You are on page 1of 2

நடவடிக்கை 2 : கட்டுரை எழுதுதல்

இல்லிருப்புக் கற்றல் (Home Based Learning) மாணவர்களுக்குப் பல


நன்மைகளைக் கொண்டு வருகிறது. உமது கருத்தினை விவரித்திடுக

இல்லிருப்புக் கற்றல் (Home Based Learning)/இணையம் கற்றல் கற்பித்தலிலும்


மிகப்பொரிய உருமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மரபு வழிசார்ந்த கற்றல் கற்பித்தல்
அணுகுமுறைகள் குடியிருந்த வகுப்பறைகளில் தற்போது நவினமான அணுகுமுறைகள்
இடம்பிடித்துள்ளன. இணையம் வழியான கல்வி முறை ஆசிரியர்களின் கற்பித்தலிலும்
மாணவர்களின் கற்றலிலும் புதிய வகைப் பரிணாமங்களை உண்டாக்கிக்
கொடுத்திருக்கின்றன. எளிமை, விரைவு, விளைபயன், ஈர்ப்பு, மனமகிழ்வு, பல்லூடகம்
முதலான தன்மைகளைக் கொண்டிருப்பதால், இணையம் வழியான கல்விமுறை இன்றைய
காலத்திற்கு மிகவும் ஏற்றதாகவும் தவிh;க்க இயலாத ஒன்றாகவும் ஆகிவிட்டது.
அவ்வகையில், பல் வகையான் மொழிகலும் மற்றும் பொது அறிவு கற்றல் கற்பித்தலுக்குப்
பங்களிக்கும் இணைய நன்மைகளை குறித்து பார்ப்போம்.

இணையம் தற்போது மக்களுக்குத் தேவையானச் செய்திகளை அள்ளித்தரும்


அமுதசுரபியாக விளங்கி வருகிறது. உள்ளூர் செய்திகள், வெளியூர் செய்திகள், வெளிநாட்டுச்
செய்திகள், அயல் கண்டச் செய்திகள் எனப் பலவகைச் செய்திகளை விரல் நுனிச்
சொடுக்கலில் பெற முடிகிறது. உள்ளூர், வெளியூர், வெளிநாடு, வெளி கண்டம் ஆகிய
எப்பகுதி மாந்தருடனும் நேரில் பேசுவது போல காட்சி மற்றும் பேச்சு வழியாக
உரையாடமுடிகிறது. கற்பித்தல், மருத்துவம், பொழுதுபோக்கு, விற்பனை, இடப்பதிவு, அஞ்ிசல்
முதலான பல துறைகளில் இக்காலத்தில் விரைவான முன்னேற்ற ங்கள் இணைய நுழைவால்
ஏற்பட்டுள்ளன என்பது உண்மை.

கல்வித் திட்டத்தில் இல்லிருப்புக் கற்றல் (Home Based Learning) கல்வியை


மாணவர்களுக்கு அளிப்பதால் அவர்களது சிந்தனையாற்றல் வளர்ச்சியடைந்து மாறிவரும்
தொழில்நுட்பத்திற்கு தங்களை வலுப்படுத்திக் கொள்ள முடிகிறது. இதற்கு Artificial
Inteligence (Al) என்று சொல்லப்படும் தொழில்நுட்பத்தை கற்றல் கற்பித்தலில்
நடைமுறைப்படுத்திட வேண்டியது காலத்தின் தேவை. கல்வியியல் வல்லுநர்களைக்
கொண்ட அமைப்பால் மேம்படுத்தி வரையறுக்கப்பட்ட கற்றல் கற்பித்தலில் இணைக்கப்பட
வேண்டும். இந்த முயற்சிகளை கல்வி நிறுவனங்களும் பாடத்திட்ட மேம்பாட்டு
மையங்களும் ஆய்வு செய்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்திடலாம்.

இல்லிருப்புக் கற்றல் மற்றும் இணையம் வழிகளிள் கற்றல் கற்பித்தலில் வளர்ந்த


நாடுகளைப் போல வளரும் நாடுகளிலும் பரீட்சார்ந்த முறையில் நடைபெற்று
வருகிறதென்றாலும் இந்த (Ai) தொழில்நுட்பக் கூறுகளை எந்த நிலையில்
பாடத்திட்டத்தோடு இணைக்கப்படலாம் என்று ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கணினி தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் மாணவர்களின் அறிவு வளர்ச்சியை (Logistic
Development) வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மாணவனின் அடிப்படை அறிவு,
திறடை மாறுபட்ட பயிற்சிகளை நுட்பங்கள் மூலம் கற்றல் கற்பித்தல் நடைபெறுவதால்
மாணவன் புதிய கருத்துக்களை செய்திகளைப் பெறுகிறான்.

முடிவாக, எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் படைப்பாற்றல்


இன்றியமையாததாகும். மாணவர்களின் படைப்பாற்றல் திறனை அதிகரிக்கக் கணினி
மென்பொருள். இல்லிருப்புக் கற்றல் (Home Based Learning) இக்கற்பித்தல் முறையில் ஓர்
ஆசிரியர், ஒரு மாணவர் என்ற கற்றல் நிலை பின்பற்றப்படுகிறது. இதன்மூலம் மாணவரின்
கவனம் சிதறாமல் தடுக்கப்படுகிறது. நடப்பில் உள்ள வகுப்பறைகளைப் போல
நூறுபேருக்கு ஓர் ஆசிரியர் என்ற தொல்லை இக்கற்பித்தல் முறையில் இல்லை. மேலும்
தேவையான நேரத்தில் பாடங்களைப் படித்துக்கொள்ளலாம். இரவு பகல் என்ற நேர
எல்லை இல்லை. இக்கற்பித்தல் முறையில் திரும்பத் திரும்பப் கற்ற பாடங்களையே
பார்வையிடலாம். கணிணியின் உதவியுடன் கல்வியை கற்பதே மின்-கற்றல் (E-Learning)
எனப்படும். கற்றலின் அடிப்படை நோக்கமாகப் பாட வடிவமைப்பு, பாடத் தேர்வு, கற்றல்
நிர்வகிப்பு ஆகிய நடவடிக்கைகள் அமைகின்றன. இ-கற்றலை மூன்றாக
வகைப்படுத்தலாம். அவை முறையே குறுந்தகடுகளைக் கொண்டு கற்றல் (CD /DVD based
Education), வகுப்பறைகளில் கற்றல் (Classroom based Education), இணைய வழியில்
கற்றல் (Web based Education) ஆகியனவாகும்.

You might also like