You are on page 1of 11

SEKOLAH MENENGAH KEBANGSAAN TUN PERAK

UJIAN SELARAS 2, 2017

மாதாந்திரச் சோதனை 2, 2017

BAHASA TAMIL TINGKATAN 1

தமிழ்மொழி படிவம் 1

UJIAN BERTULIS / எழுத்துத் தேர்வு

1 JAM/ 1 மணி

JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAHU

அனுமதி இல்லாமல் இவ்வினாத்தாளைத் திறக்காதே.

Nama pelajar/ பெயர் : _____________________________

Tingkatan/ வகுப்பு :______________________________

1. Kertas soalan ini mengandungi dua bahagian,

இவ்வினாத்தாள் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

2. Jawab semua soalan.

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

3. Jawapan anda hendaklah ditulis dalam ruangan jawapan yang disediakan dalam kertas
soalan ini.
இவ்வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் கேள்விகளுக்கு

விடையளிக்கவும்.

Bahagia Markah penuh Markah diperolehi

1
n மொத்த புள்ளிகள் பெற்ற புள்ளிகள்
பிரிவு
அ 20
ஆ 25
மொத் 45
தம்
பிரிவு அ : இலக்கணமும் மொழியணியும்

(20 புள்ளிகள்)

1. கீ ழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் காணும் சுட்டெழுத்துகளின்

வகையைக் குறிப்பிடுக.

இப்பந்து

அவள்

(2 புள்ளி)

2. சேர்த்தெழுதுக.

வாழை + இலை

_____________________________________________________________________

(1 புள்ளி)

3. அ) கொடுக்கப்பட்ட வாக்கியங்களிலுள்ள பிழைகளை

அடையாளங்கண்டு அவற்றுக்கு வட்டமிட்டுக் காட்டுக.

I. அத்துணை பெரிய மரத்தில் பறவைகள் கூடு கட்டி

வாழ்ந்தன.

II. பொங்கல் ஓர் சிறப்பான பெருநாள் ஆகும்.

III. வளர்மதி தன் தோழியைக் கண்டு புன்னகைத்தான்.

(3 புள்ளி)

2
ஆ) கீ ழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் காணும் எழுவாயை

அடையாளங் கண்டு எழுதுக.

குமரன் தீபாவளிக்குப் புத்தாடை அணிந்தான்.

_____________________________________________________________________

(2 புள்ளி)

இ) குன்றாவினை வாக்கியம் ஒன்றனை எழுதுக.

_____________________________________________________________________

(3 புள்ளி)

4. அ) பொருத்தமான மொழியணிகளின் கீ ழ்க் கோடிடுக.

I. நம் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள நாம் பிறரை எதிர்பார்த்து

வாழ்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், (தன் கையே

தனக்கு உதவி/ ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்).

II. மோகன் பணக்காரராக இருந்தாலும் அனைவரிடமும் (தங்கு

தடை/ உயர்வு தாழ்வு) இன்றி பழகுவார்.

III. வான்மதி இராணியுடன் (வெட்டிப் பேச்சு/ ஏட்டிக்குப் போட்டி)

பேசி நேரத்தைப் பயனற்ற வழியில் செலவழித்தாள்.

IV. இந்தோனேசியாவை நிலநடுக்கம் தாக்கிய போது அங்குள்ள பல

கட்டடங்கள் (கிடு கிடு/ வெட வெட) வென ஆட்டங்கண்டது.

V. தயாரிப்பாளர் எழுதித் தந்த வசனத்தை மனனம் செய்த அறிமுக

நடிகை (வெட வெட/ கட கட) வென ஒப்புவித்தாள்.

(5 புள்ளி)

ஆ) கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்கு மிகப் பொருத்தமான

பொருளைத் தெரிவு செய்க.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்று

3 ள்
மிகைநாடி மிக்க கொளல். (504)
A. ஒருவரின் குணநலன்களை ஆராய்ந்து எத்தகையோர் எனத்

தீர்மானம் செய்யலாம்.

B. ஒருவரின் குணநலன்களை ஆராய்ந்து பின் அவருடன் பழக

வேண்டும்.

C. ஒருவரின் குணநலன்கள் அவர் எத்தகையோர் எனத்

தீர்மானம் செய்கிறது.

(2 புள்ளி)

இ) கிழே கொடுக்கப்பட்டுள்ள செய்யுளின் அடியை நிறைவு செய்க.

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

______________________________________________

______________________________________________

(2 புள்ளி)

பிரிவு ஆ: கருத்துணர்தல்

(25 புள்ளிகள்)

5. பின்வரும் கவிதையை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாவுக்கு விடையளிக்கவும்.

ரப்பரும் ஈயமும் விளைத்திடுவோம்

நாட்டுக்கு உண்மையாய் உழைத்திடுவோம்
எப்புவியோரையும் அழைத்திடுவோம்
ஏற்றமாய் வாழ்வினிலே திளைத்திடுவோம்

தேசிய மொழியினைக் கற்றிடுவோம்

திருந்திய வாழ்வினைப் பெற்றிடுவோம்

நேசமாய் இணைந்துகை தட்டிடுவோம்

4
நிலமதிர் முரசமும் கொட்டிடுவோம்.

- சி. வேலுச்சாமி
மேற்காணும் கவிதையின் கருப்பொருள் என்ன?

A. மொழிப்பற்று
B. நாட்டுப்பற்று
C. இன ஒற்றுமை
D. உழைப்பின் உயர்வு

(2 புள்ளி)

6. கீ ழ்க்காணும் அறிவிப்பை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாவுக்கு

விடை எழுதுக.

புகைமூட்டம்!
பள்ளி
விடுமுறை!

5
மேற்காணும் அறிவிப்பு உணர்த்தும் செய்தி யாது?

A. புகைமூட்டத்தினால் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்

கொண்டார்கள்.

B. புகைமூட்டத்தினால் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

C. புகைமூட்டத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

(2 புள்ளி)

7. கீ ழ்க்காணும் படம் உணர்த்தவரும் கருத்து யாது?

_____________________________________________________________________________

___________________________________________________________________________

(2 புள்ளி)

8. கீ ழ்க்காணும் சூழலில் புத்தகம் கூறவரும் அறிவுரை யாது?

நானும்
இலவச
ம்
தான்!

6
இலவச புத்தகம் இலவச
இணையம்

____________________________________________________________________________

____________________________________________________________________________

(2 புள்ளி)

9. கீ ழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியை வாசித்து, டாக்டர் அப்துல்

கலாமின் சிந்தனையை ஒட்டி இரண்டு கருத்துகளை எழுதுக.

இந்திய நாட்டின் அறிவியல் மேதை. உலகிற்குத் தமிழனின் பெருமையை நிலைநாட்டிய சிந்தனைச்

சிற்பி. இளைஞர்களைக் கனவு காணச் செய்தவர். கனவு மெய்பப் ட வேண்டுமென்ற பாரதியின்
வரிகளுக்கு உயிரோவியம் தந்தவர். திருக்குறளின் பொருளை மனதில் கொண்டு செயல்பட்ட
திருக்குறள் செம்மல். ஒரு நாட்டின் முதுகெலும்பு இளைஞர்களே என்று இளைய சமுதாயத்தைத்
தட்டி எழுப்பியவர்.

7
_____________________________________________________________________________

_____________________________________________________________________________

__________________________________________________________________________

(2 புள்ளி)

10. உசைன் போல்டின் சாதனைகள் யாவை?

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீடட

் ர் தொடர் ஓட்டத்தில் உசைன் போல்ட் மீண்டும் தங்கப்
பதக்கத்தை வென்றார். உசைன் போல்ட்டிற்கு இது 9 ஆவது ஒலிம்பிக் தங்கப் பதக்கம் ஆகும்.
இதன்வழி ஒலிம்பிக் வரலாற்றில் ஓர் அழிவிலா முத்திரைப் புகழுடன், ஒலிம்பிக் நாயகனாக
உசைன் போல்ட் என்றென்றும் போற்றப்படுகிறார். உலகெங்கிலும் உசைன் போல்டடை
் ப் போல
கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற ஓட்டக்காரர்கள் இதுவரை யாருமில்லை.

(வணக்கம் மலேசியா, எடுத்தாளப்பட்டது)

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

__________________________________________________________________________

(2 புள்ளி)

8
11. வாழை மனிதனுக்கு எவ்வாறு உதவுகிறது என்று எழுதுக?

நச்சுப்பாம்பால் தீண்டப்பட்டவர்கள் உடனே வாழைச்சாற்றை உட்கொண்டால் நஞ்சு முறிவடையும்.

தீக்காயங்களுக்கு இலக்கானவர்களின் உடலின் மீது வாழைச் சாற்றைப் பிழிந்து ஊற்றினால்
கொப்புளங்கள் அதிகம் தோன்றா வண்ணம் தடுக்கலாம். சாதரணமாக நமது வீடுகளில்
வளர்ந்திருக்கும் வாழை பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளது.

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

__________________________________________________________________________

(2 புள்ளி)

12. கீழ்க்காணும் உரைநடைப்பகுதியை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை

எழுதுக.
மாணவர்கள் தேர்வு பயிற்சி முகாம்களில் ஈடுபடுவதனால் தங்களுக்குள் மனத்தைரியமும்
தன்னம்பிக்கையும் பெறுவதற்கு ஏதுவாகும். தேர்வு எழுதுவதற்கு முன்னர் அவர்கள் உள்ளத்தே
நம்பிக்கையுறுவது அத்தியாவசியமாகும். இதனால், மாணவர்கள் எந்தவொரு கடினமான
பயிற்சிகளையும் தன்னம்பிக்கையோடு செய்ய முற்படுவர். தொடர்ந்து, தேர்வு காலங்களில் எந்த
மனக்கலக்கமுமில்லாமல், துணிச்சலோடு தேர்வை எதிர்கொள்வர்; வெற்றி பெறுவர். இத்தகைய
நம்பிக்கை முத்துகளை மாணவர்களின் அகத்தே விதைப்பதுதான் பயிற்சி முகாம்களின் முக்கிய
நோக்கமாகும்.
காலம் பொன்னானது என்பதற்கொப்ப, மாணவர்கள் தங்கள் நேரத்தைப் பகுத்தாய்ந்து
நல்வழியில் செலவிட வெண்டும். ஆனால், பெரும்பாலான மாணவர்களுக்குத் தங்கள் நேரத்தைப்
பகுத்துப் படிக்கவோ பயிற்சி செய்யவோ தெரிவதில்லை. இதனால், பாடத்தைப் படித்தும்
புரியாமல் காலத்தை விரயமாக்குகின்றர். மேலும், விருப்பமான பாடங்களைத் தெரிவு செய்து
அவற்றையே மீணடு
் ம் மீணடு
் ம் மீள்பார்வை செய்து மற்றவற்றைக் கோட்டை விடுகின்றனர்.
ஆகவே, இம்முகாம்களின் வாயிலாக மாணவர்களுக்கு ஏற்ற கால அட்டவணை, மீள்பார்வை
செய்யும் வழிமுறை போன்றவைத் தேர்ந்த நிபுணர்களால் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
இவ்வாறாக, தெளிவு பெற்ற மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த புள்ளிகளைப் பெறுவர் என
நம்பலாம்.

9
அ) பயிற்சி முகாம்களின் முக்கிய நோக்கம் என்ன?

A. தன்னம்பிக்கை விதைப்பது

B. தேர்வு காலங்களில் துணிச்சலை ஏற்படுத்துவது

C. நேரத்தை நல்வழியில் பயன்படுத்த வலியுறுத்துவது

(2 புள்ளி)

ஆ) i) நேரத்தை முறையாக பகுக்கத் தெரியாத மாணவர்கள் எதிர்நோக்கும்

பிரச்சனைகள் யாவை?

_____________________________________________________________________________

_________________________________________________________________________

(2 புள்ளி)

ii) 2 ஆம் பத்தி வலியுறுத்தும் கருத்து யாது?

_____________________________________________________________________________

___________________________________________________________________________

(3 புள்ளி)

இ) பயிற்சி முகாம்களில் பங்கெடுக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து

விளங்க முடியும் எனக் கூறப்படுகிறது. விளக்குக.

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_________________________________________________________________________

10
(4 புள்ளி)

11

You might also like