You are on page 1of 2

வருகைப் புரிந்துள்ள அனைவரின் கவனத்திற்கு, இந்நிகழ்வு இன்னும் சற்று நேரத்தில்

தொடங்கவுள்ளது.
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.

தெங்கு அம்புவான் அப்சான் மற்றும் yahya awal tamilpalli ஒன்றினைந்து


செயல்படவிருக்கும் துறைசார் அறிவாற்றலைத் தூண்டும் நிகழ்ச்சி இனிதே
ஆரம்பமாகுகிறது.

வருகை புரிந்துள்ள அனைவருக்கும் எங்களது வணக்கங்கள். அன்புள்ள ஆசிரியர்களையும்


மாணவ மாணவிகளையும் வருக.... வருகவென வரவேற்பதில் ஏற்பாட்டுக் குழு உச்சி
குளிர்கிறோம்.

பெருமதிற்பிற்குரிய yayha awal tamil palli-யின் தலைமையாசிரியரான திரு s. ஜெகனாதன்


அவர்களே, சிறப்பு வருகையாளராக வருகை புரிந்திருக்கும் ladang tebong பள்ளி
தலைமையாசிரியர் திரு. அவர்களே, yahya awal palli பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின்
தலைவர் திரு பூபாலன் அவர்களே, yahya awal பள்ளியின் lembaga pengurus sekolah, திரு.
கேசவன் அவர்களே, ladang tebong பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.
அவர்களே, yahya wal palli மதியுறைஞர் திருமதி யோகேஸ்வரி அவர்களே, எங்களின்
அழைப்பை ஏற்றுக் கொண்டு வருகை தந்துள்ள சின்னஞ் சிறு சிட்டுகளே உங்கள்
அனைவருக்கும் முத்தான முத்தமிழ் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதுமட்டுமல்லாது நான் தனீஷ் முருகன் மற்றும் பிரவின் தியாகு நிகழ்ச்சி
நெறியாளராகவும் ஏற்பாட்டு குழுவின் சார்பிலும் எங்கள் வணக்கங்களைத் உங்கள்
அனைவருக்கும் தெரிவித்துகொள்கிறோம்.

நிகழ்வின் முதல் அங்கமாக, இந்நிகழ்வானது எந்தத் தங்கு தடையுமின்றி சீரும் சிறப்புமாக


நடைபெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சும் வண்ணம் இறைவாழ்த்தினைப் பாடச்
செல்வன் ரூபன் உத்திராபதி அவர்களை அன்புடன் அழைக்கின்றோம். அனைவரும்
அமைதி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்ந்து, தமிழ்வாழ்த்து.
கடவுள் வாழ்த்தினைப் பாடிச் சென்ற செல்வன் ரூபன் உத்திராபதி அவர்களுக்கு எங்களின்
மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றோம்
இத்துறைசார் அறிவாற்றலைத் தூண்டும் நிகழ்வினைத் தொடங்கவிருக்கும் முன் நம்
செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக அமைய வாருங்கள் அனைவரும் காணொலி
ஒன்றினை காண்போம்.

ஆஹா சிறப்பான காணொலியை வழங்கிய ஏற்பாட்டு குழுவிற்கு வாழ்த்துகள்.


துறைசார் அறிவாற்றலைத் தூண்டும் நிகழ்ச்சியின் குழுதலைவர் செல்வி கினீஷா
பன்னீர்செல்வம் அவர்களை வரவேற்புரையாற்ற அன்புடன் அழைக்கின்றோம்.
சிறப்பாக வரவேற்புரையையாற்றிச் சென்ற செல்வி கினீஷா பன்னீர்செல்வம் அவர்களுக்கு
நன்றி.
அடுத்த அங்கமாக, பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களைச் திறப்புரையாற்றி
இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்க மெய்யன்போடு அழைக்கின்றோம்.
திறப்புரையாற்றி துறைசார் அறிவாற்றலைத் தூண்டும் நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத்
தொடக்கி வைத்த தலைமையாசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

மாணவ மாணவிகளே, இதோடு நாம் சிறப்பு விருந்தினராக வருகைப் புரிந்திருக்கும் ladang


tebong பள்ளி தலைமையாசிரியர் அவர்களைச் சிறப்புரையாற்ற அன்புடன் அழைக்கிறோம்.

திரு. அவர்களுக்கு நன்றி.

Yahya awal பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராகிய திரு பூபாலன்


அவர்களை ஓரிரு வார்த்தைப் பேச அன்போடு அழைக்கிறோம்.

திரு பூபாலன் அவர்களுக்கு நன்றி.

அடடா, என்ன மாணவர்கள் களைத்தவாறு தென்படுகின்றனர். களைப்பைப் போக்க


இந்நிகழ்வின் அறிமுக காணொலியைக் கண்டு களிப்போம்.

அருமையான காட்சியமைப்பை வழங்கிய பயிற்சி ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

மாணவ மாணவிகளே, போட்டிகள் இல்லாத நிகழ்வா? இதோ நீங்கள் ஆவளுடன்


எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் போட்டியின் விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில்
தெரிவிக்கப்படவிருக்கின்றன.

முதலாவதாக ஆசிரியை கினிஷா அவர்களை அழைக்கின்றோம்.

கினீஷா அவர்களுக்கு நன்றி.

அடுத்ததாக ஆசிரியை கர்ஷினி அவர்களை விளக்க அழைக்கின்றோம்.

கர்ஷினி அவர்களுக்கு நன்றி.


இறுதி போட்டிக்கான விளக்கங்களை அளிக்க ஆசிரியர் ரூபன் அவர்களை
அழைக்கின்றோம்.

ரூபன் அவர்களுக்கு நன்றி.

இத்துடன் போட்டியின் விவரங்கள் மாணவர்களுக்கு விளக்கினர் ஆசிரியர்கள்.

கண்டிப்பாக மாணவர்களுக்கு குளப்பமோ அல்லது ஏதேனும் கேள்விகளோ இருக்ககூடும்.


இப்பொழுது வினா விடை அளிக்கும் நேரம். செல்வி செல்வங்களுக்கு ஏதேனும்
கேள்விகள் இருந்தால் கேட்கலாம். ஆசிரியர்கள் பதிலளிக்க தாயாராக உள்ளனர்.

ஆஹா, இனிதே தொடங்கியுள்ளது இந்நிகழ்வு. ஒரு வார காலம் இந்நிகழ்வு நடைப்பெறும்,


மாணவர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டு குழு சார்பில் வாழ்த்துகள். போட்டிகளில் வெற்றிப்
பெற எங்களது வாழ்த்துகள். இத்துடன் இந்நிகழ்வு ஒரு நிறைவை நாடுகிறது.

உங்களிடமிருந்து விடைபுறுவது நான் உங்கள் தனீஷ் முருகன், மற்றும் ப்ரவின் தியாகு.

நன்றி வணக்கம்.

You might also like