You are on page 1of 14

45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

SJK(TAMIL) CHERAS
செராஸ் தமிழ்ப்பள்ளி,கோலாலம்பூர்

45-வது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டுப் பொதுக்கூட்டம்


MESYUARAT AGUNG PIBG KALI
KE-45
திகதி/ TARIKH :06 பிப்ரவரி 2022
(06 FEBRUARI 2022)
கிழமை/ HARI :ஞாயிற்றுக்கிழமை (AHAD)
நேரம் / MASA :மதியம் 2.00 ( 2.00 PETANG)
இடம் / TEMPAT: GOOGLE MEET

நிகழ்ச்சி நிரல்

மதியம் 1.45
 பெற்றோர்களின் வருகை
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

மதியம் 2.00

 இறை வாழ்த்து

 வரவேற்புரை

 தலைமையுரை-முனைவர் திரு.மோகனதாஸ்( பெ.ஆ.சங்கத் தலைவர்)

 ஆலோசகர் உரை - திருமதி.இரா.தேவி (தலைமையாசிரியர்)

 பள்ளி நிகழ்வுகள்

 2020/2021 ஆம் ஆண்டின் 44-ஆம் பொதுக்கூட்ட அறிக்கையை வாசித்து ஏற்றல்.

 2020/2021 ஆம் ஆண்டு கணக்கறிக்கையை வாசித்து ஏற்றல்

 தீர்மானங்கள் (2022)

 2021/2022 புதிய செயலவை உறுப்பினர்களின் தேர்வு

மாலை 4.00
 நன்றியுரை

2020-2021 பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலவையினர்

ஆலோசகர்
திருமதி இரா. தேவி
(தலைமையாசிரியர்)

தலைவர்
முனைவர் திரு மோகனதாஸ்

துணைத் தலைவர் செயலாளர் பொருளாளர்


திருமதி ஆதிலெட்சுமி திரு கார்த்திக் திருமதி மாரியம்மா
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

திரு புவனேஸ்வரன் திருமதி ஜெயமலர்

திருமதி இலங்கேஸ்வரி

44-வது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கை 2020/2021

திகதி : 29 பிப்ரவரி 2020


நேரம் : 10.00 காலை
இடம் : பள்ளி மண்டபம்
வருகை : 67 பேர்

1.0 அவைத்தலைவர் உரை

1.1. 44-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருந்த சிறப்பு


வருகையாளர் மற்றும் அனைத்துப் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அவைத்தலைவர்
திருமதி துளசி அவர்கள் வரவேற்றார்.
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

2.0. இறை வாழ்த்து

2.1. ஆசிரியர் திருமதி துளசி இறைவாழ்த்துப் பாடியவுடன் இக்கூட்டம் இனிதே தொடங்கியது.

3.0. வரவேற்புரை

3.1. 2020/2021 இன் 44 ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டச் செயலாளர்
திருமதி புனிதவதி அவர்கள் பெற்றோர்கள் அனைவரையும் வரவேற்று, வருகை புரிந்தமைக்கு
நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

4.0. தலைமையுரை

4.1. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் திரு மோகனதாஸ் அவர்கள் சிறப்பு
வருகையாளர் திரு.சிவகிருஷ்ணன் (மாவட்டக் கல்வி அதிகாரி), பள்ளித் தலைமையாசிரியர்
திருமதி இரா.தேவி, காவல்துறை அதிகாரி குமாரி அல்லி நங்கை, பெ.ஆ.சங்கத்
துணைத்தலைவர், பெ.ஆ.சங்க செயலவை உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்
அனைவருக்கும் தமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
4.2. கடந்த ஆண்டு கூறியது போல் இவ்வாண்டு முழுமைப் பெற்ற புதிய மண்டபத்தில்
பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம் முதன் முறையாக நடைபெறுவதாகக்
கூறினார்.
4.3. புதிய இணைக்கட்டடம் பல வசதிகளோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்
உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
4.4. மேலும், 2019 ஆம் ஆண்டு பள்ளி இணைக்கட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து
பெற்றோர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
4.5. இணைக்கட்டடம் 10 வகுப்பறைகள், ஆசிரியர் அறை மற்றும் அலுவலகம் கொண்டு
சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
4.6. புதிய இணைக்கட்டடம் முழுமைப் பெற மொத்தம் 2.2 மில்லியன் தொகை செலவாகியது
ஆனால் அரசாங்கம் 1.5 மில்லியன் மட்டுமே வழங்கியது.மேலும், பிரதமர் 400 ஆயிரம் நீதி
வழங்கினார்.பள்ளி வாரியம் மேற்கொண்டு 300 ஆயிரத்தை நன்கொடையைத் திரட்டி
இக்கட்டட வழங்கியது என்று கூறினார்
4.7. கட்டுமானப்பணிகள் நிறைவுப்பெற்று பள்ளி இணைக்கட்டணத்திற்குச் தரச் சான்றிதழை
(CCC) கோலாலம்பூர் மாநாகர் மன்றம் (DBKL) வழங்கியது என்று கூறினார்.
4.8. மேலும், கடந்த 24 பிப்ரவர் 2020 அன்று சிறப்பு பூஜை முடிந்த பிறகு மாணவர்கள்
அனைவரும் புதிய வகுப்பிற்கு நுழைந்தனர் என்று கூறினார்.
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

4.9. 65 ஆண்டுகள் இப்பள்ளி அனைத்து வளர்ச்சிகளிலிருந்தும் பின் தள்ளப்பட்டுள்ளத. ஆனால்,


இந்த 2020-ஆம் ஆண்டில் பள்ளிப் புதிய இணைக்கட்டடம்,21 ஆம் நூற்றாண்டு
வகுப்பறையுடன் மிலிர்கிறது என்று கூறினார்.மேலும்,A Blok யில் கூடுதல் கட்டடம்
கட்டுவதற்கு மறுசீரமைப்புப் பணியை உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

4.10. பள்ளியின் இணைக்கட்டடம் திறப்பு விழா காணும் என்று அவர் கூறினார்.


4.11. இறுதியாக, 2019 ஆம் ஆண்டியில் அனைத்துப் பள்ளி நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு
வழங்கிய சங்க உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றியினைத்
தெரிவித்துக் கொண்டார்.

5.0. பள்ளி வாரியத் தலைவர்

5.1. பள்ளி வாரியத் தலைவரைப் பிரதிநிதித்து, திரு.குமார் அவர்கள் வருகை


புரிந்திருந்தவர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
5.2. பெற்றோர்களுக்கு இணைக்கட்டடம் உருவான வரலாற்றை எடுத்துரைத்தார்.
5.3. 2.2 மில்லியன் செலவில் 2 மாடிக் கட்டடம் உயர்த்தப்பட்டது. மேலும், பள்ளி வாரியம் 2
மாடிகளை உயர்த்தியதோடு பல நல்லுள்ளங்கள் உதவியைப் பெற்று முழுமையடைந்ததாகக்
கூறினார். இதற்குச் செராஸ் மக்களின் ஒற்றுமையே காரணமாகும் என ஆணித்தரமாக
எடுத்துரைத்தார்.
5.4. பள்ளிக் கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்று இன்று இணைக்கட்டடத்திற்குத் தரச் சான்றிதழ்
(CCC) கிடைத்துவிட்டது எனக் கூறினார்.
5.5. மேலும், மாணவர்கள் தங்களின் திறமையை உயர்த்திக் காட்டப் பெற்றோர்கள்
மாணவர்களைப் பல போட்டிகளில் பங்கெடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார்.
5.6. பெற்றோர்களுக்கு இணைக்கட்டடத்திற்குக் கிடைக்கப் பெற்ற தரச் சான்றிதழ் பற்றி ஏதேனும்
சந்தேகங்கள் இருந்தால் பள்ளி வாரிய உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளலாம் எனக்
கூறினார்.

6.0. ஆலோசகர் உரை

6.1. பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இரா.தேவி அவர்கள் சிறப்பு வருகையாளர் திரு.


சிவகிருஷ்ணன் (மாவட்டக் கல்வி அதிகாரி), பெ.ஆ.சங்கத் தலைவர், வாரியத் தலைவர்,
காவல் அதிகாரி, பெ.ஆ.சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும்
தமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
6.2. பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக நடைபெற வற்றாத ஆதரவைத் தந்த
பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
6.3. பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம் நடத்தப்படுவதற்கான காரணத்தையும்
விளக்கினார்.
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

6.4. தற்போது இப்பள்ளியில் 272 மாணவர்களும், 25 ஆசிரியர்களும், 4 பணியாளர்களும், 3


தோட்டக்காரர்களும் மற்றும் 4 பள்ளிப் பாதுகாவலர்களும் பணிபுரிவதாகக் கூறினார்.
6.5. மலேசியக் கல்வி புளூபிரிண்ட் (2013-2025) பற்றிய தகவல்களை விளக்கினார். 2011 இல்
துவங்கிய ஆரம்பப் பள்ளித் தரநிலைப் பாடத்திட்டத்தை (KSSR) விளக்கினார். உயர்நிலைச்
சிந்தனை கேள்விகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் ஆக்கச் சிந்தனையைப்
பரிசோதிக்க மாணவர்களை ஊக்குவிப்பதாக அவர் கூறினார். மாணவர் திறமைகளை
வகுப்பறை அடிப்படையிலான மதிப்பீடுகளின் வழி கண்டுபிடிப்பதில் புதிய கல்விப் பாடத்
திட்டம் (KSSR) ஒரு முக்கிய அம்சமாகும் எனத் தெரிவித்தார்.
6.6. பள்ளிச் சார்ந்த மதிப்பீடு (PBS) அனைத்துப் பாடவேளைகளிலும் நடத்தப்படும் என்று அவர்
வலியுறுத்தினார். அதாவது, வகுப்பறை மதிப்பீடு (PBD) அனைத்துப் பாடங்களிலும்
செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் பின்னடைவைச் சோதிக்கவும் உடற்கல்வி (PAJSK)
உள்ளது. மைய உளவியலாளர் மதிப்பீடு மாணவர்களின் விருப்பத்தையும், ஆளுமையையும்
அளவிட, அத்துடன் மைய மதிப்பீட்டில் மையம் மதிப்பீடு செய்யப்படுவதாகவும்
மாணவர்களின் வருகை மிக முக்கியம் எனவும் கூறினார்.
6.7. 2019 ஆம் ஆண்டு தொடங்கி முதல் நிலை மாணவர்களுக்குப் பள்ளியில் சோதனைகள்
நடத்தப்படமாட்டது என அவர் கூறினார்.மாணவர்கள் கதைக் கூறுதல்,புதிர்க்
கேள்விகள்,விளையாட்டு,எளிய செயல் திட்டப் பணி மற்றும் ரோல் பிளே(Role play) எனும்
5 நடவடிக்கையின் மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றனர் என விளக்கினார்..
6.8. 2019 ஆம் ஆண்டின் யூ.பி.எஸ்.ஆரில் பள்ளியின் அடைவுநிலை 65% எனவும் 23
மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளதாகவும்
தெரிவித்தார்.மேலும்,2020 ஆம் ஆண்டில் 42 மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு
எழுதவுள்ளதாகவும் இவ்வாண்டின் இலக்கு 75% என்றும் கூறினார்.

6.9. 2011 முதல் 2019 வரையிலான யூ.பி.எஸ்.ஆர் தேர்வின் முடிவுகளை விளக்கினார். அவை
பின்வருமாறு:

ஆண்டு தேர்ச்சி நிலை% GPS


2011 37.5 2.97
2012 46.3 2.64
2013 67.9 2.41
2014 62.0 2.59
2015 52.5 2.49
2016 70.5 3.02
2017 71.1 2.86
2018 66.67 2.95
2019 65.0 2.94
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

6.10. தகுதி வாய்ந்த மாணவர்கள் மட்டுமே (B40) அரசாங்க உதவியையும் அரசாங்கப் பாடநூலையும்
பெற்றனர். 30 மாணவர்கள் இலவச உணவுத் திட்டம் மற்றும் ஒரே மலேசியா பால் திட்டத்தையும்,
KWAMP உதவி மொத்தம் 53 மாணவர்கள் பெறுகின்றனர் எனக் கூறினார்.
6.11. மேலும் பாலர் பள்ளிக்கு (PRA SEKOLAH KERAJAAN) உதவி மொத்தம் 25 மாணவர்களும்,
80 மாணவர்களுக்குப் பள்ளிச்சீருடை பற்றுச்சீட்டும் (Yayasan Kuala Lumpur), 30
மாணவர்களுக்குப் புத்தகப்பையும் (Lions Club), 44 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும்
(Sairam) மற்றும் 170 மாணவர்கள் பள்ளித் தொடக்கத்தில் 100 ரிங்கிட் உதவியையும் பெற்றதாகக்
கூறினார்.
6.12. பள்ளியில் மாணவர்களுக்காக நிறைய நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள்
மாநிலத்தைப் பிரதிநிதித்து, போட்டிகளிள் பங்கெடுத்துள்ளனர். அவை: காற்பந்து, வலைப்பந்து,
பூப்பந்து, தேவாரம், ‘Kangroo Maths, Origami, ASMO - Science மற்றும் BEAVER - ICT’
ஆகும்.
6.13. தற்போது LINUS திட்டம் அமலாக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டாலும், பள்ளி நிர்வாகம்
தொடர்ந்து மாணவர்களுக்கு வாசிப்பு, எழுத்து மற்றும் எண்களை அறிந்திருக்க
நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
6.14. கடந்த ஆண்டு போலவே இவ்வாண்டும் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில்
2020 ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் சங்க நிதி உதவியாக 50 ரிங்கிட் ஒரு
குடும்பத்திற்குச் செலுத்த பள்ளி ஆரம்பத்திலே பெற்றோர்கள் ஒப்புதல் தெரிவித்ததால்
புத்தகப் பட்டியலில் இணைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
6.15. ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை பெற்றோர்களின் ஆதரவோடு செயல்பட்டு வருகிறது.
சிறப்பாக நடைபெற பெற்றோர்கள் பூஜைக்கான பொருள்களையும் பணத்தையும்
நன்கொடையாகத் தந்து உதவினர். கடந்த ஆண்டு சரஸ்வதி பூஜைக்காக
பெற்றோர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பணத்தில் சரஸ்வதி பூஜை சிறப்பாகவே
கொண்டாடப்பட்டது. நன்கொடை வழங்கிய அனைத்துப் பெற்றோர்களுக்கும் இக்கூட்டத்தில்
தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
6.16. ஒவ்வொறு வாரத் திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பொறுப்பாசிரியர்கள்
நன்னெறிப்பண்புக் கூறுகளைப் பற்றி சபைக்கூடலில் விளக்கம் அளிப்பார்கள் என்று
கூறினார்.
6.17. PAJSK மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் படிநிலை 2 மாணவர்களுக்கு நடத்தப்படும்
எனவும் அவர்
கூறினார்.அதுமட்டுமின்றி,மாணவர்களின் உடல் பருமனைக் குறைப்பதற்குச் சில
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
6.18. இறுதியாக, பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்த பெற்றோர்கள் இணைந்து செயல்பட
வேண்டும் எனவும் செயலவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
6.19. பள்ளியின் மேம்பாட்டிற்கு உதவிக் கரம் வழங்கியவர்களுக்கு நன்றி கூறினார்.

7.0. மாவட்டக் கல்வி அதிகாரி உரை

7.1. திரு. சிவகிருஷ்ணன் (மாவட்டக் கல்வி அதிகாரி) 44-வது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு
பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

7.2. 21 ஆம் நூற்றாண்டு புதிய கல்வித் திட்டத்திற்கேற்ப வகுப்பறைகளை அமைத்துக்


கொடுத்ததற்காக பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்தினையும்
நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
7.3. பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு
கேட்டுக்கொண்டார்.

8.0. கடந்த ஆண்டின் பொதுக்கூட்ட அறிக்கையை வாசித்து ஏற்றல்

8.1. 42-வது பெ.ஆ.சங்க ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கை பெ.ஆ.சங்க


செயலாளர் ஆசிரியர் திருமதி புனிதவதி, அவர்களால் வாசிக்கப்பட்டு ஏகமனதாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முன்மொழிந்தவர் : திரு.சுந்திர பாண்டியன்


வழிமொழிந்தவர் : திரு. ஸ்தீபன்

9.0. கணக்கறிக்கை

9.1. 15 மே 2020, நடைப்பெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க அவசரப் பொதுக்கூட்டத்திற்கு பின்,


2019/2020 ஆண்டிற்கான கணக்கறிக்கை பெ.ஆ.சங்க பொருளாளர் ஆசிரியர் குமாரி
சங்கரியால் விளக்கமளிக்கப்பட்டு அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முன்மொழிந்தவர் : திரு இராஜேஸ்

வழிமொழிந்தவர் : திருமதி நீலமணி

9.2. வருகை புரிந்திருந்த அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு கணக்கறிக்கையை


ஏற்றுக்கொண்டனர்.
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

10.0. கோரிக்கைகள்

10.1 திருமதி மாரியம்மா கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை வாசிக்கத் துணைத்தலைமை


ஆசிரியர்கள் தீர்வுகளை எடுத்துரைத்தனர்.

எண் பெயர் பரிந்துரை / திட்டம் தீர்வுகள்

1. திரு.ஸ்தீபன் 1. ஆசிரியர்கள் மாணவர்களைக் மாணவர்களை அடித்தல் அல்லது


கூர்மையான பொருட்களைப் கண்டித்தல் போன்ற சம்பவங்கள்
பயன்படுத்தி அடிக்கக் கூடாது; ஏற்பட்டால் பெற்றோர்கள் உடனே
தகாத சொற்களைப் பயன்படுத்தக் பள்ளிக்கு வந்து விளக்கம் பெறுமாறு
கூடாது. மாணவர் நல துணை தலைமை ஆசிரியர்
கூறினார். அதே சமயம், அப்படி எந்த ஒரு
சூழ்நிலையும் ஏற்படவில்லை என்று
விளக்கமளித்தார்.

பாடப்பிரிவு துணை தலைமை ஆசிரியர்


2. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று
பண்பாட்டை கற்றுத் தர வேண்டும். காலை 7.00 – 7.30 வரை சமய வகுப்பு
நடத்தப்படுகின்றது என்று கூறினார்.
பரிந்திரைக்கப்பட்ட நிகழ்ச்சிகளை
நடத்துவதற்கு நிறைய செலவுகள் எற்படும்,
எனவே பெற்றோர்கள் பண உதவி
கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என
கேட்டுக்கொண்டார்

சிலம்பம், கராத்தே, பரதம் போன்ற


3. சிலம்பம், கராத்தே, பரதம் புறப்பாட நடவடிக்கையை நடத்தப்பட
போன்ற புறப்பாட நடவடிக்கையை கல்வி இலாக்காவிடமிருந்து அனுமதி
நடத்தப்பட வேண்டும். கிடைக்கப்பெற வேண்டும். கல்வி
4. பள்ளி நிர்வாகம், பள்ளியில் அமைச்சின் அனுமதி இல்லாமல்
நடத்தப்படுகின்ற அனைத்து எந்தவொரு புறப்பாட நடவடிக்கையும்
நிகழ்ச்சிகளுக்கும் முன்னாள் செயல்படுத்த முடியாது;
மாணவர் சங்கம், பள்ளி வாரியம் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமே
மற்றும் பெற்றோர்களை அழைக்க நடமாட்ட கட்டுப்பாட்டு விதிமுறையின்படி
வேண்டும். நடத்தப்பட முடியும் எனத் தெரிவித்தார்.
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

பள்ளி நிர்வாகம் எப்பொழுதும் பள்ளியின்


5. பள்ளியின் விதிமுறைகள் விதிமுறையைப் பின்பற்றி பள்ளியின்
பெற்றோர்களுக்கு சிரமம் தேவைக்கு ஏற்ப அனைத்து
அளிக்கிறது. நிகழ்ச்சிகளுக்கும் முன்னாள் மாணவர்
சங்கம், பள்ளி வாரியம் மற்றும்
பெற்றோர்களை அழைப்பது வழக்கம்
எனத் தெரிவித்தார்.

பள்ளியின் விதிமுறைகள்
பெற்றோர்களைச் சிரமப்படுத்துவதற்கு
6. பள்ளி நிர்வாகம் பெற்றோர்கள்
அல்ல; மாறாக மாணவர்களின் பாதுகாப்பு
அமர்வதற்கு பள்ளி வளாகத்தில்
மற்றும் நலனைக் கருதி வழக்கமாக
நாற்காலிகளைத் தயார் செய்ய
அமல்படுத்தப்பட்டு
வேண்டும்.
வருகிறது.பெற்றோர்கள்
தலைமையாசிரியர் அல்லது
ஆசிரியர்களைச் சந்திக்கும் முன்,
பாதுகாவலரிடமிருந்து அனுமதி பெற
வேண்டும். பின், அனுமதி அட்டையைப்
பெற்றவுடன், நிர்ணயிக்கப்பட்ட இடத்தில்
அல்லது நேரத்தில் தலைமையாசிரியர்
அல்லது ஆசிரியர்களைச் சந்திக்க முடியும்
என மாணவர் நலப் பொறுப்பாசிரியர்
கூறினார்.மேலும்,பெற்றோர்கள் பள்ளிக்கு
வரும் பொழுது பொருத்தமான உடையை
அணிந்திருத்தல் அவசியம் எனக்
கூறினார்.

2. திருமதி பிரேமா 1. முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத்தலைமை ஆசிரியர்,


மாரிமுத்து மீது ஒரு போலிஸ் புகார் உள்ளது. அப்புகாருக்கும் பள்ளியின்
அப்புகாரைப் பெற்றோர் ஆசிரியர் நிர்வாகத்திற்கும் எந்தவொரு தொடர்பும்
சங்கம், பெற்றோர், அல்லது இல்லை என்று கூறினார்.
தனிநபர் என்று யார் மூலம்
கொடுக்கப்பட்டது.

2. பெற்றோர்களுக்கு ஜாவி
எழுத்தின் பாட இரத்துச் பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர்
சொல்லப்படவில்லை. சங்கமும் பிரச்சனையைத் தீர்க்கும்
வழிகளையும் ஜாவி எழுத்தின்
இரத்தையும், பற்றி புலனம் மூலம்
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

தெரிவித்துவிட்டனர்.

3. திரு சுந்தர 1. ஆசிரியர்கள் புலனத்தைப் பெற்றோர்கள் மாணவரின் வருகை மற்றும்


பாண்டியன் பயன்படுத்தி முக்கியமானத் அது தொடர்பான விஷயங்களைப் பற்றி
தகவல்களை உடனே தெரிவிக்க தெரிந்துக் கொள்வதற்கு பள்ளிக்கு வந்து
வேண்டும். ஆசிரியரைச் சந்திக்க வேண்டும்.

பள்ளி, கல்வி இலாக்கா, மாநில இலாக்க


மற்றும் கல்வி அமைச்சு தொடர்பான
முக்கிய தகவல்கள் மட்டுமே
தெரிவிப்பதற்கு ஆசிரியர்கள் புலனத்தைப்
பயன்படுத்துவர்.

இனி வரும் காலங்களில் அனைத்து


தகவல்களும் வகுப்பு புலனங்களில்
தெரிவிக்கப்படும்.

அறிக்கைப் புத்தகம் பள்ளியின் புத்தகக்


4. திருமதி 1. ஆசிரியர்கள் தகவல்களைத் கடையில் விற்கப்படுகிறது. பெற்றோர்கள்
இலங்கேஸ்வரி தெரிவிப்பதற்கு அறிக்கை அப்புத்தகத்தை வாங்க வேண்டும்.
புத்தகத்தைப் பயன்படுத்த
வேண்டும். புத்தகத்தில் உள்ள கடிதங்களைப் படித்த
பின் பெற்றோர்கள் கண்டிப்பாக
கையொப்பமிட வேண்டும்.

முழுமையான வருகை உடைய


மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
2.பள்ளிக்குக்முழுமையாக ஒவ்வொரு மாத ஆரம்பம்,
வருகையளித்த மாணவர்களுக்கு, திங்கட்கிழமையன்று சபைகூடலில்
வகுப்பாசிரியர் பரிசு வழங்க நடைபெறுவது வழக்கமாகும்.
வேண்டும். முழுவருகையின் நற்சான்றிதழ் பரிசளிப்பு
விழாவின் போது மாணவர்களுக்கு
கொடுக்கப்படும் என மாணவர் நலப்
பொறுப்பாசிரியர் கூறினார்.

11.0. எழும் பிரச்சனைகள்

11.1 இல்லை

12.0. 2020/2021 ஆம் ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலவை உறுப்பினர்கள் தேர்வு

12.1. திரு சிவகிருஷ்ணன் அவர்கள் 2019/2020 ஆம் பெ.ஆ.சங்க உறுப்பினர்களின் தேர்தலை


நடத்தினார்.
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

12.2. திரு இரமேஷ், பெ.ஆ.சங்கத் தலைவர் முனைவர் திரு.மோகனதாஸ் நிலைத்திருக்க முன்


மொழிய, திரு கிருஷ்ணா வழிமொழிந்தார்
12.3. முனைவர் திரு.மோகனதாஸ், பெ.ஆ.சங்கத் துணைத் தலைவர், திருமதி ஆதிலெட்சுமி
நிலைத்திருக்க முன் மொழிய திரு கணபதி வழிமொழிந்தார்.

2020/2021 ஆம் ஆண்டுக்கான செயலவை உறுப்பினர்

ஆலோசகர் : திருமதி இரா.தேவி


தலைவர் : முனைவர் திரு மோகனதாஸ்
து.தலைவர் : திருமதி ஆதிலெட்சுமி
செயலாளர் : திரு.கார்த்திக்
து.செயலாளர் : திருமதி.ராஜேஸ்வரி
கணக்காய்வாளர் : திருமதி மாரியம்மா

செயலவை உறுப்பினர்கள்
( ஆசிரியர்கள் ) : திரு புவனேஸ்வரன்
திரு இரவி சுந்தரம்
திருமதி ஜெயமலர்
திரு கேசவன்
திருமதி கீதா
திருமதி ரேணுகா

செயலவை உறுப்பினர்கள்: திருமதி இலங்கேஸ்வரி


( பெற்றோர்கள் ) திருமதி சித்ரா
திரு சீனிவாச ராவ்
திரு இரமேஷ்
திரு பத்மநாதன்

15.0 2020/2021 ஆம் ஆண்டு பெ.ஆ. சங்கத் தலைவர் உரை

15.1 முனைவர் திரு மோகனதாஸ் அவர்கள் தம்மைத் தலைவராகத்


தேர்ந்தெடுத்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
15.2 இப்பள்ளிக்குத் திடல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் பள்ளி
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

இதழ் வெளியிடுவதாகவும் கூறினார்.


15.3 2020/2021 ஆம் ஆண்டுக்கான புதியச் செயலவை உறுப்பினர்களை
அறிமுகப்படுத்தினார்.

16.0 நன்றியுரை

16.1 பெ.ஆ.சங்க ஆண்டு பொதுக்கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற


ஒத்துழைப்பு நல்கிய அங்கத்தினருக்கும் பெற்றோர்களுக்கும்
தலைமையாசிரியர் திருமதி தேவி அவர்கள் தமது நன்றியினைத்
தெரிவித்துக் கொண்டார்.

இக்கூட்டம் மதியம் 1.30 மணி அளவில் முடிவுற்றது.

அறிக்கையைத் தயாரித்தவர், அறிக்கையைப் பார்வையிட்டவர்,

________________________
____________________________
( திருமதி.ராஜேஸ்வரி ) ( முனைவர் மோகனதாஸ் )
செயலாளர், தலைவர்
பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெற்றோர் ஆசிரியர் சங்கம்
செராஸ் தமிழ்ப்பள்ளி செராஸ் தமிழ்ப்பள்ளி

2020/2021-ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயல்திட்டங்கள்

செயலவைக் கூட்டம் (மார்ச் 2020 முதல் டிசம்பர் 2021 வரை)


44-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டச் செயலவை உறுப்பினர்கள் 9
செயலவைக் கூட்டங்கள் நடத்தியுள்ளனர்.
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்

சரஸ்வதி பூஜை
செப்டம்பர் மாதம் பள்ளியில் நடைப்பெற்ற சரஸ்வதி பூஜை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. முதன்
முறையாகப் பள்ளியில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழை இலை உணவு வழங்கப்பட்டது.

கூட்டுப்பணி
பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் கூட்டுப்பணி நடத்தப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பள்ளிச் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தி
அழகுப்படுத்தினர்.

இணைக்கட்டடச் சிறப்புப் பூஜை


பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர், முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர்கள்
இணைந்து சிறப்புப் பூஜையைக் கடந்த 27 ஜனவரி 2020 சிறப்பாக நடத்தி முடித்தனர்.

கலை வடிவ எழுத்து


ஹாட் (KHAT) கலை வடிவ எழுத்து தொடர்பான கலந்துரையாடல், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம், 18 பிப்ரவரி
2021 அன்று இயங்கலையில் சந்திப்பு நடத்தப்பட்டது.

கூட்டுப்பணி
பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் 2-ஆவது கூட்டுப்பணி 22 பிப்ரவரி நடத்தப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர்
சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு வகுப்பறையை அழகுபடுத்த
உதவிக்கரம் நீட்டினர்.

You might also like