You are on page 1of 9

44-ஆம் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம்

2019/2020

திகதி : 03 மார்ச் 2019 (ஞாயிற்றுக்கிழமை)


நேரம் : 8.30 காலை
இடம் : சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மண்டபம்
வருகை : 262/274

1.0 வரவேற்புரை
இறைவாழ்த்துடன் இப்பொதுக்கூட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 2019/2020-ஆம்
ஆண்டு பொதுக்கூட்டத்தின் நெறியாளர் திருமதி.துர்காவதி வரவேற்புரை ஆற்றினார்.

2.0 ஆலோசகர் உரை (தலைமையாசிரியர்)

2.1 44-வது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த


அனைவரையும் வரவேற்றார்.
2.2 பள்ளி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய பெ.ஆ.சங்க தலைவரான திரு.குமார்
அவர்களுக்கு நன்றி கூறினார்.
2.3 இதுவரை பள்ளிக்கு நல்லதொரு ஒத்துழைப்பினை வழங்கியதோடு தன்
தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து தங்களின் பிள்ளைகளைப்
இப்பள்ளிக்கு அனுப்பிய அனைத்துப் பெற்றோர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்தார்.
2.4 பொங்கல் விழாவை முன்னிட்டு ‘பொங்கு கலையே பொங்கு’ என்ற நிகழ்ச்சியை
மேற்கொள்வதற்கு இப்பள்ளியைத் தெரிவு செய்த திரு.முருகேசு அவர்களுக்கும் தம்
நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
2.5 2018/2019-ஆம் ஆண்டின் பள்ளி நிகழ்ச்சிகளுக்காக நன்கொடை வழங்கிய
அனைத்துப் பெற்றோர்களுக்கும் நன்றி கூறினார்.
2.6 பள்ளி நிர்வாகத்தினரோடு பள்ளியின் புதிய கட்டடத்தின் கலந்துரையாடலுக்காக
கோலாலம்பூர் வரை உடன் சென்ற மாண்புமிகு அ. குமரேசன் அவர்களுக்கும் தன்
நன்றியைக் கூறினார். அதன் விளைவாக நமக்கு ரி.ம.350 ஆயிரம் கிடைத்துள்ளது.
2.7 பள்ளியின் நிரல்திட்டம் மாணவர்களிடத்தில் வழங்கியதோடு அவை மாற்றங்களுக்கு
உட்பட்டது என்பதனையும் வழியுறுத்தி கூறினார்.
2.8 ஆறாம் ஆண்டு பெற்றோர்களின் கவனத்திற்கு, ஆறாம் ஆண்டுக்கான டி.எல்.பி
புத்தகங்கள் நமக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. எனினும், இச்சிக்கலுக்குத்
தீர்வுகாணப்பட்டுவிட்டது.
2.9 அதனைத் தவிர்த்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பது
குறைக்கப்பட்டுள்ளது. இதன்வழி மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் வரும்
பிரச்சணைக்குத் தீர்வு காண இயலும் என்று நம்பப்படுகிறது
2.10 மாணவர்களின் பாடநூல் காணாமல் போவதைத் தவிர்ப்பதற்காகப் பாடநூல்களுக்கு
அட்டை போடுவதோடு தமிழில் பெயர் எழுதி வைத்திருப்பதை உறுதி செய்து
கொள்ளும்படி பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார்.
2.11 அறிக்கைகள் யாவும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இரு மொழியிலும்
வழங்கப்படும். சில நேரங்களில் மட்டுமே கால தாமதம் ஏற்படலாம் இருப்பினும்
இச்சிக்கல் களையப்படும்.
2.12 பெ.ஆ.ச கணக்காய்வாளர்கள் தங்களின் நேரத்தைச் செலவு செய்து
கணக்கறிக்கைகளைப் பார்வையிட்டதற்கு நன்றி.
2.13 “தக்காஃபுல் காப்புறுதி” பாரங்கள் மாணவர்களிடத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி ஒரு வருடத்திற்கு ரி.ம.150 கொடுத்து எடுத்துக்
கொள்ளலாம். மேல் விவரங்களுக்குத் திரு. சசிகுமாரை அணுகலாம்.
2.14 ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக மதியம் 2.00 முதல் 4.30 மாலை வரை
நடைபெறும் கூடுதல் வகுப்பிற்கு அவ்வகுப்பின் பெற்றோர்கள் உணவுகள்
வழங்கியுள்ளனர்.
2.15 2016-ஆம் ஆண்டிலிருந்து U.P.S.R மாணவர்கள் 8 பாடங்களைத் தேர்வு பாடமாக
எடுக்கின்றனர். 2016 முதல் இன்று வரை நம் பள்ளி நல்ல அடைவுநிலையைப்
பெற்றுள்ளது.
2.16 மாண்புமிகு அ.குமரேசன் அவர்கள் 2018-ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற
மாணவர்களுக்காக ரி.ம. 2000 நன்கொடையாக வழங்கியுள்ளார்.
2.17 மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க
வேண்டும். எடுத்துக்காட்டாக, படிநிலை ஒன்றில் இருக்கும் மாணவர் விதுரன்,
சசிவர்மன், ஹரிஷ் போன்ற மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளில் சிறப்பாக
ஈடுபடுகின்றனர்.
2.18 பள்ளியில் மாணவர்களுக்காக திடல் இல்லை இருப்பினும் மாணவர்களிடத்தில்
புறப்பாட நடவடிக்கைகளில் இருக்கும் திறன்களை அடையாளங்கண்டு அதற்காக
பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். காட்டாக, ஹோக்கி, டென்னிஸ் போன்ற
போட்டிகளைக் குறிப்பிடலாம்,
2.19 பள்ளியில் 20 கணினிகள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அதோடு 25 கணினி
மேசைகள் நன்கொடையாகக் கிடைத்துள்ளது. இவை வி.எல்.இ திட்டத்திற்காகப்
பயன்படுத்தப்படும்.
2.20 VLE திட்டம் மென்மேலும் மேம்படுத்தப்படும். பொறுப்பாசிரியர்களான திருமதி திலகா
மற்றும் திருமதி கோகி அவர்களுக்கு நன்றி.
2.21 அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வாரமும் நடைபெறும் சில நடவடிக்கைகளையும்
கூறினார். “Kangaroo Maths” திங்கட்கிழமை நடைபெறும் (திருமதி.துர்காவதி),
சதுரங்க பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெறும் (திருமதி. மனோன்மணி) மற்றும்
‘Robotic’ வகுப்பும் மாணவர்களுக்காக நடைபெறும். “பேச்சுக் களம்” ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் நடைபெறும் (குமாரி தட்சாயணி). மாணவர்கள் ஆங்கிலத்தில்
உரையாடுவதற்காக இந்த நடவடிக்கை துணைபுரியும்.
2.22 “Sinar pagi” நடவடிக்கையின்போது பாரம்பரிய விளையாட்டு, தன்முனைப்பு, யோகா
போன்ற நடவடிக்கைகள் நடத்தப்படும். ஆதலால், பெற்றோர்கள் மாணவர்களைக்
காலை 7.15-க்குள் பள்ளிக்கு அனுப்பி வைக்கவும்.
2.23 மாணவர்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு வருகை ஒரு காரணமாகும். ஜனவரி
முதல் பிப்ரவரி வரை 93% மற்றும் 94.11% குறிக்கிறது. பள்ளி மற்றும் கல்வி
இலாகாவின் அடைவுநிலை 95% ஆகும். ஆகையால், பெற்றோர்கள் மாணவர்களைச்
சரியாக பள்ளிக்கு அனுப்பி வைப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.
2.24 முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான பள்ளிசார்ப் மதிப்பீடு
வகுப்பறையில் நடைபெறும். முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை
சோதனைகள் கிடையாது. மாணவர்களின் வருகை பிரச்சனை பள்ளிசார்ப்
மதிப்பீட்டினை முழுமையாக நடத்துவதற்கு இடையூராக அமைகின்றது.
2.25 ஒவ்வொரு வகுப்பிற்கான புலன குழு இப்பள்ளியில் கிடையாது. தற்சமயம், முதலாம்
மற்றும் ஆறாம் ஆண்டிற்கு மட்டுமே புலனத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
2.26 முக்கிய அறிவுப்புகள் யாவும் குறுஞ்செய்தி அல்லது தொலைவரி வழி அனுப்பப்படும்.
அனைத்து பெற்றோர்களும் தொலைவரியைத்( telegram) தரவிறக்கம் செய்து
பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
2.27 பல மாணவர்கள் மலாய் மொழியில் கலந்துரையாடுவதில்லை. ஆதலால்,
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் மலாய் மொழியில் கலந்துரையாட வேண்டும்.
2.28 பெற்றோர்கள் பிள்ளைகளின் வீட்டுப்பாடத்தைச் செய்வதற்கு வழிகாட்ட வேண்டும்
மாறாக பெற்றோர்களே அதனைச் செய்ய வேண்டாம்.
2.29 புத்தகப்பை சுமை பிரச்சனைக்குக் கூடிய விரைவில் தீர்வு காணப்படும்.
2.30 மாநில அரசாங்கம் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்காக 2
விவேகத்திரைகளை வழங்கியுள்ளது.
2.31 தொடர்ந்து, திருமதிசந்திரா மற்றும் திருமதி.கமலம் சமய பட்டறையில் கலந்து
பயிற்சி பெற்றுள்ளனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாய் பாபா நிலையத்தின்
உறுப்பினர்கள் சமய வகுப்பினை நடத்துவதற்கு உதவி புரிவர்.
2.32 இறுதியாக பெற்றோர்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஏதேனும் கூறியிருப்பின்
மன்னிக்குமாறு தலைமையாசிரியர் கேட்டுக்கொண்டார்.

3.0 தலைமையுரை
3.1 44-ஆம் பெ.ஆ.சங்க பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் பெற்றோர்களை
பெ.ஆ.சங்கம் தலைவர் திரு.வே.குமார் வரவேற்றார்.
3.2 பெ.ஆ.சங்கம் ஆசிரியர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதோடு பள்ளி
நிகழ்ச்சிகளுக்குச் சிறப்பான முறையில் பண உதவி செய்கிறது.
3.3 பள்ளியின் புதிய கட்டடத்திற்காக மத்திய அரசாங்கத்தினரிடமிருந்து ரி.ம.350 ஆயிரம்
நன்கொடையைப் பெற உதவி புரிந்த மாண்புமிகு குமரேசன் அவர்களுக்கு நன்றி
கூறினார். பள்ளியின் மேம்பாட்டிற்கான செலவுகளைக் கண்காணிப்பது பள்ளி
வாரியத்தின் பொறுப்பாகும். பள்ளி கட்டட அமைப்பின் தரவுகளில் சில சிக்கல்கள்
இருப்பதால் இப்புதிய கட்டடம் இன்னும் முழுமைப் பெறவில்லை. இருப்பினும்,
இச்சிக்கல்கள் களையப்பட்டுப் புதிய கட்டடம் 2020-இல் முழுமை பெறும்.
3.4 பள்ளியின் புதிய கட்டட பணிக்காக தொடர்ந்து முயற்சி செய்ததோடு நல்ல
ஒத்துழைப்பை வழங்கிய பள்ளி வாரியக் குழு தலைவருக்கு நன்றி. புதிய கட்டட
பணிக்கு ரி.ம. 750 ஆயிரம் நமக்கு தேவைப்படுகிறது. கல்வி துணையமைச்சர் கூடுதல்
நன்கொடை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார். பள்ளி நிர்வாகத்தினரும் நன்கொடை
தேடிக்கொண்டுள்ளனர். அதோடு, மாநில அரசாங்கமும் இவ்வாண்டு நிறைய
நன்கொடைகளை வழங்கியுள்ளது. வருகின்ற 07.03.2019 கொம்தாரில் அத்தொகை
வழங்கப்படும். பள்ளியின் நிகழ்ச்சிகளின்போது மாணவர்கள் தரையில் உட்காருவதைத்
தவிர்ப்பதற்கு விரிப்பு விரித்து மீண்டும் அதனை முறையாக எடுத்து வைப்பதற்குப்
பெற்றோர்கள் உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
3.5 பல வேளைகளில் உணவு/குளிர்பானங்களை வழங்கிய ஜெயா உணவகத்திற்கு நன்றி
கூறினார்.
3.6 2019-ஆம் ஆறாம் ஆண்டு யு.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற
மாணவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
3.7 பெ.ஆ.சங்கம் பள்ளியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நன்கொடைகளை
வழங்கியுள்ளது. இவை யாவும் மாண்புமிகு அ. குமரேசன், பெ.ஆ.சங்க தலைவர்,
பெ.ஆ.சங்கம் மற்றும் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நன்கொடைகள்
ஆகும். அதோடு பள்ளியின் தலைமயாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர்
அனைவருக்கும் நன்றி.

4.0 மாண்புமிகு ஆ.குமரேசன் உரை

4.1 44-ஆம் ஆண்டு பெ.ஆ.சங்க பொதுக்கூட்டத்தைத் துவக்கி வைக்க அழைப்பு


வழங்கிய பெ.ஆ.சங்கத்திற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றிகள். இப்பள்ளிக்கு 10
முதல் 15 முறை வருகை புரிந்திருப்பதை தன் உரையில் தெரிவித்தார்.
4.2 பள்ளியின் புதிய கட்டட பணிக்காக ரி.ம.350 ஆயிரம் நன்கொடையைப் பெறுவதற்குப்
பள்ளி நிர்வாகத்தினருடன் கோலாலம்பூர் சென்றதாகக் கூறினார்.
4.2 அதோடு, அவர் பினாங்கிற்குச் சுற்றுலா மேற்கொள்ளும் பொழுது மாண்புமிகு கல்வி
துணையமைச்சரை பள்ளிக்கு வருகை புரிந்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
4.3 பெ.ஆ.சங்கத்திற்கும் பள்ளி வாரியத்திற்கும் என் நன்றிகள். அவர்களின்
ஒத்துழைப்பில்லாமல் இப்புதிய கட்டட பணி நடைபெறுவது சாத்தியமில்லாத ஒன்று.
4.4 மாநில அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்காக 2.5 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது.
அத்தொகையை அனைத்து பள்ளிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும்.
4.5 புதிய கட்டட பணிக்காக ரி.ம 10000 வழங்கியுள்ளேன், 2019-ஆம் ஆண்டு
யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்குப் பரிசாக ரி.ம 2000 மற்றும் “Didik UPSR 2019”
ரி.ம 1000 கொடுத்துள்ளேன்.
4.6 குளுகோர் வட்டாரத்தில் யூ.பி.எஸ்.ஆர் மற்றும் PT3 மாணவர்களுக்கு இலவச கூடுதல்
வகுப்புகளும் நடைபெறுவதாகக் கூறினார்.
4.7 அதோடு, தாமான் துன் சார்டோனில் புதிய நூலகம் ஒன்று திறக்கவிருப்பதாகவும்
“ஸ்குவாஷ்” விளையாட்டிற்கான பயிற்சிகளும் இலவசமாக வழங்குவதாக கூறினார்.
வசதி குறைந்த மாணவர்கள் மாண்புமிகு குமரேசன் அவர்களைத் தொடர்பு கொண்டு
மேல் விவரங்களைப் பெறலாம்.
4.8 நெகிழி பயன்பாட்டைக் குறைப்பதற்காக “GO GREEN” திட்டம்
4.9 மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில், பினாங்கு நகராண்மைக் கழகம் மக்களிடையே
விழிப்புணர்வைக் கொண்டுவர பல்வகையான போட்டிகளை நடத்தி வருகிறது.
4.10 யூ.பி.எஸ்.ஆர் முகாமிற்காக அதிகமாக செலவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது என
கூறினார் காரணம் கடந்த 2018-ஆம் ஆண்டின் முகாமிற்கு ரி.ம. 23 ஆயிரம் செலவு
செய்திருப்பது மிகவும் அதிகமாக இருக்கிறது என முன்வைத்தார். பணத்தைச்
சிக்கனப்படுத்தி மற்ற நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்துவது சிறப்பாக அமையும் என
கேட்டுக் கொண்டார்.
4.11 2018-ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி அடைந்திருப்பதற்கு
வாழ்த்துகள்.
4.12 இக்காலக்கட்டத்தில் “STEM” கல்வி பிரிவில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகையால்,
மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித துறையில் அதிக முக்கியதுவத்தை
வழங்கவேண்டும். எஸ்.பி.எம் முடித்த மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சி கல்லூரிகளும்
பல வாய்ப்புகளைக் கொடுக்கிறது.
4.13 நம் மாணவர்களுக்காக பல்வகையான பயிலரங்குகள் வழங்கப்படுகின்றன.
இதுபோன்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி நம் மக்கள் பின்தங்கி
போகாமல் இருக்க வேண்டும்.
4.14 தமிழர் பண்பாட்டினை மேம்படுத்துவதற்குத் துணைபுரியும் அரசுசாரா
இயக்கங்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்ததோடு பள்ளிக்குத் திடல் வசதியை
ஏற்படுத்தி தருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

5.0 2018 –ஆம் ஆண்டின் பெ.ஆ.ச பொதுக்கூட்ட அறிக்கை ஏற்றல்


5.1 பெ.ஆ.ச செயலாளர் 2018-ஆம் ஆண்டின் பொதுக்கூட்ட அறிக்கையை வாசித்தார்.
5.2 கூட்ட அறிக்கையை ஏற்றல்

முன்மொழிதல் : திரு. க.பாரதி

வழிமொழிதல் : திரு.கோபிநாத்

6.0 2018-ஆம் ஆண்டின் நடவடிக்கைகள்


6.1 2018-ஆம் ஆண்டின் நடவடிக்கைகளைச் செயலாளர் வாசித்தார்.

பரிந்துரைகள் : இல்லை

6.2 2018-ஆம் ஆண்டின் நடவடிக்கைகளை ஏற்றல்

முன்மொழிதல் : திருமதி.ச.திலகமலர்
வழிமொழிதல் : திருமதி. பார்வதி

7.0 2018-ஆம் ஆண்டின் கணக்கறிக்கை வாசித்தல்

7.1 பெ.ஆ.ச பொருளாளர் 2018-ஆம் ஆண்டின் கணக்கறிக்கையை வாசித்தல்


7.2 2017-ஆம் ஆண்டின் கணக்கறிக்கையை ஏற்றல்
முன்மொழிதல் : திருமதி.பத்மலோசனி
வழிமொழிதல் : திருமதி.ரேவதி
7.3 பரிந்துரைகள் : இல்லை
8.0 பரிந்துரைகள்
8.1 திருமதி இளங்கனகதேவி - ஒவ்வொரு மாடியிலும் குறிப்பிட்ட சில இடங்களில்
மறைகாணி (CCTV) பொறுத்தப்பட வேண்டும்.
 பள்ளி வாரியம் இதற்கான விலை ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். மிக
விரைவில் அவர்கள் இதற்கு தீர்வு காண்பர் என தலைமையாசிரியர் கூறினார்.
8.2 திருமதி துர்காதேவி – புத்தகப்பை சுமை
 பெட்டகங்கள் பழுது பார்தத ் பின் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும். பள்ளியின்
பெ.ஆ.சங்க தலைவர் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரி.ம. 10 வாங்கலாம் என
முன்மொழிந்தார். பெற்றோர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். பெட்டகங்கள் பழுது
பார்தத் பின் இதற்கான அறிக்கை வழங்கப்படும்.
8.3 திருமதி நாகமணி – கழிப்பறையின் சுத்தம் திருப்தி அளிக்கவில்லை ஆகையால்
அதனை கண்காணிக்க வேண்டும்.
 கழிப்பிடங்கள் அடைத்துக்கொள்ளும் அளவிற்கு மாணவர்கள் மெல்லிழைத்தாள்களை
(திசு) வீசுவதாகத் தலைமையாசிரியர் குறிப்பிட்டார். மாணவர்கள் பொறுப்புடன்
நடந்துகொள்ள வேண்டும். பெற்றோரியல் குழுவில் தூய்மைப்பிரிவு ஒன்றைப் பள்ளி
உருவாக்கியுள்ளது. பெற்றோர் அதற்கு உதவிகளை வழங்கலாம்.
 திரு.உத்தமசீலன் மாணவர்களிடையே பொறுப்புணர்சச ் ியைக் கொண்டுவர அவர்களே
உட்காரும் விரிப்பினை தரையில் போட்டு மீண்டும் மடித்து வைக்கலாம் எனக் கூறினார்.
 இவ்வாறு செய்வது அதிக நேரம் எடுப்பதோடு மாணவர்களின் கற்றல் கற்பித்தலையும்
பாதிக்கும் என தலைமையாசிரியர் கூறினார். இதற்கு பள்ளி பணியாளர்கள் உதவலாம்
என திரு.மணிமாறன் தன் கருத்தினை முன்வைத்தார்.

8.4 திருமதி கல்யாணி மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளின்


எண்ணிக்கையையும் புத்தகப்பைச் சுமையைப் பற்றியும் வினவினார்.
 பணித்திய கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் பற்றி
கலந்துரையாடியதாக தலைமையாசிரியர் கூறினார். மேலும், விவரம் அறிய பெற்றோர்கள்
பள்ளி தலைமைத்துவத்தையோ அல்லது பாட ஆசிரியர்களை நேரடியாகக் கண்டு
கேட்டுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
 தொடர்ந்து, ஆண்டு 1-3 மாணவர்களுக்குத் தேர்வுகள் கிடையாது. மாறாக
ஆண்டு 4-6 வரை நடத்தப்படும் தேர்வுத்தாள்களை பெற்றோர்கள் கையொப்பமிட்டப்பின்
ஆசிரியர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறினார்.
 இனி வரும் காலங்களில் சனிக்கிழமை பரதம் வகுப்பு தொடங்கப்படும் என்று முடிவு
எடுக்கப்பட்டது.

8.5 திரு.உத்தமசீலன்
பள்ளி நேரம் முடிந்தப்பின் மாணவர்களைப் பாதுகாப்புடன் வீட்டிற்கு அனுப்ப
ஆசிரியர்கள் கண்கானிக்க வேண்டும்.
 மாணவர்கள் “மதிப்பீடு நாள் “வகுப்பறையில் நடத்தப்பட வேண்டும்.
 பெற்றோர்களின் பார்வைக்கு மாணவர்களின் சோதனைத்தாள்கள் வீட்டிற்குக்
கொடுத்தனுப்ப வேண்டும்.
 பாடத்தில் சிறந்த அடைவுநிலையைக் காட்டும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட
வேண்டும்.
 ஆசிரியர்கள் பள்ளி முடிந்தப்பின் தங்களின் கடமைகளைச் செய்து கொண்டுதான்
இருக்கின்றனர். அந்த நேரத்தில் பாடவேளையாக இருந்தால்தான் அவர்களால் அங்கு
இருக்க இயலாது என தலைமையாசிரியர் கூறினார்.
 இந்த வருடம் மாணவர் மதிப்பீட்டு நாள் வகுப்பறையில் நடத்தப்படும்.
சோதனைத்தாள்கள் பெற்றோர்கள் பார்வைக்கு வழங்கப்படும். ஆனால்,பெற்றோர்கள்
கையொப்பமிட்டப்பின் மீண்டும் அதனை பள்ளியில் ஒப்படைக்க வேண்டும்.
 இதனை தொடர்ந்து வரும் 2019 பெ.ஆ.சங்க செயலவைக் கூட்டத்தில்
கலந்துரையாடப்படும்.
 பள்ளியின் புதிய கட்டடத்தைப்பற்றி கூட்டத்தின் தொடக்கத்திலேயே விளக்கம்
அளித்துவிட்டோம். மேல் விவரங்கள் அறிய விரும்பினால் பள்ளி வாரியத்திற்கு
முறையாக ஒரு கடிதம் அனுப்பி அடுத்த பெ.ஆ.சங்க கூட்டத்தில் விவரம் கேட்கலாம்.

8.6 திரு.விஷ்ணு குமார் படிநிலை ஒன்றிற்கான மதிப்பீட்டு முறையினை விளக்கும்படி


கேட்டுக்கொண்டார்.
 பள்ளி அளவிலான மதிப்பீடு மாணவர்களின் வகுப்பறையில் பாடவேளைகளில்
நடத்தப்படும். மாணவர்களுக்குச் சோதனைகள் கிடையாது; வகுப்பு நிலை
அறிவிக்கப்படாது. மாணவர்களின் அடைவுநிலை வருடத்திற்கு 2 முறை
பெற்றோர்களிடத்தில் வழங்கப்படும்.
 நிகழ்ச்சிகள் அல்லது கூடுதல் வகுப்புகள் விரைவாகவே தெரிவிக்கப்படும்.

8.7 திருமதி.உஷா தேவி


- சிற்றுண்டிச்சாலையில் விற்கப்படும் உணவின் தரம், மாணவர்களின் மன உளைச்சலைக்
குறைக்க சில நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களுக்கான தலைமைத்துவ
பட்டறைகள் பற்றி கேட்டார்.
 சிற்றுண்டிச்சாலை உணவுகளின் தரத்தைக் கண்காணிக்க ஒவ்வொரு நாளும்
அறிக்கை புத்தகத்தில் குறிக்கப்படுகிறது.
 யோகா வகுப்புகள் ஒவ்வொரு வியாழனும் நடத்தப்படுகிறது. ஆசிரியர் திருமதி.ஜெயா
அதனை வழிநடத்துவார்.
 மாணவர்களுக்கான தலைமைத்துவ முகாம் நடத்தப்படும். யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்குப்பின்
முதியோர் இல்லத்திற்குச் செல்ல திட்டம் உள்ளது. பெற்றோர்கள் இதற்கு உதவலாம்.

9.0 2019/2020-ஆம் ஆண்டிற்கான செயலவை தேர்வு


9.1 2018/2019-ஆம் ஆண்டின் செயலவை கலைக்கப்பட்டது.
9.2 2019/2020-ஆம் ஆண்டிற்கான செயலவைத் தேர்வைப் பெ.ஆ.சங்க ஆலோசகர் என்ற
முறையில் பள்ளியின் தலைமையாசிரியர் வழிநடத்தினார்.
9.3 2019/2020-ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் சங்க செயலவையினர் கீழ்வருமாறு:

ஆலோசகர் : திரு. ந.குணசேகரன்


தலைவர் : திரு.உ.அறிவானந்தன்
முன்மொழிதல் : திரு.ஜெ.தினகரன்
வழிமொழிதல் : திரு.பூ.அரவின்

துணைத்தலைவர் : திரு.பூ.அரவின்
முன்மொழிதல் : திரு.வி.தயாளன்
வழிமொழிதல் : திருமதி கோ.சீதா

செயளாலர் : திருமதி.கா.லெட்சுமி
பொருளாளர் : திருமதி.சு.வசந்தகுமாரி
செயற்குழு:
திருமதி.மு.சரோஜினி திரு.நா.முகிலன்

திரு.ஜெ.தினகரன் திருமதி. அ.எங்கையம்மா

திருமதி கோ.சீதாதேவி திருமதி.ரெ.ஆதிலெட்சுமி

திரு.வி.தயாளன் திருமதிஉ.பத்மலோசனி

திரு.ரெ.சசிகுமார் திரு.சா.உத்தமசீலன்

திரு.பா.காளிதாசன் திரு . பூ .நரேஷ்

திரு.புருஷோத்தமன்

கணக்காய்வாளர் :
திரு.மா.கோபிநாத் திருமதி.பே.மனோன்மணி

9.4 2019/2020-ஆம் ஆண்டிற்கான செயலவையினைத் தலைமையாசிரியர் அறிமுகம்


செய்ததோடு இச்செயலவை பள்ளியின் தரத்தை மேம்படுத்த ஒன்றினணந்து
செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

10.0 மற்றவை

10.1 2019/2020-ஆம் ஆண்டிற்கான பெ.ஆ.சங்க பொருளாளராக திருமதி.


வசந்தகுமாரியையும் அதேவேளையில், திருமதி.க.லெட்சுமியையே 2019/2020-ஆம்
ஆண்டிற்கான பெ.ஆ.சங்க செயளாளராக பள்ளி நிர்வாகம் நியமித்துள்ளதாக
தலைமையாசிரியர் கூறினார்.

10.2 2019/2020-ஆம் ஆண்டிற்கான பெ.ஆ.சங்க தலைவராக திரு.ஒ.அறிவானந்தன்


பெற்றோர்களின் சம்மதத்துடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
10.3 பள்ளி நடவடிக்கைகளை மேற்கொள்ள இவ்வாண்டு பெ.ஆ.சங்க நன்கொடையாகப்
பெற்றோர்களிடமிருந்து ரிம 50 வசூலிக்க தலைமையாசிரியர் பரிந்துரை செய்தார்.
முன்மொழிதல் : திரு.விஜயகுமார்

வழிமொழிதல் : திருமதி பவாணி

 2019-ஆம் ஆண்டிற்கான பெ.ஆ.சங்க கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து


பெற்றொர்களும் ஒரு குடும்பத்திற்கு தலா ரி.ம.50 வழங்க ஒப்புக்கொண்டனர்.
 அனைத்து பெற்றோர்களும் இப்பரிந்துரைக்கு ஒப்புக்கொண்டனர். அதேவேளையில்.
மற்ற பள்ளி நடவடிக்கைகளுக்கு உதவி தேவைப்பட்டால் பெற்றோர்கள் ஒவ்வொரு
மாதமும் இத்தொகையை நன்கொடையாக வழங்கலாம் என ஒரு சில பெற்றோர்கள்
பரிந்துரைத்தனர்.
10.4 இதனைப் பற்றி தொலைவரியில் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்படும் என
கூறினார்.
10.5 இப்பள்ளியின் வளர்ச்சிக்காக அனைத்து தரப்பினரும் தலைமையாசிரியருக்கு
ஒத்துழைப்பை வழங்குவர் என பெரிதும் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
10.6 புதிய பெ.ஆ.சங்கத்தின்மீது நல்லதொரு நம்பிக்கையை வைத்தமைக்குப் புதிய
பெ.ஆ.சங்க தலைவர் தன் நன்றியினைத் தெரிவித்தார்.
10.7 2019/2020-ஆம் ஆண்டின் செயலவையினரில் 2/3 நபர்கள் பள்ளி
நடவடிக்கைகளுக்காக பணத்தை எடுப்பதற்குக் கையொப்பமிடலாம் என பெ.ஆ.சங்க
தலைவர் கூறினார். (திரு.ஒ.அறிவானந்தன் மற்றும் திருமதி.வசந்தகுமாரி)

10.8 அதோடுமட்டுமின்றி, பள்ளி நேரம் முடிந்த பின் வாகனங்களை நிறுத்துவதில் சிக்கல்


இருப்பதால் மாணவர்களின் நிலை பாதுகாப்பற்றதாக இருப்பதை சில பெற்றோர்கள்
கூறினர்.
 பெ.ஆ.சங்கம் சாலை போக்குவரத்தைக் கண்காணிக்க தன்னார்வலர்களையும்,
சாலை கடக்கும் சிறப்பு வரிகளையும் அமைக்க பினாங்கு நகராண்மைக்கழகத்துடன்
சந்திப்பு நடத்தி இப்பிரச்சணைக்குத் தீர்வு காண முயற்சிப்பதாகத்
தலைமையாசிரியர் குறிப்பிட்டார்.

11.0 கூட்டம் ஒத்திவைப்பு


11.1 செயலாளர் வருகை புரிந்திருந்த அனைத்து மாணவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
11.2 இக்கூட்டம் மதியம் 1.30 மணியளவில் நிறைவுபெற்றது.

தயாரிப்பு,
________________________
திருமதி.க.லெட்சுமி
பெ.ஆ.ச செயலாளர்
2019/2020

You might also like