You are on page 1of 2

“நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க”

1. தேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பணிப்புரியும் திருமதி சின்னம்மா


அவர்களின் பிரியாவிடை விழாவிற்கு வருகை புரிந்திருக்கும், பள்ளித் தலைமையாசிரியை
திருமதி கண்ணகி அவர்களே, துணைத் தலைமையாசியர்களே, ஆசிரியர்களே, பள்ளி
ஊழியர்களே, மற்றும் இப்பள்ளியின் மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும்
இவ்வினிய காலை வேளையில் கலைமகளின் பாதம் பணிந்து முத்தான முதற்கண்
வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
_________________________________________________________

2. பல வருடம் காலமாக நமது பள்ளிக்கும் நமது பள்ளியின் மேன்மைக்காகவும் அயராது


உழைத்தவர் திருமது சின்னம்மா அவர்கள். எனவே, அவரின் சேவைகளைப் போற்றும்
வண்ணம் அவருக்காக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு சிரமம் பாராது
வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும் அகமும் முகமும் மலர, வருக வருகவென
வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
__________________________________________________________

3. காலந்தாழ்த்தாமல் நாம் நிகழ்வின் முதல் அங்கத்திற்குச் செல்வோம். நிகழ்வின் தொடக்க


் . இறைவாழ்த்து பாட மாணவி _________________
அங்கமாக இறை வாழ்தது
அழைக்கிறேன்.

4. இறை வாழ்த்தினைப் பாடிச் சென்ற -_______________ அவர்களுக்கு நன்றி.

5. தொடர்ந்து தலைமை உரையாற்ற தேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்


தலைமையாசிரியை திருமதி கண்ணகி சுப்பிரமணியம் அவர்களை அன்புடன் அழைக்கின்றேன்.

6. உரையாற்றிச் சென்ற தலைமையாசிரியை திருமதி கண்ணகி சுப்பிரமணியம் அவர்களுக்கு


நன்றி.

7. நமது கண்களுக்கு விருந்தளுக்கும் வகையில் ஒரு இனிய படைப்பிணை நமது பள்ளி


மாணவர்கள் வழங்கவுள்ளனர். அவர்களை அன்புடன் அழைக்கின்றேன்.

8. அழகாக நடனமாடிய மாணவர்களுக்கு நன்றி.


9. அடுத்ததாக விழாவின் நாயகியான திருமதி சின்னாமா அவர்களை உரையாற்ற
அழைக்கின்றேன்.

10. உரையாற்றிய திருமதி சின்னமாவிற்கு நன்றி.

11. நமது நிகழ்வை மெருகூட்ட மேலும் ஒரு படைப்பு. அப்படைப்பினை வழங்க மாணவர்களை
அழைக்கின்றேன்.

12. படைப்பினை வழங்கிய மாணவர்களுக்கு நன்றி.

13. தொடர்ந்து பரிசளிப்பு விழா. பரிசுகளை எடுத்து வழங்க நமது பள்ளி தலைமையாசிரியர்
அவர்களை அழைக்கின்றேன்.

14. பரிசுகளை எடுத்து வழங்கிய தலைமையாசிரியர் அவர்களுக்கு நன்றி.

15. ஓய்வுபெற்றவுள்ள திருமதி சின்னம்மா அவர்கள் தமது எஞ்சிய வாழ்நாளை தம்


குடும்பத்தாருடன் மனநிம்மதியோடு கழித்திட நாம் மனதார வாழ்த்துவோம்.

16. தொடந்து, நடைப்பெறும் விருந்து உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டு


கொள்கின்றேன்.

17. இத்துடன் நிகழ்வு நிறைவடைகின்றது. நன்றி வணக்கம்.

You might also like