You are on page 1of 9

இலக்கண இலக்கிய கேள்விகள் - ஆண்டு 6 (மீள்பார்வை)

செய்யுள்

கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே. உனக்குக் கிடைக்க


வேண்டியவைச் சரியானத் தருணத்தில் உன்னை வந்தடையும். பலனை
எதிர்பார்த்துக் காத்திருக்க தேவையில்லை.

1. மேற்கண்ட கூற்றுக்குப் பொருத்தமான செய்யுள் எது?

அ) அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

ஆ) மாசில் வீணையும் மாலை மதியமும்

இ) வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஈ) நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

2. அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

கடக்க கருதவும் வேண்டா - மடைத்தலையில்

........................................................................
வாடி யிருக்குமாங் கொக்கு

விடுபட்ட அடி என்ன?

அ) தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் ஆ) ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்

இ) கல்லார்க்கும் கற்றவர்க்கும் ஈ) கண்ணளிக்கும் கண்ணே

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா? காற்றில்


தவழுகின்றார். அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?

3. கவிஞர் கண்ண தாசனின் பாடல் வரிகளுக்குப் பொருந்தும் செய்யுள் எது?

அ) அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக் ஆ) மாசில் வீணையும் மாலை மதியமும்

இ) வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஈ) ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

4.ஆனமுதலில் அதிகஞ் செலவானால்


மானம் அழிந்து மதிகெட்டு - போனதிசை

4. கோடிட்டச் சொல்லின் பொருள் என்ன?

அ) அறிவிழந்து ஆ) கெளரவம் இழந்து

இ) அன்பிழந்து ஈ) தன்மானம் இழந்து


இலக்கண இலக்கிய கேள்விகள் - ஆண்டு 6 (மீள்பார்வை)

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையு மேற்கொல்ளார் - செவ்வி

5) இச்செய்யுளை இயற்றியவர் யார்?

அ) நாலடியார் ஆ) ஒளவையார்

இ) குமரகுரு சுவாமிகள் ஈ) சிவப்பிரகாச சுவாமிகள்

6) ‘மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்’ என்று தொடங்கும் செய்யுளின்


கடைசி வரி என்ன?

அ) புல்லிதழ் பூவிற்கும் உண்டு ஆ) நிறையிருளை நீக்குமே னின்று

இ) நல்லார்க்கும் பொல்லனாம் நாடு ஈ) கருமமே கண்ணாயினார்.

7) காணார்க்கு கண்டவர்க்கு
கண்ணளிக்கும் கண்ணே

மேற்காணும் செய்யுளடி உணர்த்தும் கருத்து யாது?

அ) இறைவனைப் பாராமுகமாக இருப்பவனுக்குக் கண் அளிப்பவர்.

ஆ) இறைவனை உணராவிட்டால் துன்பம் செய்யமாட்டார்.

இ) கண்டும் காணாமல் இருப்பவர்களுக்கும் அருள் கொடுப்பார்.

ஈ) தன்னை உணர்ந்தவர்களுக்கும் உணராதவர்களுக்கும் வேறுபாடின்றி அருள்


கொடுப்பவன் இறைவன்.

8) வல்லார்க்கும் மாட்டார்க்கும்
வரமளிக்கும் வரமே
மேற்காணும் செய்யுளின் அடுத்த அடியைத் தெரிவு செய்க.

அ) மதியார்க்கும் மதிப்பவர்க்கும்..

ஆ) நரர்களுக்கும் சுரர்களுக்கும்..

இ) நல்லார்க்கும் பொல்லார்க்கும்..

ஈ) காணார்க்கும் கண்டவர்க்கும்..

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை


9)
அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்.
இலக்கண இலக்கிய கேள்விகள் - ஆண்டு 6 (மீள்பார்வை)

மேற்காணும் செய்யுளில் கோடிட்ட அடி உணர்த்தும் பொருள் யாது?

அ) நல்லவர் ஒருவரை விரும்பாமல் உறவாடிப் பழகிய பின்னர்

ஆ) நல்லவர் இல்லதவரை நாம் மிகவும் விரும்பிப் பழகியவுடன்

இ) நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகியபின்

10) கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற செய்யுள் வரிகளைத் தெரிவு செய்க.


உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்தமாட்டார்.
அ) கருமமே கண்ணாயி நார்.

ஆ) எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்.

இ) மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்.

ஈ) செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்.

11) பூர்த்தி செய்க.


நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை

.........................................................................
அ) இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே

ஆ) நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே

இ) பிச்சை புகினும் கற்கை நன்றே

ஈ) அடக்க முடையா ரறிவிலரரென் றெண்ணிக்

பெயரடை/வினையடை
இலக்கண இலக்கிய கேள்விகள் - ஆண்டு 6 (மீள்பார்வை)

கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமான பெயரடை அல்லது வினையடையைக்


கொண்டு நிறைவு செய்க.

1. பள்ளிப் போட்டி விளையாட்டில் ......................... ஓடிக்கொண்டிருந்த ரகு திடீரென்று


கால் இடறிக் கீழே விழுந்தான்.

2. மணமகள் கட்டியிருந்த ....................... சேலை அனைவரையும் கவர்ந்தது.

3. இளவேந்தன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் ........................... பதிலளித்தான்.

4. ..................... நடனம் ஆடிய மாணவியை அனைவரும் பாராட்டினர்.

5. திருமண விருந்தில் ....................... உணவு பரிமாறப்பட்டது.

6. கோலாலும்பூர் மாநகரில் ................... கட்டடங்களைக் காணலாம்.

7. கடையில் ...................... அடுக்கி வைக்கப்பட்ட பொம்மைகள் கவிதாவின் மனதைக்


கவர்ந்தன.

8. சரியான பெயரடையைத் தெரிவு செய்க.

அ) நீளமான ஆறு ஆ) அருமையாகப் பாடினார்.

இ) நன்றாகத் திட்டினார். ஈ) வேகமாக நடந்தாள்.

9) வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொற்றொடரின் வகையைத் தெரிவு செய்க.

ரவி அனைவரிடமும் நகைச்சுவையாகப் பேசுவான்.

அ) பெயரடை ஆ) வினையடை

இ) வினைமுற்று ஈ) வினைச்சொல்

10) கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற இலக்கணக் கூறுகள்


யாவை?

வேகமாக ஓடிவந்த தம்பி வாசலில் போட்டிருந்த அழகான கோலத்தை மிதித்து விட்டான்.

அ) வினைச்சொல் - பெயர்ச்சொல் ஆ) பெயரடை - வினையடை

இ) வினையடை - பெயரடை ஈ) வினையெச்சம் - பெயரெச்சம்

11) படங்களுக்கு ஏற்ற பெயரடைச் சொல்லைத் தெரிவு செய்க.


இலக்கண இலக்கிய கேள்விகள் - ஆண்டு 6 (மீள்பார்வை)

அ) தடிப்பான ஆ) உயரமான

இ) பெரிய ஈ) அழகான

12) கோடிடப்பட்ட சொல் எதனைக் குறிக்கின்றது?

அழகான சிலை சிற்பியால் வடிக்கப்பட்டது.

அ) பயனிலை ஆ) வினைச்சொல்

இ) பெயரடை ஈ) வினையடை

13) சரியான வினையடையைத் தெரிவு செய்க.

அ) விரைவாகச் சாப்பிட்டான். ஆ) நிறைய சாப்பிட்டான்.

இ) விரும்பிச் சாப்பிட்டான். ஈ) ஆவலுடன் சாப்பிட்டான்.

ஏற்ற பெயரடை/வினையடைகளைச் சொற்களை எழுதுக.

1. கனவு - .........................................................................

2. பாலம் - .........................................................................

3. பெண் - .........................................................................

4. கடித்தான் - .........................................................................

5. வெட்டினான் - .........................................................................

6. கண்டித்தார் - .........................................................................

மரபுத்தொடர்
இலக்கண இலக்கிய கேள்விகள் - ஆண்டு 6 (மீள்பார்வை)

1. கீழ்க்காணும் கூற்றில் கோடிட்ட சொல்லுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு


செய்க.

எந்த வேலை சொன்னாலும் உடனே செய்யாமல் காலம் தாழ்த்திச் செய்யும்


மகளை அம்மா திட்டினார்.

அ) திட்ட வட்டம் ஆ) ஆறப்போடுதல்

இ) தட்டிக் கழித்தல் ஈ) கடுக்காய் கொடுத்தல்.

2. கீழ்க்கண்ட சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த ஓர் ஆடவன் சரியான நேரம் பார்த்து வீட்டு
உரிமையாளருக்குக் ........................... வீட்டிலுள்ள நகைகளைக் கொள்ளையடித்துச்
சென்றான்.

அ) காது குத்துதல் ஆ) கடுக்காய் கொடுத்தல்

ஆ) ஆழம் பார்த்தல் இ) கை கொடுத்தல்

3. கீழ்க்கண்ட சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


டத்தோ லீ சொங் வெய் மலேசியாவின் சிறந்த பூப்பந்து விளையாட்டு வீரர் என
.....................................
அ) மனக்கோட்டை ஆ) பெயர் பொறித்தல்

இ) தொன்று தொட்டு ஈ) வெளுத்து வாங்குதல்.

4. கோடிடப்பட்ட சொற்றொடருக்கு ஏற்ற மரபுத்தொடர் யாது?

அற்பமாக எண்ணப்பட்ட கமலினி கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றாள்.

அ) எடுப்பார் கைப்பிள்ளை ஆ) அவசரக் குடுக்கையாக

இ) கிணற்றுத் தவளையாக ஈ) கிள்ளுக் கீரையாக

5. பிடிவாத குணத்தை உணர்த்தும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

அ) குரங்குப் பிடி ஆ) அரக்கப் பரக்க

இ) மனக்கோட்டை ஈ) அவசரக் குடுக்கை

6. சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

அ) கடுக்காய் கொடுத்தல் - ஏமாற்றித் தப்புதல்.


இலக்கண இலக்கிய கேள்விகள் - ஆண்டு 6 (மீள்பார்வை)

ஆ) மனக்கோட்டை - உறுதியாக

இ) முயல் கொம்பு - கருணை

ஈ) கை கழுவுதல் - உறவைத் துண்டித்தல்

7. கீழ்க்கண்ட சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


திரு கர்ணன் தன் பெயருக்கேற்ப துன்பம் என்று யார் கேட்டாலும் கருணையுடன் உடனே
உதவி செய்து விடுவார்.

அ) ஈடு கட்டுதல் ஆ) கை கூடுதல்

இ) ஈவிரக்கம் ஈ) செவி சாய்த்தல்

8. சரியான பொருளைக் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

அ) நாக்கு நீளுதல் - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.

ஆ) பெயர் பொறித்தல் - புகழை நிலைநாட்டுதல்.

இ) முயல் கொம்பு - உறுதி.

ஈ) ஆழம் பார்த்தல் - ஏமாற்றித் தப்புதல்.

9. சரியான மரபுத்தொடர் அமைந்த வாக்கியங்களுக்கு (சரி/பிழை) என அடையாளமிடுக.

I. அம்மா சொன்ன வேலைகளை ராமு திட்டவட்டமாகச் செய்து முடித்தான். ( )


II. வேலம் அந்தப் பரிசுக்கோப்பையில் தன் பெயரைப் பொறித்தான். ( )
III. நல்ல குடும்பத்தில் பிறந்த கோபால் தீயவர் சேர்க்கையால் பெற்றோர் முகத்தில் கரி
பூசினான். ( )
IV. அரக்கப் பரக்க செய்யும் செயல் பெரும்பாலும் சரியாக அமைவதில்லை. ( )

10. கீழ்க்கண்ட சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

மணி எதையும் சுயமாகச் சிந்திக்காமல், அடுத்தவர் சொல்கிறபடியெல்லாம் நடப்பவன்.


அவனைப் பிறர் எளிதில் வசப்படுத்திவிட முடியும்.

அ) ஈவிரக்கம் ஆ) கைக்கொடுத்தல்.

இ) எடுப்பார் கைப்பிள்ளை ஈ) கடுக்காய் கொடுத்தல்.

புணர்ச்சி
இலக்கண இலக்கிய கேள்விகள் - ஆண்டு 6 (மீள்பார்வை)

1. ஆண் + அழகன் என்பது ........... ஆகும்.

அ) இயல்பு புணர்ச்சி ஆ) திரிதல் புணர்ச்சி

இ) தோன்றல் புணர்ச்சி ஈ) விகாரப் புணர்ச்சி

2. சேர்த்தெழுதுக.

பூ + சரம்

அ) பூஞ்சரம் ஆ) பூச்சரம்

இ) பூங்சரம் ஈ) பூசரம்

3. கொடுக்கப்பட்டுள்ள சொற்களுள் கெடுதல் விகாரப்புணர்ச்சியைக் காட்டும் சொல் எது?

அ) மரங்கண்டான் ஆ) பூவரும்பு

இ) கட்குடியன் ஈ) அறவினை

3. பிரித்தெழுதுக.
பனங்காய்

அ) பனம் + காய் ஆ) பன + காய்

இ) பனை + காய் ஈ) பனங் + காய்

4. சேர்த்தெழுதுக. ஒன்பது + பத்து

அ) பத்தொன்பது ஆ) தொண்ணூறு

இ) ஒன்பது பத்து ஈ) தொள்ளாயிரம்

5. பிரித்தெழுதுக. தென்கிழக்கு

அ) தென் + கீழ் ஆ) தென் + கிழக்கு

இ) தெற்கு + கிழக்கு ஈ) தெற்கும் + கிழக்கும்

6. சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக.

புரிந்து + கொண்டார்

அ) ‘ந்து’ என முடியும் வினையெச்சத்தின் பின் வலிமிகாது.


இலக்கண இலக்கிய கேள்விகள் - ஆண்டு 6 (மீள்பார்வை)

ஆ) ‘ந்து’ என முடியும் வினையெச்சத்தின் பின் வலிமிகாது.

இ) ‘ந்து’ என முடியும் பெயரெச்சத்தின் பின் வலிமிகாது.

ஈ) ‘ந்து’ என முடியும் பெயரெச்சத்தின் பின் வலிமிகாது.

7. வலிமிகா இடங்களின் இலக்கண விதிக்கு உட்பட்ட விடையைத் தெரிவு செய்க.

I. அந்த, இந்த, எந்த


II. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு
III. அங்கு, இங்கு, எங்கு
IV. அத்தனை, இத்தனை, எத்தனை

அ) I,II ஆ) II,III

இ) II,IV ஈ) III,IV

8. கீழ்க்காணும் தொடருக்கேற்ற இலக்கண விதி யாது?

பூ + கூடை = பூக்கூடை

அ) ஈரெழுத்துச் சொல்லுக்குப் பின் வலிமிகும். ஆ) ஓரெழுத்துச் சொல்லுக்குப் பின்

வலிமிகும்.

இ) நெடில் சொல்லுக்குப் பின் வலிமிகும். ஈ) குறில் சொல்லுக்குப் பின் வலிமிகும்.

9.கோடிடப்பட்ட தொடர் எந்த விதிக்கேற்ப வலிமிகுந்துள்ளது என்பதனைத் தெரிவு செய்க.

அந்த + பறவை = அந்தப் பறவை

அ) திசைப்புணர்ச்சி வலிமிகும். ஆ) எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி வலிமிகும்.

இ) பண்புப்பெயர் புணர்ச்சி வலிமிகும். ஈ) அந்த, இந்த, எந்த என்னும் சுட்டு வினா

திரிபுகள் வலிமிகும்.

10.தெற்கு + நாடு

அ) தெற்நாடு ஆ) தென்னாடு இ) தெற்குநாடு ஈ) தெற்கேநாடு

You might also like