You are on page 1of 3

தேசியப் பற்று மாதக் கொண்டாட்டம் ஒட்டிய நெறியாளர் உரை

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில்


நீங்காதான் தாள் வாழ்க என்னும் சிவபுராண வரிகளை முன்வைத்து இந்தச்
சுந்தரச் சுதந்திர அவையை வணங்குகின்றேன் .
வணக்கம்.பெருமதிப்பிற்குரிய தலைமை ஆசிரியை அவர்களுக்கும்,சிறப்பு
விருந்தினரும் நன்கொடை நெஞ்சருமான திருமிகு மா.பசுபதி
அவர்களே,துணைத்தலைமை குமாரி சிவனேஸ்வரி அவர்களே,மாணவர் நலப்
பொறுப்பாசிரியர் திருமதி சரஸ்வதி அவர்களே,புறப்பாடப் பொறுப்பாசிரியர்
திருமிகு மகாதேவன் அவர்களே, போற்றுதலுக்குரிய ஆசிரியப் பெருமக்களே
அன்பிற்கினிய மாணவமணிகளே மற்றும் பள்ளி வளாகத்தின் எழிலுக்கு
எழில் சேர்க்கும் நல் ஊழியர்களே உங்கள் அனைவருக்கும் திவ்வியம் கலந்த
கன்னித்தமிழ் வணக்கம்.

இறைவாழ்த்து

தேசியப் பற்று மாதக் கொண்டாட்டம் செவ்வனே நடைந்தேற இறையருள்


வேண்டுவோம்.இன்று திருமுறை ஓதி நிகழ்வைத் தொடக்கி வைக்க மாணவி
___________________________________________________ அன்போடு
அழைக்கின்றோம்.இறைவாழ்த்து ஓதுங்கால் அவையினரை எழுந்து
நிற்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

திருமுறை ஓதி இறைமணம் கமழச் செய்த மாணவிக்கு


__________________________________________ நன்றி.மரியாதை செலுத்தும் பொருட்டு
எழுந்து நின்ற அவையினருக்கும் நன்றி.

வரவேற்புரை

தொடர்ந்து,இடம் பெறும் அங்கம் ,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உரை

இதனை ஆற்றுதற்குத் தேசப்பற்றுமாதக் கொண்டாட்ட நிகழ்ச்சியின்


ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை மாலினி அவர்களை அன்போடு வரவேற்புரை
ஆற்ற அழைக்கின்றோம்.

இதுகாறும் உரையாற்றிய தேசப்பற்றுமாதக் கொண்டாட்ட நிகழ்ச்சியின்


ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை மாலினி அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.
தலைமை உரை

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணொடும் உடுக்க ளோடும்

மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்

பிறந்தோம் நாங்கள் என்னும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பொருள்


பொதிந்த வரிகள் நம் செவிகளைத் தினம் வருடி தமிழ்உணர்வை
ஊட்டும்,அவ்வண்ணம் செயலாற்றும் பெலப்பாத் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்
தலைமை ஆசிரியை இரா.விஜயலட்சுமி அவர்களை அன்போடு
அழைக்கின்றோம்.

இதுகாறும் தலைமை உரையாற்றிய தலைமை ஆசிரியை அவர்களுக்கு


நன்றி கூறுகின்றோம்.

திறப்புரை

இன்றைய நிகழ்வின் உச்சக்கட்டமான திறப்புரையை ஆற்றி, இந்நிகழ்வினை


இனிதே துவக்கி வைக்க நமது சிறப்பு விருந்தினர்,நன்கொடை
நெஞ்சர்,ம.இ.கா தெங்காரா தொகுதி உதவித்தலைவர் எனப் பல்வேறு
பொறுப்பு வகிக்கும் திருமிகு மா.பசுபதி அவர்களை அன்போடு
அழைக்கின்றோம்.

இதுகாறும் திறப்புரை ஆற்றிய நன்கொடை நெஞ்சருமான திருமிகு மா.பசுபதி


அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

7 முறை முழங்கல்

சுதந்திரம் பெற்ற பொழுது துங்கு அப்துல் ரஹ்மான் மெர்டேக்கா


சதுக்கத்திலிருந்து 7 முறை மெர்டேக்கா என்று அரங்கம் அதிருமாறு
கண ீரென முழங்கி சுதந்திரம் கிட்டிய மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினார்.அவ்வாறே,முழங்குவோம் வாரீர்.
தொடர்ந்து இடம் பெறுவது மாணவர் படைப்பு

நிறைவு விழா

தொடக்கம் எனில் முடிவும் நிச்சயம்.இன்றைய நாளும் அவ்வாறே,இனிய


நிறைவை நாடுகிறது.இவ்வேளையில் சுவைமிகு சிற்றுண்டி வழங்கும்
பொருட்செலவை ஏற்ற சிறப்பு விருந்தினரும் நன்கொடை நெஞ்சருமான
திருமிகு மா.பசுபதி அவர்களுக்கு மனதார நன்றிக் கூறிக் கொள்கின்றோம்.

You might also like