You are on page 1of 8

சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

1. படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது எனும்

பொருளுக்கேற்ற உலகநீதி யாது ?

A. மாதாவை யொரு நாளும் மறக்க வேண்டாம்

B. ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

C. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

D. வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

2. பட்டம் என்பது __________________ஆகும்.

A. பண்புப்பெயர்

B. சினைப்பெயர்

C. காலப்பெயர்

D. பொருட்பெயர்

3. சோம்பேறி எனும் சொல்லுக்கு ஏற்ற எதிர்ச் சொல்லைத்

தெரிவு செய்க.

A. உழைப்பாளி

B. அறிவாளி

C. பொய்மை

D. உண்மையானவன்
4. கீ ழ்க்காணும் சொற்களில் இடப்பெயரைக் குறிக்கும் சொல்

எது ?

A. வெயில்

B. பேரங்காடி

C. கிளை

D. அலகு

5. சரியான சொல்லைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு

செய்க.

மாணவர்கள் மேடையை அலங்காரம் ____________________

A. செய்தனர்

B. செய்தான்

C. செய்தது

D. செய்தார்

6. சரியான ல,ள,ழ கரச் சொற்களைக் கொண்ட

வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

A. அமுதன் வண்ண விலக்குகளைக் கொண்டு வட்டை


அழங்கரித்தான்.

B. களை நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.

C. வாணி பூக்கலைப் பறித்தாழ்.

D. சிறுமிகள் கோலாட்டம் ஆடினர்.


7. ஆடை அணிகலன் எனும் இணைமொழியின் பொருளைக்

கண்டுபிடி.

A. துணிமணிகள்

B. உடையும் ஆபரணமும்

C. நகைகள்

D. துணிகளும் சட்டைகளும்

8. மாதம் எனும் சொல் எந்தப் பெயரைக் குறிக்கிறது ?

A. சினைப்பெயர்

B. பொருட்பெயர்

C. காலப்பெயர்

D. பண்புப்பெயர்

9. வழங்கப்பட்டுள்ள பதில் வாக்கியத்திற்கு ஏற்ற வினா

வாக்கியத்தைத் தெரிவு செய்க.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவப்


பரிசோதனை செய்வது மிகச் சிறந்தது.

A. எப்படி மருத்துவப் பரிசோதனைச் செய்வது ?

B. ஏன் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவப்


பரிசோதனைச் செய்ய வேண்டும் ?

C. எத்தனை மாதத்திற்கு ஒருமுறை மருத்துவப்


பரிசோதனை செய்வது மிகச் சிறந்தது ?

D. எவ்வாறு நாம் மருத்துவப் பரிசோதனை செய்வது ?


10. சரியான இணையைத் தேர்ந்தெடு.

A. ரம்புத்தான் – கொத்து

B. சோளம் – சீப்பு

C. திராட்சை – தார்

D. வாழை – கதிர்

11. முக்கனிகள் என்பவை யாவை ?

A. மா , பலா , டுரியான்

B. மா , பலா , வாழை

C. பலா , வாழை , ரம்புத்தான்

D. திராட்சை , வாழை , ரம்புத்தான்

12. இறைவனை நம்பினோர் கைவிடப்படார் என்ற பொருளை


விளக்கும் பழமொழி எது ?

A. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

B. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

C. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

D. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

13. வாயு வடிவம் என்றால் என்ன?

A. நீராவி

B. நெருப்பு

C. பனிக்கட்டி

D. இரசாயனம்
14. அள்ளி இறைத்தல் எனும் மரபுத் தொடருக்கு ஏற்ற

பொருள் எது?

A. அவசரமும் பதற்றமும்

B. அளவுக்கு மேல் செலவழித்தல்

C. திருடுதல்

D. கைத்தொழில் செய்தல்

15. பூவிழி அவசரமாக பழச்சாறு குடித்தாள்.

 மேற்காணும் வாக்கியத்தில் செயப்படுப் பொருளைக்


குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

A. பூவிழி

B. அவசரமாக

C. பழச்சாறு

D. குடித்தாள்

16. திருக்குறளில் விடுப்பட்டுள்ள சொற்கள் யாவை?

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்


_______________ என்பது __________________

A. ஆராய்ந்து – குற்றம்

B. ஆராய்ந்து – வழக்கம்

C. எண்ணுவம் – வழக்கம்

D. எண்ணுவம் – இழுக்கு
17.கீ ழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான
உலகநீதியைக் குறிப்பிடவும்.

மதன் :சற்று முன்பு உன்னிடம் பேசிவிட்டுச் சென்றாரே!

அவர் யார் திலகன் ?

திலகன்: ஓ… அவரா! என்னுடன் வேலை செய்யும்

திரு.மணி.அவரைக் கண்டாலே எனக்குப்

பிடிக்காது.மிகவும் தற்பெருமை கொண்டவர்.

பெரிய செல்வந்தர் என்ற ஆணவம் வேறு.

மதன் : அவரிடம் நன்றாகத்தானே பேசினாய்.அவர்

போன பிறகு அவரைப் பற்றிக் குறைக்

கூறுவது தவறு தானே திலகன்.

A. போகாத விடந்தனிலே போக வேண்டாம்.

B. போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.

C. வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

D. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

18. கீ ழ்க்காணும் சொற்களில் எது தொகுதிப் பெயரைக்

குறிக்கும் சொல் அல்ல.

A. கொய்தல்

B. கூட்டம்

C. கும்பல்

D. மந்தை
19. வியப்பு என்ற சொல்லுக்கு வேறு பொருள் யாது ?

A. வெட்கம்

B. நாணம்

C. மறுபடியும்

D. ஆச்சரியம்

20. ஆண்பாலைக் குறிக்கும் சொற்களைத் தேர்ந்தெடு.

i. விவசாயி

ii. அண்ணன்

iii. முகிலன்

iv. நோயாளி

A. i , ii

B. ii , iii

C. i , ii , iii

D. iii , iv

மாணவர்கள் கவனத்திற்கு :
1. இக்கேள்விகளைச் சுயமாகச் செய்யவும்.1 மணி நேரம்
போதுமானது.
2. பதில்களை மட்டும் அனுப்பினால் போதுமானது.
எடுத்துக்காட்டு : 1.A
2.D

3. பதில்களை ஆசிரியருக்குத் தனிப்பட்ட முறையில்


அனுப்பவும்.
4. தேர்வு முறையில் செய்யவும் (புத்தகம் ஏதும் பார்க்காமல்)
.தயவு செய்து பெற்றோர் உதவி செய்ய வேண்டாம்.
5. 1 கேள்விக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.
6. 14.5.2020 (வியாழன்) - மாலை 5 மணிக்குள் விடைகளை
அனுப்பிவிடவும்.
7. 5 மணிக்குப் பிறகு விடைகள் திருத்தப்பட்டு மாணவர்கள்
பெற்ற புள்ளிகள் வகுப்பு whatsapp பில் அனுப்பப்படும்.நன்றி

You might also like