You are on page 1of 8

பிரிவு A - செய்யுளும் மொழியணியும்

( 15 புள்ளிகள்)

கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான மொழியணிகளைத் தெரிவு செய்க.

1. தன் குடும்ப நலனுக்காக __________________ ஆக உழைத்த பரமன் தற்பொழுது

உடல்நலமின்றி இருக்கிறார்.
A இரவு பகல் C தங்கு தடை
B குற்றம் குறை D ஆற அமர

2. விமலாவின் திருமணத்திற்கு _______________________ கள் திரளாக வந்திருந்தனர்.

A உற்றார் உறவினர் C தங்கு தடை
B குற்றம் குறை D ஆற அமர

குற்றம் குறை
3. மேற்காணும் இணைமொழிக்குப் பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க
A தவறும் குறையும் C நிதானமாக
B வசதியுடன் D ஓய்வில்லாமல்

4. வீட்டில் ___________________________________ சண்டையிட்டுக் கொள்ளும் ரவியும்

அவனின் தம்பியும் வெளியில் செல்லும் போது அமைதியாகவே இருப்பார்கள்.
A ஒளியைக் கண்ட இருள் போல
B கீரியும் பாம்பும் போல
C கருடணைக் கண்ட பாம்பு போல
D கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல

5. மேற்காணும் உவமைத்தொடருக்குப் பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க.

A செய்வதறியாது தவித்தல் C துன்பம் நீங்குதல்
B பகைமையுடன் இருத்தல் D பய உணர்வு

6. சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் காவல் அதிகாரியைக் கண்டதும்

_____________________ பதுங்கினர்.
A ஒளியைக் கண்ட இருள் போல
B கீரியும் பாம்பும் போல
C கருடணைக் கண்ட பாம்பு போல
D கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல

கபிலன் அருகிலுள்ள கோவிலுக்கு ___________

சென்று திரும்பினார்
7. மேற்காணும் வாக்கியத்தில் விடுபட்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
1
A இடைவிடாமல் C இரண்டெட்டில்
B பற்ற வைத்தல் D குரங்குப்பிடி

அ. குரங்குப்பிடி - பிடிவாதம்
ஆ. பற்ற வைத்தல் - விரைவில்
இ. இடைவிடாமல் - பகை மூட்டுதல்
ஈ. கை தவறுதல் - தொடர்ந்து

8. மேற்காணும் மரபுத்தொடர்களில் சரியான இணையைத் தெரிவு செய்க.

A அ C ஆ
B இ D ஈ

9. _________________ பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது.

A இடைவிடாமல் C இரண்டெட்டில்
B பற்ற வைத்தல் D குரங்குப்பிடி

கேள்விகள் 10 - 11

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து
10. மேற்காணும் திருக்குறளுக்கான பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க.
A எண்ணுவதைப் போல் நடக்க வேண்டும்
B எண்களை எண்ண வேண்டும்
C எண்ணுவதையெல்லாம் உயர்வாகவே எண்ண வேண்டும்.
D உயர்வாக நினைத்தல் கூடது

11. மேற்காணும் திருக்குறளில் உள்ள ‘உயர்வுள்ளல்’ என்ற சொல்லின் பொருள் யாது?

A தாழ்வான எண்ணம் C சிறப்பான எண்ணம்
B உயர்வான எண்ணம் D மகிழ்ச்சியான எண்ணம்

கேள்விகள் 12 - 13

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்
12. மேற்காணும் திருக்குறளுக்கான பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க
A செவியினால் நல்லது கெட்டதைக் கேட்க வேண்டும்
B வாயால் அதிகம் பேசி சுவையை உணர வேண்டும்
C வாயால் பேசி கேள்வி ஞானம் பெற வேண்டும்
D வாயால் அறியும் நாக்கின் சுவையை உணர்வதைவிட கேள்வியாகிய அறிவுச் சுவையை
உணர்வதே சிறப்பாகும்

2
13. மேற்காணும் திருக்குறளில் உள்ள “அவியினும்” என்ற சொல்லின் பொருள் யாது?
A வாழ்வினும் C நடப்பினும்
B இறப்பினும் D எண்ணினும்

கேள்விகள் 14 - 15

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு
- நாலடியார்
14. மேற்காணும் செய்யுளில் கருமையாக்கப்பட்ட அடியை விளக்கும் கருத்து யாது?
A கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற இடத்திலெல்லாம் சிறப்புப் பெற்று
B படிப்பில்லாதவர்கள் என்றாலும் படித்தவர்களுடன் சேர்ந்து பழகினால்
C வாயால் பேசி கேள்வி ஞானம் பெற வேண்டி
D பண்பில் சிறந்த பெரியோரிடம் கொண்ட நட்பு வளர்பிறை போல ஒவ்வொரு நாளும்

15. மேற்காணும் செய்யுளில் கோடிடப்பட்டுள்ள “சேர்ந்தொழுகின்” என்ற சொல்லின் பொருள்

யாது?
A சேர்ந்து பழகினால் C புது மண் பாண்டம்
B வாய்க்கப் பெறும் D பெரியோர்

பிரிவு B - இலக்கணம்
(30 புள்ளிகள்)

கீழ்க்காணும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்திடுக.

11. வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?

______________________________________________________________ [1 புள்ளி]

நேற்று நீ எங்குச் சென்றிருந்தாய்?

12. மேற்காணும் வாக்கியத்தில் காணப்படும் வினா சொல்லையும் வினா எழுத்தையும்
அடையாளம் கண்டு எழுதுக.
அ) வினா சொல் - ___________________________________
ஆ) வினா எழுத்து - ___________________________________
[2 புள்ளி]
ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்து

13. மேற்காணும் விளக்கம் எதனைக் குறிக்கிறது?

________________________________________________________________ [1 புள்ளி]

14.
உங்களால் இந்தச் சமையல் குறிப்புகளைக்
கொண்டு சுவையாகச் சமைக்க முடியுமா?
3
மேற்காணும் வாக்கியத்தில் சுட்டெழுத்தைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
_______________________________________________________________ [1 புள்ளி]

தாய்மொழியைக் கைவரப் பெறுவதன்வழி அறிவையும்

திறமையையும் எளிதாகப் பெற முடியும்
15. மேற்காணும் வாக்கியத்தில் கருமையாக்கப்பட்ட சொல் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபின்
வகையை எழுதுக.
______________________________________________________________ [1 புள்ளி]

16. கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபின்

வகையை எழுதுக.

i) எனது நண்பன் கயல்விழியோடு பேசிக்கொண்டிருக்கிறான் - ___________________

ii) வாணியிடமிருந்து உண்மையை வரவழைக்க முடியாது - ___________________
iii) அப்பா மாலினிக்கு மிதிவண்டியைப் பரிசளித்தார் - ___________________
iv) மாணவர்கள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்தனர் - ___________________
[4 புள்ளி]

17. கீழ்க்காணும் வாக்கியங்களிலுள்ள பிழைகளை அடையாளங்கண்டு வட்டமிடுக.

அ) காலில் அடிப்பட்டதால் அரசி வழியால் துடித்தாள்.

ஆ) மீனவர்கள் கடலில் வளை வீசி மீன் பிடிப்பர்.
இ) மதம் பிடித்த கறி வாழை தோட்டத்தை நாசம் செய்தது.
ஈ) மரத்தில் மாங்கனிகள் கனிந்து காணப்பட்ட்து.
உ) கணத்த மழை பெய்ததால் ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்தது.
ஊ) கவிதா புத்தகங்களைப் படித்து தன்நை மேம்படுத்திக் கொண்டாள்.
எ) திரு ராமு வேலைக்கு காரில் வேகமாகச் சென்றாள்.
ஏ) மாடுகள் சாலையில் கூட்டமாக சென்றது.
[8 புள்ளி]

18. கீழ்க்காணும் சொற்களுக்குப் பொருள் விளங்க வாக்கியம் அமைத்திடுக.

அ) வேலை
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
ஆ) வேளை
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
இ) இரை
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
ஈ) இறை
4
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
உ) மலை
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
ஊ) மழை
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
[12 புள்ளி]

பிரிவு C - பல்வகைக் கருத்துணர்தல்

(15 புள்ளிகள்)

19. நீரை விரையம் செய்வதால் ஏற்படும் இரண்டு விளைவுகளை எழுதுக.

_________________________________________________________________________________
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
[2 புள்ளி]

மருத்துவர் : உங்கள் தந்தையின் உடல்நிலை பற்றித் தனியாகப்

பேச வேண்டும்.
மகன் : தனியாகப் பேசுவதற்கு நான் எதற்கு டாக்டர்.
20. இந்நகைச்சுவை துணுக்கில் மருத்துவர்
சொந்தமாகப் பேசிக்கொள்ள
கூறவந்த வேண்டியதுதானே!
கருத்து யாது?
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
[2 புள்ளி]

21. கீழ்க்காணும் படம் உணர்த்தும் கருத்து யாது?

5
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
[2 புள்ளி]

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தோன்றிய ஊர் எட்டயபுரம். இளமையிலேயே

கவிபாடும் ஆற்றலைக் கைவரப் பெற்றவர். பாட்டுத்திறத்தால் இவ்வையத்தைப்
பாலித்திடச் செய்தவர். நாட்டு விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த கவிச் சிங்கம்.
இந்நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர். நீடு துயில் நீக்கப் பாடிவந்த முழுநிலவு.
இவர்தம் படைப்புகள் பல. குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு
போன்றவை தமிழர் தம் உள்ளங்களை ஆட்டிப்படைத்தவை. கவிதை, கதை, கட்டுரை,
22. பாரதியாரின்
ஆராய்ச்சிமூன்று சிறப்புகளை
முதலிய எழுதுக.தொண்டு புரிந்தவர்.
பல துறைகளிலும்
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
[3 புள்ளி]

23. மேற்காணும் படத்தின் மூலம் நீ உணரும்

கருத்தை எழுதுக.

_________________________________________________________________________________
_________________________________________________________________________________
6
_________________________________________________________________________________
[2 புள்ளி]

24. கீழ்க்காணும் சிறுகதையை வாசித்துத் தொடர்ந்து வரும் கேள்விகளுக்கு விடை எழுதுக.

ஒரு புத்த ஆலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது
ஆலயம் அந்தப் பகுதியிலேயே மதிப்பு பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து
பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. ஆலயத்தின்
உள்ளேயே பிக்குகள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுக்
கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு
குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார். அந்தக் குருவும் சற்று நேரம்
ஆழ்ந்து யோசித்துவிட்டு, "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும்
அவரைக் கண்டு கொள்ளவில்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட தலைவர் வியப்புடன் ஆலயத்திற்குத் திரும்ப வந்து, அங்கே இருந்த புத்த
பிக்குகளுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்திலிருந்து
சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக்கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும்
பணிவாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின்
சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது!

அ) மேற்காணும் கதையில் கருமையாக்கப்பட்டிருக்கும் “கணத்திலிருந்து” எனும் சொல்லின் பொருள்

யாது? [1 புள்ளி]
____________________________________________________________________________

ஆ) இக்கதையில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் படிப்பினைகளை எழுதுக. [3 புள்ளி]

_________________________________________________________________________________
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
_________________________________________________________________________________

பிரிவு D - கருத்துரைத்தல்
(10 புள்ளிகள்)

23. கீழ்க்காணும் விளக்கப்படம் உணர்த்தும் விவரங்களைக் கண்டறிந்து 5 வாக்கியங்கள்

எழுதுக.

7
1.________________________________________________________________________________
_________________________________________________________________________________
2.________________________________________________________________________________
_________________________________________________________________________________
3.________________________________________________________________________________
_________________________________________________________________________________
4.________________________________________________________________________________
_________________________________________________________________________________
5.________________________________________________________________________________
_________________________________________________________________________________
[10 புள்ளி]
பிரிவு E - படைப்பாக்கம்
(30 புள்ளிகள்)

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றனைத் தேர்ந்தெடுத்து 140 சொற்களில் ஒரு

கட்டுரை எழுதிடுக.

அ) இணையம்
இத்தலைப்பில் கருத்து விளக்க கட்டுரை ஒன்றனை எழுதுக.

ஆ) திறன்பேசியால் ஏற்படும் விளைவுகள்

இத்தலைப்பில் விவாதக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

KERTAS SOALAN TAMAT

______________________________________________________________________

You might also like