You are on page 1of 9

ஆய்வாளர் உறுதிமொழி

ப.செந்தில் குமார் நாள் :

இடைநிலை ஆசிரியர் இடம் :

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

கோவக்குளம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,

கரூர் மாவட்டம்.

நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு “இனமாற்றத்துடன் கூடிய கூட்டல் மற்றும் கழித்தல்


கணக்குகளை செய்வதில் ஏற்படும் இடர்பாடுகளைக் களைதல்”- என்ற தலைப்பில்
மேற் கொள்ளப்பட்ட செயலாய்வு 2022-2023-ம் கல்வி ஆண்டில் என்னால் செய்யப்பட்டது
என்றும், இதற்கு முன்னர் மேற்கண்ட தலைப்பில் செயலாய்வு சமர்ப்பிக்கப்படவில்லை
என்று உறுதியளிக்கிறேன்.

ஆய்வாளர் கையொப்பம்.

(ப.செந்தில் குமார்).

சான்றிதழ்

இரா.சுப்பிரமணியன். M.SC.M.Ed. M.phil நாள் :


முதல்வர். இடம்: மாயனூர்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
மாயனூர்,
கரூர் மாவட்டம்.

நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு “இனமாற்றத்துடன் கூட்டல் மற்றும்


கழித்தல் கணக்குகளை செய்வதில் கூடிய ஏற்படும் இடர்பாடுகளைக் களைதல்” - என்ற
தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட செயலாய்வு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கோவக்குளத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்- ப. செந்தில்குமார் என்பவரால் 2022-
2023-ம் கல்வி ஆண்டில் செய்யப்பட்டது என்றும் இதற்கு முன்னர் மேற்கண்ட தலைப்பில்
செயலாய்வு சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் சான்றளிக்கிறேன் .

முதல்வர்

நன்றியுரை

நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு “இனமாற்றத்துடன் கூட்டல் மற்றும் கழித்தல்


கணக்குகளை செய்வதில் இடர்பாடுகளை களைதல்” - என்ற தலைப்பில் செயலாய்வு
மேற்கொள்வதற்கு அனுமதி அளித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன
முதல்வர் அவர்களுக்கும், செயலாய்வு குழு ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும், நெறியாளர்
அவர்களுக்கும், செயலாய்வு மேற்கொள்ள அனுமதி அளித்த வட்டாரக் கல்வி அலுவலர்
அவர்களுக்கும், கோவக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் அவர்களுக்கும், செயலாய்வு மேற்கொள்ள உறுதுணையாக
இருந்த வகுப்பு ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன்.

நன்றியுடன்,
(ப.செந்தில் குமார் )

1. முன்னுரை

நம் அன்றாட வாழ்வில் கணிதத்தின் பங்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.


என்களாக, குறியீடுகளாக, வடிவங்களாக, மற்றும் உருவங்களாக நாம் அனைவரும் கணிதத்தை
அன்றாடம் பயன்படுத்தி வருகின்றோம். அத்தகைய இன்றியமையாத சிறப்பு மிக்க கணிதத்தின்
பயன்படுகள் தோற்றம் பற்றிய சில தகவல்களைக் காண் போம்.

“எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு"


என் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக்
கலைகளையும் வாழும் மக்களுக்கு கண்கள் என்று கூறியுள்ளார் வள்ளுவப் பெருந்தகை.
இவ்வாறு கூறுவதில் இருந்த நாம் அறிந்து கொள்ள வேண்டும் கணிதம் நமக்கு எந்த
அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதை அறியலாம்.

கணிதம் இந்த உலகத்தில், அக்காலத்திலும், இக்காலத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது .


அறிவுசார்ந்த எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுகிறது. இந்த
உலகத்தில் நடைபெறும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கும்,
நுணுக்கத்திற்கும் கணிதமே முக்கிய வழிகாட்டுதலாக திகழ்கின்றது மற்ற பாடத்தினருக்கு
கணிதம் புரியாத புதிராய் உணரப்படுகிறது ஏனென்றால் அதன் எதார்த்தமான தன்மை ஆகும்.

கணிதத்திற்கு சுய கல்வி நோக்கங்கள் உள்ளது. “டேவிட் வீலர்" என்பவர்


“கணிதத்தை நாம் எவ்வாறு செயல்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு கணிதத்தை
கற்றுக் கொள்கிறோம்” - என்று கூறுகிறார்.

தேசிய கலைத்திட்டம் 2005-ன் கருத்துப்படி கணித கல்வியின் திறமைகளை முக்கிய


இலக்கு “குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்துவதாகும்”

“மாதிரிகள்” - மாணவர்களுக்கு கணிதத்தில் தனித்துவத்தை பெறவும்,


விளக்கம் பெறவும், சூத்திரங்களைப் பெறவும், சூத்திரங்களை தொகுக்கவும் பயன்படுகிறது.
குழந்தைகள் மாதிரிமைப் பயன்படுத்தி வடிவங்கள், நிகழ்வுகள், எண்களின் தொகுப்பு
ஆகியவற்றை அறிந்து கொள்ள இயலும்போது கணிதத்தின்
சுவை வெளிப்படுகிறது. மேலும் இது அவர்களை மகிழ்வூட்டும் செயல்களில் ஈடுபடுத்துகின்றது.
மொழியைத் துல்லியமான வெளிப்பாடு மற்றும் குழப்பமற்ற சூழலில் பயன்படுத்துவது
கணிதக் கல்வியின் பண்பாகும். கணிதக் குறியீடுகள், மொழி செயல்பாடுகள் போன்றவற்றை
பயன்படுத்துவதன் மூலம் கணிதம் அர்த்தம் உள்ளதாகவும், முறையானதாகவும் திகழ்கிறது.

“NCF -2005”

2. ஆய்வின் பின்புலம்

ஆராய்ச்சியாளர் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கோவக்குளம் ஊராட்சி


ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
அவர் தொடக்கநிலை வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல்
பாடங்களைப் போதித்து வருகிறார்.

அவருடைய பத்து ஆண்டுகால ஆசிரியர் பணியில் தொடக்கநிலை வகுப்புகளில்


குறிப்பாக நான்காம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் இனமாற்றத்துடன் கூடிய கூட்டல்,
கழித்தல் கணக்குகள் செய்வதில் தடுமாறுகின்றனர். எனவே அதைக் களைந்து மாணவர்களின்
புரிதலை மேம்படுத்த இச் செயலாராய்ச்சியை மேற்கொள்ள ஆய்வாளர் திட்டமிட்டார்

3. ஆய்வின் தேவை

வகுப்பறையில் கற்றல், கற்பித்தலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு


காண்பதற்கு செயலாய்வு முறையில் உதவியாக அமையும். வகுப்பறையில் தனிப்பட்ட கவனம்
செலுத்திக் கற்றல் - கற்பித்தல் சார்ந்த யதார்த்தமான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக
ஆராய்ச்சியாளருக்கு இவ்வாராய்ச்சி அவசியமாகிறது. வகுப்பறைக் கற்றலில் மாணவர்கள்
இடர்படுகின்ற சூழலில் அதனைக் களைய ஆராய்ச்சியாளர் பல்வேறு செயல்பாடுகளை
முன்னெடுக்க வேண்டிய நிலையில் இச்செயலாராய்ச்சியை மேற்கொள்ள திட்டமிடுகிறார்.

தொடக்க நிலை வகுப்புகளில் குறிப்பாக நான்காம் வகுப்பு மாணவர்கள்


இனமாற்றத்துடன் கூடிய கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை பிழையுடன்
செய்கின்றனர்.அவர்கள் பிழையில்லாமல் கணக்குகளை செய்ய வைப்பதற்கு இத்தகைய ஆய்வு
ஆராய்ச்சியாளருக்கு அவசியமாக அமைகிறது. இதன் மூலம் வகுப்பறையில் சிறப்பான கற்றல்
- கற்பித்தல் சூழல் உருவாகும் என்று இவ்வாய்வை மேற்கொள்கிறார்.

4. பிரச்சனையை அடையாளம் காணல்

நான்காம் வகுப்பு மாணவர்கள் நன்கு எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டு வரும்


நிலையிலும் இனமாற்றக்கூட்டல், கழித்தல் கணக்குகள் செய்வதில் இடர்பாடுகளைக்
கொண்டுள்ளனர் என்பதை ஆராய்ச்சியாளராக காண முடிந்தது.

5. பிரச்சனையை வரையறுத்தல்

நான்காம் வகுப்பு மாணவர்கள் - எண்களின் இடமதிப்புகளை தெளிவாக தெரிந்திருந்த


போதிலும் இனமாற்றக்கூட்டல், கழித்தல் கணக்குகளை செய்யும்போது எண்களின் இடமதிப்பை
பயன்படுத்துவதில் தவறாக எழுத நேரிடுகிறது. இதனால் விடைகளில் பிழை ஏற்படுகிறது.
இதற்கு எண்களின் இடமதிப்பினை கூட்டல், கழித்தல் கணக்குகளில் பயன்படுத்த தெரியாமல்
இருப்பதே காரணமாக உள்ளது.

6. பிரச்சனைக்கான உத்தேச காரணங்கள்

மாணவர்கள் எண்களின் இடமதிப்பு தெரியாமல் இருத்தல்

ஆசிரியர் கற்பிப்பதைக் கவனிக்காமல் இருத்தல்

எண்களின் இடமதிப்பும், கூட்டல், கழித்தல் கணக்குகளை தெரிந்திருந்தும் இனமாற்றத்துடன்


கூடிய கூட்டல், கழித்தல் கணக்குகள் செய்வதில் தடுமாறுதல்

குழு செயல்பாடுகள் அதிகம் கொடுக்கப்படாமல் இருத்தல்

தொடர் பயிற்சி இல்லாமல் இருத்தல்.

7. ஆய்வின் நோக்கம்

இனமாற்றக் கூட்டல், கழித்தலில் மாணவர்கள் செய்யும் பிழைகளை முன்தேர்வின் மூலமாகக்


கண்டறிதல்.

மாணவர்கள் பிழையில்லாமல் கணக்குகளை செய்வதற்கு விளையாட்டு முறை


செயல்பாடுகளை வடிவமைத்தல்.
செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் அடைந்த முன்னேற்றத்தை பின்தேர்வின் மூலம் ஆய்ந்து
அறிதல்.

8. ஆய்வு கருதுகோல்
மாணவர்களுக்கு இனமாற்றத்துடன் கூடிய கூட்டல், கழித்தல் கணக்குகளை
விளையாட்டு முறையில் கற்பித்து எழுத வைத்தலை ஆய்வின் கருதுகோளாக
ஆராய்ச்சியாளர் தேர்ந் தெடுக்கிறார்.

9. உத்தேசத் தீர்வுகளை ஆய்ந்தறிதல்

எண்களின் இடமதிப்பினை முழுமையாக மாணவர்களை அறிய செய்து பிழையின்றி


கணக்குகளை செய்ய பயிற்சி அளித்தல்.

ஆசிரியர் கற்பிப்பதை மாணவர்கள் ஆர்வமுடன் கற்கும் வகையில் பல்வேறு கற்றல்


கற்பித்தல் துணைக்கருவிகளைப் பயன்படுத்துதல் .

மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்கும் வகையில் காணொளிக் காட்சிகளை


இடையிடையே வழங்குதல்

குழு செயல்பாடுகளை அதிகம் வழங்குதல்

இனமாற்றத்துடன் கூடிய கூட்டல், கழித்தல் கணக்குகளை செய்ய பல்வேறு செயல்பாடுகளை


பயன்படுத்துதல்.

பல்வேறு தொடர் பயிற்சிகள் மற்றும் வீட்டுப்பாடம் அதிகமாகக் கொடுத்தல்.

10. நடைமுறைத் தீர்வுகளைத் தேர்ந்தெடுத்தெழுதுடுத்தல்

ஆசிரியர் கற்பிப்பதை மாணவர்கள் ஆர்வமுடன் கற்கும் வகையில் பல்வேறு கற்றல்


கற்பித்தல் துணைக்கருவிகளைப் பயன்படுத்துதல் .

மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்கவும், ஆர்வமூட்டும் வகையிலும் பல்வேறு


காணொளிக் காட்சிகளை இடையிடையே வழங்குதல்.

கூட்டல், கழித்தல் செயல்பாடுகள், இனமாற்றத்துன் கூடிய கூட்டல், கழித்தல் கணக்குகளைக்


கற்பித்தலில் பல்வேறு செயல்பாடுகளைப் பயன்படுத்துதல்
தொடர் பயிற்சிகள் மற்றும் வீட்டுப்பாடங்கள் அதிகமாகக் கொடுத்தல்.

11. தேர்ந்தெடுத்தத் தீர்வினை நடைமுறைப் படுத்துதல்:

ஆய்வுத்திட்டம் :

ஆய்வு மாதிரி : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கோவக்குளம் கிராமம்,


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் 9 மாணவர்கள் ஆய்வு
மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்

முன்தேர்வு :

ஆய்வாளரால் புறவயத்தன்மை கொண்ட வினாத்தொகுப்பு தயாரிக்கப்பட்டு முன்தேர்வு


நடத்தப்பட்டது.
இத்தேர்வு 25 மதிப்பெண்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தல்

பாடப்பகுதி அறிமுகம் :

கணிதத்தில் "கூட்டல்" என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களை


ஒன்றாக்கி அதாவது ஒன்றுடன் ஒன்று கூட்டி ஒரு தொகையை அல்லது மொத்தத்தைப்
பெறுகின்ற ஒரு கணிதச்செயல் ஆகும். இது எண்கணிதத்தின் நான்கு அடிப்படை செயல்களில்
ஒன்று ஆகும்.

கழித்தல், பெருக்கல், வகுத்தல் - ஆகியவை ஏனைய மூன்று கணித அடிப்படை


செயல்கள் ஆகும்.
"கழித்தல்"- என்பது கணிதத்தின் நான்குஅடிப்படை செயல்களில் ஒன்று ஆகும் இது
கூட்டலுக்கு எதிர்மாறானது. கழித்தல் செயலானது கழித்தல் (-) குறியினால் காட்டப்படுகின்றது.

தொகுப்புரை:
நான்காம் வகுப்பு மாணவர்கள் விளையாட்டு முறை, காணொளிக் காட்சிகள்
குழுக்கற்றல் முறை மூலமாக கற்பித்ததால் இனமாற்றத்துடன் கூடிய கூட்டல், கழித்தல்
கணக்குகளை நன்கு அறிந்து கணக்குகளைப் பிழையின்றி விடை காண்பதற்கு
கற்றுக் கொண்டனர். தொடக்கநிலை மாணவர்களுக்கு மின் அட்டை, வரைபடம் காணொளி
மூலம் கற்பிக்கும்போது சிறப்பான கற்றல் நிகழ்கிறது பல்வேறு செயல் பாடுகளில்
மாணவர்களை பங்கேற்க வைக்கும்போது பாடப்பகுதியை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன்
கற்கின்றனர் என்பது இச்செயலாய்வின் மூலம் தெளிவாகிறது.

15. ஆய்வின் பயன்பாடு


விளையாட்டு முறையில் கூட்டல், கழித்தல் செய்முறையை கற்பிப்பதால் மாணவர்களின்
கற்றல் ஆர்வம் அதிகரிக்கிறது. ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடுகின்றனர் . இணையதளத்தைப்
பயன்படுத்தி பல்வேறு செயல்பாடுகள் மூலம் பயிற்சிகள் வழங்கும்போது மிகுந்த
ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்கின்றனர். குழு செயல்பாடுகள் மாணவர்களின் கற்றலை
வலுவடைய செய்கின்றது. இதன் மூலம் ஆய்வாளர் இடர்பாடுகளை களைவதற்கு முன்னெடுத்த
முயற்சி பயன்பாடு உடையதாக அமைந்தது.

16.ஆய்விற்கான பரிந்துரைகள்
நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு இனமாற்றத்துடன் கூடிய கூட்டல், கழித்தல்
செயல்பாட்டை வழக்கமான கற்பித்தல் முறைகளில் கற்பித்தபோது மாணவர்கள் அடைந்த
கற்றல் அடைவு குறைவாகவே இருந்தது. இதனை முன்தேர்வு மதிப்பெண்கள் மூலம் அறிந்து
கொண்டு கற்பித்தல் முறையை மாணவர்களுக்கு ஏற்ப மின் அட்டை, படங்கள், காணொளிக்
காட்சிகள், குழுக்கற்றல், செயல் வழிக்கற்றல் போன்ற கற்பித்தல் முறைகளை மேற் கொள்ளும்
போது மாணவர்களின் கற்றல் அடைவு மிகுதியாகிறது . மாணவர்கள் கற்றலில் இடர்ப்படும்
பாடப்பகுதிகளை இவ்வாறான மாணவர் மையக் கற்பித்தல் முறையைப் பயன்படுத்திக்
கற்பிக்கும் போது அது மாணவர்கள் கற்றலில்
நல்ல தொரு முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றது.

17. துணை நூற்பட்டியல்

You might also like