You are on page 1of 9

பாகம் A

பிரிவு அ : செய்யுள் மொழியணிகள்

(10 புள்ளிகள்)

1. கீழ்க்காணும் திருக்குறளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளென்ன? .

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை


இகழ்வாரை நோவது

A தம்மால் முடியாமல்
B தம்மை இகழ்கின்றவரை
C தமக்குப் புகழ் உண்டாகுமாறு
D தம்மை தாமே நொந்து கொள்ளாமல்
2. கீழ்க்காணும் கூற்றுக்கான உவமைத் தொடறைத் தெரிவு செய்க.

கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக


இருக்கும்போதே மேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.

A சிறு துரும்பும் பல்குத்த உதவும்

B குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

C காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

D சித்திரமும் கைப்பழக்கம் செந்தமுழும் நாப்பழக்கம்

3. காலியிடத்திற்கு ஏற்ற மரபுத் தொடரைத் தெரிவு செய்க.

வாணி : இன்றையப் பேச்சுப் போட்டியில் ரகுவரன் வெற்றி பெறுவானா?

வனஜா : அப்படித்தான் அவன் பெரிய ___________க்


கொண்டிருக்கிறான். எனக்குத் தெரிந்து அதற்கு வாய்ப்பே இல்லை!

A கப்க்கணம் கட்டி

B கடுக்காய் கொடுத்து

1
C மனக்கோட்டை கட்டி

D தொன்றுதொட்டு நினைத்து

4. செய்யுளைப் பூர்த்தி செய்க.

எழுத்தறி வித்தவன் _______________________________.

A கடவுளாகும்

B இறைவனாகும்

C தெய்வமாகும்

D துணைவனாகும்

5. கீழ்கண்ட உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடியைத் தேர்வு

செய்க.

நண்பா, நீ பெறுகின்ற வருமானம் அனைத்தும் இவ்வாறு


செலவு செய்தால் துன்பப்பட நேரிடும். கிடைக்கின்ற
வருமானத்தைக் கொஞ்சம் சேமிக்கக் கற்றுக் கொள்.
இல்லையேல் பிற்ரால் இகழப்படுவாய்.

A ஆனமுதலில் அதிகஞ் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப்

B நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

C மாசில் வீணையும் மாலை மதியமும்

D எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

6. சூழலுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

இளமை காலத்தில் கற்கும் கல்வி, நம் மனத்தில்


பதிந்துவிடும். அது என்றும் அழியாது.

A கண்ணினைக் காக்கும் இமைபோல

2
B சிலை மேல் எழுத்துப் போல

C காட்டுத் தீ போல

D குன்றின் மேலிட்ட விளக்கு போல

7. புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் இறந்த செய்தி

மக்களிடையே _________________ பரவியது.

A எலியும் பூனையும் போல

B சிலை மேல் எழுத்துப் போல

C காட்டுத் தீ போல

D லானலில் இட்ட மெழுகு போல

8. ___________________ தூங்குவார்கள். வானொலிச் சத்தத்தைக் கொஞ்சம்

குறைத்து வை.

A சுற்றும் முற்றும்

B அங்கும் இங்கும்

C அன்றும் இன்றும்

D அண்டை அயலார்

9. சரியான மரபுத் தொடரையும் அதன் பொருளையும் கொண்டிருக்கும்

இணையைத் தெரிவு செய்க.

A மனக்கோட்டை – கோட்டை கட்டுதல்

B கங்கணம் கட்டுதல் – உறுதி பூணுதல்

C கரி பூசுதல் – மதிப்பைக் கொடுத்தல்

D கரைத்துக் குடித்தல் – ஒன்றனைப் பற்றி ஓரளவு அறிந்திருத்தல்

3
10. கீழே கொடுக்கப்பட்ட உலகநீதியின் பொருளைத் தெரிவு செய்க

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

A பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறக்கக் கூடாது.

B ஒரு நாளும் படிக்காமல் இருக்கக் கூடாது.

C மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

D தீயவர்களோடு நட்பு கொள்ளக் கூடாது.

பிரிவு ஆ : இலக்கணம்

(10 புள்ளிகள்)

11. வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும்?

A. 5 B. 6 C. 7 D. 8

12. வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள

சொல்லைத் தெரிவு செய்க.

A புனிதா கடைக்குச் சென்றாள்.

B திருமதி. பானு மீன் கறி சமைத்தார்.

C மீனவன் வலையை வீசினான்.

D மேசை தச்சனால் செய்யப்பட்டது.

13. கீதாவின் வீணை உடைந்து விட்டது. __________________ அவள்

அதனைப் பழுது பார்க்க எடுத்துச் சென்றாள்.

A. ஆனால் B. ஆகவே C. எனினும் D. இருப்பினும்

14. கபிலன் சிறந்த கவிதைகள் இயற்றினான். _________________ அவனுக்கு

4
விருது வழங்கப்பட்டது.

A. எனவே B. ஆகவே C. எனினும் D. இருப்பினும்

15. வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் ஏற்றுள்ள வேற்றுமை உருபைத்

தெரிவு செய்க.

மேசை தச்சனால் செய்யப்பட்டது.

A முதலாம் வேற்றுமை

B இரண்டாம் வேற்றுமை

C மூன்றாம் வேற்றுமை

D நான்காம் வேற்றுமை

16.

மேலே உள்ள படம் குறிக்கும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

A. மட மட B. மினு மினு C. கிலு கிலு D. தக தக

17. கீழ்க்காணும் எழுத்துகளைச் சேர்த்தால் உண்டாகும் சொல் எது?

உ + ட் + அ + ல்

A. உட்டல் B. உடல் C. உட்ல் D. உடடல்

18. இவற்றுள் அஃறிணைச் சொல் இல்லாத பட்டியல் எது?

A மன்னர், அமைச்சர், தளபதி, விகடகவி

B சிறுவன், சிறுமி, குழந்தை, பொம்மை

5
C படகோட்டி, ஓட்டுநர், வானூர்தி, விமானி

D முதலாளி, தொழிலுதவி, வியாபாரி, பணியாள்

19. சேர்த்தெழுதுக

பூ + ஆரம் = ______________

A. பூரம் B. பூவரம் C. பூவாரம் D. பூவ்வாரம்

20. பிரித்தெழுதுதல்

பூமாலை = __________ + _________

A. பூ + மாலை

B. பூமால் + லை

C. பூம் + மாலை

D. பூம் + ஆலை

பாகம் B

கேள்வி 21 : வாக்கியம் அமைத்தல்

6
(10 புள்ளிகள்)

படத்தில் காணப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. _____________________________________________________________________

_____________________________________________________________

2. _____________________________________________________________________

_____________________________________________________________

3. _____________________________________________________________________

_____________________________________________________________

4. _____________________________________________________________________

_____________________________________________________________

5. _____________________________________________________________________

_____________________________________________________________

கேள்வி 22 : கட்டுரை

கீழே உள்ள நட்புக் கடிதத்தில் விடுப்பட்ட சொற்களை நிறைவு செய்க.

10. ஜாலான் வீரா 2,


தாமான் வீரா,
_____________________,
பஹாங் டாருல் மகமூர்,

7
20.11.2021

____________________ கீர்த்தனாவுக்கு,
இவ்விடம் நான் நலம். நீ நலமுடன்
இருக்க____________________________________.
ஒரு மாதமாக உனக்கு உடல் நலமில்லை என்று உன் உறவினர் மூலம்
அறிந்தேன். சாலை விபத்தில் உன் கால் முறிந்து,
________________________________________________________________இருப்
பதாகக் கூறினார்கள். விவரம் அறிந்ததிலிருந்து எனக்கு வருத்தமாக இருக்கிறது.
கவலைப்பட வேண்டாம் கீர்த்தனா. இவ்வார
இறுதியில்_____________________________________________________________
____________________________ .
கீர்த்தனா, ________________________________________________ என்று நான்
ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். நீ தைரியமாக இரு. விரைவில் நீ பழையபடி
நடப்பாய். இப்பொழுது _____________________________________________,
சரியான முறையில் சிகிச்சை அளித்து உன்னை விரைவில் குணப்படுத்தி
விடுவார்கள். கலங்காதே! ஆண்டவன் உனக்கு அருள்புரிவான்.
கீர்த்தனா, ________________________________________________. என் தோழி
ஒருத்தி உன் பள்ளியில்தான் பயில்கிறாள். அவளை உனக்கு உதவி செய்யச்
சொல்கிறேன். ____________________________ உன் உடல் நலத்தைக் கெடுத்துக்
கொள்ளாதே! நல்ல ஓய்வு எடுத்துக் கொள்.
அடுத்த வாரம் உன்னை நேரில் சந்திக்கிறேன். நீ நலமுடன் இருக்கத்
__________________________ நிற்கும்.

இப்படிக்கு,
உன் அன்புத் தோழி, மு.
கலைவாணி

இறைவனை வேண்டுகிறேன் பள்ளிப் பாடங்களைப் பற்றி எண்ணி

வருந்தாதே

நீ விரைவில் குணமடைய வேண்டும் கட்டுப் போடப்பட்டு நீ மருத்துவமனையில்

8
அன்புத் தோழி 28600 மெந்தகாப்

என் குடும்பத்தினருடன் உன்னைப் மருத்துவத்துறை அதிநவீனமாக

பார்க்க வருகிறேன் வளர்ந்துள்ளதால்

விணே கவலைப்பட்டு திருவருள் துணை

You might also like