You are on page 1of 4

1. படத்திற்குப் பொருந்தி வரும் ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.

A. ஊண்மிக விரும்பு
B.
C. ஒற்றுமை வலிமையாம்
D. உடலினை உறுதிசெய்
E. இழைத்தல் இகழ்ச்சி

2. கீழ்க்காணும் சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

வாத்து வியாபாரி தன் வாத்துகள் தங்க முட்டைகள் இடும், அவற்றைக்


கொண்டு தான் செல்வந்தராக வாழலாம் என்ற நம்பிக்கையில் மூழ்கி
இருந்தான். ஆனால், அவன் வாத்துகள் இதுவரை ஒரு தங்க முட்டைகூட
இடாததைக் கண்ட அவனின் நம்பிக்கை வெறும் கற்பனையில் முடிந்தது.

A. மனக்கோட்டை
B. கங்கணம் கட்டுதல்
C. தொன்று தொட்டு
D. கடுக்காய் கொடுத்தல்

3. கீழ்க்காணும் பழமொழிக்கேற்ற கூற்றைத் தேர்ந்தெடுக.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

A. உடல் ஆரோக்கியத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெறும்


செல்வமாகும்.
B. “பூப்பந்தாட்டத்தில் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்”
என்றார் ஆசிரியர்.
C. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு
அமையும்.
D. நமக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே
தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்பவனே புத்திசாலி.
4. கொடுக்கப்பட்டுள்ள உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

A. மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்லக்கூடாது


B. யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது
C. நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.
D. நல்லவர்களுடைய நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது

5. எழுத்தாளர் அமரர் புதுமைப்பித்தனின் நூல்கள் ____________________ மக்களால்


விரும்பப்படுகின்றன.

A. அன்றும் இன்றும்
B. சுற்றும் முற்றும்
C. அண்டை அயலார்
D. அல்லும் பகலும்

6. கீழ்க்காணும் வாக்கியங்களில் ஏழாம் வேற்றுமை உருபை ஏற்று வரும் வாக்கியத்தைத்


தெரிவு செய்க.

A. தலைமையாசிரியர் வெற்றிப் பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்.


B. விமலன் அகிலனோடு கடைக்குச் சென்றான்.
C. அம்மா தங்கைக்குப் புதிய பொம்மை வாங்கித் தந்தார்.
D. பிராணிகளின்பால் அன்பு கொள்ள வேண்டும்.

7. சரியான தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. அன்பழகன் வேகமாக ஓடி முதல் பரிசை வென்றார்.


B. அம்மாவும் அப்பாவும் பேராங்காடிக்குச் சென்றார்கள்.
C. பாவணன் கதை புத்தகத்தை வாசித்தான்.
D. இளங்கோ தங்கையோடு சந்தைக்குச் சென்றான்.

8. சரியான நிறுத்தற்குறியை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. சிவா கடைக்குச் சென்று பழங்கள் காய்கறிகள் மீன்கள் வாங்கினான்.


B. திருக்குறளை ‘உலகப் பொதுமறை’ என்று கூறலாம்.
C. “டிங்கி" காய்ச்சல் எப்படிப் பரவுகிறது?
D. தைப்பூசம் தை, மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

9. கீ ழ்க்கண்ட உரையாடலுக்குப் பொருந்தும் உவமைத் தொடரை


தெரிவி செய்க.

வளவா, ஏன் எப்பொழுதும்


விளையாடிக் கொண்டிருக்கிறாய்? சிறு
வயதில் படித்தால்தான் மனதில்
ஆழமாகப் பதியும் என்று உனக்குத்
தெரியாதா?
A. எலியும் பூனையும் போல
B. சிலை மேல் எழுத்து போல
C. சிறு துரும்பும் பல் குத்த உதவும்
D. மலரும் மணமும் போல

10. இப்படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க

A. விளையும் பயிர் முளையிலே


தெரியும்
B அன்பான நண்பனை ஆபத்தில் அறி
C சிக்கனம் சீரளிக்கும்
D சிறு துளி பெரு வெள்ளம்

பாகம் 2

[பரிந்துரைக்கப்படும் நேரம் : 45 நிமிடம்)

கேள்வி 11

அ. கொடுக்கப்பட்ட வாக்கியங்களுக்கேற்ற சரியான நிறுத்தற்குறிகளை ( : ) ( ; ) இட்டு


வாக்கியத்தை மீண்டும் திருத்தி எழுதுக.

1. நேசன் வேகமாக ஓடினான் முதல் பரிசை வென்றான்.


______________________________________________________________________
2. சிறப்பாக ஆட்சி செய்த மூவேந்தர்கள் சேரன், சோழன், பாண்டியன்.
______________________________________________________________________
3.
______________________________________________________________________

[3 புள்ளி]

ஆ) கொடுக்கப்பட்டிருக்கும் சூழலுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல


உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக்
கொண்டான்.

பழமொழி = _____________________________________________________

2. கயல்விழி பழைய நாளிதழ்கள் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள்.


ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத்
தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

பழமொழி = _____________________________________________________

சிறு துரும்பும் பல் குத்த உதவும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

[2 புள்ளி]

(5 புள்ளிகள்)

You might also like