You are on page 1of 11

§¾º¢Â Ũ¸ ¾Á¢úôÀûÇ¢ ¦ƒñ¼Ã¡ð¼¡ À¢Ã¢× 3,

36009 ¦¾Öì þó¾¡ý,§Àáì


ÀûÇ¢º¡÷ ¾Ã «¨¼× / UJIAN INTERVENSI AWAL
தமிழ் மொÆ¢
¬ñÎ 6 / TAHUN 6
___________________________________________________________________________

1. கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி அல்ல?

A ஏறுபோல் நட B ஒப்புர வொழுகு C ஒளடதம் குறை D எண்ணுவது உயர்வு

2. கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான இரட்டைக்கிளவி யாது?


அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய அப்பா அம்மாவைக் கூப்பிட்டவாறே வீட்டின் கதவைத்
_____________________ எனத் தட்டினார்.

A பளீர்பளீர் B மடமட C தடதட

3. கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற திருக்குறளின் முதல் அடி யாது ?


எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில்
எது உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

A அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

B எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

C வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

D புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

4. குமரனின் கூற்றுக்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

மதியழகன் : பசியால் வாடும் முதியவரைச் சாப்பிடச் சொல்லலாமா?


குமரன் : அதெல்லாம் வேண்டாம்.

A அறம் செய விரும்பு B ஈவது விலக்கேல் C ஐய மிட்டுண்

5. கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான வெற்றிவேற்கையைத் தெரிவு செய்க.

எங்கள் குடும்பமும் எங்கள்


அத்தை,பெரியப்பாவின் குடும்பமும் சிறப்பாக
வாழ, பணக்காரரான என் சிற்றப்பாவே காரணம்.
A கல்விக் கழகு கடசற மொழிதல்

B எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

C பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

D செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்

6. கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

நாம் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே நமக்கு


வேண்டியதை நாம் சாதித்துக்கொள்ள வேண்டும்.

A விளையும் பயிர் முளையிலே தெரியும்

B காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

C அழுத பிள்ளை பால் குடிக்கும்.

7. கொடுக்கப்பட்டுள்ள கொன்றை வேந்தனில் கோடிடப்பட்ட சொல்லுக்குப் பொருந்தும்


சொல்லைத் தெரிவு செய்க.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

A திரை B பாசம் C அன்பு D செல்வம்

8.
பகைவன் உறவு கொண்டாலும் அவனை
நம்பக்கூடாது

மேற்காணும் விளக்கத்திற்கு ஏற்ற உலகநீதி யாது ?

A மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்

B மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்

C அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்


D நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

9. கீழ்க்கண்ட வாக்கியத்தில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருந்தும் சரியான


இணைமொழியைத் தெரிவு செய்க.

பல நாள்களாக நோய்வாய்ப்பட்டிருந்த
திரு.கணபதி_______________________காணப்பட்டார்.
A அங்கும் இங்கும் B எலும்பும் தோலுமாகக்

C தாயும் சேயும் D அல்லும் பகலும்

10. சரியான இணையைத் தெரிவு செய்க.

உலக நீதி பொருள்


A ஒருவரையும் பொல்லாங்கு யாரைப் பற்றியும் பொறாமை கொண்டு பேசக்
சொல்ல வேண்டாம். கூடாது.
B வஞ்சனைகள் செய்வாரோ தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல்
டிணங்க வேண்டாம். கூடாது.
C போகாத விடந்தனிலே போக இதுவரை செல்லாத இடங்களுக்குச் செல்லக்
வேண்டாம். கூடாது.
D போகவிட்டுப் புறஞ்சொல்லித் ஒருவரைப் போகவிட்டு அவரின் பெருமையைப்
திரிய வேண்டாம். பற்றிப் பேசக்கூடாது.
11. கீழ்க்காணும் எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க.

அ இ உ எ ஒ
A உயிர்மெய்க் குறில் எழுத்துகள்
B உயிர்மெய் நெடில் எழுத்துகள்
C உயிர்க்குறில் எழுத்துகள்
D உயிர்நெடில் எழுத்துகள்

12. கீழ்க்காணும் எழுத்தியல் இலக்கணத்தில் பிழையான எண்ணிக்கை கொண்ட வகையைத்


தெரிவு செய்க.
A மெய் எழுத்துகள் மொத்தம் - 18
B இடையின மெய்யெழுத்துகள் மொத்தம் - 6
C உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் - 206
D உயிர்நெடில் எழுத்துகள் மொத்தம் - 7

13. முன்னிலையைக் குறிக்கும் சொற்கள் யாவை?


A நீவிர், நான்
B நாம், அவர்கள்
C நீங்கள், நீவிர்
D யான், எங்கள்

14. சரியான விடையைத் தெரிவு செய்க


A மா + கொத்து = மாக்கொத்து
B பூ + சோலை = பூச்சோலை
C மெய் + அடி = மெய்யடி
D தீ + சட்டி = தீசட்டி
15. கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருந்தாத விடையைத் தெரிவு செய்க.

ரகுராம் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன்;________________ தனது முயற்சியால் தேசிய


அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் வெற்றி வாகை சூடினான்.

A ஏனெனில் B ஆயினும் C எனினும் D இருப்பினும்

16. வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் ஏற்றுள்ள வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.

மேகனா ஐந்தாம் ஆண்டு மாணவர்களை வரிசையாக பள்ளி மண்டபத்தில் அமரச்


சொன்னாள்.

A ஆறாம் வேற்றுமை B ஐந்தாம் வேற்றுமை


C இரண்டாம் வேற்றுமை D நான்காம் வேற்றுமை

17.கீழ்க்காணும் நேர்க்கூற்று வாக்கியத்தை அயற்கூற்று வாக்கியமாக மாற்றுக.

திருநாவுக்கரசர், “என் கடன் பணி செய்து கிடப்பது” என்றார்.


A திருநாவுக்கரசர் என் கடன் பணி செய்து கிடப்பது என்றார்.

B திருநாவுக்கரசர் என் கடன் பணி செய்து கிடப்பதாகக் கூறினார்.

C திருநாவுக்கரசர் தன் கடன் செய்து கிடப்பேன் என்று கூறினார்.

D திருநாவுக்கரசர் தன் கடன் செய்து கிடப்பதாகக் கூறினார்.

18. கீழ்க்காணும் செய்தி வாக்கியத்திற்குப் பொருத்தமான காலத்தைத் தெரிவு செய்க.

சிலாங்கூர் மாநிலத்தில் டிங்கிக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் இருவர் பலியாயினர்.

A எதிர்காலம் B நிகழ்காலம் C இறந்தகாலம்

19. கீழ்க்காண்பனவற்றுள் சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.

A ஒரு எலி B ஓர் காகம் C ஓர் கவிதை


D ஒரு நாய்க்குட்டி

20. கீழ்க்காண்பனவற்றுள் பலவின்பாலைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.


A மக்கள் B மீன் C மரங்கள்
D சிறுவர்கள்

[பாகம் B]
[30 புள்ளி]

கேள்வி 21
அ. கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் காணப்படும் இலக்கணப் பிழைகளை அடையாளங்கண்டு
வட்டமிடுக.

1. நிவேதனும் வைத்தீஸ்வரனும் ஏறியில் மீன் பிடித்தனர்.


2. சிறுவர்கள் திடலில் காற்பந்து விலையாடினர்.
3. குழந்தைகள் நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்த்து இரசித்தன.
4. சோபன் மெசையின் மேல் புத்தகத்தை வைத்தான்.
ஆ. கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியணிகளை எழுதுக
1. நாம் வளர்ப்புப் பிராணிகளைக் கருணையின்றி வதைப்பது பெரிய குற்றமாகும்.
_________________________________________________
2. தன் ஒரே மகளை மருத்துவத் துறையில் படிக்க வைக்க வேண்டும் என்ற மருதனின்
எண்ணம் நிறை வேறியது.____________________________________________

கை கூடுதல் ஈவிரக்கம்

கரைத்துக் குடித்தல்
தட்டிக் கழித்தல்

கேள்வி 22 : பின்வரும் அழைப்பிதழை வாசித்துக் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி, லுனாஸ், கெடா


வெள்ளப் பேரிடர் நிதிக்காக உணவுச் சந்தை
வணக்கம். கெடா
பின்வருமாறு மாநில உள்ளது
நடைபெற வெள்ளப்எனத்
பேரிடர் நிதிக்காககொள்கிறோம்.
தெரிவித்துக் உணவுச் சந்தை

நாள் : 04 ஏப்ரல் 2020


: காலை மணி 8.00 முதல்
நேரம்
மாலை மணி 7.00 வரை
இடம் : பள்ளி வளாகம்
அனைவரும் தவறாது வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்
கொள்கிறோம்.
நன்றி,
அன்புடன்,
மாணவர் நலப் பொறுப்பாசிரியர்

1. இந்நிகழ்வு எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

(1 புள்ளி )
2. இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தவர் யார்?

(1 புள்ளி)
3. உணவுச் சந்தை வழி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அடையும் நன்மைகள் யாவை?
i) _________________________________________________________________________
ii) _______________________________________________________________________
(2 புள்ளி)

4. இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் எத்தகைய குணம் படைத்தவர்களாக இருப்பர்?

________________________________________________________________________________
( 2 புள்ளி)
கேள்வி 23 : பின்வரும் அழைப்பிதழை வாசித்துக் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

1. இப்படம் எதைக் காட்டுகிறது?

__________________________________________________________________ (2 புள்ளி)

2. மேற்காணும் சூழலைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இரண்டனை எழுதுக

i)_______________________________________________________________

ii)_______________________________________________________________ (2 புள்ளி)

3. மேற்காணும் சூழலைத் தவிர்த்து உடலை நலமாக வைத்துக்கொள்ள மேற்கொள்ள

வேண்டிய நடவடிக்கைகள் இரண்டினைக் குறிப்பிடுக


i) _______________________________________________________________________

ii) ________________________________________________________________________

கேள்வி 24: கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்குறிப்பை வாசித்துப் பின்வரும் வினாக்களுக்கு

விடை காண்க.

காலை மணி 9.30


என் நண்பர்களும் நானும் கோலாலும்பூர் அனைத்துலகக் கருத்தரங்க மண்டபத்தை
வந்தடைந்தோம். மண்டபம் பிரமாண்டமாக இருந்ததைப் பார்த்துப் பரவசமடைந்தோம்.
ஆசிரியர்கள் எங்களைக் குழுக்களாகப் பிரித்தனர்.

காலை மணி 9.45


அரங்கத்தில் ஆங்காங்கே மின்விளக்குகள் பளிச்சிட்டன. அனைத்துலக இந்தியப் பண்பாட்டுக்
கண்காட்சியைக் காண மக்கள் கூட்டம் அலை அலையென உள்ளே வந்த வண்ணம் இருந்தனர்.
நாங்கள் இந்தியப் பாரம்பரிய உடைகள் கைத்தறியில் நெய்யப்படும் முறைகளைக் கண்டு
களித்தோம்.

காலை மணி 10.15


சேலைகள் நேர்த்தியான முறையில் நெய்யப்படும் முறையை அறிந்த மனநிறைவில் அடுத்த
கட்டடத்திற்குச் சென்றோம். இந்தியர்களின் பண்டைக்காலக் கருவிகள், தளவாடங்களைக்
கண்டு மெய்சிலிர்த்துப் போனோம். இவற்றுள் அம்மி, ஆட்டுக்கல், உரல், அரைக்கல்
போன்றவையும் அடங்கும்.

காலை மணி 11.00


இந்திய இசைக் கருவிகள் கண்காட்சிக் கூடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கே ஒலித்துக்
கொண்டிருந்த இசை மிகவும் இனிமையாக இருந்தது. கஞ்சிரா, தம்புரா, யாழ், கிளுகிளுப்பை,
புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை எங்களின் மின்னியல் படக் கருவிகள் ஒளிப்பதிவு
செய்து கொண்டன.

நண்பகல் மணி 12.00


எங்களில் பலர் விரும்பிச் சென்ற இடம் இலவச மருதாணி இடும் கூடமாகும். இங்கே எங்கள்
கைகளில் கண்கவரும் வகையில் மயில், அன்னம், பூக்கள் ஆகிய வடிவங்களில் ஆன
மருதாணிகளை வரைந்தனர். அதனைக் கண்ணுற்ற எனது நண்பர்கள் ஒருவருக்கொருவர்
முண்டியடித்துக் கொண்டு மருதாணி இட்டுக் கொள்ள வந்தனர்.

பிற்பகல் மணி 12.45


அலங்காரப் பொருள்களையும் ஆபரணங்களையும் காட்சிக்கு வைத்திருக்கும் கூடத்தை
இறுதியாகச் சென்று பார்த்தோம். தங்கத்தாலும் வெள்ளியாலும் தயாரிக்கப்பட்ட ஆபரணங்கள்
பள பளவென மின்னிக் கொண்டிருந்தன. பண்டைக் கால ஆபரணங்களைக் காணும்போது
நமது முன்னோர்கள் கலைநுட்பத்தில் சிறந்து விளங்கியுள்ளனர் என்கிற உண்மை விளங்கியது.

அ. நாட்குறிப்பை எழுதியவரும் அவர்தம் நண்பர்களும் எந்த நிகழ்ச்சியில் கலந்து


கொண்டனர்?
______________________________________________________________ (1 புள்ளி)

ஆ. மாணவர் குழு சென்று கண்ட கண்காட்சிகள் இரண்டனைக் குறிப்பிடுக.

i) ____________________________________________________

ii) ___________________________________________________ (2 புள்ளி)

இ. பிரமாண்டம் என்ற சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


மிகப் பெரிய
மிகவும் அழகான
மிகவும் வித்தியாசமான
( 1 புள்ளி)
ஈ. இது போன்ற கண்காட்சிகள் நடத்தப்படுவதன் நோக்கம் என்ன?
______________________________________________________________

________________________________________________________________ (2 புள்ளி)

கேள்வி 25: பின்வரும் சிறுகதையை வாசித்துக் கேள்விகளுக்குப் பதில் அளித்திடுக.

தலை முடி கலைந்து, வியர்வையில் சட்டையெல்லாம் நனைந்து வகுப்பிற்குள் தாமதமாக


நுழைந்த கபிலனைப் பார்த்து அனல் பறக்கும் பார்வையை வீசினார் கவிதா டீச்சர்.

“ஆரம்பிச்சுட்டியா.....உன்னைத் திருத்தவே முடியாது...இன்னிக்கு என்ன கதை


சொல்லப் போற?”

ஆசிரியரின் அதட்டல் கேள்வி அவன் மனதை ரணமாக்கியது.

கடந்த மாதம் முழுவதும் தன் அம்மாவுக்கு உடல் நலமில்லாததால், வீட்டு


வேலைகளைச் செய்து விட்டு தாமதமாகவே பள்ளிக்கு வருவான் கபிலன். இதனால்
அவனுக்கு ‘லேட் மாணவன்’ என்ற பட்டப் பெயரையும் கொடுத்து விட்டனர் அவன் சக
நண்பர்கள்.

“இல்லீங்க டீச்சர்....” என இழுத்தான் கபிலன். “ உங்க அம்மாவுக்கு உடம்பு


முடியல...அவங்கள கவனிச்சுட்டு வர...அதே கதைதானே” கூறிவிட்டு முறைத்தார்
ஆசிரியர்.

ஆசிரியரின் கோபம் தலைக்கேற மற்ற மாணவர்கள் அனைவரும் வாயைத் திறக்காமல்


தங்கள் வேலைகளைச் செய்யத் தயாரானார்கள்.

“ டீச்சர், ரோட்டுல ஒரு பெரியவர் அடிப்பட்டுவிட்டார்..நான் ஆம்புலன்சை அழைச்சி


சொல்லிட்டு....அவங்க வீட்டுல பிள்ளைங்க வர வரைக்கும் காத்திருந்தேன் டீச்சர்... அதான்
லேட்டாயிடுச்சு”, அவன் கண்கள் கலங்கின.
“ உன்னை லேட் மாணவன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு....பொய்யெல்லாம் நல்லா
ஜோடிச்சு சொல்லிட்டியா” கையை நீட்டு என்றவர் அவன் கையில் இரண்டு வைப்பதற்கும்
கைப்பேசி அலறுவதற்கும் சரியாக இருந்தது.

“ அக்கா, நம்ப அப்பா அடிப்பட்டுட்டார்...நல்ல வேளை ஒரு சின்னப் பையன்


ஆம்புலன்சுக்குத் தகவல் சொல்லிட்டு நான் வர வரைக்கும் காத்திருந்தான்”

டீச்சரின் கைப்பேசி தானாகவே நழுவி கீழே விழுந்தது……

1. வகுப்பறைக்குள் நுழைந்த கபிலனின் நிலை எவ்வாறு காணப்பட்டது?

___________________________________________________________________(1 புள்ளி)

2. கபிலன் தினமும் ஏன் தாமதமாகப் பள்ளிக்கு வருகிறான்?

____________________________________________________________________(1 புள்ளி)

3. கபிலனின் பண்புநலன்கள் இரண்டனைக் குறிப்பிடுக.

i)_________________________________________________________

ii)__________________________________________________________ (2 புள்ளி)

3. “டீச்சரின் கைப்பேசி தானாகவே நழுவி கீழே விழுந்தது”


இக்கூற்று எதனை உணர்த்துகிறது?
______________________________________________________________________________
____________________________________________________________________________
(2 புள்ளி)
[6 புள்ளி]

தயாரித்தவர்: சரிப்பார்த்தவர்: உறுதி செய்தவர்:

…………………….. ................................. .....................................


திருமதி ரேணுகா திருமதி லோ.தேன்கனி
( பாட ஆசிரியர்)

You might also like