You are on page 1of 6

1.

கலைதரன்
2.மேகலா தேவி

1.அன்னை தமிழே போற்றி அவள் தரும் அமுதே போற்றி


2.இறைவன் என்னை நன்றாக படைத்தனன் தன்னை நன்றாக தமிழ்
செய்யுமாறு.

1.தேசிய வகை தமிழ்ப்பள்ளி, மெதடிஸ்ட் காப்பாரின் ஆறாம் ஆண்டு


மாணவர்களின் ‘நினைத்தலே இனிக்கும் 2017’பிரியாவிடை விருந்து
நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர்
திருமதி சரஸ்வதி அவர்களே,
2. பள்ளியின் துணைதலைமையாசிரியர் திருமதி சுசிலா அவர்களே,
1. பள்ளியின் மாணவர் நல துணைதலைமையாசிரியை திருமதி ஈஸ்வரி
அவர்களே,
2 பள்ளியின் இணைப்பாட நடவடிக்கை துணைதலைமையாசிரியர்
திரு.ராஜசேகரன் மற்றும் மாலைப்பகுதி துணைதலைமையசிரியர்
திருமதி திருமகள் அவர்களே,
1. சாதனை சிறகுகளாய் எங்களை வானில் பறக்கவிட்டு
கண்ணிமைப்போல் காத்திட்ட நெறியுரை ஆசிரியர்கள் திரு.விஜயன்
மற்றும் திரு அர்ஜுணன் அவர்களே!

1.எங்களின் ஆறாண்டு கால பள்ளிப் பயணம் செம்மையாம்


நிறைவடைய இரவும் பகலும் பாடுபட்டு,எங்களின் தூண்டுகோலாய்
விளங்கிய அன்பு தெய்வங்களான ஆசிரியர் களே!
2.முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை சின்ன சின்ன
சந்தோசங்கள்,சண்டைகள்,வெற்றிகள் என தோள் சாய்ந்து நட்பெனும்
வளையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் என் இனிய தோழர்களே!!
(இருவரும்)உங்கள் அனைவருக்கும் தமிழ்தாயின் ஆசிர்வாதத்துடன்
வணக்கம் கூறி வருக வருக என அன்போடு வரவேற்கின்றோம்.
1.நிகழ்ச்சியின் தொடக்க அங்கமாக தமிழ்வாழ்த்து இசைக்கப்படும்.
அனைவரும் எழுந்து நிற்கும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

2. இதோ ஒரு சிறிய கவிதை.

1.வானவில் கனவுகளை வெண்மை சுமந்தது,சீருடையில்...

2. 6 வருடங்கள் வசந்தத்தின் வாசற் படிகளில்...

1.ஒவ்வொரு படி தாண்ட முதுகுச்சுமை குறைந்து,அறிச்சுமை


ஏறியது...

2. எறிய சுமைகளை நிறுத்திப்பார்பது பரீட்சைகளில்…

1.பரீட்சைக்கு முன் கடைசி நிமிடம் புரட்டி கிழிந்த சுவடுகள்


புத்தகத்தில்.

2.நட்பு எதிரியானது தற்காலிகமாய் போட்டிகளில்.

1.கிணறு வெட்ட புதையல் கலை நிகழ்வுகளில்.

2.அமைதிக்கு பின் புயல் இறுதி மனியோசையில்.

1.பிரிவோம்,சந்திபோமா? நட்பு நனைந்தது கண்ணிரில்.

2.மழை நின்ற பின்னும் மண் வாசனை பள்ளி நினைவுகளில்.

1. நிழல்களின் ஓப்பந்தங்களை விட நிஜங்களின் போராட்டமே


சிறந்தது.

2.அடுத்து நிகழ்ச்சியில் மலர்வது நமது பாரம்பரிய நடனம் ஆடி


நிகழ்ச்சியை மெருகூட்டிட செல்வி காயத்திரி மற்றும் செல்வி
நித்தியஜோதி இருவரையும் அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம்.
1.நடனம் ஆடி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த செல்வி காயத்திரி
மற்றும் செல்வி நித்தியஜோதி அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்து இடம் பெறுவது மாணவர் பிரதிநிதி உரை. உரையாற்ற


நமது பள்ளியின் ஆறாம் ஆண்டு மாணவன் செல்வன் முகிலன்
மற்றும் செல்வி யர்சினி அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.

2.உரையாற்றிச் சென்ற இருவருக்கும் நன்றி.

1. தொடர்வது வரவேற்புரை. இதனை வழங்கிட நம் பள்ளியின்


துணைத்தலைமையாசிரியை நிறைமலி மு.சுசிலா அவர்களை
மேடைக்கு அழைக்கிறோம்.

2. சிறப்பானதொரு உரையை நமக்கு வழங்கிய துணைத்தலைமையாசிரியருக்கு


நன்றி.

1.அடுத்து மலர்வது சிகரம் மாணவர்களின் படைப்பு. இதனைச்


சிறப்பாக வழங்கிட நமது சிகரம் வகுப்பு நண்பர்களைக்
கரவோசையுடன் வரவேற்போம்.

2. சீறி பாய்ந்து சிறப்பானதொரு படைப்பு வழங்கிச் சென்ற


நண்பர்களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் குமாரி
கலைவாணி, திருமதி காளியம்மா, திருமதி சித்ரா, திருமதி
முலியனா, திரு பாலகணேசன்,மற்றும் திரு,பூபாலன் ஆகியோருக்கு
நன்றி.

பெற்றோர்கள் குழந்தைகளை மட்டும் உலகத்திற்குத் தருகின்றனர்.


ஆனால் ஆசிரியர் உலகத்தையே குழந்தகளுக்குத் தருகிறார்.

1. தொடர்ந்து வருவது காணொளிப்படம். நமக்காகப் பாடுபட்ட


ஆசிரியர்கள் அனைவருக்கும் இக்காணொளி சமர்ப்பணம். பாருங்கள்,
கேளுங்கள், சிரியுங்கள், மனம் மகிழுங்கள். எங்களை மட்டும்
திட்டாதீர்கள்__________.

2. இக்காணொளி, ஆசிரியர்கள் உங்களைப் பெரிதும்


மகிழ்வித்திருக்கும் என்பது திண்ணம். இதனை ஏற்பாடு செய்த
ஆசிரியை குமாரி ரத்னமலர் அவர்களுக்கு மிக்க நன்றி.

1. மேலே பாரு வானம் எங்களுக்கு இருக்குது வரம்


ீ எனும்
துடிப்போடு இதோ 6 மேன்மை மாணவர்கள்.

2. சிறப்பானதொரு நடனத்தை வழங்கிச் சென்ற அவர்களுக்கு நன்றி.


பயிற்றுவித்த ஆசிரியர்கள் குமாரி அன்பரசி, குமாரி கௌரி,
நிறைமலி துளசி, குமார் இரத்னமலர் மற்றும் திரு. சசிவர்ணன் ஐயா
அவர்களுக்கும் நன்றி.

நிகழ்ச்சியில் தொடர்வது தலைமையாசிரியர் உரை. இதனை


வழங்கிட தலைமையாசிரியர் அவர்களை மேடைக்கு
அழைக்கின்றோம்.

1.தலைமையாசிரியர் அவர்களுக்கு நன்றி. அவர்கள் கூறிய


அறிவுரைகளை நம் வாழ்வில் கடைபிடித்து உயர்வோம்.
ஒளிர்வோம்.

2. முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா

உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா…… இதோ

வந்துவிட்டனர் உத்தமம் மாணவர்கள்.

2. நடனம் வழங்கிச் சென்ற நண்பர்களுக்கு நன்றி. பயிற்றுவித்த


ஆசிரியர்கள் நிறைமலி வேலாம்பாள், நிறைமலி துர்க்காதேவி,
நிறைமலி இந்திராணி, நிறைமலி பிரேமா மற்றும் ஆசிரியர் திரு
அர்ஜூணன் அவர்களுக்கு நன்றி.

1. நடனத்தையே இரசித்துக்கிட்டு இருந்தா எப்படிங்கே? கொஞ்சம்


சிலம்பத்தையும் பார்ப்போம். நம் பள்ளி சிலம்ப மாணவர்களின்
படைப்பு இதோ!

2.சிலம்பத்துக்கு இவர்கள் புதியவர்கள். ஆனால் படைப்பிலோ


வல்லவர்கள் என நிரூபித்துச் சென்றனர். அவர்களுக்கு நன்றி.

1.வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு

லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா!

இதோ வாராங்க படையப்பா இல்லைங்க. வெற்றி வகுப்பு


மாணவர்கள்..

2. வாட்ச் ல இருக்கு முள்ளு வெற்றிக்கு இருக்கு தில்லு

என நிரூபித்துச் சென்றனர். அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள்


நிறைமலி பிரேமளா, நிறைமலி கலாசித்ரா, நிறைமலி நல்லம்மா,
குமார் முனியம்மா மற்றும் நிறைமலி பிரியா அனைவருக்கும்
நன்றி.

1. அனிருத் சார் கூப்பிட்டிருந்தோம். அவர் வர இயலாததால்


அவருடைய சிஷ்யர் நமக்காக ஒரு பாடல் பாடவிருக்கிறார். இதோ
நண்பர் ச.பிரகாஷ்.________________

1.இனியதொரு கானத்தை வழங்கிய பிரகாஷ் க்கு நன்றி,

இந்நிகழ்ச்சியில் காட்சியும் கானமும் படைப்பை வழங்க இதோ


சாதிக்க பிறந்த சாதனை மாணவர்கள்.

2. ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு train-னு சாதனைக்கு இருக்கு brainனு ’


சிறப்பானதொரு படைப்பினை வழங்கிய மாணவர்களுக்கும்
பயிற்று வித்த ஆசிரியர்கள் நிறைமலி மு.தேன்மொழி,
நிறைமலி ப.மேனகா, திரு பாலகணேசன் , திரு பூபாலன்,
திரு தங்கராஜு மற்றும் முலியான ஆசிரியைக்கும் நன்றி.

நாம் நிகழ்ச்சியின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம்.நன்றியுரை


ஆற்றிட இப்பிரியாவிடை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் நிறைமலி
மேனகா அவர்களை அழைக்கின்றோம்.

You might also like