You are on page 1of 2

ஆசிரியர் தினக்கொண்டாட்டத்தில் மாணவர் தலைவர் உரை

பெரும் மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, பள்ளி முதல்வர் அவர்களே,


ஆசிரியப் பெருமக்களே, தோழர்களே, உங்கள் அனைவருக்கும் இவ்வினிய வேளையில்
என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எல்வின் ஜூட் த/பெ
வின்சன் போல் மாணவர் தலைவர் ஆகிய நான் ஆசிரியர் தினக்கொண்டாட்டத்தை பற்றி
உரை யாற்ற உள்ளேன். இன்றைய நன்னாளில் மாணவர்கள் சார்பில் ஆசிரியர் தின உரை
ஆற்றுவதற்கு எனக்குக் கிடைத்த இவ்வாய்ப்பை மிகப் பெருமையாகக் கருதுகிறேன்.
ஆசிரியப் பெருந்தகைகளே, உங்கள் அனைவருக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

அவையோரே,

நம் நாட்டில் அன்னையர் தினம், தந்தையர் தினம், வீரர்கள் தினம், என்று ஒவ்வொரு
துறையைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதைப்
போலவே ஆசிரியர்களைப் போற்றுவதற்குச் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு
தினம்தான் ஆசிரியர் தினம்.

சபையோரே,

இந்த நாளில் ஆசிரியரின் சிறப்பைப் பற்றி தான் நான் பேச வந்துள்ளேன்.


ஆசிரியர் தினம் என்பது மாணவர்களாகிய நாம் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும்
மகத்தான நாள் ஆகும். ஆசிரியர்கள் நமது சமுதாய சிற்பிகள். சமுதாயத்தை
வடிவமைப்பவர்கள், எழுத படிக்கத் தெரியாமலும் எழுதுகோல் பிடிக்கத் தெரியாமலும்
வரும் மாணவர்களை அன்போடு அரவணைத்து, எண்ணும் எழுத்தும் கற்றுக் கொடுத்து
அறிவுக் கண்ணைத் திறப்பவர்கள் ஆசிரியர்களே என்று கூறினால் மிகையாகாது.

"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு


புண்ணுடயர் கல்லா தவர்”

என்ற குறளுக்கேற்ப நம்மைக் கல்வி கற்றவர்களாக உருவாக்குபவர்கள்


ஆசிரியர்களே. இவர்களின் சேவையைப் போற்றிப் பாராட்டவே ஆசிரியர் தினம்
கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாங்கள் வழங்கும் வாழ்த்துகள், பரிசுகள், விருந்துகள்
மட்டும் உங்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டாது என எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு
மகிழ்ச்சியூட்டும் வகையில் நாங்கள் கல்வியில் சிறந்து, வாழ்க்கையில் உயர்ந்து, சமுதாயத்தில்
மலராய் மலர்ந்து மணம் பரப்புவோம் என இவ்வேளையில் உங்களுக்கு உறுதி
கூறுகிறோம். உங்கள் கனவுத்தோட்டங்களில் நாங்கள் என்றென்றும் மணம் பரப்புவோம்
என்பதில் சிஞ்சிற்றும் ஐயமில்லை.

தோழர்களே,

ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள். தன்னை உருக்கி ஒளி சிந்தும்


மெழுகுவர்த்திபோல் தங்களை வருத்திக்கொண்டு மாணவர்களின் நலனுக்கு
உழைப்பவர்கள். இதை மாணவர்கள் உணர வேண்டும். ஆசிரியர்களின் போதனைக்கு ஊறு
செய்யாமல் வகுப்பில் கல்வியில் கவனம் செலுத்திப் பயில வேண்டும். இப்படிப்பட்ட புனித
சேவையை அர்ப்பணிப்போடு ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தலைவர்
சார்பில் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு உங்களிடமிருந்து
விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

You might also like