You are on page 1of 6

அறிவியல்

ஆண்டு 4

பூமி
பூமியின் புவி ஈர்ப்பு சக்தி
 பூமிக்கு ஈர்ப்பு சக்தி உண்டு.
 அதை புவி ஈர்ப்பு சக்தி என்போம்.
 புவி ஈர்ப்பு சக்தி என்பது ஒரு பொருளைப் பூமியை நோக்கி ஈர்க்கும்
உந்து விசையாகும்.
 எனவேதான் பொருள்கள் கீழே விழுகின்றன.
 புவி ஈர்ப்பு சக்தியை முதலில் கண்டுணர்ந்து கூறியவர் ஐசெக் நீயூட்டன்
( Isaac Newton).
பூமியிலிருந்து தூரமாகச் செல்ல
செல்ல ஈர்க்கும் சக்தி குறையும் பூமியில் ஒரு பொருள் அதன்
அமைவிடத்தில் இருப்பதற்கு
உதவுகிறது

வெவ்வேறு அளவுகளில் கிரகங்கள்,


பொருள்கள் இருந்தாலும் ஒரே நட்சத்திரங்கள், நிலவு
புவி ஈர்ப்பு ஆகியவற்றிற்குச் சுய
வேகத்தில் புவி ஈர்ப்பு சக்தி
சக்தி ஈர்ப்பு சக்தி உண்டு
பொருள்களைக் கீழே ஈர்க்கும்.

மேலே செல்கின்ற பொருள்கள் எல்லாவற்றையும் ஈர்க்கும்


கீழே வந்தடையும்
பூமியின் சுழற்சியும்
நகர்ச்சியும்
 பூமி தன் அச்சில் சுழல்வதோடுஅதன் கோள் வழிப்பாதையில்
சூரியனையும் சுற்றி வருகின்றது.
 பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 ¼ நாள்கள்
ஆகின்றன.
 பூமி சூரியனை மேற்கிலிருந்து கிழக்காக கடிகாரமுள்
எதிர்த்திசையில் சுற்றி வருகின்றது.
பூமியின் சுழற்சி
 பூமி தன் அச்சில் சுழல்கிறது.
 இதனை பூமியின் சுழற்சி என்போம்.
 பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கிறது.
 இதனால், பூமியின் கிழக்குப் பகுதியே முதலில்
சூரிய ஒளியைப் பெறுகிறது.
 பூமி ஒரு முறை தன் அச்சில் சுழல்வதற்கு 24 மணி
நேரம் ஆகிறது.
 இந்தக் கால அளவை ஒரு நாள் என்போம்.
 பூமி சுழலும் திசை கடிகாரமுள் சுழற்சியின் எதிர்த்
திசையாகும்.
இரவு பகல்
 பூமி தன் அச்சில் சுழலும்போது, சூரியனை
நோக்கி இருக்கும் பகுதி வெளிச்சத்தைப்
பெறுகிறது. இதனைப் பகல் என்றும் சூரிய ஒளி
படாத பகுதியை இரவு என்றும் கூறுகிறோம்.

You might also like