You are on page 1of 4

உயர்நிலைச் சிந்தனை கேள்விகள் : ஆத்திசூடி

ஔவியம் பேசேல்

1. மேற்காணும் செய்யுளை இயற்றியவர் யார்?


A. பாரதியார்
B. உலகநாத பண்டிதர்
C. அதிவீரராம பாண்டியன்
D. ஔவையார்

2. கீழ்க்காணும் பாடல் வரிகள் உணர்த்தும் கருத்துக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு


செய்க.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்


கவலை உனக்கிலை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ?

A. ஊக்கமது கைவிடேல்
B. ஒப்புர வொழுகு
C. ஏற்பது இகழ்ச்சி

எண்ணெழுத் திகழேல்

3. மேற்காணும் ஆத்திசூடி வரியில் ‘எண்’ எனும் சொல் எதனைக் குறிக்கின்றது?


A. எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யக்கூடாது
B. கணிதம் முதலான அறிவியல் கல்வி
C. எண்களையும் மொழியையும் நம் இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்

4. கீழ்க்கண்ட சூழல் விளக்கும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

சிறுவன் : ஐயா, ஏதாவது வேலை தருகிறீர்களா?


பெரியவர் : தம்பி, நீ மிகவும் சோர்வாக இருக்கிறாயே! முதலில் சாப்பிடு, பிறகு
வேலை செய்யலாம்.
சிறுவன் : வேண்டாம் ஐயா, வேலை செய்து கிடைக்கும் கூலியில் சாப்பிட்டுக்
கொள்வேன்.

A. ஊக்கமது கைவிடேல்
B. ஐய மிட்டுண்
C. ஏற்பது இகழ்ச்சி
D. இயல்வது கரவேல்
5. ஆத்திசூடி எத்தனை அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டுள்ளன?

தயாரிப்பு : தேசிய வகை கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி


A. 1
B. 2
C. 3
D. 4

6. கீழ்க்கண்ட சூழல் விளக்கும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

ராமு : தம்பி, ஏன் இச்சிறுவயதில் வேலை செய்து சிரமப்படுகிறாய்?


பெரியவர் : ஐயா, என் பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றனர். ஆகவே,
நான் வேலை செய்தால்தான் கல்வி கற்க முடியும்.

A. இயல்வது கரவேல்
B. ஓதுவ தொழியேல்
C. ஊக்கமது கைவிடேல்

7. கீழ்க்காணும் ஆத்திசூடி வரிகளை அகர வரிசைபடி நிரல்படுத்துக.


i. ஒப்பிர வொழுகு
ii. ஐய மிட்டுண்
iii. ஈவது விளக்கேல்
iv. உடையது விளம்பேல்

A. i, ii, iii, iv
B. ii, iii, I, iv
C. i, ii, iv, iii
D. iii, iv, ii, i

ஒரே மலேசியா கோட்பாடு நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு


வித்திடும்.

8. மேற்காணும் கூற்றுக்குப் பொருந்தும் ஆத்திசூடி யாது


?
A. உடையது விளம்பேல்
B. ஒப்புர வொழுகு
C. ஊக்கமது கைவிடேல்

9. படத்திற்குப் பொருந்தும் செய்யுளைத் தெரிவு செய்க.

தயாரிப்பு : தேசிய வகை கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி


i. ஓதுவ தொழியேல்
ii. ஒப்புர வொழுகு
iii. எண்ணெழுத் திகழேல்

A. i
B. ii
C. i,ii
D. i,iii

10. கீழ்க்கண்ட உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுள் எது?

A. உடையது விளம்பேல்
B. இயல்வது கரவேல்
C. ஔவியம் பேசேல்
D. ஒப்புர வொழுகு

தயாரிப்பு : தேசிய வகை கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி


விடைகள்

1. D
2. B
3. B
4. C
5. A
6. C
7. D
8. C
9. D
10.C

தயாரிப்பு : தேசிய வகை கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like