You are on page 1of 10

நேர்த்தி நிறை நாள் 2023

பெற்றோர் மற்றும் பிரமுகர் வருகை

அவையோர்களின் கவனத்திற்குத், தங்களின்


கைத்தொலைப்பேசியைத் தய்வு செய்து முடங்கி விடவும் அல்லது
குறையான ஒலிக்கு மாற்றிவிடவும். நிகழ்ச்சியின் பொழுது
அமைதியைக் காக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

வருகையாளர்களின் கவனத்திற்கு, தய கூர்நது ் குப்பைகளைக்


வருகை குப்பைத் தொட்டியில் வீசும்படி கேட்டுக் கொள்கிறோம். நமது பள்ளி
நமது பொறுப்பு என்பதை உணர்நது ் செயல்படுவீர்கள் என
நம்புகிறோம்.

பெற்றோர்களின் கவனத்திற்குப், படைப்பில் பங்கெடுக்கும்


மாணவர்களையும் பரிசு பெறும் மாணவர்களையும் நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளரின் அனுமதியின்றி அழைத்துச் செல்லக்
கூடாது என்பதனை நினைவுப்படுத்திக் கொள்கிறோம்.
கவிதை
நற்றமிழ் நயம்பட உரைத்து
சொற்பொருள் பெருக்கி
கற்றவர் கருத்துரு செதுக்கி
நலம் தரும் கவி பல படைத்து
வளம் காண்பதும் சேர்ப்பதும்
செந்தமிழுக்குச் சிகரமாகும்

முலைப்பாலோடு முத்தமிழையும்
தேனாய், உணவாய், உயிராய்,
அமுதூட்டிய அன்னைக்கு எங்கள்
அன்பு வணக்கம்

உயிரையும் மெய்யையும் அகரத்தோடு


அக்கறையாய் அரிச்சுவடி ஆரம்பித்த
முதல் தமிழ் ஆசானுக்கு எங்கள்
குரு வணக்கம்

பார்தத் தும், படித்ததும், கேட்டதும்


முடிந்ததும், மறவாமல் என் துளிர் விட்ட உணர்விற்கு
உணர்வாய் தளிர்விட, தமிழ் தாகத்திற்கு தணலாய்
கவி கொடுத்து கை கொடுத்த பாரதியே ..எங்கள்
முதல் தமிழ் வணக்கம்.

மூச்சு மறந்தாலும் பேச்சு மறந்தாலும்


முத்தமிழை மறவாமல்
நீரூற்றி, சீராட்டி, பாராட்டி, வேரூன்ற வைத்திருக்கும்
தண்டமிழ்க் காவலர்களுக்கு
எங்கள் தன்மையான தனி வணக்கம்
கல்வியுலகப் பூஞ்சோலையில்
கரைச்சேர வந்திருக்கும்
மாணவச் செல்வங்களே சேர்த்து மகிழும் பெற்றோர்களே ,
உங்களுக்கு
எங்களின் தண்டமிழ் வணக்கம்..

தேசிய வகை மேரு சாலையின் 2022/2023 ஆம் ஆண்டின் நேர்த்தி


நிறை நாளுக்கு, உங்கள் அனைவரையும் வருக வருக என
வரவேற்கிறோம்.

இசை…….

குத்து விளக்கு காலைக் கதிரோன் விளக்கைக் கண்டே


ஏற்றுதல்
கடிதே உலகம் விழிக்கிறது !
மாலை இரவு நிலவு விளக்கால்
மண்ணே மறந்து துயில்கிறது !
கண்ணாம் விளக்கு ஒளியால் உலகம்
காண அழகாய் இருக்கிறது !
மண்ணில் பசுமை விளக்கின் ஒளியில்
மகிழ்நதே
் உலகம் மலர்கிறது !
இதோ மலர்கிறது மேரு சாலை தமிழ்ப்பள்ளியின் நேர்தத
் ி நிறை
நாள், நம் பேதைகள் ஏந்தி வரும் சுடர் விளக்குகளால்…. சுடர்
விளக்குகளை ஏந்தி பவணிவரும் குழந்தைகளை இசையுடன்
வரவேற்போம்……

குத்து விளக்கு தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது


என்பர். இந்துகளும் தமிழர்களும் மங்களத்தைக் குறிக்கும்
தத்துவமாக இதனை கொள்வர். அடிபாகம் பிரமா எனவும் நீண்ட
நடுப்பகுதி மகாவிஷ்ணு எனவும் மேற்பகுதி சிவ அம்சம் எனவும்
கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து,
சுடர் கலைமகள், அலைமகள், தீ-மலைமகள். இப்படி அனைத்தும்
சேர்நத
் தே குத்து விளக்கு என்பர். இத்துணை அம்சங்களை
உள்ளடக்கிய குத்துவிளக்கை ஏற்றி, அம்சமாக நம் மேரு சாலை
தமிழ்ப்பள்ளியின் 2022/2023 ஆம் ஆண்டியின் நேர்தத
் ி நிறை
நாளை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்க பள்ளியின்
தலைமையாசிரியர் திருமதி சுசிலா முனியாண்டி அவர்களைப்,
பள்ளியின் துணைத்தலைமையாசிரியர்கள் உடன் வர, அன்புடன்
அழைக்கின்றோம்.

-குத்து விளக்கினை ஏற்றி, நிகழ்வினை துவக்கி வைத்த


தலைமையாசிரியருக்கு நன்றி.
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு இன்றைய நம்


கடவுள் வாழ்தது
் நிகழ்ச்சியைத் தொடங்குவோம். இறை வாழ்த்தைப் பாட
________________________________________________________________
அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.
இறை வாழ்த்தினை வழங்கிய அன்புச் செல்வன்
_________________________________________ அவர்களுக்கு நன்றி.

தொடர் அங்கமாகத் தேசிய கீதம் பாடப்படும். அதனை தொடர்ந்து


தமிழ் வாழ்த்தும் பாடப்படும். வருகையாளர் அனைவரும் எழுந்து
தேசிய கீதம் & நிற்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் வாழ்தது

-நன்றி, வருகையாளர் அனைவரும் தத்தம் இருக்கையில்
அமரலாம்.

படைப்பு - பரதம் 1 அகிலம் எல்லாம் விளங்கும்


அம்மன் அருள்
அது அடியவர் துயர் தீர்க்கும்
அற்புத விருந்தாகும்
கருணை விழியால் கனிவுடன் நோக்கி
வருந்துயர் போக்குவாள் !- விரும்பி
வணங்கு மடியவர் வாழ்வி னொளியாய்
இணங்கி யருள்வாள் இனிது

இசையால் மயங்குறும் உயிர்தனில்


இசைக்கே அரசியின் நடனமாக
இங்கு அற்புதமாக ஆடி வருகிறார்
அம்மையின் வடிவமாக
அழகு தேவதை குமாரி
இதோ ஓசை கொடுத்த நாயகிக்கு ஓர் சமர்ப்பணம்

…………………………………………… என்ற பாட்டுக்கு


அபிநயம் பிடிக்க வருகிறார்…..நாட்டிய தாரகை,
செல்வி………………………………….
அழகிய நடனத்துக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி
அகத்தானாம் இன் சொலினதே அறம்….

என்ற வள்ளுவன் அடிகொற்ப வருபவரை இன்முகத்துடன்


வரவேற்பது நம் தமிழர்களின் பண்பாடு. எனவே, வரவேற்புரையை
வரவேற்புரை வழங்க இணைப்பாடத் துணைத்தலைமையாசிரியர் திருமதி
கவிதா தியாகராஜூ அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

-வரவேற்புரை ஆற்றிய இணைப்பாடத் துணைத்தலைமையாசிரியர்


அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.மோகனராஜா


மதுரவீரன் அவர்களை உரையாற்ற அழைக்கிறோம்.
தலைமையுரை
-உரையாற்றிச் சென்ற பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருக்கு
நன்றி
அடுத்ததாக, நம் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சுசிலா
முனியாண்டி அவர்களைச் சிறப்புரையாற்ற பணிவன்புடன்
சிறப்புரை அழைக்கிறோம்.

- ரத்ன சுருக்கமாக உரை வழங்கிய தலைமையாசிரியருக்கு நன்றி.

அவையோர்களே,
நம் நாடி நரப்புகளைச் சொடக்குப் போட்டு எழுப்ப வருகிறார்கள்,
ஆண்டு 1,2 மாணவர்கள். இதோ உங்களுக்காக……

-உடலுக்குப் புத்துணர்ச்சியை வழங்கி சென்ற ஆண்டு 1,2 மாணவ


செல்வங்களுக்கு நன்றி.
படைப்பு – நடனம் - அருமையான நடனத்தைப் பயிற்சியித்த ஆசிரியை
ஆண்டு 1&2
……………………………………………………………………
………………
அவர்களுக்கு இவ்வேளையில் நன்றியினைத் தெரிவித்துக்
கொள்வோம்.
பரிசளிப்பு 1 – தொடர்வது, பாலர்பள்ளியின் பட்டமளிப்பு நிகழ்வு.
பாலர்பள்ளி
பட்டமளிப்பு தாயின் பாலைத் தந்து வளர்தத ் ால்
தங்கம் போல வளரும்
தழுவும் போதே தட்டி வளர்த்தால்
தன்னை உணர்ந்து விடும்
நோயில்லாமல் காத்து வளர்த்தால்
நூறு வயது வரும்
நோக்கம் உன்றைச் சொல்லி வளர்த்தால்
பாரில் பறந்து விடும்
கல்விக் கடலில் மூழ்கிட வைத்தால்
காலத்தை வென்று விடும்
பயந்து பயந்து வீட்டுக்குள் வைத்தால்
பயனின்றி மாறிவிடும்
அன்பை அதிகம் காட்டி வளர்தத ் ால்
அதுவும் அன்பாகும், ஐந்து வயதில்
கற்பனை எல்லாம் ஆயுள் வரை தொடரும்..
இப்படி குழந்தைகளின் வளர்ச்சி காலத்தை முறையாக கொண்டு
வருவதில் பெற்றோரின் பங்கு அளப்பறியது…..

முறையாக வழங்கபடும் கல்வி ஒரு குழந்தையை


முழுமையாக்குகிறது. அவ்வகையில் தங்கள் குழந்தைகளின்
தொடக்கக் கல்வியை இப்பள்ளியின் பாலர்பள்ளியில் தொடக்கி
வைத்து பெற்றோர்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்.
பாலர்பள்ளியில் மாணவர்கலை நன் முரையில் கற்ரு வித்து
அவைகலை முதலாம் ஆண்டுக்குத் தயார் நிலையில் அனுப்பி
வைக்கும் திருமதி காவேரியம்மாள், திருமதி ருக்மணி, திருமதி
கோமதி, குமாரி நோர்ஹாயாத்தி அவர்களுக்கும் பள்ளியின்
சார்பில் வாழ்த்துகலையும் நன்றினையும் தெரிவித்துக்
கொள்கிறோம்.

கை, கால் முளைத்த இந்தக் கவிதைகளுக்கு இன்று பட்டமளிப்பு


விழா….
விழாவினைத் சிறப்பித்துத் தர
மாநில சட்டப் பேரவவை உறுப்பினர் உயர்திரு டத்தோ தெங் சங்
கிம் அவர்களின் சிறப்பு அதிகாரி, திரு. சரவணன் கணபதி
அவர்களை, பாலர்பள்ளி மாணவ செல்வங்களுக்கு நற்சான்றிதழை
எடுத்து வழங்க மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறோம்.
பள்ளியின் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்
அவர்களையும் உடன் வர அழைக்கிறோம்.

பல அலுவல்கள் இருந்தாலும் நம் அழைப்பை ஏற்று இந்நிகழ்வுக்கு


வருகைப் புரிந்த மாநில சட்டப் பேரவவை உறுப்பினர் உயர்திரு
டத்தோ தெங் சங் கிம் அவர்களின் சிறப்பு அதிகாரி, திரு. சரவணன்
கணபதி அவர்களுக்கு மாலை அணிவித்துச் சிறப்பு செய்வார்,
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. மோகனராஜா
மதுரவீரன் அவர்கள். தொடர்ந்து, அவருக்குத் தலைமையாசிரியர்
நினைவுச் சின்னத்தை வழங்குவார்.

.........................................................................................................
......................................... போன்ற பல நன்கொடைகளை, நம்
பள்ளிக்காக வழங்கியுள்ளார் மாநில சட்டப் பேரவவை உறுப்பினர்
உயர்திரு டத்தோ தெங் சங் கிம் அவர்கள், என்பதை இவ்வேளையில்
தெரிவித்துக் கொள்கிறோம்.

பெயர்கள் வாசிக்கப்படும்….

நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கி திரு. சரவணன் கணபதி


அவர்களுக்கு நன்றி.
 
பரிசளிப்பு 2 – தொடர்வது ஆண்டு ஒன்றுக்கான பரிசளிப்பு அங்கம்..
பரிசினை எடுத்து வழங்க பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்
திரு மோகனராஜா மதுரவீரன் அவர்களை அன்புடன்
ஆண்டு 1 அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய ஐயா அவர்களுக்கு நன்றி.

ஆயற்கலையில் ஒன்றான பரதத்தின் அழகினை கற்றோடு குழலின்


நாதம் என்ற பாடலுக்கு நயத்துடன் வழங்க மீண்டும் வருகிறார்
படைப்பு –
செல்வி ……………………………………………
பரதம் 2
அழகிய நடனத்துக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.

பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் திருமதி ராஜேஸ்வரி


பரிசளிப்பு – முருகன் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.
ஆண்டு 2
பரிசுகளை எடுத்து வழங்கிய பெற்றோர் ஆசிரியர் சங்கத்
துணைத்தலைவர் அவர்களுக்கு நன்றி.

அடுத்து, கண்களுக்கு விருந்தாக நம் பாலர்பள்ளி செல்வங்களின்


குழு நடனம் ஆட மலேசியாவின் பல்லின மக்களின் பாரம்பரிய
உடையில் வருகிறார்கள் உங்களுக்காக…. கரகோசையுடன்
அவர்களை வரவேற்போம்.

பலவின மாந்தர்கள் வாழ்ந்திடும் நாடு


படைப்பு – நடனம் - பன்மொழி பேசி மகிந்திடும் நாடு
பாலர்பள்ளி கலைபல கொண்டு தவழ்நத ் ிடும் நாடு
கண்ணிய மாய் உயர்நத ் ோங்கும் நாடு
என்பதை அவர்களின் நடனத்திலிருந்து நாம் உணர்ந்து கொள்ள
முடிகிறது.
அருமையான நடனத்தை வழங்கிச் சென்ற மழலைச்
செல்வங்களுக்கு நன்றி.
பால்மணம் மாறாப் பாலர்க்கு
பால்குடி மறக்கவோ பாலர்ப்பள்ளி
சுழழும் பம்பரமாய் இருக்கும் பாலர்க்கு
கல்வியின் அறிமுகம் பாலர்பள்ளி

பல திறன்களைத் கற்று, பாடநிலையில் நேர்த்தியான


பாலர்பள்ளியில் மாணவர்களுக்கான பறிசளிப்பு அங்கம்.
பரிசளிப்பு – அவர்களுக்கான பரிசுகளை எடுத்து வழங்க திரு.சுந்தர்
பாலர்பள்ளி அவர்களை அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய திரு.சுந்தர் அவர்களுக்கு நன்றி.


மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றிலும், இலக்கிய வளர்ச்சியிலும் மலேசிய
இலக்கியங்களை அறிமுகம் செய்வதிலும் தனி முத்திரை இட்டவர் பாப்பாவின்
பாவலர் என அன்போடு அழைக்கப்படும் கவிஞர் ஐயா முனைவர் முரசு
நெடுமாறன் அவர்கள் ..இவ்வளவு சிறப்புமிக்க ஐயா அவர்கள் நம் பள்ளிப்
பாடலை எழுதி இசையமைத்துக் கொடுத்துள்ளார். இவ்வகையில் நம் பள்ளி
வரலாற்றிலும் நீங்கா இடம் பெற்றுள்ள ஐயா அவர்களின் இத்தொண்டினை
இப்பள்ளி குடும்பத்தினர் அனைவரும் என்றும் மறவோம்.

மேருசாலைத் தமிழ்ப்பள்ளியின் பண்னிசை அறிமுக விழா இன்று நடைபெற


விருக்கிறது. ஐயா முனைவர் முரசு நெடுமாறன் அவர்களை அன்புடன்
மேடைக்கு அழைக்கிறோம். அவர்தம் புதல்வர் இளவரசு அவர்களையும்,
தலைமையாசிரியர் திருமதி சுசிலா, துணைத் தலைமையாசிரியரள், பெற்ரோர்
ஆசிரியர் சங்கத் தலைவர் திரு மோகனராஜா, லத்தோ தெங் அவர்களின்
பள்ளிப்பண்ணி பிரதிநிதி திரு சரவனன் அவர்களையும் மேடைக்கு அழைக்கிறோம்.
சை அறிமுக விழா

அடுத்த அங்கமாக மலர்வது ஆண்டு 3 மாணவர்களுக்கான


பரிசளிப்பு..
பரிசளிப்பு –
ஆண்டு 3 அவர்களுக்கான பரிசுகளை எடுத்து வழங்க பாப்பாவின் பாவலர்
முரசு நெடுமாறன் ஐயா அவர்களை அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய திரு.சுந்தர் அவர்களுக்கு நன்றி.

படைப்பு – மலாய்
நடனம் ஆண்டு 4

படைப்பு -
செயலாக்கப்பாட்
டு – ஆண்டு 3
பரிசளிப்பு –
குறைநீக்கல்
மாணவர்கள் அவர்களுக்கான பரிசுகளை எடுத்து வழங்க திரு.இளவரசு
அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.
பரிசுகளை எடுத்து வழங்கிய திரு.இளவரசு அவர்களுக்கு நன்றி.

மலாய், ஆங்கிலம், தமிழ்மொழி

அவர்களுக்கான பரிசுகளை எடுத்து வழங்க ………………..


அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய ………………… அவர்களுக்கு


நன்றி.
பரிசளிப்பு –
ஆண்டு 4 கணிதம், அறிவியல், வரலாறு

அவர்களுக்கான பரிசுகளை எடுத்து வழங்க திரு.சசிதரன்


அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய திரு.சசிதரன் அவர்களுக்கு நன்றி.

படைப்பு – நடனம்
ஆண்டு 5

மீண்டும் மலர்கிறது பரிசளிப்பு அங்கம். பரி

5 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பரிசுகளை எடுத்து வழங்க


பரிசளிப்பு –
திரு.குமரவேலு சுப்ராயன் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.
ஆண்டு 5
பரிசுகளை எடுத்து வழங்கிய திரு.குமரவேலு சுப்ராயன்
அவர்களுக்கு நன்றி.

பரிசளிப்பு – தொடர்வது 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பரிசளிப்பு அங்கம்


ஆண்டு 6
மலாய் மொழி, ஆங்கிலம்
……………………………………………………………………
……………மாணவர்களுக்கானப் பரிசுகளை எடுத்து வழங்க
திரு.சிவசம்பு அவர்களை அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய திரு.சிவசம்பு அவர்களுக்கு நன்றி.

தமிழ்மொழி, கணிதம்
……………………………………………………………………
……………மாணவர்களுக்கானப் பரிசுகளை எடுத்து வழங்க
திரு.மாயவன் அவர்களை அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய திரு.மாயவன் அவர்களுக்கு நன்றி.

அறிவியல், வரலாறு
……………………………………………………………………
……………மாணவர்களுக்கானப் பரிசுகளை எடுத்து வழங்க
திரு.மாயவன் அவர்களை அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய திரு.மாயவன் அவர்களுக்கு நன்றி.

அடுத்ததாக கடமை கண்ணியம் என்ற கட்டுப்பாடுடன்


கடமைகளைச் செவ்வனே செய்த வகுப்புத் தலைவருக்கும்
துணைத்தலைவருக்கும் சான்றிதழ் வழங்கும் அங்கம்.
சான்றிதழை எடுத்து வழங்க
……………………………………………………………………
……………………………………………………………………
……………………………………………………………………
………………………………………………

பரிசளிப்பு வகுப்புத் துணைத்தலைவர் –


ஆண்டு 6
நூலகப் பொறுப்பாளர் –ஆசிரியை திருமதி தனலெட்சுமி

மாணவர்த் தலைவர்- நிர்வாக துணைத்தலைமையாசிரியர்

சகதோழமை வழிக்காட்டியாளர் – மாலைப் பிரிவு


துளைத்தலைமையாசிரியர்

நீலாம் மாணவர்கள்- இணைப்பாட துணைத்தலைமையாசிரியர்

கல்வியில் சிறந்த மாணவர்-தலைமையாசிரியர்


பரிசளிப்பு

இணைப்பாட நடவடிக்கையில் சிறந்த மாணவர்-தமைமையாசிரியர்

படைப்பு – ஆண்டு
6

நன்றியுரை

இருள் சூழ்நத
் ிருக்க,
விளக்கின் ஒளி பிரகாசிக்க,
மண்டபம் வருகையால் நிறைந்திருக்க,
மனம் தேடுகிறது நன்றிக்கான வார்த்தைகளை….

என்று மேரு சாலை தமிழ்ப்பள்ளியின் மனமார்நத ் நன்றியினைத்


சிரந்தாழ்த்திக் கூறிக் கொள்கிறோம். இத்துடன் இனிதே
முடிவடைகிறது, நம் பள்ளியின் 2022/2023 ஆம் ஆண்டின் நேர்த்தி
நிறை நாள். நிறைகள் இருப்பின் அவை இறைவனைச் சாறும்,
குறைகள் இருப்பின் அவை எங்களைச் சாறும் என்று கூறி
உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறோம். மீண்டும்
சந்திப்போம் அடுத்த நிகழ்வில். நன்றி!

You might also like