You are on page 1of 14

பாட அறிமுகம்

இளமைக் சிலையில் எழுத்து

கல்வி பழமொழி
பாடநூல் 166- 167
பாட நோக்கம் :
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ‘ஆற்றிலே ஒரு கால்....., நிழலின் அருமை......,
தீட்டின மரத்திலே......., ஆழம் அறியாமல்............’ஆகிய பழமொழிகளின்
பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
ஆற்றிலே ஒரு கால்
சேற்றிலே ஒரு கால்

ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு


செயல்களில் ஈடுபட்டால்
எக்காரியத்தையும் செவ்வனே
செய்து முடிக்க முடியாது.
பாடநூல் ப.166- 167
நிழலின் அருமை வெயிலில்
தெரியும்

ஒரு பொருளின் அல்லது


ஒருவரின் அருமை, அதுவோ
அவரோ இல்லாத போதுதான்
வெளிப்படும்.
பாடநூல் ப.166- 167
தீட்டின மரத்திலே கூர்
பார்ப்பதா?

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம்


தீமை செய்யக்கூடாது.

பாடநூல் ப.166- 167


ஆழம் அறியாமல் காலை
விடாதே

நாம் ஈடுபடும் செயலின்


பின்விளைவுகளை நன்கு
ஆராய்ந்த பிறகே அச்செயலில்
ஈடுபட வேண்டும்.
பாடநூல் ப.166- 167
 
சூழலுக்கு ஏற்ற பழமொழியைக் கூறுக.

கம்பர் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களின் வளர்ச்சிக்காக

அரும்பாடுபட்ட ஆசிரியை திருமதி பார்வதியின் மறைவு

அனைவரையும் கலங்கச் செய்தது. அவர் இல்லாத போதும்

பள்ளி நிகழ்வுகளில் அவரின் சேவையைப் பற்றி

அப்பள்ளி ஆசிரியர்கள் பேசுவது வழக்கமாகும்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்


 
சூழலுக்கு ஏற்ற பழமொழியைக் கூறுக.

தனக்கு சிலம்பக் கலை போதித்த மாஸ்டர் கோபால்

அவர்களையே தன்னிடம் மோதிப் பார்த்து வெல்லுமாறு

கதிரவன் போட்டிக்கு அழைத்தான்.

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?


 
சூழலுக்கு ஏற்ற பழமொழியைக் கூறுக.

பாரதியின் அப்பா அவளைச் சங்கீத வகுப்பு,

தைக்குவாண்டோ, சிலம்பம், பியானோ என பல

கலைகளைப் பயில அனுப்பினார். பாரதி எந்தக் கலையை

முழுமையாய் படிப்பதென அறியாமல் திக்குமுக்காடினாள்.

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு


கால்
 
சூழலுக்கு ஏற்ற பழமொழியைக் கூறுக.

சிவா தன் புதிய நண்பர்களுடன் நட்பு கொள்ளும் போது

அவர்களது பின்புலம் பார்க்காமல் பழகினான். அவர்களது

கடத்தல் குற்றத்தினால் காவல் துறையினரிடம் பிடிபட்ட

தருணம் அவனும் உடனிருந்ததால் அவனையும் காவல்

துறையினர் கைது செய்தனர்.

ஆழம் அறியாமல் காலை விடாதே.


 
சூழலுக்கு ஏற்ற பழமொழியைக் கூறுக.

அறிவியலில் சிறந்து விளங்கிய பாவாணன், தனது புத்தாக்க

ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி,

வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக்

கொண்டான்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்


 
சூழலுக்கு ஏற்ற பழமொழியைக் கூறுக.

பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்

மாணவர்கள் தங்களின் இலக்கை அடைய அயராது

உழைத்து வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள

வேண்டும்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்


 
சூழலுக்கு ஏற்ற பழமொழியைக் கூறுக.

சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப்

பயின்று பட்டம் பெற்றாள். சுயமாக ஒரு கடையும்

திறந்தாள். அக்கலையைச் சிறப்புற செய்து வருகிறாள்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும்


நாப்பழக்கம்
பாட முடிவு :
பழமொழி
விளையாட்டு
HTTPS://YOUTU.BE/CE5YK47VIVI?T=102

You might also like