You are on page 1of 49

1.

  தமிழ் இன்பம்

 தமிழ்மொழி வாழ்த்து
 தமிழ்மொழி மரபு
 தமிழ் வரிவடிவ வளர்ச்சி
 எழுத்துகளின் பிறப்பு
2. ஈடில்லா இயற்கை

 ஓடை
 கோணக்காத்துப் பாட்டு
 நிலம் பொது
 வினைமுற்று
 திருக்குறள்
3. உடலை ஓம்புமின்

 நோயும் மருந்தும்
 வருமுன் காப்போம்
 தமிழர் மருத்துவம்
 தலைக்குள் ஓர் உலகம்
 எச்சம்
1.தமிழ் இன்பம்
1.1 தமிழ்மொழி வாழ்த்து
சொல்லும் பொருளும்
1. நிரந்தரம் – காலம் முழுமையும்
2. வண்மொழி – வளமிக்கமொழி
3. வைப்பு – நிலப்பகுதி
4. இசை – புகழ்
5. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
1
6. தொல்லை – பழமை, துன்பம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.

A. வைப்பு
B. கடல்
C. பரவை
D. ஆழி
2. என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______ ( என்றென்றும்
பிரித்து எழுதுக )

A. என் + றென்றும்
B. என்று + என்றும்
C. என்றும் + என்றும்
D. என் + என்றும்
3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

A. வான + மளந்தது
B. வான் + அளந்தது
C. வானம் + அளந்தது
D. வான் + மளந்தது
4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. அறிந்ததுஅனைத்தும்
B. அறிந்தனைத்தும்
C. அறிந்ததனைத்தும்
D. அறிந்துனைத்தும்
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. வானம்அறிந்து
B. வான்அறிந்த
C. வானமறிந்த
D. வான்மறிந்
தமிழ்மொழி வாழ்த்து – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை
எடுத்தெழுதுக.
1. வாழ்க –வாழிய
2. எங்கள் –என்றென்றும்

2
3. வண்மொழி –வளர்மொழி
4. அகன்று –அறிந்த
1.2 தமிழ்மொழி மரபு
சொல்லும் பொருளும்
1. விசும்பு – வானம்
2. மரபு – வழக்கம்
3. மயக்கம் – கலவை
4. திரிதல் – மாறுபடுதல்
5. இருதிணை – உயர்திணை, அஃறிணை
6. செய்யுள் – பாட்டு
7. வழாஅமை – தவறாமை
8. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
9. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பறவைகள் _________ பறந்து செல்கின்றன.

A. நிலத்தில்
B. விசும்பில்
C. மரத்தில்
D. நீரில்
2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.

A. மரபு
B. பொழுது
C. வரவு
D. தகவு
3. ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

A. இரண்டு + திணை
B. இரு + திணை
C. இருவர் + திணை
D. இருந்து + திணை
4. ‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

A. ஐம் + பால்
B. ஐந்து + பால்

3
C. ஐம்பது + பால்
D. ஐ + பால்
இளமைப்  பெயர்கள்
1. புலி -பறழ்
2. சிங்கம் -குருளை
3. யானை -கன்று
4. பசு -கன்று
5. கரடி -குட்டி
ஒலி மரபு
1. புலி -உறுமும்
2. சிங்கம் -முழங்கும்
3. யானை -பிளிறும்
4. பசு -கதறும்
5. கரடி -கத்தும்

1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக?
1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக
அமைந்தது?

A. ஓவியக்கலை
B. இசைக்கலை
C. அச்சுக்கலை
D. நுண்கலை
2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என
அழைக்கப்படுகிறது?

A. கோட்டெழுத்து
B. வட்டெழுத்து
C. சித்திர எழுத்து
D. ஓவிய எழுத்து
3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.

4
A. பாரதிதாசன்
B. தந்தை பெரியார்
C. வ.உ. சிதம்பரனார்
D. பெருஞ்சித்திரனார்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் கண்ணெழுத்துக்கள் என
அழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் விரமாமுனிவர் 

1.4 எழுத்துகளின் பிறப்பு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____

A. இ, ஈ
B. உ, ஊ
C. எ, ஏ
D. அ, ஆ
2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______

A. மார்பு
B. கழுத்து
C. தலை
D. மூக்கு
3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____

A. தலை
B. மார்பு
C. மூக்கு
D. கழுத்து
4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____

A. க், ங்
B. ச், ஞ்
C. ட், ண்
D. ப், ம்
5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____

5
A. ம்
B. ப்
C. ய்
D. வ்
பொருத்துக
1. க், ங் – நாவின் முதல், அண்ணத்தின் அடி
2. ச், ஞ் –நாவின் இடை, அண்ணத்தின் இடை
3. ட், ண் –நாவின் நுனி,அண்ணத்தின் நுனி 
4. த், ந் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி 
மரபுத் தொடர்கள்:  பறவைகளின் ஒலிமரபு
1. ஆந்தை அலறும்
2. குயில் கூவும்
3. மயில் அகவும்
4. காகம் கரையும்
5. கோழி கொக்கரிக்கும்
6. கிளி பேசும்
7. சேவல் கூவும்
8. புறா குனுகும்
9. கூகை குழறும்
10.தொகை மரபு
11.மக்கள் கூட்டம்
12.ஆநிரை
13.ஆட்டு மந்தை
வினைமரபு
1. சோறு உண்
2. தண்ணீர் குடி
3. பூக் கொய்
4. முறுக்குத் தின்
5. பால் பருகு
6. இலை பறி
7. சுவர் எழுப்பு
8. கூடை முடை
9. பானை வனை
ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக
(எ.கா.) அணி – பல அணிகளை அணிந்த வீரர்கள், அணிஅணியாய்ச் சென்றனர்.

6
1. படி _என் அம்மா ,படத்தை புரியும்படி படிக்க சொன்னதால் நான் படிக்கட்டில்
அமர்ந்து படம் படித்தேன்
2. திங்கள் __ஒரு திங்களுக்கு ஒரு முறை  தான் வானத்தில் முழு
வடிவில் திங்கள் பௌர்ணமியாக காட்சி தரும் .இன்று திங்கள் கிழமை ஆகும்
3. ஆறு _இன்று காலை ஆறு மணிக்கு என் தந்தை எனக்கு இட்ட ஆறு பணிகளை
செய்திடப் புறப்பட்டேன் ஊருக்கு வெளிய காவிரி ஆறு ஓடியது
சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து

விடை: வளைந்த கோடுகளால் அமைந்த எழுத்து தமிழ் வட்டெழுத்து எனப்படும்


2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.

விடை: உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்


3. வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.

விடை: பகைவரை வென்றதை பாடும் இலக்கியம்பரணி ஆகும்.


4.கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.

விடை: உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து  ஆகும்.


5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.

விடை: அம்புவிடும் கலையை தமிழ் ஏகலை என்றது.


கலைச்சொல் அறிவோம்.
1. ஒலிப்பிறப்பியல் – Articulatory phonetics
2. உயிரொலி – Vowel
3. மெய்யொலி – Consonant
4. அகராதியியல் – Lexicography
5. மூக்கொலி – Nasal consonant sound
6. ஒலியன் – Phoneme
7. கல்வெட்டு – Epigraph
8. சித்திர எழுத்து – Pictograph
இயல் – 2: ஈடில்லா இயற்கை
2.1 ஓடை
சொல்லும்  பொருளும்
1. தூண்டுதல் – ஆர்வம்கொள்ளுதல்
2. பயிலுதல் – படித்தல்

7
3. ஈரம் – இரக்கம்
4. நாணம் – வெட்கம்
5. முழவு – இசைக்கருவி
6. செஞ்சொல் – திருந்தியசொல்
7. நன்செய் – நி்றைந்தை நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
8. புன்செய்  – கு்றைந்தை நீரொல் பயிர்கள்  விளையும் நிலம்
9. வள்ளைப்பாட்டு -நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.

A. பயிலுதல்
B. பார்த்தல்
C. கேட்டல்
D. பாடுதல்
2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.

A. கடல்
B. ஓடை
C. குளம்
D. கிணறு
3. ‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

A. நன் + செய்
B. நன்று + செய்
C. நன்மை + செய்
D. நல் + செய்
4. ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

A. நீளு + உழைப்பு
B. நீண் + உழைப்பு
C. நீள் + அழைப்பு
D. நீள் + உழைப்பு
5. சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.

A. சீருக்குஏற்ப
B. சீருக்கேற்ப

8
C. சீர்க்கேற்ப
D. சீருகேற்ப
6. ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

A. ஓடைஆட
B. ஓடையாட
C. ஓடையோட
D. ஓடைவாட

2.2 கோணக்காத்துப் பாட்டு


சொல்லும் பொருளும்
1. முகில் – மேகம்
2. வின்னம் – சேதம்
3. கெடிகலங்கி – மிக வருந்தி
4. வாகு – சரியாக
5. சம்பிரமுடன் – முறையாக
6. காலன் – எமன்
7. சேகரம் – கூட்டம்
8. மெத்த – மிகவும்
9. காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர்.

A. முகில்
B. துகில்
C. வெயில்
D. கயல்
2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்.

A. பாலனை
B. காலனை
C. ஆற்றலை
D. நலத்தை

9
3. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. விழுந்த + அங்கே
B. விழுந்த + ஆங்கே
C. விழுந்தது + அங்கே
D. விழுந்தது + ஆங்கே
4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. செ + திறந்த
B. செத்து + திறந்த
C. செ + இறந்த
D. செத்து + இறந்த
5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. பருத்திஎல்லாம்
B. பருத்தியெல்லாம்
C. பருத்தெல்லாம்
D. பருத்திதெல்லாம்
2.3 நிலம் பொது
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.

A. தாயாக
B. தந்தையாக
C. தெய்வமாக
D. தூய்மையாக
2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. இன் + ஓசை
B. இனி + ஓசை
C. இனிமை + ஓசை
D. இன் + னோசை
3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. பால்ஊறும்
B. பாலூறும்

10
C. பால்லூறும்
D. பாஊறும்
தொடரில் அமைத்து எழுதுக.
1. வேடிக்கை: குழந்தை  விளையாடுவதை தந்தை வேடிக்கையாக பார்த்துக்கொண்டிருந்தார்
2. உடன்பிறந்தார்: தர்மன் தன் உடன்பிறந்தார் உடன் மிகுந்த அன்புவைத்திருந்தான்

2.4 வினைமுற்று
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.

A. மாடு
B. வயல்
C. புல்
D. மேய்ந்தது
2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.

A. படித்தான்
B. நடக்கிறான்
C. உண்பான்
D. ஓடாது
3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.

A. செல்க
B. ஓடு
C. வாழ்க
D. வாழிய
வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக
1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2. உ
2. உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16. க௬
3. உலக இயற்கை நாள் அக்டோபர் 3. ௩
4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6. ௬
5. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் அக்டோபர் 5. ௫
கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.
1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். செய்தி தொடர்
2. கடமையைச் செய். விழைவுத்  தொடர்
3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!உணர்ச்சித் தொடர் 
4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?வினாத்தொடர்

11
தொடர்களை மாற்றுக.
(எ.கா.) நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)
நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?

1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)

விடை : என்னே! காட்டின் அழகு!


2. ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)

விடை : பூனை காலில் அடிபட்டுவிட்டது


3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)

விடை : அதிகாலையில் துயில் எழு


4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.)

விடை : முகில்கள் திரண்டால் மழை பெய்யும்


5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)

விடை : காட்டில் புலி நடமாட்டம் உள்ளதோ ?


2.5 திருக்குறள்
சரியானதை தேர்ந்தெடுத்து  எழுதுக.
1. புகழொலும் பழியொலும் அறியப்படுவது _____.

A. அடக்கமுடைமை
B. நாணுடைமை
C. நடுவு நிலைமை
D. பொருளுடைமை
2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____.

A. வலிமையற்றவர்
B. கல்லாதவர்
C. ஒழுக்கமற்றவர்
D. அன்பில்லாதவர்
3.‘வல்லுருவம்’ என்னும் சொல்லை  பிரித்து எழுதக் கி்டப்பது _____.

A. வல் + உருவம்
B. வன்மை  + உருவம்

12
C. வல்ல + உருவம்
D. வல்லு + உருவம்
4. நெடுமை  + தேர் என்பதை்சேர்த்து எழுத கி்டக்கும் சொல் _____.

A. நெடுதேர்
B. நெடுத்தேர்
C. நெடுந்தேர்
D. நெடுமைதேர்
5. ‘வருமுன்னர்’ எனத்  தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி _____.

A. எடுத்துக்காட்டு உவமை அணி


B. தற்குறிப்பேற்று  அணி
C. உவமை  அணி
D. உருவக அணி
கோடிட்ட  இடத்தை நிரப்புக.
1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்த மேய்ந் தற்று.
2. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்     
கற்றாரோடு ஏனை யவர்
இயல் – 3: உடலை  ஓம்புமின்
3.1 நோயும் மருந்தும்
சொல்லும் பொருளும்
1. தீர்வன – நீங்குபவை
2. திறத்தன – தன்மையுடையன
3. உவசமம் – அடங்கி இருத்தல்
4. கூற்றவா – பிரிவுகளாக
5. நிழல்இகழும் – ஒளிபொருந்திய
6. பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
7. பேர்தற்கு – அகற்றுவதற்கு
8. பிணி – துன்பம்
9. திரியோகமருந்து – மூன்று யோகமருந்து
10.ஓர்தல் – நல்லறிவு
11.தெளிவு – நற்காட்சி
12.பிறவார் – பிறக்கமாட்டார்
சரியானதை தேர்ந்தெடுத்து    எழுதுக
1. உடல் நலம் என்பது _______ இல்லாமல்  வாழ்தல்  ஆகும்.

13
A. அணி
B. பணி
C. பிணி
D. மணி
2. நீலகேசி  கூறும் நோயின்  வகைகள் ______.

A. இரண்டு
B. மூன்று
C. நான்கு
D. ஐந்து
3. ‘இவையுண்டார் ‘ என்னும் சொல்லை பிரித் து எழுதக் கி்டைப்பது _______.

A. இ + யுணடொர்
B. இவ் + உணடொர்
C. இவை  + உணடொர்
D. இவை  + யுணடொர்
4. தாம் + இனி என்பதை்சேர்த்து எழுத கி்டக்கும் சொல் _______.

A. தாம் இனி
B. தாம்மினி
C. தாமினி
D. தாமனி

3.2 வருமுன் காப்போம்


சொல்லும் பொருளும்
1. நித்தம்  நித்தம் -நாள்தோறும்
2. வையம் – உலகம்
3. மட்டு – அ்ளவு
4. பேணுவயல்  -பாதுகாத்தல்
5. சுண்ட -நன்கு
6. திட்டுமுட்டு -தடுமாற்றம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார்.

14
A. நிலம்
B. வையம்
C. களம்
D. வானம்
2. ’நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. நலம் + எல்லாம்
B. நலன் + எல்லாம்
C. நலம் + எலாம்
D. நலன் + எலாம்
3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_____.

A. இடவெங்கும்
B. இடம்எங்கும்
C. இடமெங்கும்
D. இடம்மெங்கும்
வருமுன்காப்போம் – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச்
சொற்களை
எடுத்து எழுதுக.

மோனை
1. உடலின் – உலகில்
2. காலை – காற்று
3. இடமும் – இனிய
4. சுத்தமுள்ள  – சுகமும்
5. அருமை – அடையும்
6. திட்டு – தினமும்
எதுகை
1. உடலின் – இடமும்
2. கூழை – ஏழை
3. சுத்தமுள்ள – நித்தம்
4. திட்டு – மட்டு
5. அருமை – வருமுன்
6. பட்டிடுவாய் – ஓட்டிவிடும்
இயைபு
1. தினமும் – இடமும்
2. கூழை – ஏழை

15
3. ஓட்டிவிடும் – நித்தம்
4. திட்டு – மட்டு
5. குடியப்பா – உறங்கப்பா
6. உணணாமல் – தின்பாயேல்
3.3 தமிழர் மருத்துவம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர்.

A. தாவரங்களை
B. விலங்குகளை
C. உலோகங்களை
D. மருந்துகளை
2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.

A. மருந்தின்
B. உடற்பயிற்சியின்
C. உணவின்
D. வாழ்வின்
3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____.

A. தலைவலி
B. காய்ச்சல்
C. புற்றுநோய்
D. இரத்தக்கொதிப்பு
4. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.

A. சுவைக்காக
B. சிக்கனத்திற்காக
C. நல்வாழ்வுக்காக
D. உணவுக்காக
3.4 தலைக்குள் ஓர் உலகம்
 சுஜாதாவின் இயற்பெயர்: ரங்கராஜன்
சுஜாதாவின் நூல்கள்
1. என் இனிய எந்திரா
2. மீண்டும் ஜீனோ
3. ஸ்ரீரங்கத்து தேவதைகள்

16
4. தூண்டில் கதைகள்
5. தலைமைச்செயலகம்
3.5 இலக்கணம்: எச்சம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்.

A. முற்று
B. எச்சம்
C. முற்றெச்சம்
D. வினையெச்சம்
2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____.

A. படித்து
B. எழுதி
C. வந்து
D. பார்த்த
3. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டாது.

A. காலத்தை
B. வினையை
C. பண்பினை
D. பெயரை
பொருத்துக
1. நடந்து – முற்றெச்சம்
2. பேசிய – குறிப்புப் பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – பெயரெச்சம்
4. பெரிய – வினையெச்சம்
விடை: 1.ஈ, 2.இ, 3.அ, 4.ஆ 
கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.
நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.

பெயரெச்சம் : நல்ல, எறிந்த, வீழ்ந்த, மாட்டிய, அழைத்த


வினையெச்சம் : படுத்து, பாய்ந்து, கடந்து, பிடித்து, பார்த்து.
மொழியை ஆள்வோம்
பொருத்துக
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – பயனற்ற செயல்

17
3. பசு மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்த நீர் போல – எதிர்பாரா நிகழ்வு
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – எளிதில் மனத்தில் பதிதல்
(விடை : 1.இ, 2.ஈ, 3.உ , 4.ஆ, 5.அ)
உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல

விடை: குன்றின் மேலிட்ட விளக்கைப் போல திருக்குறளின் புகழ் உலகமெங்கும்


பரவியுள்ளது.

2. வேலியே பயிரை மேய்ந்தது போல

விடை: வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டை காப்பாற்ற வேண்டிய தலைவர்களே


மக்களை துன்புறுத்துகின்றன.

3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

விடை: பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல பரிசுத் தொகையாக இலட்சம் கிடைக்கும்
என்று எதிர்பார்த்தவனுக்குக் கோடி கிடைத்தது.

4. உடலும் உயிரும் போல

விடை: உடலும் உயிரும் போல கணவனும் மனைவியும் அன்போடு வாழ்ந்தன.

5. கிணற்றுத் தவளை போல

விடை: கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலே தம் அறியாமையை


வெளிப்படுத்தி விடுவர்.

கலைச்சொல் அறிவோம்.
 நோய் – Disease
 பக்கவிளைவு – Side Effect
 மூலிகை – Herbs
 நுண்ணுயிர் முறி – Antibiotic
 சிறுதானியங்கள் – Millets
 மரபணு – Gene
 பட்டயக் கணக்கர் – Auditor

18
 ஒவ்வாமை – Allergy

19
1. கல்வி கரையில

 கல்வி அழகே அழகு


 புத்தியைத் தீட்டு
 பல்துறைக் கல்வி
 வேற்றுமை
2. குழலினிது யாழினிது

 திருக்கேதாரம்
 பாடறிந்து ஒழுகுதல்
 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
 திருக்குறள்
3.வையம்புகழ் வணிகம்

 வளம் பெருகுக
 மழைச்சோறு
 கொங்குநாட்டு வணிகம்
 புணர்ச்சி

1. கல்வி கரையில
1.1 கல்வி அழகே அழகு
I. சொல்லும் பொருளும்
 கலன் – அணிகலன்

20
 முற்றை – ஒளிர
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கற்றவருக்கு அழகு தருவது ________.

A. தங்கம்
B. வெள்ளி
C. வைரம்
D. கல்வி
2. ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

A. கலன் + லல்லால்
B. கலம் + அல்லால்
C. கலன் + அல்லால்
D. கலன் + னல்லால்
III. சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. அழகு : அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
2. கற்றவர் : கல்வி கற்றவர்கள் உலகில் சிறந்தவராய் விளங்குவார்கள்.
3. அணிகலன் : மனிதனுக்கு கல்விதான் சிறந்த அணிகலன்
1.2. புத்தியைத் தீட்டு
I. சொல்லும் பொருளும்
 தடம் – அடையாளம்
 அகம்பாவம் – செருக்கு
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.

A. சோம்பல்
B. அகம்பாவம்
C. வருத்தம்
D. வெகுளி
2. ‘கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. கோ + அப்பா
B. கோயில் + லப்பா
C. கோயில் + அப்பா
D. கோ + இல்லப்பா
3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கி்டைக்கும் சொல் _____.

21
A. பகைவென்றாலும்
B. பகைவனென்றாலும்
C. பகைவன்வென்றாலும்
D. பகைவனின்றாலும்
1.3. பல்துறைக் கல்வி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____.

A. விளக்கு
B. கல்வி
C. விளையாட்டு
D. பாட்டு
2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.

A. இளமை
B. முதுமை
C. நேர்மை
D. வாய்மை
3. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

A. வீட்டில்
B. நாட்டில்
C. பள்ளியில்
D. தொழிலில்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கலப்பில் வளர்ச்சி  உண்டென்பது இயற்கை நுட்பம்.
2. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.
3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது காவிய இன்பம் ஆகும்.
III. பொருத்துக.
1. இயற்கை ஓவியம் – சிந்தாமணி
2. இயற்கை தவம் – பெரியபுராணம்
3. இயற்கைப் பரிணாமம் – பத்துப்பாட்டு
4. இயற்கை அன்பு – கம்பராமாயணம்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ 

1.4. வேற்றுமை

22
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும்.

A. எழுவாய்
B. செயப்படுபொருள்
C. பயனிலை
D. வேற்றுமை
2. எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

A. எழுவாய்
B. செயப்படுபொருள்
C. விளி
D. பயனிலை
3. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும்.

A. மூன்றாம் 
B. நான்காம்
C. ஐந்தாம்
D. ஆறாம்
4. ‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ________ வேற்றுமை பயின்று
வந்துள்ளது.

A. இரண்டாம்
B. மூன்றாம் 
C. ஆறாம்
D. ஏழாம்
5. ‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது.

A. ஆக்கல் 
B. அழித்தல்
C. கொடை
D. அடைதல்
II. பொருத்துக.
1. மூன்றாம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.
2. நான்காம் வேற்றுமை – பாரியினது தேர்.
3. ஐந்தாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்.

23
4. ஆறாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ 
III. கலைச்சொல் அறிவோம்.
1. நிறுத்தக்குறி – Punctuation
2. மொழிபெயர்ப்பு – Translation
3. அணிகலன் – Ornament
4. விழிப்புணர்வு – Awareness
5. திறமை – Talent
6. சீர்திருத்தம் – Reform

2. குழலினிது யாழினிது
2.1. திருக்கேதாரம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கொட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன.

A. முகில்கள்
B. முழவுகள்
C. வேழங்கள்
D. வேய்கள்
2. ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. கனகச் + சுனை
B. கனக + சுனை
C. கனகம் + சுனை
D. கனம் + சுனை
3. முழவு + அதிர என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.

A. முழவுதிர
B. முழவுதிரை
C. முழவதிர
D. முழவுஅதிர
2.2. பாடறிந்து ஒழுகுதல்
I. சொல்லும் பொருளும்
1. அலந்தவர் – வறியவர்

24
2. கிளை – உறவினர்
3. செறாஅமை – வெறுக்காமை
4. பேதையார் – அறிவற்றவர்
5. நோன்றல் – பொறுத்தல்
6. மறாஅமை – மறவாமை
7. போற்றார் – பகைவர்
8. பொறை – பொறுமை
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பசியால் வாடும் _____ உணவளித்தல் நமது கடமை.

A. பிரிந்தவர்க்கு
B. அலந்தவர்க்கு
C. சிறந்தவர்க்கு
D. உயர்ந்தவர்க்கு
2. நம்மை _____ப் மபொறுத்துக் கொள்ள வேண்டும்.

A. இகழ்வாரை
B. அகழ்வாரை
C. புகழ்வாரை
D. மகிழ்வாரை
3. மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.

A. சிறை
B. அறை
C. கறை
D. நிறை
4. ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. பாட் + அறிந்து
B. பா + அறிந்து
C. பாடு + அறிந்து
D. பாட்டு + அறிந்து
5. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. முறையப்படுவது
B. முறையெனப்படுவது

25
C. முறைஎனப்படுவது
D. முறைப்படுவது
2.3. நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______.

A. கல்வெட்டுகள்
B. செப்பேடுகள்
C. பனையோலைகள்
D. மண்பாண்டங்கள்
2. பானை______ ஒரு சிறந்த கலையாகும்.

A. செய்தல்
B. வனைதல்
C. முடைதல்
D. சுடுதல்
3. ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

A. மட்டு + மல்ல
B. மட்டம் + அல்ல
C. மட்டு + அல்ல
D. மட்டும் + அல்ல
4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. கயிற்றுக்கட்டில்
B. கயிர்க்கட்டில்
C. கயிறுக்கட்டில்
D. கயிற்றுகட்டில்
II. பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. முழுவதும்

விடை : பாடநூல் முழுவதும் வாசித்தால் தான் தெளிவு கிடைக்கும்


2. மட்டுமல்லாமல்

விடை : ஏட்டுக்கல்வி மட்டுமல்லாமல் தொழில் கல்வியும் கற்க வேண்டும்


3. அழகுக்காக

26
விடை : பூச்செடிகளை அழகுக்காக வீட்டின் முன் வளர்த்தேன்
4. முன்பெல்லாம்

விடை :  முன்பெல்லாம் விவசாயத்திற்கு காளை மாடுகளை அதிகமாக பயன்படுத்தினர்


2.4. தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____.

A. வேற்றுமைத்தொகை
B. உம்மைத்தொகை
C. உவமைத்தொகை
D. அன்மொழித்தொகை
2. ‘செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை.

A. வினை
B. பண்பு
C. அன்மொழி
D. உம்மை
3. ‘கண்ணா வா!’- என்பது _____த் தொடர்.

A. எழுவாய்
B. விளி
C. வினைமுற்று
D. வேற்றுமை
II. பொருத்துக.
1. பெயரெச்சத் தொடர் – கார்குழலி படித்தாள்.
2. வினையெச்சத் தொடர் – புலவரே வருக.
3. வினைமுற்றுத் தொடர் – பாடி முடித்தான்.
4. எழுவாய்த் தொடர் – எழுதிய பாடல்.
5. விளித் தொடர் – வென்றான் சோழன்.
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ 
III. கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக.
( கொண்டு, இருந்து, உடைய, காட்டிலும், ஆக, நின்று, உடன், விட, பொருட்டு )

1. இடி உடன் மழை வந்தது.
2. மலர்விழி தேர்வின் பொருட்டு ஆயத்தமானாள்.

27
3. அருவி மலையில் இருந்து வீழ்ந்தது.
4. தமிழைக் காட்டிலும் சுவையான மொழியுண்டோ!
5. யாழ், தமிழர் உடைய இசைக்கருவிகளுள் ஒன்று
IV. பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாகசுரம்,
மகுடி

விடை : உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், நாகசுரம், படகம், பிடில்,


பேரியாழ், மகுடி
V. பின்வரும் இணைச்சொற்களை வகைப்படுத்துக.
உற்றார்உறவினர், விருப்புவெறுப்பு, காலைமாலை, கன்னங்கரேல், ஆடல்பாடல்,
வாடிவதங்கி, பட்டிதொட்டி, உள்ளும்புறமும், மேடுபள்ளம், நட்டநடுவில்.

நேரிணை
உற்றார்உறவினர், வாடிவதங்கி, நட்டநடுவில், பட்டிதொட்டி
எதிரிணை
விருப்புவெறுப்பு, காலைமாலை, உள்ளும்புறமும், மேடுபள்ளம், ஆடல்பாடல்
செறியிணை
கன்னங்கரேல்
VI. சரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக.
( மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு,
ஆடிஅசைந்து )

1. சான்றோர் எனப்படுபவர் கல்விகேள்விகளில் சிறந்தவர் ஆவர்.


2. ஆற்று வெள்ளம் மேடுபள்ளம் பாராமல் ஓடியது.
3. இசைக்கலைஞர்கள் போற்றிப்புகழப்பட வேண்டியவர்கள்.
4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ஈடுஇணை இல்லை
5. திருவிழாவில் யானை ஆடிஅசைந்து வந்தது.
VII. கலைச்சொல் அறிவோம்.
1. கைவினைப் பொருள்கள் – Crafts
2. பின்னுதல் – Knitting
3. புல்லாங்குழல் – Flute
4. கொம்பு – Horn
5. முரசு – Drum
6. கைவினைஞர் – Artisan
7. கூடைமுடைதல் – Basketry
8. சடங்கு – Rite

28
2.5. திருக்குறள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அரசரை அவரது _____ காப்பாற்றும்.

A. செங்கோல்
B. வெண்கொற்றக்குடை
C. குற்றமற்ற ஆட்சி
D. படை வலிமை
2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேச
வேண்டும்.

A. சொல்லின்
B. அவையின்
C. பொருளின்
D. பாடலின்
3. ‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. கண் + ஓடாது
B. கண் + ணோடாது
C. க + ஓடாது
D. கண்ணோ + ஆடாது
4. ‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. கச + டற
B. கசட + அற
C. கசடு + உற
D. கசடு + அற
5. என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. என்றாய்ந்து
B. என்றுஆய்ந்து
C. என்றய்ந்து
D. என்ஆய்ந்த
29
3.வையம்புகழ் வணிகம் 
3.1. வளம் பெருகுக
I. சொல்லும் பொருளும்
1. வாரி – வருவாய்
2. எஞ்சாமை – குறைவின்றி
3. முட்டாது – தட்டுப்பாடின்றி
4. ஒட்டாது – வாட்டம்இன்ற
5. வைகுக – தங்குக
6. ஓதை – ஓசை
7. வெரீஇ – அஞ்சி
8. யாணர் – புதுவருவா
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லொம் முளைத்தன.

A. சத்துகள்
B. பித்துகள்
C. முத்துகள்
D. வித்துகள்
2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ___________ பெருகிற்று.

A. காரி
B. ஓரி
C. வாரி
D. பாரி
3. ‘அக்களத்து‘ என்றை மைொல்்லப் பிரிதது எழுதக் கிடடிப்பது ____________.

A. அ + களத்து
B. அக் + களத்து
C. அக்க + அளத்து
D. அம் + களத்து
4. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.

A. கதிரென
B. கதியீன
C. கதிரீன
D. கதிரின்ன

30
3.2. மழைச்சோறு
I. சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக.
1. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் _____.

A. பெருமழை
B. சிறு மழை
C. எடைமிகுந்த மழை
D. எடை குறைந்த மழை
2. ‘வாசலெல்லாம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. வாசல் + எல்லாம்
B. வாசல் + எலாம்
C. வாசம் + எல்லாம்
D. வாசு + எல்லாம்
3. ‘பெற்றெடுத்தோம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. பெறு+ எடுத்தோம்
B. பேறு + எடுத்தோம்
C. பெற்ற + எடுத்தோம்
D. பெற்று + எடுத்தோம்
4. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. கால்லிறங்கி
B. காலிறங்கி
C. கால் இறங்கி
D. கால்றங்க

3.3. கொங்குநாட்டு வணிகம்


II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____.

A. தொல்காப்பியம்
B. அகநானூறு
C. புறநானூறு

31
D. சிலப்பதிகாரம்
2. சேரர்களின் தலைநகரம் _____.

A. காஞ்சி
B. வஞ்சி
C. தொண்டி
D. முசிறி
3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____.

A. புல்
B. நெல்
C. உப்பு
D. மிளகு
4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு _____.

A. காவிரி
B. பவானி
C. நொய்யல்
D. அமராவதி
5. வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
_____.

A. நீலகிரி
B. கரூர்
C. கோயம்புத்தூர்
D. திண்டுக்கல்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் சேலம்.
2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் சின்னாளப்பட்டி (திண்டுக்கல்).
3. சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது.
4. பின்னலாடை நகரமாக திருப்பூர் விளங்குகிறது.
3.4. புணர்ச்சி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும்.

A. ஐந்து

32
B. நான்கு
C. மூன்று
D. இரண்டு
2. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _____

A. இயல்பு
B. தோன்றல்
C. திரிதல்
D. கெடுதல்
II. பொருத்துக
1. மட்பாண்டம் – தோன்றல் விகாரம்
2. மரவேர் – இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடி – கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு – திரிதல் விகாரம்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ
III. பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.
1. ஆயிரங்காலத்துப் பயிர் – இயலாத செயல்.
2. கல்லில் நார் உரித்தல் – ஆராய்ந்து பாராமல்.
3. கம்பி நீட்டுதல் – இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது.
4. கானல்நீர் – நீண்டகாலமாக இருப்பது.
5. கண்ணை மூடிக்கொண்டு – விரைந்து வெளியேறுதல்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 –  ஆ
IV. பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக
1. வாழையடி வாழையாக

வாழையடி வாழையாக நம் முன்னோர்கள் விவசாயம் செய்து வந்தனர்.


2. முதலைக்கண்ணீர்

காவலரிடம் மாட்டிக்கொண்ட திருடன் தான் திருடவில்லை


என்று முதலைக்கண்ணீர் வடித்தான்.
3. எடுப்பார் கைப்பிள்ளை -______________________________

நாம் சுயமாக யோசிக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போலச் செயல்படடக்கூடாது.


V. கலைச்சொல் அறிவோம்.
1. நூல் – Thread
2. தையல் – Stitch
3. தறி – Loom
33
4. ஆலை – Factory
5. பால்பண்ணை – Dairy farm
6. சாயம் ஏற்றுதல் – Dyeing
7. தோல் பதனிடுதல் – Tanning
8. ஆயத்த ஆடை – Readymade Dress

34
1.1. படை வேழம்
I. சொல்லும் பொருளும்
1. மறலி – காலன்
2. வழிவர் – நழுவி ஓடுவர்
3. கரி – யானை
4. பிலம் – மலைக்குகை
5. தூறு – புதர்
6. மண்டுதல் – நெருங்குதல்
7. அருவர் – தமிழர்
8. இறைஞ்சினர் – வணங்கினர்
9. உடன்றன – சினந்து எழுந்தன
10.முழை – மலைக்குகை
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சிங்கம் _____யில் வாழும்.

A. மாயை
B. ஊழி
C. முழை
D. அலை
2. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு _____.

A. வீரம்
B. அச்சம் 
C. நாணம்
D. மகிழ்ச்சி

35
3. ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. வெம் + கரி
B. வெம்மை + கரி
C. வெண் + கரி
D. வெங் + கரி
4. ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. என் + இருள்
B. எட்டு + இருள்
C. என்ற + இருள்
D. என்று + இருள்
5. போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. போன்றன
B. போலன்றன
C. போலுடன்றன
D. போல்உடன்றன
1.2. விடுதலைத் திருநாள்
I. சொல்லும் பொருளும்
1. சீவன் – உயிர்
2. வையம் – உலகம்
3. சத்தியம் – உண்மை
4. சபதம் – சூளுரை
5. ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
6. மோகித்து – விரும்பு
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வானில் முழுநிலவு அழகாகத் ___________ அளித்தது.

A. தயவு
B. தரிசனம்
C. துணிவு
D. தயக்கம்
2. இந்த _________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

A. வையம்

36
B. வானம்
C. ஆழி
D. கானகம்
3. ‘சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. சீவ + நில்லாமல்
B. சீவன் + நில்லாமல்
C. சீவன் + இல்லாமல்
D. சீவ + இல்லாமல்
4. ‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. விலம் + கொடித்து
B. விலம் + ஒடித்து
C. விலன் + ஒடித்து
D. விலங்கு + ஒடித்து
5. காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. காட்டைஎரித்து
B. காட்டையெரித்து
C. காடுஎரித்து
D. காடுயெரித்து
6. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

1. இதந்தரும்
2. இதம்தரும்
3. இதத்தரும்
4. இதைத்தரும்
1.3. பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. எம்.ஜி.ஆர் _____ என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

A. கண்டி
B. கும்பகோணம்
C. சென்னை
D. மதுரை
2. எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் _____ .

37
A. நடிப்பு ஆர்வம்
B. பள்ளி இல்லாமை
C. குடும்ப வறுமை
D. படிப்பில் ஆர்வமில்லாமை
3. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான _____ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு
வழங்கியது.

A. புரட்சித் தலைவர்
B. பாரத்
C. பாரத மாமணி
D. புரட்சி நடிகர்
4. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் _____

A. திருச்சி
B. சென்னை
C. மதுரை
D. கோவை
5. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் _____.

A. மதிய உணவுத்திட்டம் 
B. வீட்டு வசதித் திட்டம்
C. மகளிர் நலன் திட்டம்
D. இலவசக் காலணித் திட்டம்
1.4. வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
I. பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.
1. சுட்டுத் திரிபு – வல்லினம் மிகும்
2. திசைப் பெயர்கள் – வல்லினம் மிகும்
3. பெயரெச்சம் –வல்லினம் மிகாது
4. உவமைத் தொகை – வல்லினம் மிகும்
5. நான்காம் வேற்றுமை விரி – வல்லினம் மிகும்
6. இரண்டாம் வேற்றுமை தொகை – வல்லினம் மிகாது
7. வினைத் தொகை – வல்லினம் மிகாது
8. உருவகம் – வல்லினம் மிகும்
9. எழுவாய்த் தொடர் – வல்லினம் மிகாது
10.எதிர்மறைப் பெயரெச்சம் – வல்லினம் மிகாது
II. பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

38
1. அதைச் செய்தது நான் அன்று.
விடை – அதைச் செய்தது நான் அல்லேன்
2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல.
விடை – பானையை உடைத்தது கண்ணன் அல்லேன்
3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.
விடை – மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.
விடை – சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்
5. பகைவர் நீவீர் அல்லர்.
விடை – பகைவர் நீவீர் அல்லீர்
III. சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை அல்ல
2. உங்களோடு வருவோர் நாம் அல்லோம்.
3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் அல்லன்
4. ஈ மொத்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன அல்ல
5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் நீ அல்லை.
IV. கலைச்சொல் அறிவோம்.
1. குதிரையேற்றம் – Equestrian
2. ஆதரவு – Support
3. கதாநாயகன் – The Hero
4. வரி – Tax
5. முதலமைச்சர் – Chief Minister
6. வெற்றி – Victory
7. தலைமைப்பண்பு – Leadership
8. சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly

இயல் 2: அறத்தால் வருவதே இன்பம்


2.1. ஒன்றே குலம்
I. சொல்லும் பொருளும்
1. நமன் – எமன்
2. நாணாமே – கூசாமல்
3. சித்தம் – உள்ளம்
4. உய்ம்மின் – ஈடேறுங்கள்

39
5. நம்பர் – அடியார்
6. ஈயில் – வழங்கினால்
7. படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

A. புலன்
B. அறனை
C. நமனை
D. பலனை
2. ஒன்றே _____ என்று கருதி வாழ்வபதை மனிதைப் பண்பாகும்.

A. குலம்
B. குளம்
C. குணம்
D. குடம்
3. ‘நமனில்லை‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. நம் + இல்லை
B. நமது + இல்லை
C. நமன் + நில்லை
D. நமன் + இல்லை
4. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. நம்பரங்கு
B. நம்மார்க்கு
C. நம்பர்க்கங்கு
D. நம்பங்கு
2.2. மெய்ஞ்ஞான ஒளி
I. சொல்லும் பொருளும்
1. பகராய் – தருவாய்
2. பராபரம் – மேலான பொருள்
3. ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
4. அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மனிதர்கள் தம் _____ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

40
A. ஐந்திணைகளை
B. அறுசுவைகளை
C. நாற்றிசைகளை
D. ஐம்பொறிகளை
2. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் _____.

A. பகர்ந்தனர்
B. நுகர்ந்தனர்
C. சிறந்தனர்
D. துறந்தனர்
3. ‘ஆனந்தவெள்ளம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

A. ஆனந்த + வெள்ளம்
B. ஆனந்தன் + வெள்ளம்
C. ஆனந்தம் + வெள்ளம் 
D. ஆனந்தர் + வெள்ளம்
4. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. உள்ளேயிருக்கும்
B. உள்ளிருக்கும்
C. உளிருக்கும்
D. உளருக்கும்
2.3. அயோத்திதாசர் சிந்தனைகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அயோத்திதாசர்_____சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

A. தமிழக
B. இந்திய
C. தென்னிந்திய
D. ஆசிய
2. அயோத்திதாசர் நடத்திய இதழ்_____.

A. ஒருபைசாத் தமிழன்
B. காலணாத் தமிழன்
C. அரைப்பைசாத் தமிழன்
D. அரையணாத் தமிழன்

41
3. கல்வியோடு _____ கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.

A. சிலம்பமும்
B. கைத்தொழிலும்
C. கணிப்பொறியும்
D. போர்த்தொழிலும்
4. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது
________.

A. ஆழ்ந்த படிப்பு
B. வெளிநாட்டுப்பயணம்
C. இதழியல் பட்டறிவு
D. மொழிப்புலமை
5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ________.

A. வானம்
B. கடல்
C. மழை
D. கதிரவன்
2.4. யாப்பு இலக்கணம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அசை _____ வகைப்படும்.

A. இரண்டு
B. மூன்று
C. நான்கு
D. ஐந்து
2. விடும் என்பது_____ சீர்.

A. நேரசை
B. நிரையசை
C. மூவசை
D. நாலசை
3. அடி _____ வகைப்படும்.

A. இரண்டு

42
B. நான்கு
C. எட்டு
D. ஐந்து
4. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _____.

A. எதுகை
B. இயைபு
C. அந்தாதி
D. மோனை
II. பொருத்துக.
1. வெண்பா – துள்ளல் ஓசை
2. ஆசிரியப்பா – செப்பலோசை
3. கலிப்பா – தூங்கலோசை
4. வஞ்சிப்பா – அகவலோசை
விடை :- 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ
III. கலைச்சொல் அறிவோம்.
1. தொண்டு – Charity
2. நேர்மை – Integrity
3. ஞானி – Saint
4. பகுத்தறிவு – Rational
5. தத்துவம் – Philosophy
6. சீர்திருத்தம் – Reform
2.5. திருக்குறள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஆண்மையின் கூர்மை _____.

A. வறியவருக்கு உதவுதல்
B. பகைவருக்கு உதவுதல்
C. நண்பனுக்கு உதவுதல்
D. உறவினருக்கு உதவுதல்
2. வறுமை வந்த காலத்தில் _____ குறையாமல் வாழ வேண்டும்.

A. இன்பம்
B. தூக்கம்
C. ஊக்கம்
D. ஏக்கம்

43
3. ‘பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. பெரிய + செல்வம்
B. பெருஞ் + செல்வம்
C. பெரு + செல்வம்
D. பெருமை + செல்வம்
4. ‘ஊராண்மை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. ஊர் + ஆண்மை
B. ஊராண் + மை
C. ஊ + ஆண்மை
D. ஊரு + ஆண்மை
5. திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. திரிந்ததுஅற்று
B. திரிந்தற்று
C. திரிந்துற்று
D. திரிவுற்று
II. பொருத்துக.
1. இன்பம் தருவது – நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்
2. நட்பு என்பது – குன்றிமணியளவு தவறு
3. பெருமையை அழிப்பது – செல்வம் மிகுந்த காலம்
4. பணிவு கொள்ளும் காலம் – சிரித்து மகிழ மட்டுமன்று
5. பயனின்றி அழிவது – பண்புடையவர் நட்பு
விடை :- 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ

இயல் 3: குன்றென நிமிர்ந்து நில்


3.1 உயிர்க்குணங்கள்
I. சொல்லும் பொருளும்
1. நிறை – மேன்மை
2. அழுக்காறு – பொறாமை
3. பொறை – பொறுமை
4. மதம் – கொள்கை
5. பொச்சாப்பு – சோர்வு

44
6. இகல் – பகை
7. மையல் – விருப்பம்
8. மன்னும் – நிலைபெற்ற
9. ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அடுத்தவர் வாழ்வைக் கண்டு _____ கொள்ளக்கூடாது.

A. உவகை
B. நிறை
C. அழுக்காறு
D. இன்பம்
2. நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று _____ .

A. பொச்சாப்பு
B. துணிவு
C. மானம்
D. எளிமை
3. ‘இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.

A. இன்பம் + துன்பு
B. இன்பம் + துன்பம்
C. இன்ப + அன்பம்
D. இன்ப + அன்பு
4. குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. குணங்கள்எல்லாம்
B. குணமெல்லாம்
C. குணங்களில்லாம்
D. குணங்களெல்லாம்
III. பொருத்துக
1. நிறை – பொறுமை
2. பொறை – விருப்பம்
3. மதம் – மேன்மை
4. மையல் – கொள்க
விடை :- 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ
3.2. இளைய தோழனுக்கு

45
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உன்னுடன் நீயே_____கொள்.

A. சேர்நது
B. பகை
C. கைகுலுக்கிக்
D. நட்பு
2. கவலைகள்_____அல்ல

A. சுமைகள்
B. சுவைகள்
C. துன்பங்கள்
D. கைக்குழந்தைகள்
3. ‘விழித்தெழும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. விழி + எழும்
B. விழித்து + எழும்
C. விழி + தெழும்
D. விழித் + தெழும்
4. ‘போவதில்லை’என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. போவது + இல்லை
B. போ + இல்லை
C. போவது + தில்லை
D. போவது + தில்லை
5. ‘படுக்கையாகிறது’என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

A. படுக்கை + யாகிறது
B. படுக்கையா + ஆகிறது
C. படுக்கையா + கிறது
D. படுக்கை + ஆகிறது
6. தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. தூக்கிகொண்டு
B. தூக்குக்கொண்டு
C. தூக்கிக்கொண்டு
D. தூக்குகொண்டு
46
7. விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

A. விழியெழும்
B. விழித்தெழும்
C. விழித்தழும்
D. விழித்துஎழும்
3.3 சட்டமேதை அம்பேத்கர்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ___________

A. இராதாகிருட்டிணன்
B. அம்பேத்கர்
C. நௌரோஜி
D. ஜவஹர்லால் நேரு
2. பூனா ஒப்பந்தம் __________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

A. சொத்துரிமையை
B. பேச்சுரிமையை
C. எழுத்துரிமையை
D. இரட்டை வாக்குரிமையை
3. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ________

A. சமாஜ் சமாத சங்கம்


B. சமாத சமாஜ பேரவை
C. தீண்டாமை ஒழிப்புப் பேரவை
D. மக்கள் நல இயக்கம்
4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது
வழங்கியது.

A. பத்மஸ்ரீ
B. பாரத ரத்னா
C. பத்மவிபூசண்
D. பத்மபூசன்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் புத்தரும் அவரின் தம்மமும்
2. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் சுதந்திர தொழிலாளர் கட்சி

47
3. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் இலண்டன் சென்றார்.
3.4 அணி இலக்கணம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பிறிதுமொழிதல்அணியில்_____ மட்டும் இடம்பெறும்.

A. உவமை 
B. உவமேயம்
C. தொடை
D. சந்தம்
2. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும்
கூறுவது _____ அணி.

A. ஒற்றுமை
B. வேற்றுமை 
C. சிலேடை
D. இரட்டுற மொழிதல்
3. ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது __________ அணி.

A. பிறிதுமொழிதல்
B. இரட்டுறமொழிதல்
C. இயல்பு நவிற்சி
D. உயர்வு நவிற்சி
4. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் _____________ அணி.

A. பிறிதுமொழிதல்
B. வேற்றுமை
C. உவமை
D. சிலேடை
II. கோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.
1. சிறுமி தனது (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.
2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் தனது ( தனது/தமது) உழைப்பை
நல்கினார்.
3. உயர்ந்தோர் தம்மைத்தாமே (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ள
மாட்டார்கள்.
4. இவை தான் (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.

48
5. குழந்தைகள் தம்மால் (தன்னால்/தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச்
செய்கின்றனர்
கலைச்சொல் அறிவோம்.
1. குறிக்கோள் – Objective
2. பல்கலைக்கழகம் – University
3. நம்பிக்கை – Confidence
4. ஒப்பந்தம் – Agreement
5. முனைவர் பட்டம் – Doctorate
6. அரசியலமைப்பு – Constitution
7. வட்ட மேசை மாநாடு – Round Table Conference
8. இரட்டை வாக்குரிமை – Double voting

49

You might also like