You are on page 1of 4

அடை

கேள்வி 1 முதல் 3 வரை ஏற்ற பெயரடையைத் சொல்லைத் தெரிவு செய்க.

1.
வசந்தா _________ ரோஜா மலரைத் தலையில் சூடியிருந்தாள்.

A.அழகில் B. அழகிய C.அழகாக D. அழகான

2. _________ சாலையில் வாகன நெரிசல் ஏற்படும்.

A. குறுகலான B. விரிந்த C. விசாலமான D. விரிவான

3. முரளி ____________ பாடல் ஒன்றைப் பாடி அனைவரையும் கவர்ந்தான்.

A. இனிமையான C. இனிமைக்காக
B. இனிப்பான D. இசைந்த

4. ஏற்ற வினையடையைத் தெரிவு செய்க.

கனிமொழி,நேர் ஓட்டத்தில் _________ ஓடி முதல் பரிசைத் தட்டிச் சென்றாள்

A. வேகமாக C. விரைந்து
B. வரிசை D குனிந்து

5. கீழ்க்காணும் பெயரடை சொல்லைத் தெரிவு செய்க.

____________ மரத்தில் இருந்த தேன்கூட்டின் மீது மாணவர்கள் கற்களை எறிந்தனர்.

A. உயரமான B. உயரத்தில் C. உயர்ந்த D. உயரிய

6. கீழ்க்காண்பனவற்றுள் எது வினையடை ஆகும் ?


A. அழகான பறவை C. வேகமாக ஓடினான்
B. தடித்த புத்தகம் D. உயரமான மரம்

7. கீழ்க்காணும் வாக்கியங்களில் எது பெயரடை வாக்கியம் ?

A. அகிலன் விரைவாக நடப்பான்


B. அந்தச் குழந்தை அழகாகச் சிரித்தது.
C.நாய் வேகமாக ஓடியது.
D.சரிதா அழகான பொம்மை வாங்கினாள்.

8. சரியான வினையடையைத் தேர்வு செய்க.

A. கருமையான கூந்தல் C. கடுமையாகப் பேசினார்


B. அழகான குழந்தை D. உயரமான சிகரம்

9. இனியன், தன்னைக் கடிக்க வந்த நாயை __________ அடித்ததால், அது குரைத்துக்


கொண்டு ஓடியது.

A. பலமாக C.பலமான
B. பலம் D.பலத்தில்

10. மேற்காணும் படத்திற்குப் பொருந்தி வரும் பெயரடை யாது ?

A. கருமையான C.ஆபத்தான
B. உயரமான D.அழகான

11. ஆசிரியர் ________________ ப் பேசியதால் மாணவர்களுக்குச் சுலபமாக


விளங்கியது.
A. உரக்க C. தெளிவாக
B. அருமையாக D. மெல்ல

12. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவை ______________ கொண்டாடி


வருகிறோம்.

A. சிறப்பான C.சிறப்புடன்
B. சிறப்பாக D.சிறப்போடு

13. _______________ இரட்டைக் கோபுரம் கோலாலும்பூரில் அமைந்துள்ளது.


கட்டிட நிபுணர்கள் இதனை _____________ கட்டியுள்ளார்.

A. உயரமாக, அருமையுடன் C. அருமையாக, உயரமான


B. உயரமான , அருமையுடன் D. உயரமான, அருமையாக

14. வாக்கியத்தில் வரும் பெயரடையைத் தெரிவு செய்க.

ஆடவர் ஒருவர் அந்த உயரமான கட்டத்திலிருந்து விழுந்து மாண்டார்.

A. விழுந்து B. மாண்டார் C.உயரமான D.கட்டடம்

15. பெயரடை சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. சுறுசுறுப்பான மாணவர்கள் ஆசிரியர்கள் மதிப்பைப் பெறுவர்.


B. செல்வர் அழகாகப் பேசி சபையோரின் பாராட்டைப் பெற்றான்.
C. ஆசிரியர் வகுப்பறையில் உரக்கப் பேசினார்.
D. பூங்கோதை வேகமாக ஓடினாள்.

16. படத்திற்குப் பொருத்தமான பெயரடையைத் தெரிவு செய்க.

A. ஆழமான
B. ஆழம்
C. ஆழமாக
D. ஆழத்தில்

17. கீழ்க்காணும் வாக்கியங்களில் பெயரடையைத் தெரிவு செய்க.

தாழ்வான நிலத்தில் வெள்ளம் பாய்ந்து வேகமாக ஓடியது.

A. தாழ்வான B.வேகமாக C. நிலத்தில் D.வெள்ளம்

18. படத்திற்குப் பொருத்தமான பெயரடையைத் தெரிவு செய்க.

A. வேகமாக
B. வேகமான
C. வேகம்

19. கீழ்க்காண்பனவற்றுள் சரியான பெயரடையைத் தெரிவு செய்க.

A. தடிப்பான புத்தகம் C.வேகமாக ஓடினான்


B. உரக்க வாசித்தாள் D.வருவதாகக் கூறினான்

20. கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற பெயரடை சொல்லைத் தெரிவு செய்க.

தோட்டக்காரர் _____________ செடிக் கொடிகளை வெட்டிச் சாய்த்தார்.

A. செழிப்பாக C.செழிப்பு
B. செழிப்பான D.செழித்து

You might also like