You are on page 1of 2

மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதில் கைப்பேசியின் பணி மகத்தானது.

 வீட்டிலிருந்து முக்கிய அவசர செய்திகளை அனுப்புவதற்கும் பள்ளியிலிருந்து


காலதாமதமாக வருவதற்கான காரணத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்தவும்
உன்னதமான சாதனம் கைபேசியே.கடத்தல்/பாலியல் வன்முறை போன்றவற்றையும்
தவிர்க்க உதவுகின்றது.இதுப்போன்ற துயரங்கள் தொடராமல் இருக்க கைப்பேசியின்
உள்ள சிறப்பு அம்சமான தடங்காட்டி (GPS) பயன்படுத்துவதன் வழி பெற்றோர்கள்
பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது மட்டுமல்லாது பிள்ளைகள் இருக்கும்
இடங்களையும் கண்காணிக்க இயலும்.
 இயற்கை பாதுகாப்பிற்கு உதவுகிறது. கைத்தொலைப்பேசியின் பயன்பாட்டால்
புத்தகங்கள் அச்சிடும் செலவு குறைவு. இதனால் காகிதம் விரயங்களைத்
தவிர்க்கலாம். ஆசிரியர்கள் பல்வேறு பயிற்சிகளை/காவூட் போன்ற
விளையாட்டுகளை கைத்தொலைப்பேசியிலையே வழங்கலாம். . இதனால் புத்தகம்
அச்சிடப்படும் செலவில்லை. தாள் விரயங்களைத் தவிர்க்கலாம். மரங்கள்
வெட்டப்படுவதை தவிர்க்க இயலும். இதவழி தொழில்நுட்பம் அறிவும்
மாணவர்களிடையே விதைக்க முடியும் இதன்வழி மரங்களைப் பேணிக்காக்க
இயலும்.
 மனவுலைச்சலைத் தவிர்க்கலாம். பள்ளியில் தனக்கு எதிராக செயல்படும் சக
மாணவர்களின் செயல்பாடுகளை ஆசிரியரிடம் நேரடியாக கூற அச்சம் கொள்ளும்
மாணவர்கள், தங்களின் கைத்தொலைப்பேசியின் வாயிலாக ஆலோசக
ஆசிரியரிடமும்(guru kaunseling) வகுப்பு ஆசிரியரிடமோ தனது சிக்கலை
குறுந்தகவலின் மூலம் பகிரலாம். மேலும், உள்முக சிந்தனை மாணவர்கள்
வகுப்பறையில் தங்கள்டைய வினாக்களை அனைவரிடத்தின் முன்னிலையிலும்
வினவ தயக்கம் கொள்வார்கள். இதுப்போன்ற மாணவர்கள், கைப்பேசியின்
வாயிலாக தன்னுடைய கேள்விகளையும் பதில்களையும் ஆசிரியரிடையே
அவ்வப்போது குறுந்தகவலின் வாயிலாக அனுப்பி தெளிவு பெறும் போது,
அவர்களை அயறியாமலேயே அவர்களின் மனவுலைச்சலும் மன இருக்கமும்
நீங்குகிறது. இம்மாணவர்களின் தனிப்பட்ட சிக்கலையும், குழப்பங்களையும்,
மனவுலைச்சலையும் கைப்பேசியின் வாயிலாக தவிர்க்கலாம்.

sharmi
 முதல் கருத்தானது 21-ஆம் நூற்றாண்டு கல்விக்கு கைப்பேசி பயன்பாடு உதவியாக
அமைகின்றது. மாணவர்களிடம் கைப்பேசி இருந்திருந்தால் எங்களால் எந்த
சிக்கலும் இன்றி பல கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டிருப்போம்.
தகவலைத் தேட புத்தகப் பயன்பாட கைப்பேசி பயன்பாட என்று கேட்டால்
நிச்சயமாக அனைவரும் கைப்பேசி பயன்பாடுதான் என்று கூறுவார்கள். காரணம்
நொடிப் பொழுதில் தேடலுக்கான விடைகள் நமக்குக் கிடைக்கின்றன.
 சமூக ஊடகமான புலனத்தின் வழி மாணவர்கள் கற்றலை மேற்கொள்ளலாம்.
இதனை flip classroom அதாவது ‘பிலிப்ட் வகுப்பறைதிட்டத்தை என்று கூறலாம்.
ஒரு ஆசிரியர் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்றால் அன்றைய பாடத்திற்கேற்ற
குறிப்புகளையும் விளக்கங்களையும் பயிற்சிகளையும் புலனக் குழுவில் பகிர்வதால்
மாணவர்கள் அப்பாட வேலையில் குறிப்புகளையும் விளக்கங்களையும் செவிமடுத்து
சுய கற்றலை மேற்கொள்ள முடியும்
 கைப்பேசி பயன்பாட்டின் வழி பொறுப்புள்ள மாணவர்களையும் உருவாக்க முடியும்.
வகுப்பறையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு பயிற்சியைச் செய்து முடிக்க
வேண்டும் என்றால் மாணவர்கள் நேரத்திற்கேற்ப அலாராம் வைத்து பயிற்சியைக்
குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கலாம். அதுமட்டுமல்லாமல் பள்ளியில்
ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை கைப்பேசி நினைவூட்டியில் பதிவு
செய்துக்கொள்ளலாம். மாணவர்களும் கொடுத்த பாடங்கள் அல்லது வேலையைச்
செய்ய மறந்தாலும் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளிலும் நினைவூட்டி
வழி சரி பார்த்துக் கொள்ளலாம்.

You might also like