You are on page 1of 4

மாணவர் பட்டமளிப்பு விழா 2022

முகமன்
“ தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? ”

என்று அழகு தமிழுறுதியோடு பாடிய பாரதியையும்,

கனியிடை ஏறிய சுளையும் -- முற்றல்


கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், -- காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் -- தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், -- தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

என்று தமிழை உயர்தத


் ிப் பிடித்த பாரதி தாசனையும் நினைவில் கொண்டு,

நம்மை என்றென்றும் காக்கும் எல்லா வல்ல இறையை வணங்கி


தொடங்குகிறேன்.

முதற்கண், நம் பள்ளி அளவில் ஆறாம் ஆண்டு செல்வங்களுக்காக நடைபெறும்


‘பட்டமளிப்பு விழா’ விற்கு தங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

இறை வாழ்த்து

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்


எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை..
நம் நிகழ்வு ஈசனருளால் எவ்வித தங்கு தடையுமின்றி நடந்தேறிட
வேண்டுவோம். அவ்விறைக்குத் திருப்பாடல் பாடி நம் நிகழ்வினைத்
தொடக்கிட செல்வி _____________________ அவர்களை அன்போடு
அழைக்கிறேன்.

‘இறையருள் திருவருள்’. அத்திருவருள் கமழ திருப்பாடல் பாடிய செல்வி


__________________ அவர்களுக்கு நன்றி.

மாநிலப் பண், தேசியப் பண் பாடல்

தொடர்ந்து, அனைவரையும் எழுந்து நிற்க பணிகின்றோம். மாநிலப் பண்,


தேசியப் பண், தமிழ் வாழ்த்துப் பாடல் ஒலிக்கும். அனைவரையும் ஒருசேர
பாடிட அழைக்கிறோம்.

அனைவருக்கும் நன்றி. அனைவரையும் அமரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வரவேற்புரை

‘ஒளி விளக்கே வருக,


ஒளி தந்து வாழ்வில் இருள் விலக்கி தருக.
மலர் முகமே வருக.
மலர்ந்தும் மலராத புன்னகை தருக.
அருள் முகமே வருக.
அன்னையின் அன்பால் அருளமுது தருக..’

அடுத்ததாக, நிகழ்வில் வரவேற்புரை.


வரவேற்புரை நிகழ்த்தி சிறப்பு செய்திட நம் பள்ளியின் நிருவாகத்துறை துணை
தலைமையாசிரியை திருமதி கி. லோகேஸ்வரி அவர்களை அழைக்கிறேன்.

வரவேற்புரை நிகழ்த்தி சிறப்பு செய்திட்ட நம் பள்ளியின் நிருவாகத்துறை துணை


தலைமையாசிரியை திருமதி கி. லோகேஸ்வரி அவர்களுக்கு நன்றி.

தலைமையுரை

உயரத் துடிக்கும் மாணவரின் இதயத்துடிப்பு நீ.


உருகும் மெழுகின் தியாகம் நீ.
அறிவில் மடைதிறந்த வெள்ளம் நீ.
அழகில் ஆண் மயில் நீ.
அன்பில் சுழல்வதும் நீ;
எங்களை அன்பாய் இயக்குவதும் நீ.
கற்றல், கற்பித்தலின் பிதா நீ.
மங்காத சுடர் நீ.

பள்ளியின் சுடரொளியாய் இருந்து ஆசிரியர்களையும் மாணவச்


செல்வங்களையும் அரவணைக்கும் நம் பள்ளியின் தலைமையாசிரியர் திருவாளர்
பெ.சிவசுப்ரமணியம் அவர்களை தலைமையுரையாற்றி தொடர்ந்து நிகழ்வினை
அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்திட அழைக்கிறேன்.

தலைமையுரையாற்றி தொடர்ந்து நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி


வைத்திட்ட நம் பள்ளியின் தலைமையாசிரியர் திருவாளர் பெ.சிவசுப்ரமணியம்
அவர்களுக்கு நம் நன்றி.

காணொளி படைப்பு

தொடர்ந்து, அனைவரையும் ஆறாம் ஆண்டு மாணவருக்காக பிரத்தியேக


படைப்பாக மலர்கிறது தன்முனைப்பு காணொளி படைப்பு ஒன்று. கண்டு
களிப்போம் வாரீர்.

ஆறாம் ஆண்டு மாணவருக்காக பிரத்தியேக படைப்பாக மலர்ந்த தன்முனைப்பு


காணொளி படைப்பினை உருவாக்கி வழங்கிய ஆசிரியர் திரு.ஜெகதீஸ்
அவர்களுக்கு நன்றி.
பட்டமளிப்பு விழா

தொடர்ந்து, நம் ஆறாம் ஆண்டு செல்வங்களுக்குப் பட்டமளிப்பு நற்சான்றிதழ்


வழங்கும் சிறப்பு அங்கம். மாணவருக்குப் பட்டங்களை எடுத்து வழங்கிட நம்
பள்ளியின் தலைமையாசிரியர் திருவாளர் பெ.சிவசுப்ரமணியம் அவர்களை நம்
பள்ளியின் நிருவாகத்துறை துணை தலைமையாசிரியை உடன் வர அன்போடு
அழைக்கிறோம்.

மாணவர்கள் :

1.
2.
3.
4.
5.
கோப்பு & பரிசு

அதைத் தொடர்ந்து, ஆறாம் ஆண்டு செல்வங்களுக்குக் கோப்பும் பரிசும்


வழங்கப்படவுள்ளது.

அணிச்சல் வெட்டுதல்

தொடர்ந்து, தலைமையாசிரியர் அவர்களையும் ஆசிரியர் பெருந்தகைகளையும்


ஆறாம் ஆண்டு செல்வங்களோடு அணிச்சல் வெட்டிட அன்போடு
அழைக்கிறோம்.

நிழற்படம் எடுத்தல்

தொடர்ந்து, தலைமையாசிரியர் அவர்களையும் ஆசிரியர் பெருந்தகைகளையும்


ஆறாம் ஆண்டு செல்வங்களோடு நிழற்படம் எடுக்கம் அன்போடு
அழைக்கிறோம்.

நன்றியுரை

நிகழ்வில் இறுதியாக நன்றியுரையாற்றிட இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுத்


தலைவர் திரு.ஜெகதீஸ் அவர்களை அழைக்கிறேன்.

நன்றியுரை நிகழ்த்திய இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் திரு.ஜெகதீஸ்


அவர்களுக்கு நன்றி.

முடிவு
இறுதியாக, அனைவருக்கும் நன்றி. இறையருளால் மீண்டும் சந்திப்போம்.

You might also like