You are on page 1of 4

செயிண்மேரி தமிழ்ப்பள்ளி, வாவாசான் பள்ளி வளாகம்

34200 பாரிட் புந்தார், பேரா.

ஆகஸ்ட் மாத மதிப்பீடு


தமிழ்மொழி

பெயர்: _____________________ ஆண்டு : 3 ஆம்பல் / செம்மல்

அ. சரியான விடைக்கு வட்டமிடுக. (10 பு)

செய்யுளும் மொழியணியும்

1.
உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்க
கூடாது.

மேற்கண்ட விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

A) ஊருடன் கூடி வாழ் C) கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

B) உப்பிட்டவரை உள்ளளவும் நினை

2. திருக்குறளை நிறைவு செய்க.

யாண்டும் இடும்பை இல

A) வேண்டுதல் வேண்டாமை இலானடி C) ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

B) எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்

3. செய்யுளைச் சரியாக நிரல் படுத்துக.

i மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ii மாசில் வீணையும் மாலை மதியமும்

iii ஈசன் எந்தை இணையடி நீழலே

iv வீசு தென்றலும் வீங்(கு) இள வேனிலும்

A) ii, iii, iv, i B) ii, iv, i, iii C) ii, i, iv, iii

4. முத்துவும் அபுவும் சிறுவயதிலிருந்தே _____________ நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

A) எலியும் பூனையும் போல C) நகமும் சதையும் போல

B) மலரும் மணமும் போல

5. பிழையான இணையைத் தெரிவு செய்க.

1
A மள மள விரைந்து சரிதல்
B தக தக கொழுந்து விட்டு எரிதல்
C நற நற சினத்தால் பல்லை கடிக்கும் ஓசை

இலக்கணம்

6. அதிகாலையில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.

வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் எவ்வகையைச் சார்ந்தது?

A) சினைப்பெயர் B) பொருட்பெயர் C) காலப்பெயர்

7. தவறான இணையைத் தெரிவு செய்க.

A இடப்பெயர் திடல், கோவில்


B பண்புப்பெயர் வாய், கை
C தொழிற்பெயர் உரமிடுதல், சிரித்தல்

8.
முகிலன் கடுமையாக உழைத்தான்

எனவே வாழ்க்கையில் முன்னேறினான்

வட்டத்தில் இருக்க வேண்டிய சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.

A) . , ! B) . , . C) . ? !

9. பிரித்தெழுதுக.

சொற்கள்

A) சொல் + கள் B) சொற் + கள் C) சொள் + கள்

10. தாத்தா ___________ காலில் ஏற்பட்டக் காயத்திற்கு மருந்து போட்டார்.

A) தன் B) தமது C) தன்னை

ஆ. கீழ்காணும் கதையை வாசித்துக் கேள்விகளுக்குப் பதில் எழுதுக. (10 பு)

2
நரி ஒன்று தாகத்தால் தவித்தது. அது தண்ணீரைத் தேடி அலைந்தது. பின்னர் தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது.
கிணற்றில் தண்ணீர் இருப்பதைக் கண்டதும் சற்றும் யோசிக்காமல் கிணற்றினுள் குதித்துத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தீர்ந்ததும்
அது கிணற்றை விட்டு மேலே வர முயற்சித்தது. கிணறு ஆழமாக இருந்ததால் அதனால் வெளியே வர முடியவில்லை. பல முறை
முயன்றும் அது தோற்றுப் போனது.

அவ்வேளையில் அவ்வழியே ஓர் ஆடு வந்தது. அது கிணற்றின் அருகே சென்று எட்டிப் பார்த்தது. கிணற்றினுள் நரி இருப்பதைக்
கண்டது. அது நரியாரிடம், ‘நரியாரே! கிணற்றினுள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?’ எனக் கேட்டது.

அதற்கு நரி, ‘ஆடே! இக்கிணற்றிலுள்ள நீர் மிகவும் சுவையாக இருக்கிறது. அதனைப் பருகிக் கொண்டிருக்கிறேன். நீயும் வந்தால்
இந்தச் சுவையான நீரைப் பருகலாம்,’ என்று பொய் உரைத்தது.

சற்றும் யோசிக்காமல் நரியின் பேச்சை நம்பி அந்த ஆடு நீரைப் பருகுவதற்காகக் கிணற்றினுள் குதித்தது. உடனே, நரி அந்த
ஆட்டின் முதுகில் ஏறி கிணற்றிலிருந்து வெளியேறியது.

1. நரி ஏன் கிணற்றுக்குள் குதித்தது?

__________________________________________________________

2. கிணற்றை விட்டு நரியால் ஏன் வெளியே வர முடியவில்லை?

__________________________________________________________

3. நரி செய்த தந்திரம் யாது?

__________________________________________________________

4. நரி எவ்வாறு கிணற்றை விட்டு வெளியேறியது?

__________________________________________________________

5. நீ ஆடாக இருந்தால் என்ன செய்திருப்பாய்?

__________________________________________________________

இ. சரியான எதிர்ச்சொல்லை எழுதிடுக. (5 பு)

1. எடு X

2. மெதுவாகX

3. X
இன்பம்

அழுதல் 3
4. X

5. X
இனிப்பு

ஈ. இரண்டில் ஏதெனும் ஒரு தலைப்பைத் தெரிவு செய்க. (25 பு)

கேள்வி 1

நான் ஒரு அகராதி

அல்லது

கேள்வி 2

இரவு சந்தை

அணியம், சரிப்பார்ப்பு, உறுதியம்,

______________ ______________ ____________

(கோ. பொன்னரசி) (மா. பரிமளா) (நா. பத்மநாதன்)

-முற்றும்-

You might also like