You are on page 1of 4

தேசிய வகை லாபிஸ் தமிழ்ப்பள்ளி

புதிர்ப் போட்டி கேள்விகள்

1. கீழ்க்கண்ட மூதுரையை நிரல்படுத்துக


i. நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்
ii. எல்லார்க்கும் பெய்யும் மழை
iii.நெல்லுக்குக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
iv.புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில

A. I, ii, iii, iv
B. iii, iv, i, ii
C. iv, iii, i, ii
D. iii, ii, iv, i

2.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
____________________________________________

மேற்காணும் திருக்குறளை நிறைவு செய்யும் அடிகளைத் தெரிவு


செய்க.

A. இன்மை புகுத்தி விடும்


B. இடுக்கண் களைவதாம் நட்பு
C. வைத்தூறு போலக் கெடும்
D. என்றும் இடும்பை தரும்

3. கீழ்க்காணும் உவமைத்தொடருக்கு எதிர்மறையான


உவமைத்தொடரைத் தேர்வு செய்க

மலரும் மணமும் போல

A. சிலை மேல் எழுத்து போல


B. நகமும் சதையும் போல
C. எலியும் பூனையும் போல
D. பசுத்தோல் போர்த்திய புலி போல
4. கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளில் கருமையாக்கப்பட்ட
சொல்லுக்குச் சரியான பொருளைத் தெரிவு செய்க

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்


இழுக்கா இயன்றது அறம்

A.
கோபம்
B. பொறாமை
C. கடுஞ்சொல்

D. பேராசை

5. ‘எல்லோராலும் உணரப்பட்ட ஒருவரின் திறமை’ எனும்


பொருளை வெளிப்படுத்தும் உவமைத்தொடரில்
பயன்படுத்தப்பட்டுள்ள உவமைப்பொருட்கள் யாவை ?
A. யானை , கரும்பு
B. குன்று , விளக்கு
C. அனல் , மெழுகு
D. சிலை , எழுத்து

6. சரியான விடையைத் தேர்வு செய்க

நான்கு + நான்கு =
A. நன்நான்கு
B. நாற்பத்து நான்கு
C. நந்நான்கு

D. நண்நான்கு

7. காலி இடத்திற்கு ஏற்ற காலத்தைத் தெரிவு செய்க

மருத்துவர் கபிலனைப் பரிசோதனை செய்யவிருக்கிறார்.அவனுக்கு


நோய் இருக்கக் கண்டால் மருந்து__________ .
A. கொடுத்தார்
B. கொடுப்பார்
C. கொடுக்கிறார்
D. கொடுக்க மாட்டார்

8. கீழ்க்கான்பனவற்றுள் பிழையான வாக்கியத்தைத் தெரிவு செய்க

A. பறவைகள் கூட்டங் கூட்டமாகப் பறந்தன.


B. என் அம்மா சந்தையில் காய்கறிகளும் பழங்களும் வாங்கினார்.
C. அறிவிப்புப் பலகைகள் சாலையோரங்களில் காணப்படும்.

D. சந்தையில் உள்நாட்டுப் பழம் நல்ல விலையில்


விற்கப்படுகின்றன.

9. புருணை சிறிய நாடாகும். _____________ எண்ணெய் ஏற்றுமதியில்


சிறந்து விளங்குகின்றது.

A. இருப்பினும்
B. ஆதலால்
C. ஏனெனில்

D. ஆகையால்

10. கீழ்க்காண்பனவற்றுள் எது குன்றாவினை வாக்கியம் அல்ல?

A. அப்பா உணவைச் சாப்பிட்டார்.


B. செல்வன புத்தகம் படித்தான்
C. குரங்கு மேலே தாவியது
D. கொக்கு மீனைப் பிடித்தது

விடைகள் : 1. B
2. A
3. C
4. B
5. B
6. C
7. B
8. D
9. A
10. C

You might also like