You are on page 1of 2

பேச்சு போட்டி

காலத்தின் அருமை.

மதிப்பிற்குறிய தலைமையாசிரியர் அவர்களே, அறிவு கண்களைத் திறந்து


வைக்கும் ஆரிரியப் பெருந்தகைகளே, மணி காப்பாளரே, மற்றும் மாணவச்
செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் என் முத்தான முதற்கண் வணக்கம். என்
பெயர் _____________________. நான் நான்கு ________________ பயில்கிறேன். இன்று
நான் பேசவிருக்கும் தலைப்பு காலத்தின் அருமை.

சபையோர்களே,

காலம் என்பது மானிடர்களுக்குக் கிடைத்த வரம் என்றால் அது மிகையாகது.


காலத்தைத் தவற விட்டால் மீ ண்டும் பெறுவதென்பது இயலாத ஒன்றாகும்.
ஆகையால் நாம் அன்றாட வாழ்வில், காலத்தின் அருமை பெருமைகளை அறிந்து
செயல்படுவது அவசியமாகும்.

மாணவர்களே,

இளமையில் கள், காலமறிந்து உண், காலமும் நேரமும் யாருக்கும்


காத்திருக்காது, பருவத்தே பயிர் செய் போன்ற பொன்மொழிகள் காலத்தின்
முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்


கருதி இடத்தாற் செயின். ( 484)

எனும் குறளின்வழி திருவள்ளுவர் காலத்தின் மகிமையைப் பற்றி மிகச்


சிறப்பாகக் கூறியிருக்கிறார். இக்கருத்திற்கேற்ப மாணவர்களாகிய நாம் ஒவ்வொரு
நாளும் குறித்த நேரத்தில் நம் கடமைகளைச் செய்து முடிப்பது சாலச்
சிறந்ததாகும்.

சகோதர சகோதரிகளே,

அதிகாலையில் எழுந்து, சிறிது நேரம் படித்தல், அதன் பிறகு காலை கடன்களை


முடித்தல், குறித்த நேரத்தில் பள்ளிக்குச் செல்லுதல், பாடங்களைக் கருதூன்றிக்
கற்றல், ஓய்வு நேரங்களில் வாசித்தல் போன்ற நடவடிக்கைகளைக் கையாள
வேண்டும். இவை யாவும் காலத்தின் சிறப்பை உணர்த்தும் நேர்மறைச் சிந்தனை
நடவடிக்கைகளாகும்.

நண்பர்களே,

சில வேலைகளை நாளை பார்ப்போம் என்று தள்ளிப் போடுவது, வாய்ப்புகளைப்


பயன்படுத்திக் கொள்ளாமை, சோம்பல் குணம் போன்றவை காலத்தை
பேச்சு போட்டி

மதியாதவரின் எதிர்மறைச் செயல்களாகும். எனவே நாம் சிறுவயதிலிருந்தே


காலம் எனும் வரத்தைப் போற்றிச் செயலாற்றி வாழ்வில் மேன்மை அடைய
வேண்டும். நன்றி.

You might also like