You are on page 1of 14

வாழ்த்துரை

மேரு சாலைத் தமிழ்ப்பள்ளியில் நீண்ட காலம் பணியாற்றி வரும் குமாரி திருமகள்


கிருஷ்ணசாமி அவர்களின் பணி ஓய்வு கால சிறப்புப் பிரியாவிடை நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை
வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். செல்லும் இடத்துச் சிறப்போடும், தெளிந்த
கொள்கைப் பிடிப்போடும், என்றும் குறளின் நெறியோடும் வாழ்வது ஒரு மனிதனின் வாழ்வியலில்
முக்கிய அம்சமாகிறது. இதனை மனிதன் பின்பற்றுவானெனில், அவர்தம் வாழ்வு சிறப்பதோடு,
அவரைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சி படுத்தும்.
அவ்வகையில், மேருசாலைத் தமிழ்ப்பள்ளியில் நல்லாசிரியராகப் பணிபுரிந்து, பள்ளியின்
பால் மிக்க அக்கறை செலுத்தி, இப்பள்ளியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் சேவைகள் பல
செய்து, நிறைவான பணியாற்றியவர் குமாரி திருமகள் என்று கூறிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி
அடைகிறேன்.
மடை திறந்த வெள்ளம் போல், அன்னாரின் ஆற்றல்களும், திறமைகளும்,
ஆளூமையும் இப்பள்ளியின் மிகச் சிறந்த வளர்ச்சிக்குத் துணையாக இருந்தது என்பது நித்திய
உண்மை. பள்ளியின் பணித்திற வேலைகளில், திறம்பட நடத்தியதோடு சிறந்த ஆசிரியராகவும்
திகழ்ந்த குமாரி திருமகள் அவர்களுக்குப் பள்ளித் துணைத் தலைமையாசிரியர்கள் மற்றும்
ஆசிரியர்கள் சார்பிலும், மாணவர்கள் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிதனைத் தெரிவித்துக்
கொள்கின்றேன்.
அன்னார் எல்லா வளஞ்சூழ் நலத்துடன், இறைவனின் அருளாசியுடன் நீடு வாழ்க
வாழ்த்துகிறேன்.¸ÁØõ ÌÈû §À¡ø šƢ வாழியவே.

அன்புடன்,
___________________

(திரு கா.சித்திரைச்செல்வன்)
தலைமையாசிரியர்,
மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி

2
வாழ்த்துரை
அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும் உரித்தாகுக. மேரு சாலைத் தமிழ்ப்பள்ளியின்
ஆசிரியர் குமாரி கி.திருமகள் அவர்களின் பணி ஓய்வை ஒட்டி மலருமிந்த இதழுக்கு மணம்
சேர்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
குமாரி திருமகள் தம் பதவியைப் பொறுப்பேற்றது முதல் தாம் பணியாற்றிய பள்ளிகளில்
பல்வேறு முன்னேற்றங்களைக் கொண்டு வந்தமைக்கும், மேரு சாலைத் தமிழ்ப்பள்ளியின்
சிறப்பான வளர்ச்சிக்குப் பெரும் பங்கை வழங்கியமைக்கும் அமைப்பாளர் என்ற முறையிலும்
மாநில கல்வி இலாகா சார்பிலும் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்
கொள்வதில் பெருமை அடைகிறேன்.
குமாரி திருமகள் அவர்கள் ,மேரு சாலைத் தமிழ்ப்பள்ளியில் நிறைவான சேவையை வழங்கி
ஒரு நல்லாசிரியராகப் பணி ஓய்வு பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இவர் வித்திட்டுச் சென்ற
ஆசிரியப் பணி ஆலோசனைகளும் சேவையும் இனியும் தொடரும் என்பது உறுதி.
இறுதியாக,, பணி ஓய்வு பெறும் குமாரி திருமகள் அவர்கள் நீண்ட ஆயுளுடன் நிறைவாக
வாழ ஆண்டவனின் அருளாசியை இறைஞ்சுகிறேன்.

நன்றி,வணக்கம்.
அன்புடன்,
திரு அ.டேனியல்,
சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர்,
சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா.

1
பெற்றோர் ஆசிரியர் சங்கம்
PERSATUAN IBUBAPA DAN GURU
SJK(T) JALAN MERU, 41050 KLANG
Tel: 0122831320 / 0193898236

அனைவருக்கும் வணக்கம். முதலாவதாக இப்பள்ளியில் நீண்ட ஆண்டு காலமாகச்


சிறப்புற பணியாற்றிய பள்ளியின் ஆசிரியர் குமாரி திருமகள் அவர்களின் சிறந்த ஆசிரியத்திற்கு
என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்க் கூறு சமுதாயத்திற்குத் தங்களின் பணி அளப்பரிய பணி. தங்களிடம் பயின்ற
மாணவர்கள் நல்லொழுக்கத்துடனும் சிறந்த கல்விமான்களாகவும், சமுதாயத்திற்குப் பெருமை
சேர்த்துள்ளனர்.
இப்பள்ளியின் பணிக்காலத்தில், இவரின் பழுத்த அனுபவமும், தனித்துவமிக்க
பணித்திறனும் நம் பள்ளிக்குச் சிறந்ததொரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பள்ளியின்
பெற்றோர் ஆசிரியர் சங்கம் நடத்திய அனைத்து நிகழ்வுகளுக்கும் நல்ல ஆதரவையும்
ஒத்துழைப்பையும் நல்கிய இவர், மாணவர்களின் கல்வி நலனில் மிக அக்கறை கொண்டு பல
உதவிகளையும் புரிந்துள்ளார்.
குமாரி திருமகள் அவர்கள் பணி ஓய்வு பெற்ற போதிலும், தன்னால் முடிந்த அளவு நம்
இந்திய சமுதாயத்திற்கு நல்லாதரவும் தொண்டும் வழங்குவார் என்பது திண்ணம். இவரின்
நற்பணிகள் எல்லோர் மனதிலும் என்றும் நிலைத்திருக்கும். இவர் எல்லா நலனும் பெற்று
குடும்பத்துடன் சீரும் சிறப்புடன் வாழ பெற்றோர் ஆசிரியர் சங்கச் சார்பில் வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்,

திரு மா. மதுரைவீரன்


(பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்)

4
வாழ்த்துரை

மேரு சாலைத் தமிழ்ப்பள்ளியில் வெகு காலம் பணியாற்றி ஓய்வு பெறவிருக்கும்


எங்கள் மதிப்புமிகு ஆசிரியை குமாரி திருமகள் கிருஷ்ணசாமி அவர்களுக்கு முன்னாள்
மாணவர்கள் சார்பில் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக்
கொள்கிறோம்.

எங்களைப் போன்ற பல மாணவர்களைக் கல்வி உலகில் வெற்றி பெறச் செய்து,


இன்று சமுதாயத்தில் சாதனையாளர்களாக்கிய சிற்பிதாம் ஆசிரியை குமாரி கி.திருமகள்.
அன்னார் செய்த அறப்பணி இன்று பல கல்வியாளர்களை உருவாக்கியுள்ளது.

ஆசிரியை குமாரி கி.திருமகள் பணி ஓய்வு பெற்றாலும், அவர் விட்டுச் சென்ற பல


நினைவுகள் இப்பள்ளியை விட்டு நீங்காது. அவர் இறைவன் அருளால் எல்லா நலமும் பெற்று
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்,

நா.லோகேந்திரன்
(முன்னாள் மானவர் சங்கத் தலைவர்)

5
வாழ்த்துரை

வணக்கம். அன்பிற்கினிய ஆசிரியை குமாரி கி.திருமகள் அவர்கள் பணி ஓய்வு பெற்று


செல்லவிருக்கிறார். அன்னார் ஏறத்தாழ 17 ஆண்டுகள் இப்பள்ளியில் சிறந்த முறையில்
பணியாற்றியுள்ளார். இவர் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். நல்ல
மனமும் பண்பும் தன்னகத்தே கொண்ட ஆசிரியை திருமகள் அவர்கள் இப்பள்ளியின்
வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் என்று சொன்னால் மிகையாகாது.

அவரது பணி ஓய்வு நமக்கு இழப்பு. இருப்பினும் ஓய்வு என்பது அனைவருக்கும் தேவையாக
உள்ளது. ஆகவே, ஆசிரியை இப்பணி ஓய்வு காலத்திலும் மகிழ்ச்சியாகவும் நலனுடனும் வாழ
வாழ்த்துகிறோம்.

அன்புடன்,

திரு.சா.நெல்சன்

(பள்ளி வாரியத் தலைவர்)

3
கவிதை
திருமகள்..

எங்கள் குடும்பக் கலைமகள்


அன்பிலும் பண்பிலும் குணமகள்
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை
நிலைக்கச் செய்த வீரமகள்

திருமகள்..
நாங்கள் கண்ட சிறந்த பெண்
நன்மைகள் பலவும் புரிந்த பெண்
ஆசிரியத் துறைக்குச் சிறந்த பெண்
ஆரம்பப் பள்ளியைச் சிறப்பித்த பெண்

திருமகள்..
பணி ஓய்வு எனும் புயல் காற்று
பிரித்து வைத்தது பொன் மானை
கதறி அழுதிட துடிக்குது மனது
கண்ணீர் வழிந்தோடி ஆறுதல் தருகுது

திருமகள்..
பணி ஓய்வு பெற்றுச் சென்றாலும்
பசுமையாய் எங்கள் மனதில் வீற்றிருப்பீர்
எந்நாளும் நலம் வாழ வாழ்த்திடுவோம்
எங்களை மனச்சிறையில் வைத்திருப்பீர்..

அன்புடன்,
மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி குடும்பத்தினர்
11

விடிவெள்ளி வடிவாய் இப்பள்ளியில்


வற்றாத வளந்தமிழில் போதித்தீரே
நிறைவான பணிதம்மை அளித்திட்ட
நிறைமதியே வாழியவே பல்லாண்டு.

என்றும் அன்புடன்,
திருமதி. ஆ.லீலா

பிரியாவிடை கொடுத்தும்
பிரியாத எம் நினைவுகள்
பிரியப் போகின்றோம் என்று தெரிந்தும்
இடியாத மலைச்சிகரங்கள்.....

ஊர் அறிய அழவில்லை என்றாலும்


ஊமைகளாகவே அழுதுவிட்டோம்
நாம்......

எங்கள் உடலில் உயிர் உள்ளவரை


இந்த உன்னதமான உயிர்
நட்பினை நாங்கள்
மறவோம்.

என்றும் நினைவில்
நா. நாகநந்தினி & சு. வாசுகி
மழை நின்றும்
தூறல் விடாது போல
கண்ணெதிரே நீங்கள் இல்லாமல்
போனாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்…
விண்ணுயர்ந்த நட்பு
மண்ணுக்குள் போகும் வரை.....

என்றும் நீங்கா நட்புடன்


மேரு சாலை தமிழ்ப்பள்ளி
நற்பணி கழகம்.
ஆசிரியை குமாரி திருமகள் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு.

1961 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 25 ம் திகதி திரு கிருஷ்ணசாமி திருமதி


சுபத்திரை தம்பதிகளின் இளைய மகளாகப் பிறந்தவர். தந்தையின் வேலை
நிமித்தம் பசுமையான பஹாங் மாநிலத்தில் குவந்தான் எனும் பட்டணத்தில்
குவந்தான் நகரத் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டை முடித்தார். பிறகு நமது
பள்ளியில் ஆண்டு 2 முதல் 5 வரை கல்வியைத் தொடர்ந்தவர் 6 ஆம் ஆண்டை
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் முடித்தார்.

புதுமுக வகுப்பு முதல் ஐந்தாம் படிவம் வரை மெதடிஸ்ட் பெண்கள்


இடைநிலைப் பள்ளியில் படித்து லெம்பா பந்தாய் ஆசிரியர்ப் பயிற்சி கல்லூரியில்
(1982-1984) ஆசிரியராகத் தயாரானார். பயிற்ச்சிக்குப் பின்னர் போதித்த முதல்
பள்ளி காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி. 12 ஆண்டு காலம் போதித்த பின்னர் மேரு
சாலைத் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றலாகி வந்தார். இடையில் மலாயா
பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டு பட்டதாரியானார்.
ராஜா மஹாடி இடைநிலைப் பள்ளியில் ஓராண்டு காலம் கற்பித்த அனுபவமும்
இவருக்கு உண்டு. தொடர்ந்து மேரு சாலைத் தமிழ்ப்பள்ளியில் கற்பித்து ஓய்வு
பெற்று பள்ளி வரலாற்றிலும் இடம் பிடித்து விட்டார்.

மலேசிய நாட்டுப் பெண்ணான இவர் இந்தியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து,


வியட்நாம், கம்போடியா இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் சுற்றிப்
பார்த்துள்ளார். இந்த உலகம் சுற்றும் பயணம் தொடர வேண்டுமென்பது அவரது
விருப்பம்.

ஏறத்தாழ 35 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருந்த போதிலும் எந்த


ஒரு பதவி உயர்விற்கும் விண்ணப்பிக்கவில்லை. மாணவர்களுக்குக் கற்பிக்க
வேண்டும் என்பதே அவரது அவா.

குமாரி திருமகள் என்றால் கண்டிப்பு என்று பொருள்படும் அளவுக்கு அவரது


தோற்றமும் செயல்களும் இருக்கும். நேர்த்தி என்ற சொல் அவரது சொந்தமாகும்.
அவரது நேர்த்தியான வேலையில் நேசம் கொண்டவர்கள் ஏராளம். அடுத்தத்
தலைமுறையினர் அவரது தொழில்தத ் ிறனைப் பின்பற்றுவதுகல்வியின்
மேம்பாட்டிற்குத் துணைப்புரியும் என்பது திண்ணம்.

அன்னார் தனது உடன்பிறப்புகளுடனும் நண்பர்களுடனும் இனி வரும் காலங்களைக்


மகிழ்ச்சியுடன் கழித்து நீடூழி வாழ வேண்டும் என மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி
குடும்பம் வாழ்த்துகிறது. உங்கள் மனதில் எங்களுக்கும் இடம் வேண்டும்!!!

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!


திருமகள் எனும் சிறந்தப் பெண்ணை
சிந்தையில் வைத்திட ஞாபகம் வருதே.

10
ஆசிரிய அத்தியாயத்தின்
கடைசிப் பக்கம்...
எழுதப் படுகிறது பாராட்டுக்களால்...
படிக்கப்படுகிறது வாழ்த்துக்களால்...
முற்றுப் புள்ளி
இன்னும் சில மணித் துளிகளில்!
இறைவனளித்த வரம்
நாளை முதல் நடைமுறையில்...
இனி என்றென்றும்
இன்புறும் நாளாய்...
இறைவனின் ஆசியுடன்.

நீங்காத நினைவுகளுடன்,
திருமதி அ. தனபாக்கியம்
“ மண்ணில் பூத்த மலரை
மணம் உள்ள வரை
சுவாசி.........
உன் மனதில் பூத்த சிலரை
உயிர் உள்ள வரை நேசி.....”

பணி ஓய்வு என்பது நாம் செய்யும்


தொழிலுக்கு மட்டுமே!
நமக்கல்ல.....
எனவே,
இன்று முதல்
இனி வரும் வாழ் நாட்கள் முழுவதும்
நோய் நொடி இல்லாமல்
நீண்ட ஆயுளுடன்
இன்பமாக
இனிமையாக கழிக்க வாழ்த்துக்கள்!
வாழ்க நலமுடன்; வளமுடன்; என்றென்றும்
இவ்வையம் போற்ற......

அன்புடன்,
உற்ற தோழி,
நிறைமலி மல்லிகா பழனியாண்டி

வாழ்க்கை எனும்
நெடிய பயணத்தில்

பணிக்குத்தான் ஓய்வு!

உழைப்பிற்கு ஓய்வு
இல்லை!

உங்கள் வாழ்க்கைப் பயணம்


இனிதே தொடர
இறையருளும் குருவருளும் கிட்டட்டும்.

நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
திரு / திருமதி சித்திரைச்செல்வன் & சரஸ்வதி தம்பதிகள்
கல்லூரி நண்பர்கள்.

இறை வாழ்க இறை தந்த தமிழ் வாழ்க !

அனைவருக்கும் வணக்கம்.

தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளிக்கும் எனக்கும் நீணட


் கால உறவு உண்டு என்றால்
அது மிகையாகாது. முதன்முதலில் இப்பள்ளிக்கு என் தாயின் கைப்பிடித்து 8 வயதில் (1969-இல்)
இரண்டாம் ஆண்டு மாணவியாகக் காலடி நடுத்து வைத்தேன். இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம்
ஆண்டு மாணவியாக நாம் வலம் வந்த இடம் இதுவே.

பின்பு, 1983-இல் பயிற்சி ஆசிரியராக இப்பள்ளிக்கு வந்தேன். அதன் பிறகு, 1997-இல்


காப்பார் மெத்தடிஸ் தமிழ்பப் ள்ளியிலிருந்து மாற்றலாகி மீண்டும் மேரு சாலைத் தமிழ்பப் ள்ளிக்கு
வந்தேன். இப்பள்ளியில் பணியாற்றும் காலத்தில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத்
தொடர வாய்ப்புக் கிடைத்தது. சென்றேன்; படித்தேன். மீண்டும் 2005 இல் பட்டதாரி ஆசிரியராக
இப்பள்ளிக்கு வந்தேன். இன்றுவரை 31.7.2018 இப்பள்ளியிலேயே பணிபுரிந்து விருப்பப் பணி
ஓய்வு பெருகின்றேன்.

கல்வி கற்றப் பள்ளியிலேயே பணிபுரிந்து ஓய்வு பெருகின்ற பேறு எல்லாருக்கும்


கிடைக்காது. என்னைப் பொருத்தவரையில் இதை ஒரு வரம் என்றேக் கருதுகிறேன். 34 வருட
ஆசிரியர்ப்பணியில் 17 ஆண்டுகள் இப்பள்ளியில் கழிந்திருக்கின்றன. பற்பல அனுபவங்கள்- பல
இனிமையானவை; ஒரு சில கசப்பானவை. இந்த அனுபவங்கள் எல்லாம் என்னை முன்னோக்கிச்
செல்லவே உதவிபுரிந்திருக்கின்றன.

பணிகாலத்தில் நான் துவண்டு போன தருனங்களில் எனக்கு ஊக்கம் கொடுத்து


செயலாற்ற வைத்த என் சக ஆசிரியர்கள், துணைத்தலைமையாசிரியர்கள்,
தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. 34 வருட ஆசிரியர் பணியில்
என்னோடு பயணம் செய்தவர்கள் பலர். அவர்களுக்கும் இவ்வேளையில் என் நன்றிமலர்களைத்
தூவுக்கின்றேன்.

இன்று நான் ஒரு நல்ல நிலைமையில் இருப்பதற்குக் காரணமான என் பெற்றோர்,


உடன்பிறப்புகள், நண்பர்கள், எனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த
அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசிய வகை மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி மென்மேலும் வளர்ச்சிப்பெற்று எல்லா


வகையிலும் தரமான; சிறப்பான; மேன்மையான பள்ளியாக உருவாக என் இதயம் கனிந்த
நல்வாழ்த்துக்கள்.

அனைவரும் வாழ்க வளமுடன்.

இக்கண்,

என்றும் அன்புடன்,
குமாரி கி. திருமகள்

பணிநிரவலில் செல்லும் ஆசிரியை திருமகள் அவர்களின் நட்பு ஏறக்குறைய 46 ஆண்டுகளாகும்.


அவர் பணிபுரிந்த ஆசிரியர் தொழிலால் அன்பு, பண்பு, எதிர்காலத்தில் குடும்பத்திற்கு
நன்மக்களாகவும், நாட்டிற்கு நன்குடிமக்களாகவும், சமுதாயத்திற்கு வைரமாய் மாணவர்களை
உருவாக்கியவர். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும் தெய்வத்துள் வைக்கப்படும்’
என்றார் திருவள்ளுவர். அதன்படி சிறந்த மனிதராக, மனித நெறிப்படி வாழ வழிகாட்டும் எனது
அன்புத் தோழிக்கு பிரிடயாவிடை வாழ்த்து கூறுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

திருமதி நா. வீ பொன்னி கணேசன்


மலேசிய தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர்.
உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் துணைச்செயலாளர்

You might also like