You are on page 1of 1

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு

நினைக்கின்ற பொழுதென்றன் நெஞ்சில், திளைக்கின்ற தமிழே இங்கும்மை, இனிக்கின்ற தேனுக்கும்


தென்றல் இளமைக்கும் ஒப்பாகச் சொல்வேன், விணைக்கென்றன் துணையாகி மேலும் நினைக்கின்ற ஒரு பேறு
போதும் என நம்மை ஈன்ற தமிழ் அன்னையைச் சிறம்பணிந்து வணங்கி, முத்தமிழ்ச் சங்கமத்தில் முத்தாகச்
சங்கமித்துள்ள நல்லுறவுகள் அனைவருக்கும் முத்தமிழ் வணக்கத்தை முன் வைத்து எமது வாழ்த்துரையைத்
துவங்குகின்றேன்.வணக்கம்.

வான்புகழ் வள்ளுவப்பேராசான் வகுத்த தமிழ்மரை புகட்டும் நெறியோடு, முச்சங்கம் வைத்து நமது


முன்னோர் போற்றிய தமிழர் நம் கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களைப் பக்குவமாய் நமது
மாணவச்செல்வங்களிடம் விதைத்து, ஒவ்வொரு வருடமும் ஜொகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளை ஒரு
குடையின் கீழ் இணைத்து, தமிழன்னையின் பொற்பாதங்களைச் சிறம்பணிந்து வணங்கி ‘முத்தமிழ் விழா’
என்று தமிழன்னைக்கு விழா எடுக்கும் ஏற்பாட்டுக்குழுவினருக்கு முதற்கண் எமது வாழ்த்துகளை
உரித்தாக்குகின்றேன்.

முத்தமிழ் விழா என்றவுடன் ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் தமிழ் ஆளுமையையும்,


ஆற்றல்மிகு மாணவர்களின் அற்புத படைப்புகளையும், புரிந்துணர்வுமிக்க பெற்றோர்களின்
ஒருங்கிணைப்பையும், பேரருள் கொண்ட இறைவனின் ஆசிர்வதிப்போடு அரங்கேரும் அர்த்தமிகு தமிழ்மறை
விழாவையும் நாம் காண இயலும் என்பதே நிதர்சனம். நமது மலேசிய தாய்த்திருநாட்டில் நமது அடையாளமாகத்
தமிழ்பப் ள்ளிகள் விளங்குகின்றன. இத்தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் வாழவும், தமிழ் ஆளவும் இதுபோன்ற
விழாக்கள் வழிவகை செய்கின்றன என்பதை எண்ணி அகம் மகிழ்கிறேன்.

கோடி யுகம் கண்டு, குமரி கண்டம் கொண்டு, தமிழ் நாகரிகம் வெண்று இன்றும் முத்தாய் மிளிரும்
தமிழ்மொழியையும் தமிழர் நம் பண்பாட்டையும் பக்குவமாய் காத்து நிற்கும் இத்தகைய உன்னத நிகழ்வின்
சிறப்பம்சமாக இம்மலர் வடிக்கப்படுகிறது, வரலாற்று சுவடாகச் செதுக்கப்படுகிறது என்பதில் இருவேறு
கருத்திற்கு இடமில்லை. இத்தகைய பொன்னான மலரைத் தொகுத்த மலர் குழுவினருக்கு மலர்போன்ற தமிழ்
சொற்களால் வாழ்த்துச் செய்தி தொடுப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன்.

தரணியாண்ட நம் தமிழ் வென்றாக வேண்டும், அதற்கு தமிழர் நாம் இத்தகைய விழாவில் ஒன்றாதல்
வேண்டும். மூச்சான முத்தமிழை தினம் நாம் காக்க வேண்டும், சிறப்புமிகு வரலாற்றுப் பதிவான ஜொகூர்
மாநில தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் மலரும் முத்தமிழ் விழா 2018 மலர் வெளியீட்டு குழுவினரை
மனதார நிச்சயம் வாழ்த்திடவே வேண்டும். வாழ்வோம் வளமுடன், உயர்வோம் தமிழுடன், விடைபெருகிறேன்
தமிழ் முழக்கத்துடன்.

என்றும் தமிழ்ச் சேவையில் ,


திரு. சி. பாண்டு ரெங்கன்
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர்

You might also like