விளங்குகின்றான் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

கடைசியில் இயற்கை பேரிழப்புகள் ஏற்ப்பட்டு உயிர்களுக்கும்,

உடமைகளுக்கும் சேதத்தையும், சொல்லொன்னா சோகத்தையும் ஏற்ப்படுத்தி

விடுகின்றன. ஒன்று மட்டும் தெளிவு, நாம் என்ன செய்தாலும் இயற்கையின்


பேரழிவுகளை தடுக்க முடியாது. கடல்கோளையும், நிலநடுக்கத்தையும்
தடுக்கவாமுடியும்? வெள்ளத்தையும், பஞ்சத்தையும் நிறுத்தவா முடியும்?

ஆனால், ஒன்று செய்யலாம்... இவற்றின் பாதிப்புகளை நம்மால் குறைக்க


முடியும். ஆம், மனிதர்களாகிய நாம், எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருத்தல்
அவசியம். இயற்கைகை பேணி காக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே
மாணவர்களுக்குப் பள்ளியில் இயற்கையின் பாதுக்காப்பைப் பேணும்
வழிமுறைகளைக் கற்று தருதல் அவசியமாகும். பெற்றோற்களும் தங்களின்
பிள்ளைகளுக்குச் சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்கவும், தொற்று
நோய்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் கற்று தர வேண்டும். மேலும்,
அரசாங்கமும் இதன் முக்கியத்துவத்தை அறிந்து மக்களிடையே அவப்போது
விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்தப்பட வேண்டும். “ஒரு கை தட்டினால் ஓசை
வராது” என்பதற்கு ஏற்ப்ப ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் செயல் பட்டால்
கண்டிப்பாக இயற்கை சீற்றங்களிருந்து வரும் பெரும் ஆபத்தைக் குறைக்கலாம்.
இயற்கையோடு மகிழ்ச்சியாக வாழலாம்.

You might also like