You are on page 1of 8

சாதனை விழா

நம் சிறப்பு வருகையாளர் மண்டபத்தை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்.


அவையினர் எழுந்து கரவோசை எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்துமாறு
கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து மாநிலப்பண் , தேசியப்பண் மற்றும்
தமிழ்வாழ்த்து இசையுடன் பாடப்படும். அவையினர் தொடர்ந்து நின்று
பாடலை உற்சாகத்துடன் பாடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

என்று சொல்லிலும் எண்ணத்திலும் உறுதியை வளர்த்த மகாகவியையும்,

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்


கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!

என்று தமிழை உயர்த்திப் பிடித்த புரட்சிக் கவியின் பாதந்தொட்டும்


அவையையும் அன்புசால் சான்றோரையும் வணங்குகிறோம்.
வணக்கம்.வணக்கம்.வணக்கம்.

ஆதிபராசக்தியின் அருளை வேண்டி 2022/23-ஆம் ஆண்டின் பள்ளி ‘சாதனை


விழா’ சிறப்பாக நடந்தேறிட இறையை அன்பொழுக வேண்டுவோம் வாரீர்.

இறைவாழ்த்துப் பாடி அவையைப் பக்தி கமழ செய்திட அன்புடன் திருமதி


கஸ்தூரி அவர்களை அழைக்கிறோம்.

படைத்தவளின் அருள் வேண்டி இறைவாழ்த்தினைப் பாடிச் சென்ற திருமதி


கஸ்தூரி அவர்களுக்கு நன்றி.
2023/22-ஆம் ஆண்டின் ஆர்.இ.எம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்
சாதனையாளர் விழாவிற்கு வருகை புரிந்திருக்கும்

தெப்ராவ் தமிழ்ப்பள்ளியின் மேலாண்மை வாரியக்குழுவின் தலைவரும்


மாசாய் இந்தியர் நலனபிவிருத்தி கழகத்தின் தலைவருமாகிய
டத்தோ கே.புருஷோத்தமன் அவர்களே , பள்ளியின் தலைமையாசிரியர்
திரு.மு.அரங்கணன் அவர்களே, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்
தலைவி திருமதி சுதா அவர்களே அவர்தம் செயலவை உறுப்பினர்களே,
பள்ளி மேலாண்மை வாரியக்குழுத் தலைவர் திரு.பன்னீர் செல்வம்
அவர்களே, அவர்தம் செயலவை உறுப்பினர்களே,நன்கொடை வழங்கிய
நல்லுள்ளங்களே, பள்ளியின் ஆசிரியர் பெருமக்களே, பெற்றோர்களே,
பள்ளியின் பணியாளர்களே, தோழர் தோழியரே தங்கள் அனைவருக்கும்
அன்பு கலந்த வணக்கங்களை முன்வைக்கின்றோம்.

அலை அலையாய் சங்கமித்தோம்


அன்பு கடலில் எத்தனித்தோம்
மலையருவியாய் தகித்தோம்
மங்கா புகழ் வேண்டி மருதளித்தோம்

அவையை தேந்தமிழால் நிரப்பிட வரவேற்புரை நிகழ்த்தி அன்பு செய்திட


பெ.ஆ.சங்கத்தின் தலைவி திருமதி சுதா அவர்களை அன்போடு
அழைக்கின்றோம்.

தேந்தமிழால் வரவேற்புரை நிகழ்த்தி அவையை அன்பால் நிரப்பிய


பெ.ஆ.சங்கத்தின் தலைவி திருமதி சுதா அவர்களுக்கு நன்றி.
மாமழையின் மாமாங்கம் நீ,
மாமாங்கத்தின் மாமழை நீ,
வீறு கொண்டு எழுவதும் நீ,
சீறாய் எங்களை அரவணைப்பதும் நீ,
அடை மழையும் நீ,
அன்பால் நெகிழும் மெழுகும் நீ,
ஆசிரியர் அரண் நீ,
அரண் மீறா தலைவனும் நீ,
வழிகாட்டுவதில் ‘கூகுல் மேப்’ நீ,
வழிதவறினால் இணைத்து தொடர்பிலேயே வைக்கும் ‘wifi’ நீ.
நட்புக்கு இலக்கண ‘facebook’ நீ.
சிக்கல்கள் களையும் ‘கூகுள் வலை’ நீ.
அள்ள அள்ள குறையா ‘ youTube’ நீ.
அழைத்தவுடன் தொடர்பில் வரும் ‘ Video Call’ நீ.
தொலைவில் இருப்போருக்கு ‘Skype’,
அருகிலிருப்போருக்கு ‘mobile data’.

தொடர்ந்து ஆர்.இ,.எம் தோட்டத்தமிழ்ப்பள்ளியின் தலைமகன் உயர்திரு


மு.அரங்கணன் அவர்களை தலைமையுரை ஆற்றிட அன்புக்கூர்ந்து
அழைக்கிறோம்.

தலைமையுரை ஆற்றிய நம் தலைமகனுக்கு நன்றி மலர்களைச்


சமர்ப்பிக்கின்றோம்.
நவரச நர்த்தணங்களின் இணைப்பு
இந்தியர் பண்பாட்டின் பிணைப்பு
மாதர் மாண்பின் தகிப்பு
கலாச்சார உச்சமதின் சிறப்பு
பரதம் பரதம் என்று நீ பரப்பு (x2)

அவையை பரதமாடி நிகழ்ச்சியை மேலும் மெருக்கூட்ட நிஷா ராஜேந்திரன்


அவர்களை அன்போடு அழைக்கின்றோம்.

பரதமாடி அவையை மெருகூட்டிய குமாரி நிஷா ராஜேந்திரன் அவர்களுக்கு


நன்றி.

தொடர்ந்து, மாணவர் சாதனை விழாவின் நாயகரும் நம் அழைப்பினை ஏற்று


நிகழ்ச்சியின் சிறப்பாய் வருகையளித்திருக்கும் மாண்புமிகு தெப்ராவ்
தமிழ்ப்பள்ளியின் மேலாண்மை வாரியக்குழுவின் தலைவரும் மாசாய் இந்தியர்
நலனபிவிருத்தி கழகத்தின் தலைவருமாகிய டத்தோ கே.புருஷோத்தமன்
அவர்களை அன்போடு மேடைக்கு அழைக்கின்றோம்.

பெ.ஆ.சங்க தலைவி திருமதி சுதா அவர்களையும் பள்ளி தலைமையாசிரியர்


திரு.மு.அரங்கணன் அவர்களையும் நம் சிறப்பு வருகையாளரைக் கௌரவிக்க
அழைக்கிறோம்.

நம் பள்ளியின் சிறப்பினை ஏற்றுக்கொண்ட டத்தோ கே.புருஷோத்தமன்


அவர்களுக்கு நன்றி.சிறப்பு செய்திட்ட பெ.ஆ.சங்க தலைவி திருமதி சுதா
அவர்களுக்கும் பள்ளி தலைமையாசிரியர் திரு.மு.அரங்கணன் அவர்களுக்கும்
நன்றி.

தொடர்ந்து, சிறப்பு வருகையாளர் அவர்களை திறப்புரை ஆற்றி நம்


நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க அழைக்கிறோம்.

திறப்புரை ஆற்றி 2022/23- ஆம் ஆண்டின் மாணவர் சாதனை விழாவை


அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த நம் சிறப்பு வருகையாளருக்கு நம்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து, மழலையரின் பவணியில் மலர்கிறது ஆடை அலங்காரப்


பண்பாட்டு படைப்பு. கண்டு களிப்போம் வாரீர்.
பண்பாட்டு ஆடை அலங்காரத்தில் பவணி வந்த மழலையருக்கும்
அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி லலிதா தேவி,திருமதி
உமாவாணி , திருமதி சுமதி, திருமதி ஷர்மிளா மற்றும் திருமதி கோகிலவாணி
அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

தொடர்ந்து, ஆசிரியர் திரு குகனேஸ்வரன் அவர்கள் கைவண்ணத்தில்


மலர்கிறது ஒரு பல்லூடகப் படைப்பு. கண்டு களிப்போம் வாருங்கள்.

அடுத்த அங்கமாக, ஆண்டு முழுவதும் சிறப்பான அடைவுநிலையைப் பதிவு


செய்த மாணவர்களை அங்கிகரிக்கும் தருணம் இது. பரிசுகளை எடுத்து
வழங்க _________________________ அவர்களை அழைக்கின்றோம்.

பரிசுளை எடுத்து வழங்கிய _________________ அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்து, 2023/24-ஆம் ஆண்டின் நம்பிக்கை நட்சத்திர மாணவர்களுக்கு


பரிசினை எடுத்து வழங்க ___________________ அன்போடு
அழைக்கின்றோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய _______________ நன்றி.

ஆர்.இ.எம் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்வேறு திறன்


கொண்டவர்கள் என்பதற்கு சான்றாக அடுத்து மலர்கிறது குழுமப் படைப்பு
“choral speaking” எனும் ஆங்கில படைப்பு. அவ்வாங்கில படைப்பினை
வழங்க மாணவர்களை மேடைக்கு அழைக்கின்றோம்.

“choral speaking” எனும் ஆங்கில படைப்பினை மாணவர்களுக்குப்


பயிற்றுவித்த ஆசிரியை திருமதி கி.ஷர்மிளா அவர்களுக்கு பாராட்டுகள்.

மீண்டும் ஒரு பல்லூடகப் படைப்பு. இப்படைப்பை எங்களுக்கு சிரமம் பாராது


செய்த ஆசிரியர் குகனேஸ்வரன் அவர்களுக்குக் கோடான கோடி நன்றிகள்.
அடுத்து நாம் எல்லாம் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தருணம்.
ஆறாம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழா. வகுப்பில் சிறந்த தேர்ச்சி
பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ், பூங்கொத்து மற்றும் ரொக்கமும்
வழங்கப்படும். ஆறாம் ஆண்டு மாணவ செல்வங்களுக்கு பரிசுகளை எடுத்து
வழங்க ____________________________________________________
பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களையும் அழைக்கிறோம்.

இனிதே நிறையுற்றது ஆறாம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழா.


இது தொடக்கப்பள்ளியின் பட்டமளிப்பு விழா. இதுமட்டுமல்ல சாதனை!
தொடர்ந்து இடைநிலை பள்ளிகளிலும் பல்கலைகழகங்களிலும் பட்டம் பெற
எங்களின் வாழ்த்துகள். இதுகாரும் மாணவர்களைக் கௌரவித்த சிறப்பு
வருகையாளர் அவர்களுக்கும் பள்ளியின் தலைமையாசிரியருக்கும் நன்றி,

பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்த ஆறாம் ஆண்டு வகுப்பாசிரியர்


திருமதி உமாவாணி அவர்களுக்கு வாழ்த்துகள்.

தொடர்ந்து முதல் படிநிலை மாணவர்களின் கூட்டுப் பாடல் படைப்பு. இதனை


வழங்க மாணவர்களை மேடைக்கு அழைக்கின்றோம்.

கண்ணுக்கு விருந்தான காட்சியோடு காதில் தேனாய் பாய்ந்த மழலைகளுக்கு


பாராட்டுகளும் வாழ்த்துகளும். கூட்டு பாடலை பயிற்றுவித்த ஆசிரியை
திருமதி லலிதா தேவி அவர்களுக்கும் திருமதி கோகிலவாணி அவர்களுக்கும்
வாழ்த்துகள்.

நகைச்சுவை இல்லாமல் நம் நிகழ்ச்சியா.....? அதில் நனையாமல் நாமா?


வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற கூற்றை நிரூபிக்க
வாருங்கள், tik tok parithaabangal எனும் நகைச்சுவை மழையில் நனைய
தயாராவோம். அதை படைத்திட மாணவ செல்வங்களை அழைக்கிறோம்.

வயிறு குழுங்க சிரிக்க வைத்த மாணவ தெய்வங்களுக்கும் அதனைப்


பயிற்றுவித்த ஆசிரியர் திரு குகனேஸ்வரன், திரு ராமு மற்றும் ஆசிரியை
திருமதி சுமதி அவர்களுக்கும் எங்கள் பாராட்டுகள்.
பரிசளிப்பு அங்கம் தொடர்கிறது. தொடர்ந்து இவ்வருடம் முழுவதும் பள்ளிக்கு
அதிக நாட்கள் பள்ளிக்கு வருகை அளித்த மாணவர்களுக்கும்
சுயதூய்மையோடு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கும் பரிசுகளை எடுத்து
வழங்க __________________ அவர்களை அழைக்கின்றோம்.

பரிசுகளை எடுத்து வழங்கிய ________________ நன்றி

அடுத்ததாக, மாவட்ட அளவில் நடைப்பெற்ற முத்தமிழ் விழாவில் முதல்


பரிசினை வென்ற நாடக குழுவினரை கௌரவிக்கும் வகையில் ஒளியேறுகிறது
அக்காணொளி படைப்பு. கண்டு களிப்போம் வாரீர்.

அடுத்து, ஆண்டு முழுவதும் சிறப்பான முறையில் பற்பல சேவைகளை


ஆற்றிய மாணவர்களுக்கான விருது. இதனை எடுத்து வழங்க
___________________ அழைக்கின்றோம்.

விருதினை எடுத்து வழங்கிய _____________________ நன்றி.

இறுதியாக, இவ்வாண்டு முழுவதும் புறப்பாட பிரிவில் சிறப்பாக பங்கெடுத்து


பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கான பரிசினை எடுத்து வழங்க
________________________ அழைக்கின்றோம்.

பரிசினை எடுத்து வழங்கிய ___________________ நன்றி.

மேலும், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு முன்னால் மாணவர்களுக்கான


பரிசுகளை எடுத்து வழங்க _____________________ அழைக்கின்றோம்.

தொடர்ந்து நம் கண்களுக்கும் மனதுக்கும் இதமாக அமையவிருப்பது


படிநிலை 2 மாணவர்களின் நடனம். ரதமாய் தங்கள் கால்களை மேடையில்
சுழலவிட்டு நம் கண்களுக்கு விருந்தாக படைக்க படிநிலை 2 மாணவர்களை
அழைக்கின்றோம்.
சிறப்பாக நடனம் ஆடிய மாணவர்களுக்கும் அதனை பயிற்றிவித்த ஆசிரியை
திருமதி அமுதவள்ளி அவர்களுக்கும் திருமதி கஸ்தூரி அவர்களுக்கும்
வாழ்த்துகள்.

அடுத்ததாக, 2022/23-ஆம் ஆண்டு நனிச்சிறந்த மாணவர்களுக்கான விருது.


இவ்விருதினைப்பெற போகும் மாணவர்கள்:

மேழும் மாணவர்களைச் சிறப்பிக்கும் அங்கம். புறப்பாட பிரிவின் சிறந்த


மாணவன் மாணவிக்கான விருது. இவ்விருதினை எடுத்து வழங்க
________________________ அழைக்கின்றோம்.

இவ்விருதினை எடுத்து வழங்கிய __________________ நன்றி.

தொடர்ந்து விளையாட்டு வீரர் வீராங்கனைக்கான விருது. இவ்விருதினை


எடுத்து வழங்க ____________________ அழைக்கின்றோம்.

விருதினை எடுத்து வழங்கிய _____________________ நன்றி.

நம் சாதனை விழாவின் முத்தாய்பாய் அமைவது நன்றியுரை. நன்றியுரை


ஆற்ற ________________________ அழைக்கின்றோம்.

நன்றி.

தவறுகள் இழைப்பது மனித குணம்


கோளாறுகள் செய்வது
தொழில்நுட்பத்தின் இயல்பு
இவைகளை மன்னிப்பது உயர்ந்தோர் குணம்
தவறுகள் இருப்பின் மன்னிப்பை முன்
வைத்து meedum santhikkum varai விடைப்பெறுகிறோம்.
நன்றி, வணக்கம்.

You might also like