You are on page 1of 10

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி சிலியாவ் தோட்டம்,

71000 போர்ட்டிக்சன்.

தர மதிப்பீட்டு
தமிழ்மொழி
தாள் 2

பெயர் :______________________________
ஆண்டு :_________________

பிரிவு அ : மொழியணிகள்
1. கீழ்க்காணும் மூதுரையின் செய்யுளடியைச் சரியாக நிறைவு செய்க.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

A. தெய்வத்துள் வைக்கப் படும்

B. தோன்றலின் தோன்றாமை நன்று
C. தலையாலே தான்தருத லால்
D. தொட்டனைத் தூறும் மணற்கேணி

2. கீழ்க்காணும் திருக்குறளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளென்ன?

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்?

A. தம்மால் முடியாமல்
B. தம்மை இகழ்கின்றவரை
C. தமக்குப் புகழ் உண்டாக்குமாறு
D. தம்மை தாமே நொந்து கொள்ளாமல்

3. பின்வரும் பொருளைச் சரியாகக் கொண்டிருக்கும் பழமொழி யாது?

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே

வேண்டியதைத் சாதித்துக் கொள்ள வேண்டும்

A. சிறு துரும்பும் பல் குத்த உதவும்

B. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
C. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
D. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

4. காலியிடத்திற்கு ஏற்ற மரபுத் தொடரைத் தெரிவு செய்க.

வாணி : இன்றைய பேச்சுப் போட்டியில் ரகுவரன் வெற்றி பெறுவானா?

வனஜா : அப்படித்தான் அவன் பெரிய __________க் கொண்டிருக்கிறான்.
எனக்குத் தெரிந்து அதற்கு வாய்ப்பே இல்லை!
A. கங்கணம் கட்டி
B. கடுக்காய் கொடுத்து
C. மனக்கோட்டைக் கட்டி
D. தொன்று தொட்டு

5. கீழ்க்காணும் சூழலில் காலியிடத்திற்கு ஏற்ற இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.

கணவன் : ஏன் I _________________ இருக்கிறாய்? உனக்கு யார் மீது கோபம்?

மனைவி : பாத்திரங்களையெல்லாம் சுத்தப்படுத்தி ii _____________ வைத்தேன்.
அந்தப் பூனை அவற்றைக் கீழே தள்ளி அழுக்காகிவிட்டது.

A. i சரசரவென ii பளபளவென
B. i சரசரவென ii மளமளவென
C. i கடுகடுவென ii மளமளவென
D. i கடுகடுவென ii பளபளவென’

6. கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற இணைமொழி யாது?

அப்பா : _____________ இவன் இப்படித்தான்! தீர ஆலோசிக்காமல் அவசரப்பட்டு

முடிவெடுத்து விடுவான்.

அம்மா : சிறு வயதில்தான் அப்படியென்றால் ஆளான பிறகும் ஏன் இப்படி

இருக்கிறான்.

A. சுற்றும் முற்றும்
B. அல்லும் பகலும்
C. அங்கும் இங்கும்
D. அன்றும் இன்றும்

7. இவற்றுள் கல்வியின் மேன்மையைக் கூறும் குறட்பா எது?

A. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

B. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

C. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்

D. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

8. பின்வரும் சூழலுக்குப் பொருத்தமான உலகநீதி எது?

ஆதி : இத்துணை நாள் அவனுடன் நெருங்கிப் பழகிவிட்டு இப்போது ஏன் திடீரென

உறவை முறித்துக் கொண்டாய்?

சேது : அவன் கூடா நட்புக்கு ஆளாகியிருப்பதாக அறிகிறேன்.

A. நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்

B. நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

C. நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்

D. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

9. சரியான மரபுத் தொடரையும் அதன் பொருளையும் கொண்டிருக்கும் இணையைத்

தெரிவு செய்க.

A. மனக்கோட்டை - கோட்டைக் கட்டுதல்

B. கங்கணம் கட்டுதல் - உறுதி பூணுதல்

C. கரி பூசுதல் - மதிப்பைக் கொடுத்தல்

D. கரைத்துக் குடித்தல் - ஒன்றனைப் பற்றி ஓரளவு அறிந்திருத்தல்

10. கீழ்க்காணும் பொருளைத் தரும் கொன்றை வேந்தன் செய்யுள் யாது?

மிகச்சிறிய செயலாக இருப்பினும் அதனை நன்கு ஆராய்ந்த பிறகே மேற்கொள்ள வேண்டும்.

A. ஐயம் புகினும் செய்வனச் செய்

B. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

C. நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

D. ஊக்கம் உடைமை ஆக்கத்துக்கு அழகு

பிரிவு ஆ: இலக்கணம்

11. கீழ்க்காணும் எழுத்துகளைச் சேர்த்தால் உண்டாகும் சொல் எது?

உ + ட் + அ + ல்

A. உட்டல்

B. உடல்

C. உட்ல்

D. உடடல்

12. இவற்றுள் அஃறிணைச் சொல் இல்லாத பட்டியல் எது?

A. மன்னர், அமைச்சர், தளபதி, விகடகவி

B. சிறுவன், சிறுமி, குழந்தை, பொம்மை

C. படகோட்டி, ஓட்டுநர், வானூர்தி, விமானி

D. முதலாளி, தொழிலுதவி, வியாபாரி, பணியாள்

13. சரியான வேற்றுமை உருபை ஏற்றுள்ள வாக்கியம் எது?

A. அந்த மலரை நீ அவளுடன் தந்ததை நான் என் கண்களில் பார்த்தேன்.

B. அந்த மலரை நீ அவளிடம் தந்ததை நான் என் கண்களால் பார்த்தேன்.

C. அந்த மலரை நீ அவள்பால் தந்ததை நான் என் கண்களோடு பார்த்தேன்.

D. அந்த மலரை நீ அவளுக்குத் தந்ததை நான் என் கண்களுடன் பார்த்தேன்.

14. சரியான நிறுத்தற்குறிகளைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. பாவம். பசியாலும் பிணியாலும் அவதிபடுகிறாளே.

B. பாவம்! பசியாலும் பிணியாலும் அவதிப்படுகிறாளே.

C. பாவம். பசியாளும் பிணியாலும் அவதிப்படுகிறாளே!

D. பாவம்! பசியாலும் பிணியாலும் அவதிப்படுகிறாளே!

15. இவற்றுள் எது செயப்பாட்டுவினை வாக்கியம்?

i அந்த வயோதிகருக்கு நான்தான் உணவு கொடுத்தேன்.

ii அந்த வயோதிகருக்குத்தான் நான் உணவு கொடுத்தேன்.

iii அந்த வயோதிகருக்கு என்னால்தான் உணவு கொடுக்கப்பட்டது.

iv அந்த வயோதிகருக்குத்தான் என்னால் உணவு கொடுக்கப்பட்டது.

A. i, ii

B. i, iii

C. ii, iii

D. iii, iv

16. கீழ்க்காணும் நேர்க்கூற்று வாக்கியத்தை அயற்கூற்று வாக்கியமாக்குக.

“அமுதா, அடுத்து இதே போல் மூன்று வட்டங்கள் இடவேண்டும்,” என்றார் ஆசிரியர்.

A. ஆசிரியர் அமுதாவிடம் அடுத்ததாக இதே போல் மூன்று வட்டங்கள் இடவேண்டும்
என்று சொன்னார்.

B. ஆசிரியர் அமுதாவிடம் அடுத்ததாக அதே போல் மூன்று வட்டங்கள் இடவேண்டும்

என்று சொன்னார்.

C. ஆசிரியர் அமுதாவிடம் அடுத்ததாற் போல் தைதே மூன்று வட்டங்கள் இடவேண்டும்

என்று சொன்னார்.

D. ஆசிரியர் அமுதாவிடம் அடுத்ததாற் போல் அதே மூன்று வட்டங்கள் இடவேண்டும்

என்று சொன்னார்.

17. இவற்றுள் எந்த வாக்கியத்தில் அடையாளமிடப்பட்ட பகுதியில் தவறாக

வலிமிகுந்திருக்கிறது?

A. நீ அவசரப்பட்டு அங்குச் செல்லாதே!

B. அவனுக்கு இங்குத் தெரியாத சாலைகளே கிடையாது!

C. கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு இரவில் உந்துருளி ஓட்டாதே!

D. அவன் கொண்டு சென்றது என்னுடைய சிலப் புத்தகங்களாகும்.

18. கீழ்க்காணும் வாக்கியங்களுள் இடைச்சொல் பயன்பாடு பிழையாக உள்ள வாக்கியம்

எது?

A. அவனை எதிர்ப்பார்த்தோம்; ஆகையால் அவன் வரவில்லை.

B. இவ்வளவுதான் இருக்கிறது; எனவே இனிமேல் கேட்காதே!

C. உனக்கு வயது போதாது; ஆகவே உன்னை அனுமதிக்கமாட்டார்கள்.

D. என்னை அனுமதிப்பார்கள்; ஏனென்றால் நான் உயரமாக இருக்கிறேன்.

19. சேர்த்தெழுதுக.

பூ + ஆரம் =
A. பூரம்

B. பூவரம்

C. பூவாரம்

D. பூவ்வாரம்

20. பிரித்தேழுதுதல்.

பூமாலை =

A. பூ + மாலை

B. பூமால் + லை

C. பூம் + மாலை

D. பூம் + ஆலை
பிரிவு இ: கட்டுரை
ஆ.தொடர்படத்தையொட்டி ஒரு கதை எழுதுக.

___________________________________________________________
________________________________________________________________

You might also like