You are on page 1of 4

பள்ளி அறை கண்ட உங்கள் பாதங்கள்

கனவுகளை எதிர்நோக்கி பயனிக்க


போட்டி என்னும் போர்க்களம் கண்டு
தடைகளைத் தாண்டி
காவியம் படைத்திட
வரவேற்கிறோம்.

……………………………………………………………………………………………………………
வருகை புரிந்திருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, சிறப்பு வருகையாளரே உங்கள்
அனைவரையும் நாங்கள் தேசிய வகை சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழாவிற்கு வருக
வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

இந்நிகழ்வு கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்து மற்றும் நாட்டுப்பண்னுடன் தொடங்கவுள்ளது.


அவையினர் அனைவரும் எழுந்து நிற்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அவையினர் தங்கள் இருக்கையில் அமரலாம்.

நிகழ்வின் முதல் அங்கமாக, ……………………….. இவ்வுரையை ஆற்றுவதற்கு பெற்றோர்


ஆசிரியர் சங்கத் தலைவர் திரு பாலசுப்பிரமணியம் செங்கோடன் அவர்களை அன்புடன்
அழைக்கின்றோம்.

…………………………… ஆற்றிச் சென்ற திரு பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்து, ……………………………. இவ்வுரையை ஆற்ற தேசிய வகை சிலிம் ரிவர்


தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பழனி சுப்பையா அவர்களை பணிவன்புடன்
அழைக்கின்றோம்.

…………………………… ஆற்றிச் சென்ற சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.


பழனி சுப்பையா அவர்களுக்கு நன்றி.

அடுத்து, சிறப்பு பிரமுகர் உரை. காலந் தாழ்த்தாமல் சிறப்பு பிரமுகர் உரையை ஆற்றுவதற்கு
உயர்திரு அமரேந்திரா கந்தசாமி அவர்களைப் பணிவன்புடன் அழைக்கின்றோம்.
வார்த்தைகளைக் கோர்வையாய் தொடுத்து உரையாற்றிச் சென்ற நம் சிறப்பு பிரமுகர் உயர்திரு.
அமரேந்திரா கந்தசாமி அவர்களுக்கு நன்றி.

அவையினரே,

நம் விழாவின் முதல் படைப்பாக கவிதை பாராயணம். இதை வழங்குவதற்கு ஆறாம் ஆண்டு
மாணவர்களை அன்போடு அழைக்கின்றோம்.

மிகவும் சிறப்பாக கவிதையை ஒப்புவித்த மாணவர்களுக்கு நன்றி.

அடுத்து, நம் கண்களுக்கு விருந்தாக ஒரு நடனம். இதை வழங்குவதற்கு பாலர் பள்ளி
மாணவர்களை அன்போடு அழைக்கின்றோம்.

பாடலுக்குச் சிறப்பாக நடனம் ஆடிச் சென்ற பாலர் பள்ளி மாணவர்களுக்கு நன்றி.

தலை குனிந்து என்னை பார்! தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கின்றேன்


- இப்படிக்கு புத்தகம்

ஆம் அவையினரே, விழாவின் அடுத்த அங்கமானது பாலர் பள்ளி, முதலாம், இரண்டாம் மற்றும்
மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புசார் மதிப்பீட்டின் பரிசளிப்பு நிகழ்வு.

முதலில் ஐந்து வயது திருவள்ளுவர் வகுப்பில் இருந்து………………………………….


அடுத்து, ஆறு வயது கம்பர் வகுப்பில் இருந்து…………………………………….
தொடர்ந்து, ஒன்று திருவள்ளுவர் வகுப்பில் இருந்து………………….……………..
அடுத்தபடியாக, ஒன்று கம்பர் வகுப்பில் இருந்து ……………………………………
தொடர்ந்து, இரண்டு பாரதியார் வகுப்பில் இருந்து …………………………
அடுத்து, இரண்டு ஔவையார் வகுப்பில் இருந்து ……………………………
தொடர்ந்து, மூன்று தொல்காப்பியர் வகுப்பில் இருந்து ……………………………..
அடுத்து, மூன்று கபிலர் வகுப்பில் இருந்து …………………………….

பரிசு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

அவையினரே,
நிகழ்வின் அடுத்த அங்கமாக, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் நடன
படைப்பு. இதனை வழங்குவதற்கு அவர்களை மேடைக்கு அழைக்கின்றோம்.

சிறப்பாக நடனம் ஆடிச் சென்ற முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு
நன்றி.
நமது விழாவில் அடுத்த அங்கமாக மலர்கிறது பாலர் பள்ளியின் பட்டமளிப்பு நிகழ்வு. முதலில்
ஆறு வயது கம்பர் வகுப்பில் இருந்து
……………………………………
அதனைத் தொடர்ந்து பாலர் பள்ளியின் ஐந்து வயது மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு.
ஐந்து வயது திருவள்ளுவர் வகுப்பில் இருந்து
……………………………………
பாலர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

அடுத்து ஒரு நடனம். மீண்டும் நம் கண்களுக்கு இதமான நடனத்தை வழங்க வருகின்றனர்
மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள். அவர்களை மேடைக்கு அன்போடு
அழைக்கின்றோம்.

தங்களின் சிறப்பான நடனத்தால் நம்மை மெய் மறக்கச் செய்த மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு
மாணவர்களுக்கு நன்றி.

வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்து அல்ல!


அது முன்னேற துடிக்கும்
உழைப்பாளிக்கே சொந்தம்.

ஆம் அவையினரே,

அடுத்தபடியாக நாம் எதிர்பார்த்து காத்திருந்த நேரம் வந்துவிட்டது. நான்காம், ஐந்தாம் மற்றும்


ஆறாம் ஆண்டிற்கான வகுப்பில் சிறந்த மாணவர்களுக்கு இப்பொழுது பரிசுகள் வழங்கப்படும்.

நான்கு விவேகானந்தர் வகுப்பில் இருந்து……………………………

அடுத்து, நான்கு அகத்தியர் வகுப்பில் இருந்து……………………………

தொடர்ந்து, ஐந்து வாகிசர் வகுப்பில் இருந்து……………………………


அடுத்து, ஆறு வள்ளலார் வகுப்பில் இருந்து ……………………………

தொடர்ந்து, ஆறு அப்பர் வகுப்பில் இருந்து……………………………

*பரிசு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

அவையினரே,

நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டும் வகையில் ஒரு நடனம். இதனை வழங்குவதற்கு ஐந்தாம்


ஆண்டு மாணவர்களை மேடைக்கு அன்போடு அழைக்கின்றோம்.

சிறப்பாக நடனம் ஆடிச் சென்ற மாணவர்களுக்கு நன்றி.

நமது பரிசளிப்பு விழாவின் அடுத்த அங்கமானது பள்ளிக்கு மட்டம் போடாமல் முழு வருகை
புரிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

பாலர் பள்ளியில் இருந்து……..


***……………..****

பரிசு பெற்ற அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

அடுத்ததாக கண்ணைக் கவரும் ஒரு நடனம். இதனை வழங்குவதற்கு ஆறாம் ஆண்டு


மாணவர்களை அன்போடு அழைக்கின்றோம்.

மிகவும் சிறப்பாக நடனம் ஆடிச் சென்ற ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு நன்றி.

அவையினரே,
நிகழ்வின் அடுத்த அங்கமாக 2019-ஆம் ஆண்டின் இணைக்கல்வியில் சிறந்த அருந்தகை
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அவ்வகையில்………………..

பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

நமது பரிசளிப்பு விழா நிறைவைக் காண்பதற்கு முன்பதாக ஒரு நன்றியுரை. இதனை வழங்க
வருகிறார் விழாவின் செயலாளர் திருமதி ஜெய பிரியா பங்கார நாயுடு.

நன்றியுரை ஆற்றிச் சென்ற திருமதி ஜெய பிரியா பங்கார நாயுடு அவர்களுக்கு நன்றி.

*தென்றல் இசைத்து
பூக்கள் நடனமாடி
ஆனந்தமாய் பரிசு பெற்று
விழா கொண்டாடிட
மீண்டும் அடுத்த ஆண்டு
உங்களை வரவேற்கிறோம்.*
உங்களிடம் இருந்து விடைப்பெற்று கொள்வது
இவர் உங்கள் கலையரசி கணேசன்
இவர் உங்கள் மணிமாறன் ஆறுமுகம்

You might also like