You are on page 1of 11

தர மதிப்பீடு 2

தமிழ் மொழி தாள் 1


பெயர் : __________________________________________ ஆண்டு : 2
பாகம் 1
பிரிவு அ : மொழியணிகள்
கேள்விகள் : 1 – 10
(10 புள்ளிகள்)

1. மரபுத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.

அவசரக் குடுக்கை

A. ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்.


B. நல்லது கெட்டது
C. அதிகம் தெளிவாகுதல்
D. சண்டை போடுதல்

2. கோடிட்ட இடத்தில் சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டு பூர்த்தி செய்க.

தொலைக்காட்சியில் நகைச்சுவையைப் பார்த்த நானும் என் தம்பியும்


__________________________வெனச் சிரித்தோம்.

A. சலசல
B. கலகல
C. தரதர
D. கிலுகிலு

3. உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

மருத்துவர் : நம்மிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், நாம் நோயின்றி

உடல் நலத்தோடு வாழ்வதே நமக்கு கிடைத்த வரமாகும்.

சிவா : நன்றி ஐயா. உங்கள் அறிவுரைப்படி இனி சத்துள்ள


உணவுகளை உண்கிறேன்.
A. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
B. அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
C. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
D. சிக்கனம் சீரளிக்கும்.

4. திருக்குறளில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.

கண்ணுடையர் என்பவர் ____________________________ முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

A. கற்றவர்
B. கற்றோர்
C. கல்வி
D. கற்ற

5. இப்படம் குறிக்கும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

A. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.


B. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
C. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
D. ஐம்பொறி ஆட்சி கொள்.

6. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும்


நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.
A. எண்ணுவது உயர்வு
B. ஏறுபோல் நட
C. ஐம்பொறி ஆட்சிகொள்
D. ஈகை திறன்

7. படத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

A. சிறு துளி பெரு வெள்ளம்.


B. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
C. அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
D. ஒற்றுமை வலிமையாம்.

8. கோடிட்ட இடத்தில் சரியான இணைமொழியைக் கொண்டு நிறைவு செய்க.

குடும்ப தேவைகளுக்குப் பணம் சம்பாதிக்க அப்பா _____________________ அயராது உழைத்தார்.

A. அல்லும் பகலும்
B. தாயும் சேயும்
C. நன்மை தீமை
D. மேலும் கீழும்

9. கீழ்க்காணும் பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

அதிகம் தெளிவாகுதல்

A. அவசரக் குடுக்கை
B. தெள்ளத் தெளிதல்
C. முழு மூச்சு
D. ஓட்டை வாய்

10. சூழலுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு.

கல்வியில் சிறந்து விளங்கிய பவித்ரன், வெளிநாட்டிற்குச் சென்று பொருள்


ஈட்டினான்.

A. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.


B. நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
C. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
D. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

பாகம் 1
பிரிவு ஆ : இலக்கணம்
கேள்விகள் : 11 – 20
(10 புள்ளிகள்)

11. கீழ்க்காணும் வாக்கியங்களில் இறந்த கால வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. அவன் பந்து விளையாடுகிறான்.


B. பாலன் தன் நண்பனுடன் வெளியெ சென்றான்.
C. அக்கா அழகான ஓவியம் வரைகிறாள்.
D. தங்கை நாளை பள்ளிக்குச் செல்வாள்.
12. ஒருமை சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.

பம்பரம்

A. பம்பரங்கள்
B. பம்பரம்கள்
C. பம்பரத்தில்
D. பம்பரமா

13. உணர்ச்சி வாக்கியத்தைத் தேர்நதெ


் டுக்கவும்.

A. மீரா அம்மாவுடன் வெளியே சென்றாள்.


B. முகிலனின் வீடு எங்கே உள்ளது?
C. ஐயோ! அங்கே ஒரு பெரிய உருவம் தெரிகிறதே!
D. உணவு சுவையாக உள்ளது.

14. கோடிட்ட இடத்தில் சரியான வினைமுற்று சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


ராதா சிறப்பாக நடனம் __________________.
A. செய்தாள்
B. ஆடினாள்
C. பாடினாள்
D. நடந்தாள்

15. கீழ்க்காணும் வாக்கியத்தில் முன்னிலையைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

உங்கள் இல்லத்திற்கு வர உள்ளோம்.

A. உள்ளோம்
B. இல்லத்திற்கு
C. உங்கள்
D. வர

16. பன்மை சொல்லுக்கு ஏற்ற ஒருமை சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

கற்கள்
A. கல்
B. கல்கள்
C. கால்
D. கள்

17. கீழ்க்காணும் வாக்கியத்தை நிகழ்கால வாக்கியமாக மாற்றவும்.


அக்கா பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
A. அக்கா பல்கலைக்கழகத்தில் பயில்வேன்.
B. அக்கா பல்கலைக்கழகத்தில் பயில்கின்றார்.
C. அக்கா பல்கலைக்கழகத்தில் பயில்வார்.
D. அக்கா பல்கலைக்கழகத்தில் பயின்றனர்.

18. சரியான ‘ஓர்’ இலக்கண விதி கொண்ட விடையத் தெரிவு செய்க.

A. ஓர் அணிச்சல்
B. ஓர் படகு
C. ஓர் பந்து
D. ஓர் பொம்மை

19. சரியான ‘அது’ இலக்கண விதி கொண்ட விடையத் தெரிவு செய்க.

A. அது இல்லம்
B. அது ஓடம்
C. அது சிலை
D. அது எறும்பு

20. சரியான நிறுத்தக்குறியை இடுக.

பவித்ரன் எங்குச் சென்று பந்து விளையாடினான்

A. .
B. ?
C. ,
D. -

பாகம் 2
(30 புள்ளிகள்)
கேள்வி 21

அ. சரியான இரட்டிப்பு எழுத்துகளை எழுதி இணைத்திடுக.


1. ஏழு ச____ ____ ல்

2. கண்ணாடிச் உணவு

3. சிறந்த வ____ ____ ங்கள்

4. சத்து ____ ____ சி ____ ____ ம்

5. பள்ளிச் ம ____ ____ ன்

(5 புள்ளிகள்)

கேள்வி 22

ஆ. கீழ்க்காணும் விளம்பரத்தை வாசித்து கேள்விகளுக்கு விடை எழுதுக.

தமிழ்மொழி கழக ஏற்பாட்டில்

கட்டு பரிசுகள்
தலைப்புகள் முதல் பரிசு : 1000 ரிங்கிட்
1. நீரின் அவசியம் இரண்டாம் பரிசு : 500 ரிங்கிட்
2. நான் ஒரு பொம்மை
மூன்றாம் பரிசு : 300 ரிங்கிட்

அனுப்ப வேண்டிய இறுதி நாள் 25.11.2018

1. இவ்விளம்பரம் எதைப் பற்றியது?

_________________________________________________________________________

________________________________________________________________________

(2 புள்ளிகள்)
2. மாணவர்கள் என்ன தலைப்புகளில் கட்டுரை எழுத வேண்டும்?

i_______________________________________________________________________

ii________________________________________________________________________

(2 புள்ளிகள்)

3. மூன்றாம் நிலை வெற்றியாளர் பெறும் பரிசுத் தொகை எவ்வளவு?

_________________________________________________________________________

_________________________________________________________________________

(2 புள்ளிகள்)

கேள்வி 23

கீழ்க்காணும் படத்தைத் துணையாகக் கொண்டு கேள்விகளுக்கு விடை எழுதுக.

1. படத்தில் நீ என்ன காண்கிறாய்?


______________________________________________________________________

______________________________________________________________________

(2 புள்ளிகள்)
2. சிறுவன் ஏன் அழுகிறான்?

______________________________________________________________________

______________________________________________________________________
(2 புள்ளிகள்)
3. சிறுவன் எந்த வகை உணவை அதிகம் உண்ண வேண்டும்?

i __________________________________________________________

ii __________________________________________________________

(2 புள்ளிகள்)

கேள்வி 24

கீழ்க்காணும் பனுவலை வாசித்து கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

முல்லை இரண்டாம் ஆண்டில் பயில்கிறாள். அவளின் மகிழி சதுரங்கம் விளையாடுவது. அவளின்


திறமையைக் கண்டு பெற்றோர் வியந்தனர். அவள் தினசரி காலையில் உடற்பயிற்சி செய்வாள். அவள்
பள்ளிப் பாடத்திலும் சிறந்த புள்ளிகளைப் பெறுவாள். அவளைச் சுறுசுறுப்பான மாணவி என்று
ஆசிரியர் தினமும் பாராட்டுவார். அவள் இழைத்தல் இகழ்ச்சி என்பதற்கேற்ப சோர்வில்லாமல்
துடிப்புடன் இருப்பாள். அவள் நண்பர்களுக்குப் பாடங்களில் உதவி செய்வாள். அவள் வசதி குறைந்த
நண்பர்களுக்குப் பொருள்கள் கொடுத்து உதவுவாள்.

1. முல்லையின் மகிழி என்ன?

______________________________________________________________________
_____________________________________________________________________
(2 புள்ளிகள்)
2. அவள் தினசரி காலையில் என்ன செய்வாள்?

____________________________________________________________________________
____________________________________________________________________________
(2 புள்ளிகள்)
3. முல்லையின் சிறந்த பண்புகள் என்ன?
____________________________________________________________________________
____________________________________________________________________________
(3 புள்ளிகள்)

கேள்வி 25

கீழ்க்காணும் பனுவலை வாசித்து கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

உறியடித்தல் இந்துக்களின் பாரம்பரிய விளையாட்டு. இரு நீண்ட பிரம்புகளை ஊன்றுவார்கள்.


நடுவில் மண் பானை தொங்கவிடப்பட்டிருக்கும். பானையில் ஒரு கயிறும் கட்டப்பட்டிருக்கும். கண்கள்
கட்டப்பட்ட ஒருவர் பானையை அடித்து உடைக்க முடியாதபடி மற்றவர் தடுப்பது வழக்கம். ஆனாலும்,
பலமுறை முயற்சி செய்து அச்சமின்றி உறியை அடிப்பதை இன்றும் காணலாம்.

1. உறியடித்தல் எந்த மதத்தினரின் பாரம்பரிய விளையாட்டு?

______________________________________________________________________
______________________________________________________________________
(2 புள்ளிகள்)
2. மண் பானை எங்கு தொங்கவிடப்பட்டிருக்கும்?

____________________________________________________________________________
____________________________________________________________________________
(2 புள்ளிகள்)
3. உறியடித்தல் விளையாட்டு எங்கு நிகழ்வதைக் காணலாம்?
____________________________________________________________________________
____________________________________________________________________________

(2 புள்ளிகள்)
கேள்வித்தாள் முற்றும்.

You might also like