You are on page 1of 11

கதை 1

அவைத்தலைவர் அவர்களே, நீதி வழுவா நீதிபதி அவர்களே,


மணிக்காப்பாளர் அவர்களே, ஆசிரியர்களே மற்றும் சக
நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண்
வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான்
கூறப்போகும் கதையின் தலைப்பு “முயல்களும் தவளைகளும்”.
ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள்
பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை
எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன.

அவர்களுக்கு அங்கு சுலபமாக சாப்பிட உணவு தினமும் கிடைத்துக்


கொண்டிருந்தது. திடீரென்று கோடைகாலம் வந்தது, கோடை கால
வெப்பம் அதிகமாக இருந்ததால் அங்கே பச்சை பசேல் என இருந்த
புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன.

இந்த முயல்களுக்கு சாப்பிட உணவு எதுவும் கிடைக்காமல் மிகவும்


அவதிப்பட்டு கொண்டு இருந்தன. அங்கே வேட்டை நாய்கள் இந்த
முயல்களை அங்கேயும் இங்கேயும் பதுங்கி வேட்டையாட
காத்திருந்தன.

அந்த வேட்டை நாய்களைக் கண்டு இந்த முயல்கள்


பொந்துக்குள்ளே ஒளிந்து கொண்டு, வெளியே வரவும் முடியாமல்
தவித்துக் கொண்டு இருந்தன. உணவு இல்லாமல் மிகவும்
கஷ்டப்பட்டன.

“எவ்வளவு நாள் தான் இப்படியே பொந்துக்குள் ஒளிந்து இருப்பது


நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, என்று எல்லாம் முயல்களும் கூடி
பேசிக்கொண்டு இருந்தன.

அப்போது ஒரு முயல் சொன்னது, “கடவுள் நம்மை பலவீனமாக


படைத்து விட்டார். எல்லா விலங்குகளும் ஏதாவது பிரச்சனை
வந்தால் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்கு பலம்
உடையதாக இருக்கின்றன.
ஆனால், நாம் என்ன ஒரு பிரச்சனை வந்தாலும் நம்மை காப்பாற்றிக்
கொள்ள முடியாமல் பலவீனமாக இருக்கிறோம். கடவுள் ஏன்
நம்மை இப்படி படைத்து விட்டார்?” என்று குறை கூறிக்கொண்டே
இருந்தது.

அப்போது மற்றொரு முயல் சொன்னது, “என்னால் இதற்கு மேல்


இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பசியினாலும் இந்த வேட்டை
நாய்களை பார்த்தும் பயந்து ஒதுங்கி வாழ்வதைவிட சாவதே
மேல். நான் ஏதாவது ஒரு நதியில் சென்று விழுந்து
விடுகிறேன்” என்று சொன்னது.

அப்போது மற்றொரு முயல் சொன்னது, “நாம் அனைவரும் எது


செய்தாலும் ஒன்றாக செய்ய வேண்டும். வாழ்ந்தால் ஒன்றாக
வாழ்வோம், இல்லையா எல்லோரும் சேர்ந்து நதியில் விழுந்து
விடுவோம்” என்று நதியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

அந்த முயல்கள் எல்லாம் ஒரு நதி கரையைச் சென்று அடைந்தனர்.


அங்கே சில தவளைகள் நதிக்கரையில் இருந்தது. இந்த
தவளைகள் எல்லாம் முயல்களை பார்த்து பயத்தில் ஒன்றன்பின்
ஒன்றாக நதியில் குதித்தன.

இதைப் பார்த்த முயல் கூட்டம் ஆச்சரியமாக நின்றது. “இந்தத்


தவளைகள் நம்மை பார்த்த பயந்து நீருக்குள் குதிக்கின்றன. நாம்
நாம்தான் இந்த உலகத்திலேயே பலவீனமானவர்கள் என்று
எண்ணினோம். நாம்தான் அனைவரையும் பார்த்து அஞ்சுகிறோம்
என்று பேசிக்கொண்டோம்.

ஆனால் நம்மையும் பார்த்து சிலர் அஞ்சுகின்றனர். இந்த


தவளைகளுக்கு நம்மை பார்த்தால் பயமாக இருக்கிறது
போல” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு முயல் சொன்னது, “நாம் இந்த பிரச்சனையில்


இருந்து தப்பித்துக் கொள்ளவும் நம்மை பாதுகாத்துக் கொள்ளவும்
நிச்சயமாக ஏதாவது ஒரு வழி இருக்கும். நாம் அந்த வழி என்ன
என்று கண்டுபிடிப்போம்.
இந்த நதியில் விழுந்து நம் வாழ்வை முடித்துக் கொள்வதை விட
என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்வதே மேல்” என்று கூறிக்
கொண்டு உணவு தேடி வேறு இடத்திற்கு திரும்பின.

நண்பர்களே இக்கதையிலிருந்து நாம் அறிந்துகொள்வது


என்னவென்றால்
வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாக
எதிர்கொள்ள வேண்டும். எந்த தவறான முடிவும் எடுக்க கூடாது.

நன்றி வணக்கம்.

கதை 2

அவைத்தலைவர் அவர்களே, நீதி வழுவா நீதிபதி அவர்களே,


மணிக்காப்பாளர் அவர்களே, ஆசிரியர்களே மற்றும் சக
நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண்
வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான்
கூறப்போகும் கதையின் தலைப்பு “தங்க சிறகுகள் கொண்ட
அன்னப்பறவை” .
ஒரு குளத்தில் அழகான தங்க அன்னப்பறவை வாழ்ந்து வந்தது.
பக்கத்து கிராமத்தில் இருந்த ஒரு விவசாயியின் மறுஜென்மம் தான்
இந்த அன்னப்பறவை. ஒரு நாள் அந்த விவசாயியின் மனைவி
குளத்தில் தண்ணீர் எடுக்க வந்தார்கள்.

அந்தத் தங்க அன்னப்பறவை அவளை பார்த்தது. அதிசயம்


என்னவென்றால் அந்த அன்னப்பறவை அவர்களிடம்
பேசியது, “நான் தான் உன்னுடைய இறந்து போன கணவன்.
இப்போது தங்க அன்னபறவையாய் பிறந்துள்ளேன். உனக்கும்
நம்மளுடைய பசங்களுக்கும் உதவி பண்ண வேண்டும் என்று
ஆசைப்படுகிறேன்” என்றது.

“ஆனால் உன்னால எப்படி எங்களுக்கு உதவி பண்ண முடியும்” என்று


அவர் மனைவி கேட்டாள். அதற்கு அவர், “நீ தினமும்
என்னிடமிருந்து ஒரு தங்க இறகை எடுத்துக் கொண்டு செல்லலாம்.
அதை விற்று உங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து
கொள்ளுங்கள்” என்றது.
அதற்கு அவருடைய மனைவி, “நீ சொல்வது ரொம்பவே நல்ல
யோசனை. இனிமேல் நாங்கள் எதற்கும் கஷ்டப்பட
வேண்டியதில்லை” என்றாள். தினமும் அவருடைய மனைவி
யாருக்கும் தெரியாமல் குளத்திற்கு வந்து ஒரு தங்க இறகை
எடுத்துக் கொண்டு செல்வாள்.
அப்படி ஒரு அழகான வீட்டையும் கட்டி விட்டார்கள். அப்போது ஒரு
நாள் விவசாயின் மனைவி “ஒருவேளை தங்க அன்னப்பறவை
மட்டும் காணாமல் போனால் நான் என்ன பண்ணுவேன்” என்று
யோசிதாள். அதனால் மறுநாள் குளத்திற்கு செல்லும் போது
மனைவி அன்னப் பறவையிடம், “நீங்க எங்க கூடவே வந்து
தங்கிக்கொள்ளுங்கள். நாங்கள் உங்களை நன்றாக
பார்த்துக்கொள்வோம்” என்று கூறுனாள்.அன்னப்பறவையும் சரி
என்று கூறியது. மனைவி அவர்களுடைய வீட்டுக்குப் பின்னாடி
அந்த அன்னப்பறவை தங்குவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு
செய்தாள்.

அந்த அன்னப்பறவையும் அங்கே சந்தோஷமாக வாழ்ந்து வந்தது.


சில நாட்களுக்குப் பிறகு அந்த அன்னப் பறவைக்கு வயதாகியது.
அவருடைய மனைவி தினமும் இறகு எடுப்பது கடினமாக உள்ளதால்
ஒரேயடியாக நிறைய இறகுகளை எடுக்க முடிவு செய்தாள், அந்த
அன்னப்பறவையிடம் சென்று “தினமும் ஒரு இறகை
எடுப்பது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
அதனால சேர்த்து நிறைய இறகுகள் எடுக்கலாம் என்று
எண்ணுகிறேன்” என்று சொன்னாள். அதற்கு அந்த
அன்னபறவை, “நீ சொல்லுவது சரிதான், ஆனால் என்னால் ஒரு
நாளைக்கு ஒரு தங்க இறகுக்கு மேல் தர இயலாது” என்று
சொன்னது. உடனே மனைவி அந்த அன்னப்பறவையை பிடித்து
எல்லா தங்க இறகுகளையும் எடுத்து விட்டாள். அப்போது அந்த
இறகுகள் எல்லாம் சாதாரண இறகுகளாக மாறியது. உடனே அவள்
அதிர்ச்சியுற்றாள்.

அப்போது அந்த அன்னப் பறவை சொன்னது, “என் பேச்சை நீ மீறி


விட்டாய். என்னால் ஒரு நாள் ஒரு தங்க இறகை மட்டுமே தர
முடியும் அதற்கு மேல் தங்க இறகை என்னால் தர இயலாது” என்று
சொன்னது. உடனே அவள் கோபத்தில் அந்த அன்னப் பறவையை
பிடித்து வெளியே எறிந்து விட்டாள்.

அந்த அன்னப்பறவையும் சோகத்தில் மீண்டும் குளத்திற்கு


புறப்பட்டு சென்றது. அவர் மனைவி மீண்டும் எல்லா பணத்தையும்
செலவழித்து ஏழையாக மாறி விட்டாள். அவளுக்கு இப்போது உதவி
செய்ய எந்த அன்னப்பறவையும் இல்லை, யாரும் இல்லை.

நண்பர்களே இக்கதையிலிருந்து நாம் அறிந்துகொள்வது


என்னவென்றால்
அதிர்ஷ்டம் நம் தலையெழுத்தை மாற்றும் போது அதை நாமே
அழிக்கக்கூடாது. பேராசை பெரும் நஷ்டம்.

நன்றி வணக்கம்.
கதை 3

அவைத்தலைவர் அவர்களே, நீதி வழுவா நீதிபதி அவர்களே,


மணிக்காப்பாளர் அவர்களே, ஆசிரியர்களே மற்றும் சக
நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண்
வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான்
கூறப்போகும் கதையின் தலைப்பு “கரடியும் தேனீக்களும்”.

அது ஒரு அழகிய அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு பயங்கரமான


கரடி ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அந்த கரடி மிகவும்
பசியோடு காட்டில் உணவிற்காக அலைந்து திரிந்தது. வெகு நேரம்
ஆகியும் அதற்கு உணவு கிடைக்கவில்லை.

வழியில் ஒரு மரத்தின் மீது பெரிய தேன்கூடு ஒன்றை கண்டது.


தேன்கூட்டைக் கண்ட கரடி, தேன்கூட்டைக் கலைத்து அதில் உள்ள
தேனை குடிக்க நினைத்து அதன் அருகில் சென்றது.

கரடி தேன்கூட்டிற்கு அருகில் செல்லும் சமயத்தில் வெளியில்


சென்று இருந்த தேனீ ஒன்று கரடி தேன்கூட்டிற்கு அருகில்
வருவதைப் பார்த்து அதன் அருகில் சென்றது. கரடி அந்த
தேனியைப் பார்த்து, நான் இப்போது இந்த தேன்கூட்டில் உள்ள
தேனை சாப்பிட போறேன் என்று சொன்னது, தேனீயும் இது எங்கள்
வீடு. இதை ஒன்றும் சொய்யாதிங்கள் என்று கெஞ்சியது.

கரடியோ தேனியை பார்த்து, நீயோ அளவில் சிறியவன். நான்


உன்னை விட பலமடங்கு பெரியவன். உன்னால் என்னை ஒன்றும்
செய்ய இயலாது என்று கூறியது. நிலைமையை உணர்ந்த தேனீ
கரடியிடம், எனக்கு ஒரு நிமிடம் அவகாசம் கொடு, நான்
என்னுடைய பொருட்களை தேன்கூட்டில் இருந்து எடுத்து சென்று
விடுகிறேன் என்று கரடியிடம் கூறியது. கரடியும் இதற்கு
ஒத்துக்கொண்டது.
தேன் கூட்டிற்குச் சென்ற அந்த ஒற்றை தேனீ, தேன்கூட்டில் இருந்த
எல்லா தேனீக்களிடம் நடந்த சம்வத்தைக் கூறியது. எல்லா
தேனீக்களும் உடனே கூட்டிலிருந்து வெளியே வந்தன.

கூட்டிலிருந்து வெளியே வந்த எல்லா தேனீக்களும் உடனே


கரடியைக் கொட்டத் தொடங்கின. கரடிக்கு தேனீக்கள்
கொட்டியதால் வழியால் துடித்தது. மேலும் வலி தாங்க முடியாத கரடி
ஓடத்தொடங்கியது. தேனீக்களும் கரடியை விடாமல் மிகவும்
வேகமாக தொடர்ந்து சென்றன.

போராட்டத்தின் முடிவில் வேறு வழியில்லாமல் தேனீக்களிடமிருந்து


தப்பிக்க கரடி காட்டில் இருந்த ஒரு ஆற்றின் நடுவில் குதித்தது.
தேனீக்களும் கரடியை மன்னித்து தேன்கூட்டிற்குச் சென்றன.

நண்பர்களே இக்கதையிலிருந்து நாம் அறிந்துகொள்வது


என்னவென்றால்
ஒருவருடைய உருவத்தை வைத்து அலட்சியமாக எண்ண
கூடாது. ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’.

. நன்றி வணக்கம்.
அன்னை தமிழே அன்பின் முகவரி. உங்கள்
அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான் கூறப்போகும்
கதையின் தலைப்பு “காட்டு ராஜா”.
ஓர் அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது
காட்டு விலங்குகள் அனைத்துக்கும் தானே ராஜா என்று
அறிவித்தது. அச்சிங்கம் தனக்குப் பணிவிடை செய்யச்
சில விலங்குகளை நியமித்திருந்தது.
சிங்கத்தின் குகையை மயில் சுத்தம் செய்தது. சுண்டெலி
சிங்கத்தின் பற்களையும் பாதங்களையும் சுத்தம் செய்தது.
சிங்கத்திற்கு வேண்டிய உணவைப் புலி வேட்டையாடிக்
கொண்டு வந்தது.
ஒரு நாள் சிங்கத்திற்குப் பயங்கரமாகப் பசித்தது. தனக்கு
இரையை உடனே கொண்டுவரும்படி புலிக்குக்
கட்டளையிட்டது. புலி வெளியே சென்று வேட்டையாடத்
தொடங்கியது. அது மிக விரைவில் ஓர் ஆட்டைப் பிடித்துக்
கொண்டு வந்தது.
மறுநாள் சிங்கம், “இன்று எனக்கு மானைச் சாப்பிட
ஆசையாக உள்ளது. எனவே, நீ ஒரு மானைப் பிடித்துக்
கொண்டுவா,’’ எனப் புலிக்குக் கட்டளை இட்டது.புலி
வேட்டைக்குச் சென்றபோது மற்ற விலங்குகள் எல்லாம்
ஒளிந்து கொண்டன. புலியால் ஒரு விலங்கையும்
வேட்டையாட முடியவில்லை. இறுதியாக அது ஒரு
மான்குட்டியைக் கண்டது.
“எல்லா விலங்குகளும் எங்கே போய்த் தொலைந்தன?’’
என்று புலி மான்குட்டியிடம் கோபமாகக் கேட்டது.“நீங்கள்,
அவற்றைப் பிடித்துக் கொன்று விடுவீர்கள் எனும் பயத்தில்
ஓடி ஒளிந்து கொண்டன,’’ என மான்குட்டி கூறியது.
“அப்படியென்றால் எனக்கும் வேறுவழி தெரியவில்லை.
உன்னைத்தான் நான் சிங்கத்திற்காகப் பிடித்துக்கொண்டு
செல்ல வேண்டும்,’’ எனப் புலி கூறியது.புலி மான்குட்டியைப்
பிடித்துக்கொண்டு வருவதைக் கண்ட சிங்கம் கோபமாக,
“நீ ஏன் மிகவும் முட்டாளாக இருக்கின்றாய்? இந்த
மான்குட்டி மிகச் சிறியதாகவும் மெலிந்ததாகவும்
இருக்கின்றது. இதைப் புசித்தால் என் பசி போகுமா?’’ என
முழங்கியது.
உடனே புலி, “ மன்னிக்க வேண்டும் மாட்சிமை தங்கிய
மகாராஜாவே! இப்போதைக்கு என்னால் இதைத்தான்
கொண்டுவர முடிந்தது,’’ எனக் கூறியது.புலியும் சிங்கமும்
உரையாடிக் கொண்டிருக்கும்போது மான்குட்டி
இடைமறித்து “ ராஜாவே! தங்களிடம் ஒரு தகவல்
கூறுவதற்கு வரும்போதுதான் இந்தப் புலி என்னைப்
பிடித்துக் கொண்டு வந்தது. தங்களுடைய சகோதரன்
அனுப்பிய தகவல்தான் அது, ’’ எனக் கதையை நீட்டியது
மான்குட்டி.
“ என்ன ? என் சகோதரனிமிருந்தா? எனக்கு எந்தச்
சகோதரனும் இல்லையே!’’ எனத் திகைப்புடன் கேட்டது
சிங்கம்.“ அப்படியா அரசே! ஆனால் அவன் எல்லா
விலங்குகளிடமும் இனிமேல் தங்களுக்கு மரியாதை
கொடுக்கக் கூடாது எனக் கட்டளையிட்டுள்ளான்,’’ என
நயமாகப் பொய் சொன்னது மான்குட்டி.
“ அவனுக்கு அவ்வளவு துணிச்சலா? எங்கே அவன்
இருக்கின்றான்?’’ எனச் சிங்கம் கர்ச்சித்தது.“
காட்டிலுள்ள ஒரு பெரிய ஆழமான குழிக்குள் அவன்
வசிக்கின்றான், நான் அங்கேதான் அவனைக் கண்டேன்,’’
எனக் மான்குட்டி கூறியது.
“ என்னை அவனிடம் அழைத்துச் செல். நான் அவனுக்குப்
பாடம் புகட்டுவேன். அதை அவன் ஒருபோதும்
மறக்கமாட்டான்,’’ எனச் சிங்கம் கட்டளை
இட்டது.சிங்கத்தின் கோபத்தைக் கண்டு குகையில் வேலை
செய்த விலங்குகள் கதி கலங்கின. சிங்கத்தின் முழக்கம்
குகையை அதிரச் செய்தது. சிங்கம் கோபமாகக்
குகையைவிட்டு மான்குட்டியுடன் வெளியேறியது.
சிங்கம், மான்குட்டியைப் பின்தொடர்ந்து சிறிது தூரம்
சென்றபின், “ எங்கே அவன்? அவன் எங்கே ஒளிந்து
கொண்டிருக்கின்றான்?’’ எனச் சிங்கம் கோபமாகக்
கேட்டது.
“ நாம் அருகில் வந்துவிட்டோம்,’’ எனக்கூறிய மான்குட்டி
சிங்கத்தை ஒரு குழிக்கு அருகில் கூட்டிச் சென்றது. “
உங்களுடைய சகோதரன் இதற்குள்தான் வாழ்கிறான்!”
எனக்கூறியது.
“ நான் அவனுக்கருகில் செல்லும்போது சத்தம் போடாமல்
அமைதியாக இரு,” எனச் சிங்கம் கட்டளை இட்டது.
மேலும் “ நாம் இங்கே இருக்கின்றோம் என்பது அவனுக்குத்
தெரிய வேண்டாம்,’’ எனக் கூறிய சிங்கம் குழிக்கு அருகில்
முன்னேறிச் சென்றது.
சிங்கம் பயங்கரமாக முழங்கியபடியே குழிக்குள் பாய்ந்தது.
தன்னைச் சூழ்ச்சி செய்துதான் குழிக்குள் மான்குட்டி
விழவைத்துள்ளது என்பதை சிங்கம் உணர்ந்தது. சிங்கம்
பலமுறை முயன்றும் அந்தக் குழியிலிருந்து வெளியில் வர
முடியில்லை.
மான்குட்டி மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. காட்டிலுள்ள
எல்லா விலங்குகளும் மான்குட்டிக்கு நன்றி
கூறின.“இனிமேல் சிங்கத்திடமிருந்து ஓர் ஆபத்தும்
இல்லை!’’ எனக் கூறி அவை மகிழ்ச்சியடைந்தன.
நண்பர்களே இக்கதையிலிருந்து நாம் அறிந்துகொள்வது
என்னவென்றால் விவேகமாகச் சிந்தித்தால் நமக்கு
ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து நம்மை நாம்
பாதுகாத்துக்கொள்ள முடியும்.

நன்றி வணக்கம்.

You might also like