You are on page 1of 8

SEKOLAH MENENGAH KEBANGSAAN RANTAU

71200 RANTAU, NEGERI SEMBILAN


_____________________________________________________________________________

UJIAN FORMATIF 1 2022


TINGKATAN 2
BAHASA TAMIL
1 JAM Satu jam

NAMA : _____________________________________________
TINGKATAN : _____________________________________________

பிரிவு A - செய்யுளும் மொழியணியும்


( 20 புள்ளிகள்)

கீழ்க்காணும் வினாக்களுக்கு சரியான மொழியணிக:ளைத் தெரிவு செய்க.

1. 1. திருமணத்திற்கு வந்திருந்த உற்றார் உறவினர்கள், மணமக்கள் இருவரும் சீரும் சிறப்புமாய்


_______________________________ வாழ வேண்டும் என வாழ்த்தினர்.

A இலைமறை காய் போல C மணியும் ஒலியும் போல


B பசுமரத்தாணி போல D தாயைக் கண்ட சேயைப் போல

2. இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கு மக்கள் _______________________ வந்த வண்ணம்


இருந்தனர்.

A கும்பிடப் போன தெய்வம் போல C அழகுக்கு அழகு சேர்ப்பது போல


B புற்றீசல் போல D நுனிப்புல் மேய்ந்தாற் போல

3. கீழ்க்காணும் உவமைத் தொடரின் சரியான பொருளைத் தெரிவு செய்க.


1.
உள்ளங்கை நெல்லிக்கனி போல

A மிகவும் சிரமமான ஒன்று


B மிகவும் தெளிவாகத் தெரிதல்
C மிகவும் மேலோட்டமாக தெரிந்து கொள்ளுதல்
D மிகவும் துணிவாக

1
2. 4. காட்டு வழிப்பாதையில், தன்னந்தனியாக நடந்து வந்தபோது, திடீரென பெருஞ்சத்தத்தைக்
கேட்டதும் சீதா ________________________ என நடுங்கினாள்.

A வெடவெட C கடகட
B கிடுகிடு D நசநச

5. கீழ்க்காணும் இரட்டைக்கிளவிக்கான பொருள் யாது?

விறுவிறு

A விரைவாக C இடத்தை விட்டுச் செல்லுதல்


B கடுமையான ஓசை D கூட்டமாகச் செல்லுதல்

3. 6. குரங்குகள் மரக்கிளைகளில் தாவித் தாவித் செல்லும்போது சில கிளைகள்


_____________வென முறிந்தன.

A வெடவெட C கடகட
B சடசட D நசநச

7. ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது __________________ பேசிக்


கொண்டிருந்த மாணவர்களை ஆசிரியர் திட்டினார்.

A நசநச C கடகட
B சடசட D தொணதொண

4. 8. சத்தான உணவு வகைகளை நாம் என்றும் உண்டு வந்தால் ______________ இன்றி நீண்ட
ஆயுளுடன் வாழலாம்.

A தங்குதடை C உயர்வு தாழ்வு


B நோய்நொடி D கள்ளங்கபடு

5. 9. வாகனமோட்டிகள் சாலையின் ________________________ முறையாகக் கடைப்பிடித்து


வந்தால் சாலை விபத்துகளைத் தவிர்க்கலாம்.

A தங்குதடை C உயர்வு தாழ்வு


B நோய்நொடி D சட்ட திட்டம்

10. கீழ்க்காணும் மரபுத்தொடருக்கான பொருத்தமான பொருளை தேர்ந்தெடு.


எள்ளளவும்

A சிறிதளவும் C பெரும் மனமகிழ்ச்சி


B திட்டப்படுதல் D மிகப் பெரிய

6. 11. கொடுத்த வீட்டு வேலைகளை ஒழுங்காகச் செய்து முடிக்காததால் மீனா அவள்


அம்மாவிடம் ______________________.

A அளவளாவினாள் C உச்சிக் குளிர்ந்தாள்


B பாட்டு வாங்கினாள் D முகம் சுழித்தாள்

12. கொடுக்கப்பட்ட சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


2
கொடுத்த வீட்டுப்பாடங்களை முறையாகச் செய்யாததால் சேகரன் ஆசிரியரால்
திட்டப்பட்டான்.

A வீடுவாசல் C ஏட்டிக்குப் போட்டி


B பாட்டு வாங்குதல் D உச்சிக் குளிர்தல்

13. கீழ்க்காணும் இணைமொழிக்கான சரியான பொரு:ளைத் தேர்ந்தெடுக்கவும்.


தங்குத்தடை

A இடையூறு C சீராக நடத்தல்


B போராட்டம் D வெற்றி பெறுதல்

14. ஓரிரு நாட்களாக மழைப் பெய்யாததால் பயிர்கள் ___________________ காணப்பட்டன.

A நோய்நொடி C கள்ளங்கபடு
B வாடி வதங்கி D உள்ளும் புறமும்

7. 15. கீழ்க்காணும் சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

கோவலன் தான் இழந்த பொருளையெல்லாம் தனது சுய முயற்சியில் மீண்டும்


பெற மதுரை நோக்கி பயணம் மேற்கொண்டான்.

A தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்


B கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்
C தன் கையே தனக்கு உதவி
D ஆடமாட்டதவள் கூடம் கோணால் என்றாளாம்

16. கீழ்க்காணும் பொருளுக்கான பொருத்தமான பழமொழியைத் தேர்ந்தெடுக.

பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்

A தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்


B கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்
C தன் கையே தனக்கு உதவி
D ஆடமாட்டதவள் கூடம் கோணால் என்றாளாம்

8. 17. கீழ்க்காணும்
ஈன்ற திருக்குறளுக்கான பொருத்தமான
பொழுதிற் பெரிதுவக்கும் கருத்தைத் தெரிவு செய்க.
தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்

3
9. A சான்றோர்கள் போற்றினால் தாய் பெரு மகிழ்ச்சி அடைவாள்.
10. B மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் பெருமகிழ்ச்சி அடைவாள்.
11. C தன் மகனைச் சான்றோன் ஆக்குவது தாயின் கடமையாகும்.
12. D மகனைப் பெற்றெடுப்பதையே தாய் விரும்புவாள்.

13.
14. 18. கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க.

15.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
____________________________________________

A இதனை இவன்கண் விடல்


B இதனை அவன்கண் விடல்
C அதனை இவன்கண் விடல்
D அதனை அவன்கண் விடல்

16. 19. கீழ்க்காணும் செய்யுளில் கருமையாக்கப்பட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்


மன்னனின் கற்றோர் சிறப்புடையன் – மன்னற்குத்
தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு - மூதுரை

A அரசனைவிட கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகிறான்.


B கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற இடத்தலெல்லாம் சிறப்புப் பெறுவர்.
C அரசனுக்கு அவன் நாட்டில் மட்டுமே சிறப்புக் கிட்டும்.
D அரசனையும் பிழையறக் கற்றவர்களையும் ஒப்பிட்டால்

20. கீழ்க்காணும் செய்யுளை நிறைவு செய்க.

பெரியோர் கேண்மை பிறைபோல நாளும்


வரிசை வரிசையா நந்தும் – வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
_____________________________________
A தானே பெரியோர் தொடர்பு
B தானே சிறியோர் தொடர்பு
C தானே பெரியவர் சிறியவர் தொடர்பு
D தானே சிறியவர் பெரியவர் தொடர்பு

பிரிவு B: இலக்கணம்
( புள்ளிகள்)

இப்பிரிவில் 4 அகவயக்கேள்விகள் உள்ளன. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.


4
1. i) சுட்டெழுத்துகள் மூன்று. அவற்றைப் பட்டியலிடவும். 3 பு

________________, ________________________, ___________________

ii) சொல்லின் உள்ளிருந்து வினாப்பொருளைத் தருமயின் அது __________________________ 1 பு


என்று அழைக்கப்படும்.

2. சேர்த்தெழுதுக

i) இத்துணை + பெரிய = _______________________________

ii) அ + யோகி = _______________________________

iii) எ + யானை = _______________________________

iv) அரை + பகுதி = ________________________________

v) எ + கோவில் = _______________________________ 5 பு

3. i கீழ்க்காணும் வாக்கியத்தில் வேண்டுகோள் வாக்கியத்தை தெரிவு செய்க. 1 பு

A நாளை என் வீட்டிற்கு வரவும்.


B குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் வீசாதே

கீழ்க்காணும் வாக்கியங்களிலுள்ள பிழைகளை அடையாளங்கண்டு வட்டமிடுக. 5 பு

அ பறவைகள் இறை தேடி வானில் பறந்தது.

ஆ மஞ்சு விரட்டு எண்பது தமிழர்களின் ஒரு வீர விளையாட்டாகும்.

இ நாம் ஏழை எளியவரிடம் இறக்கம் காட்ட வேண்டும்.

ஈ அரசர் வெள்ளை நிறத்திலான பரியின் மீது ஏறி நகர்வளம் வந்தார்.

உ காலையும் மாழையும் இறைவனை வணங்குதல் நன்று.

4. பிரித்து எழுதுக. 5 பு
தனிச்சொல் = __________________ + _____________________

5
மகனோடு = ___________________ + ____________________

எவ்யாண்டு = ___________________ + ____________________

அவ்யாசகன் = ___________________ + ____________________

எக்கடிதம் = ___________________ + ____________________

பிரிவு C: பல்வகைக் கருத்துணர்தல்


(15 புள்ளிகள்)

1. கீழ்க்காணும் விளப்பரத்தை வாசித்து வினாவுக்கு விடை எழுதுக.

அருங்காட்சியகத்தில் வேலை கிடைக்க வேண்டுமானால் ஒருவருக்கு இருக்க வேண்டிய


இரண்டு தகுதிகள் என்ன? ( 2 பு)

2.

6
பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்து வைத்திருப்பதால் நமக்கு இரண்டு கிட்டும்
நன்மைகளை எழுதுக. ( 2 பு )

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________

பிரிவு D: கருத்துரைத்தல்
(15 புள்ளிகள்)

1 கீழ்க்காணும் கதையை வாசித்து தொடர்ந்து வரும் வினாக்களுக்குப் பதில் எழுதுக.

பள்ளியில் ஆசிரியர், “சரி எல்லாரும் அமைதியா உட்காருங்க. உங்களுக்குப் போட்டி


வைக்கப் போறேன் ...உங்களோட மனசுல என்னல்லாம் ஆசைகள் கனவுகள் இருக்குன்னு
ஒரு போட்டி. சரியா? என்றார். இந்தாங்க ஒவ்வொருத்தரும் பேப்பர் வாங்கிக்கங்க. சீக்கிரமா
ஒரு பக்கத்தல கடிதமோ, கட்டுரையோ, கதையோ, கவிதையோ ஏதாவது உங்க மனசுல
இருக்குறத எழுதுங்க. சரியா?” என்று மாணவர்களிடம் பதிலை எதிர்ப்பார்க்காமால்
கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்.

சரிங்க டீச்சர். மாணவர்களின் ஒருமித்த பதில். அரைமணி நேரம் கழிந்தது. அனைவரும்


எழுதி முடித்தனர். “எங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா வாசிங்க” என்றார் ஆசிரியர்.
கண்மணி தன் பெற்றோருக்கு நல்லா படிச்சு டாக்டரா அவங்கள தன் கூட வைத்துக்
காப்பாத்துவேன்னு சொன்னாள். பொன்மணி தன் அம்மா கூலி வேலை பார்த்து படிக்க
வைத்து கஷ்டப் படுவதை நினைத்து நான் ஆசிரியராகப் பணிப்புரிந்து அம்மாவைக்
காப்பாற்றுவேன் என்றாள்.

செல்லமணி மட்டும் தயங்கினாள் படிப்பதற்கு. அவளைப் படிக்கச் சொன்னார் ஆசிரியர்.


அவள் பதிலுக்குக் கண்களில் கண்ணீர் விட்டாள். அதனால் ஆசிரியரே அதை வாங்கிப்
படித்தார்.

அன்புள்ள அப்பாவுக்கு நலமா ? அப்பா .நான் நலம். நீங்க எப்போ வருவீங்கப்பா?


உங்களைப் பார்க்கணும். உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுப்பா ..அம்மா.. நீங்க
வெளிநாட்டிற்குப் போனதாய் சொன்னாள். எனக்கு புரிந்துவிட்டது. நீ எங்கு இருக்கிறாய்
என்று பாட்டியிடம் கேட்டுத் தெரிஞ்சிகிட்டேன். இப்போ நீங்க ஏன் அமைதியா
இருக்கிறீங்க? என்னைக் கூட எதிர்ல கண்டாலும் கண்டுக்காம போறீங்கப்பா. பக்கத்தில
இருக்கும் அந்த புது அம்மா உங்களைத் திட்டுவாங்கலாப்பா.?

அம்மா தினம் வீட்டு வேலை செஞ்சு கஷ்டப் படுறாங்கப்பா. அம்மா ஒரு வார்த்தை
கூட புது அம்மாவைத் திட்ட மாட்டாங்க தெரியுமா? நீங்க வாரம் ஒரு தடவையாவது வந்தா

7
போதும்னு அழராங்கப்பா. எனக்கு பள்ளிக்கூடத்திலே பெற்றோர் கூட்டம் இருக்கு அப்பா.
அப்பவாவது வாங்கப்பா. நான் காத்திருக்கிறேன் அப்பா. இப்படிக்கு உங்கள் மகள்
செல்லமணி.

ஆசிரியரின் கண்களில் கண்ணீர். கடிதத்தைப் படித்ததும் அவளை வாரி அணைத்துக்


கொண்டாள் அந்த'' புது அம்மா ''ஆசிரியரின் மனம் மாறியது.

அ செல்லமணியின் அப்பா ஏன் இன்று அவள் குடும்பத்தோடு இல்லை? (1 பு)

ஆ செல்லமணி தன் அப்பாவிடம் எதிர்பார்ப்பது என்ன? (2 பு)

இ பெற்றோர்கள் பிரிந்து வாழ்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? ( 2 பு)

You might also like