You are on page 1of 2

அவை நெறியாளர் அவர்களுக்கு நன்றி..!

அகர முதல எழுத்தெல்லாம் -ஆதி


பகவன் முதற்றே உலகு

பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி மல்லிகா


இராஜமாணிக்கம் அவர்களே....
துணைத் தலைமையாசிரியர்களே..
ஆசிரிய பெருந்தகையினரே..
மாணவ நண்பர்களே..

உங்கள் அனைவருக்கும் எனது முத்தான முத்தமிழ்


வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

முதலில் ,இங்கே உரையாற்ற எனக்கு


வாய்ப்பளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி மலர்களைச்
சமர்ப்பிக்கிறேன்.

இன்று பள்ளி அளவிலான சிறுவர் தினம் நமக்கென


ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நாம் அனைவரும் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்
தான். பல நாடுகளில் இப்போது போர், உள்நாட்டுக்
கலவரங்கள், சீதோஷ்ண நிலை போன்ற காரணங்களால்
நம்மைப் போன்ற சிறார்கள் ஊண் உறக்கமின்றி
தவிக்கிறார்கள். வசிக்க வீடு இல்லை; சார்ந்திருக்க
குடும்பம் இல்லை. ஆனால் நமக்கோ எல்லாவற்றையும்
கடவுள் அதிகமாகவே கொடுத்திருக்கிறார். நாம் இங்கே
மிகவும் பாதுகாப்பான மகிழ்ச்சியான சூழலில் சிறுவர்
தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு எப்போதுமே கல்விதான் அவசியம்.கல்வி அறிவு


இருந்தால்தான் உலகில் நாம் அறிவோடும், அறிவியல்
வளர்ச்சியோடும் சமமாகப் போரிட்டு முன்னேற முடியும்.
இக்கல்வியறிவை நமக்கு புகட்டுவதோடு, நமக்கென பல
நிகழ்வுகளை நமக்காக ஏற்பாடு செய்து நம்மைக்
கௌரவிக்கும் ஆசிரியர்களுக்கு நாம் எப்போதும்
நன்றியோடு இருக்க வேண்டும்.நமது அறிவு கண்களைத்
திறந்து வைக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் நமக்கு
தெய்வங்கள் தான்..மற்றொரு பெற்றோர் தான்.

எனவே, ஆசிரியர்களே.. எங்களைத் தொடர்ந்து


வழிநடத்துங்கள், கற்றுக் கொடுங்கள், நாங்கள் என்ன
செய்தாலும் எங்களை நேசிப்பவர்கள் நீங்களே..

நண்பர்களே..இளைய தலைமுறையினரான நாம்தான்


நாட்டின் அடுத்த தலைவர்கள்..ஒரு கலாச்சாரத்தின்
பாரம்பரியத்தை வளர்ப்பவர்களும் நாமே என்பதை நாம்
உணர வேண்டும். இனிமேலாவது அதிக பொறுப்போடும்,
ஒழுக்கத்தோடும் நடந்து கொள்வோம். ஆசிரியர்களுக்கு
பிடித்த குழந்தைகளாவோம்.

இவ்வேளையிலே..எங்களுக்காக ஏற்பாடு செய்து, எங்கள்


உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, எங்களைக் கொண்டாடும்
பள்ளி ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத்
தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.
நன்றி. வணக்கம்.

You might also like