You are on page 1of 2

கேள்வி 1

ஓர் உருபன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்கள் ஒரு

சொல்லாக அமையலாம். பொதுவாக ஒரு சொல் என்பது ஒரு

வேர்ச்சொல்லையும், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விகுதி

அல்லது ஒட்டுகளையும் கொண்டதாக இருக்கும். தமிழில் உள்ள

சொற்களை அவற்றின் இலக்கணச் செயற்பாட்டுக்கு ஏற்ப அமையும்.

தமிழ் இலக்கணம் அடிப்படையில் சொல்லியலில் மூன்று

நிலைகள் உள்ளன. அவை தனி வடிவம், ஒட்டு வடிவம் மற்றும்

தொகை வடிவம் ஆகும். முதலில் தனி வடிவத்தைக் காண்போம்.

ஒரு சொல்லின் அடிப்படை வடிவம் அதன் அடிச்சொல்லேயாகும்.

தனி வடிவம் என்பது அடிச்சொல்லே தனித்து நின்று சொல்லுதல்

மிக எளிய அமைப்பாகும். இதில் எதனையும் பிரித்து அறிய

வேண்டுவதில்லை. அது தனி வடிவம் கொண்டு இயங்கும்.

எடுத்துக்காட்டு சொற்கள் :

i. பல்

ii. கண்

iii. உண்,

iv. மாடு

இரண்டாவது நிலையாக விளங்குவது ஒட்டு வடிவம் ஆகும்.

ஒரு அடிச்சொல்லுடன் ஒட்டப்படும் அல்லது இணைக்கப்படும்

ஒவ்வொரு கூறும் ஒட்டு எனப்படும். மேலும், அடிச்சொல்லோடு


விகுதிகள் சேர்ந்து ஒட்டி நின்றலும் அதனை ஒட்டு வடிவம் என்று

கூறுவர்.

எடுத்துக்காட்டு சொற்கள் :

i. கண்ணை ( கண் + ஐ )

ii. உண்கிறான் ( உண் + கிறு + ஆன் )

iii. மாடுகள் ( மாடு + கள் )

மலையன், பொன்னன் முதலியனவும் இத்தகையனவே ஆகும்.

சொல்லியலில் இவையே மிகவும் பிரித்தாராயப்படுகின்றன.

சேர்க்கை உருபன்கள் ஆக்க உருபுகளாகவும், பால், திணை, எண்,

இடம், வேற்றுமை முதலியன் காட்டும் உருபன்கள் இலக்கண

உருபுகளாகவும் அமைகின்றன.

சொல்லியலில் மூன்றாவது நிலையாக விளங்குவது தொகை

வடிவம். சொல்லியலில் இவையே மிகவும் பிரித்தறியப்படுகின்றன.

இரண்டு அடிச்சொற்கள் இணைந்து தொகைப்பட்டால் அவை தொகை

வடிவம் எனப்படும். மொழியின் கண் காணப்படும் இரு சொற்களைச்

சேர்த்து தொகைச் சொற்கள் உருவாக்கிக் கொள்ளத் தொல்காப்பியர்

எச்சவியல் சூத்திரங்கள் நமக்கு வழிகாட்டிகளாக அமைந்துள்ளன.

தொகை வடிவம் வழியாகப் புதிய சொற்கள் உருவாக்கிக்

கொள்ளலாம்.

You might also like