You are on page 1of 18

BACHELOR OF TEACHING ( PRIMARY EDUCATION )

BTPSE

SEMESTER 6 / 2023

HBTL1103

,
PENGENALAN BAHASA TAMIL

NO. MATRIKULASI : 980929055526001


NO. KAD PENGENALAN : 980929055526
NO. TELEFON : 0162391290
E-MEL : tharsh98@oum.edu.my
PUSAT PEMBELAJARAN : PETALING JAYA LEARNING
CENTRE
பிரிவு 1
கேள்வி 1
கற்றல் என்பது அறிவை, பழக்கங்களை, செயற்திறனை புதிதாக
பெற்றுக்கொள்ளல், அல்லது ஏற்கனவே பெற்றவற்றை மெருகூட்டல் அல்லது
வலுவூட்டல் ஆகும். மாந்தரின் செயற்பாடுகளில் முதன்மையானதாக கற்றல்
விளங்குகின்றது. கற்பித்தல் என்பது தாம் பெற்ற அறிவை, அனுபவத்தை தான்
மட்டும் வைத்துக் கொள்ளாமல் அந்த அறிவை, அனுபவத்தை பிறருக்கு
போதிப்பது அல்லது எடுத்துரைப்பது கற்பித்தலாகும். ஒரு கற்பித்தல்
முறையானது மாணவர்களின் கற்றலை செயல்படுத்துவதற்கு ஆசிரியர்கள்
பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கியது. இவை
கற்பிக்கப்படவேண்டிய பாடப்பொருள் மற்றும் கற்கும் மாணவர்களின் இயல்பு
ஆகியவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட கற்பித்தல் முறை
பொருத்தமானதாகவும் திறமையாகவும் இருப்பதற்கு, அது கற்பவர், பாடத்தின்
தன்மை மற்றும் அது கொண்டு வர வேண்டிய கற்றல் வகை ஆகியவற்றைக்
கணக்கில் எடுத்துக்கொள்கிறது. கற்பித்தலுக்கான அணுகுமுறைகளை ஆசிரியர்-
மைய மற்றும் மாணவர் மைய அனுகுமுறை எனப் பரவலாக வகைப்படுத்தலாம்.
ஆசிரியரை மையமாகக் கொண்ட (அதிகாரப்பூர்வ) அணுகுமுறையில்,
ஆசிரியர்கள் முக்கிய நபராக உள்ளனர். மாணவர்கள் "வெற்றுப்
பாத்திரங்களாகப்" பார்க்கப்படுகிறார்கள், அவர்களின் முதன்மைப் பணியானது
சோதனை மற்றும் மதிப்பீட்டின் இறுதிக் குறிக்கோளுடன் (விரிவுரைகள் மற்றும்
நேரடி அறிவுறுத்தல்கள் மூலம்) செயலற்ற முறையில் தகவல்களைப்
பெறுவதாகும். மாணவர்களுக்கு அறிவையும் தகவல்களையும் வழங்குவது
ஆசிரியர்களின் முதன்மைப் பணியாகும். இந்த முறையில், கற்பித்தல் மற்றும்
மதிப்பீடு இரண்டு தனித்தனியாகப் பார்க்கப்படுகின்றன. மாணவர்களின்
கற்றலானது மதிப்பீடுகள் மூலம் அளவிடப்படுகிறது. [2] கற்றலுக்கான மாணவர்-
மைய அணுகுமுறையில், ஆசிரியர்களும் மாணவர்களும் சம அளவில் பங்கு
வகிக்கின்றனர். இந்த அணுகுமுறை அதிகாரமயமாக்கப்படல் என்றும்
அழைக்கப்படுகிறது. [3] ஆசிரியரின் முதன்மைப் பணி மாணவர்களின் கற்றல்
மற்றும் திறன்கள் பற்றிய ஒட்டுமொத்த புரிதலுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும்
எளிதாக்குதல் ஆகும். குழுத் திட்டங்கள், மாணவர் கூட்டுத் திரட்டு மற்றும்

1
வகுப்புப் பங்கேற்பு உள்ளிட்ட முறையான மற்றும் முறைசாரா மதிப்பீடுகளின்
மூலம் மாணவர் கற்றல் அளவிடப்படுகிறது. கற்பித்தலும் மதிப்பீடும்
ஒண்றினைக்கப்பட்டுள்ளது; ஆசிரியர் அறிவுறுத்தலின் போது மாணவர் கற்றல்
தொடர்ந்து அளவிடப்படுகிறது. கற்பித்தலும் கற்றலும் பல்வேறு காரணிகளை
உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். இக்காரணிகள் கற்பவர் தன் இலக்கு நோக்கி
செல்லும் போதும், விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போதும்,
பழக்கவழக்கங்கள், கல்வி கற்றல் மூலம் அடையும் திறன்கள் முதலியவற்றில்
ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்துள்ளது. கடந்த நூற்றாண்டுகளில்
கல்வி பற்றி பல்வேறு வித பார்வைகள் இருந்தன. கல்வி என்பது அறிவு சார்ந்தது
(கற்றல் மூளையின் செயல்திறனால் நிகழ்கிறது) அல்லது வளர்ச்சி சார்ந்தது
(கற்கும் அனுபவத்தால் அறிவு ஏற்படுகிறது) என்ற இருவேறுவித பார்வைகள்
இருந்தது. இவ்விரு கொள்கைகளை பிரித்துப் பார்க்காமல் ஒன்றிணைத்து
பார்த்தோமானால் கற்றல் முறையில் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை
உணரலாம். இவற்றை ஒருங்கிணைக்கும் போது பல்வேறு பிற காரணிகளையும்
நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் சில - அறிவுத்திறன், கற்கும் முறை,
பலதரப்பட்ட தனித்திறன்கள், சிறப்பு தேவை உள்ளவர்கள் மற்றும் பல்வேறு
கலாச்சார பின்னணி கொண்டவர்களின் கல்வி கற்கும் முறை.
கற்றால் மட்டும் ஒருவர் சிறந்தவராக முடியாது. கற்றவற்றை மற்றவர்களுக்கு
கற்றுக் கொடுத்தால் தான் அந்த கல்வி மேன்மேலும் வளரும். அதன் மூலமாக
பலன் பெருகும். ஒருவன் கற்றுக்கொண்டு தான் மட்டும் அந்த பயனை
அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக அது எந்த பலனையும்
தராது. தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பொழுது அந்தக்
கற்றதால் அவர் மூலமாக இருவருக்கும் பலன் கிடைக்கும். ஒரு மனிதனாக
இருந்து அவனுடன் இருப்பவர்கள் முட்டாள்களாகவோ, மூடர்களாகவோ
அல்லது மூர்க்கத்தனம் உள்ளவர்களாகவோ இருந்தால் அனைவருக்கும் அவர்கள்
மூலமாக ஆபத்து ஏற்படும். அதனால் அவர் கற்றதை ஒழுக்க வாழ்வியல்
முறையை தன்னுடன் இருக்கக்கூடியவர்களுக்கு முறைப்படி போதித்தால் அந்த
போதனை அவர் உயிருடன் இருப்பவர்கள் மூக்கத்தனமானவர்களாக மாறாமல்
முரணாக இல்லாமல் அவரையும் பக்குவம் உள்ள மனிதனாக மாற்றுவதற்கு
கற்பித்தல் முறை உதவும்.

2
கற்றதனால் பயன் என்னவென்றால் மக்களுக்கு கற்றுக் கொடுப்பதுதான்.
கற்றதைக் கற்பிப்பது தான் சிறந்த வழியே தவிர கற்றல் மட்டுமே வழியாக
இருந்தால் அந்த கல்வியினால் எந்த பயனும் இருக்காது. நாம் கற்ற கல்வி பெற்ற
அறிவை பலருக்கும் கொடுத்தால்தான் அவர்களும் பயன்பெறுவார்கள். அதனால்
கற்பித்தல் என்பது மிகவும் பயனுள்ளதாகும். மற்றவர்களுக்கு வழி காட்டுவது,
நேர்வழியில் மக்களை அழைத்துச் செல்வது இருட்டில் இருப்பவர்களுக்கு
வெளிச்சம் கொடுப்பது, தாகத்தில் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது
எவ்வளவு முக்கியமோ அதேபோல் கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக்
கொடுப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.

கற்றல் நெறிகள்

மாணவர்கள் வயது, பட்டறிவு , நம்பிக்கை ஆகியவற்றிற்கு ஏற்ப கற்றல்


கற்பித்தல் நடைபெறுகிறது . முறையான கற்பித்தல் நெறி மாணவர்களின் அறிவு
மனப்பான்மை, நம்பிக்கை, நடத்தை மாற்றம் முதலியவற்றுக்கு அடிப்படையாக
விளங்குகின்றது. கற்பித்தல் நெறிகள் கற்றலில் அதிகம் வலியுறுத்தப்படுகின்றன.
முதலாவதாக , தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிக்கு செல்லுதல். மாணவர்கள்
அறிந்தவற்றிலிருந்து கற்பித்தலை தொடங்குவதுதான் இயல்பான முறையாகும்.
பழக்கப்பட்ட செய்திகளை படிப்படியாக விலக்குதல் வேண்டும். தெரிந்தவற்றை
அதிகமாக விளக்குவதால் மாணவர்கள் சலிப்படைவர். தெரிந்தவற்றுடன்
பொருந்தாமல் தெரியாதவற்றையே விளக்கி கொண்டிருந்தாலும்
மாணவரிடையே அலுப்பு தோன்றும் . உதாரணத்திற்கு, உயிர் எழுத்துக்கள்
என்னென்ன என்பது ஒரு ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு போதிக்கும் பொழுது
அவர்களுக்கு ஏற்கனவே படித்த ஒன்றை படிக்க அல்லது தெரிந்து கொள்ளே
விருப்பம் காட்டமாட்டார்கள். அடுத்ததாக, முழுமையிலிருந்து பகுதிக்கு
செல்லல். மாணவர்கள் அறிந்துள்ள முழுப்பொருளை பிரித்து பகுதிகளை கற்பிக்க
வேண்டும் என்பது இதன் பொருளாகும் . வாசிப்பை கற்பிப்பதில் கையாளும்
சொற்றொடர் முறை இதை அடிப்படையாக கொண்டதே . நாம்
சொற்றொடர்களாகவே பேசுகிறோம் . குழந்தைகளும் சொற்றொடர்களாகவே
தங்கள் கருத்துகளை வெளியிடுவார்கள். ஒரு வாக்கியத்தை கரும்பலகையில்

3
எழுதி அதை நன்கு உச்சரிப்புடன் வாசிக்க கற்பிக்க வேண்டும் . எடுத்துக்காட்டு,
குமுதன் இன்று பள்ளிக்கு வரவில்லை.

மூன்றாவதாக, காட்சிநிலையிலிருந்து கருத்து நிலைக்கு செல்லல் .


தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிக்கு செல்லலே இவ்வாறு கூறப்படுகிறது .
காட்சிப்பொருளாக தெரிந்தவற்றை குழந்தைகள் அறிவது எளிது, ஐம்புலன்களால்
உணரமுடியாத கருத்துகளை அறிவது கடினம். எனவே, பொருளறிவு மூலம்
கருத்துணர்வை பெறச் செய்யலாம். மொழிப்பாடத்தையும் இலக்கண
பாடத்தையும் கற்பிப்பதில்தான் இக்குறிப்பு பெரிதும் பயன்படும். சொற்களையும்
சொற்றொடர்களையும் எடுத்துக்காட்டுகளாக கூறி விளக்கிய பிறகுதான்
விதிகளையும் கருத்துகளையும் கற்பிக்க வேண்டும் .

எடுத்துக்காட்டு,
1) குகன் துரத்தினான்,
2) குகனை துரத்தினான்.

மேற்காணும் சொற்றொடர்கள் முதலாவது சொற்றொடரின் பொருள் குகன்


ஒருத்தனை துரத்தினான். இங்கு குகன் ஒருவனை துரத்தியதாக உள்ளது.
இரண்டாவது சொற்றொடரில் குகனை ஒருவன் துரத்தினான் எனும் பொருள்
வெளிப்படுகிறது . இங்கு குகன் துரத்தப்பட்டவனாக ஆகிறான். துரத்தினான்
என்பதை துரத்தப்பட்டவனாக மாற்றியது ‘ஐ’ உருபு. இதனை அடையாளம் காட்டி
, இவ்வாறு சொல்லின் பொருளை வேறுபடுத்தி காட்டுவதே வேற்றுமை என
வலியுறுத்தலாம்.

4
அடுத்ததாக, சிறப்பிலிருந்து பொதுவிற்கு செல்லுதல். பொது விதிகளை
தெரிந்துகொள்வதற்கு முன் மாணவர்கள் பல குறிப்பிட்ட மெய்மைகளை
அறிந்திருந்தால் வேண்டும். பல எடுத்துக்காட்டுகளை கொண்டு மாணவர்களே
பொது விதிகளை உண்டாக்கும்படி செய்யலாம். இதை விதி வருவித்தல் முறை
மூலம் கற்பித்தலில் காணலாம். அதுவும் இலக்கணம் கற்பிப்பதற்கு
பயன்படுத்தலாம். இதையடுத்து, எளிமையிலிருந்து அருமைக்கு செல்லல்.
எளிமையும் அருமையும் குழந்தையை வைத்தே தீர்மனிக்கே பெற வேண்டும்.
எதையும் படிப்படியாக கற்று சென்றால்தான் மகிழ்ச்சியுடன் கற்கலாம். கற்பதிலும்
விருப்பம் ஏற்படும். நாமும் படிப்படியாக கற்று சென்றால்தான் இப்படறிவை
மனதிற்கொண்டு குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். எடுத்துக்காட்டு, கண்ணன்
உறங்கவில்லை எனும் சொற்றொடரில் கருத்தினை குழந்தைகள் உணர்ந்திருப்பார்.
சொற்றொடர்கள் நீளமாக இருந்தாலும் கருத்தை உணர்வது எளிதே. ஆனால் ,
தூக்கமின்மை என்பது ஒரே சொல்லாக இருப்பினும் இச்சொல்லின்
இடம்பெற்றிருக்கும் இலக்கண பொருள் குறிக்கும் உறுப்புகளை மாணவர் புரிந்து
கொள்வது கடினமே. இறுதியாக , தெளிவிலிருந்து சிக்கலுக்கு செல்லுதல். ஒரு
துறையில் ஒருவருக்கு எளிதாக இருப்பது அத்துறையை அறியாதே
மற்றொருவருக்கு அரிதாக இருக்கக்கூடும் . ஒரு துறையில் சிறிது கற்றவர் நிலை
வேறு , சிறிதும் கல்லாதவர் நிலை வேறு. எனவே குழந்தைகளின் அறிவு
நிலையையொட்டி கற்பித்தலை தொடங்க வேண்டும். மொழிப்பப்பாடங்களில்
கற்பிப்பதில் அன்றாட வாழ்க்கையையொட்டிய நிகழ்ச்சிகளை கொண்டு
பாடங்களை தொடங்க வேண்டும்.

கற்றல் கற்பித்தல் என்பது ஒரு சமூக செயல்முறையாகும். மாணவர்கள்,

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த

செயல்முறையை திறம்பட மற்றும் பயனுள்ளதாக மாற்ற, கற்றல் கற்பித்தலின்

5
நெறிகளைப் பின்பற்றுவது அவசியம். கற்றல் கற்பித்தலின் நெறிகள்

பின்வருமாறு: முதலாவதாக மாணவர் மையப்படுத்தல்: கற்றல் செயல்முறையில்

மாணவர்களை மையமாகக் கொள்ள வேண்டும். மாணவர்களின் தேவைகள்,

ஆர்வங்கள் மற்றும் திறன்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற வகையில்

கற்பிக்க

வேண்டும். இரண்டாவதாக, விமர்சன சிந்தனை: மாணவர்களை விமர்சன

சிந்தனையுடன் கற்றுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். தகவல்களைப்

புரிந்துகொண்டு, பகுப்பாய்வு செய்து, முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ள

வேண்டும். மூன்றாவதாக படைப்பாற்றல்: மாணவர்களின் படைப்பாற்றலை

ஊக்குவிக்க வேண்டும். புதிய யோசனைகளை உருவாக்கவும், புதிய வழியில்

சிந்திக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.நான்காவதாக ,ஒத்துழைப்பு:

மாணவர்களை ஒத்துழைப்பு கொள்கையுடன் கற்றுக்கொள்ள ஊக்குவிக்க

வேண்டும். மற்றவர்களுடன் பணியாற்றவும், ஒருவருக்கொருவர்

கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்.ஐந்தாவதாக , மதிப்பீடு: கற்றல்

செயல்முறையை தொடர்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும். மாணவர்களின் கற்றல்

வளர்ச்சியை அடையாளம் காணவும், தேவைப்படும்போது மாற்றங்களைச்

செய்யவும் இது உதவும். இந்த நெறிகளைப் பின்பற்றி கற்பித்தல் செயல்முறையை

மேம்படுத்தலாம். மாணவர்களின் கற்றல் திறன்களை வளர்க்கலாம். ஆசிரியர்கள்

6
மாணவர்களின் தனிப்பட்ட வேறுபாடுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும் தனித்துவமானவர் என்பதை நினைவில் கொள்வது

அவசியம். அவர்களின் திறன்கள், ஆர்வங்கள் மற்றும் தேவைகளைப்

புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற வகையில் கற்பிக்க வேண்டும்.

கற்பித்தல் முறைகளை மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். ஒரே முறையில்

தொடர்ந்து கற்பித்தால், மாணவர்கள் சலிப்படைவார்கள். பல்வேறு கற்பித்தல்

முறைகளைப் பயன்படுத்தி, கற்பித்தலை சுவாரஸ்யமாக்க வேண்டும். கற்பித்தல்

செயல்முறையை திறந்ததாக இருக்க வேண்டும்.

7
கற்றல் கற்பிப்பதில் அவசியம்

மனித வாழ்வின் அடிப்படை ஆதாரம் கற்றல் செயலாகும். நம் குணங்கள்,


குறிக்கோள், இலட்சியங்கள் இவையனைத்தும் செயல்வடிவம் பெற்று செயல்பட
ஊன்றுகோலாக அமைவது கற்றல் ஆகும். எல்லா மனிதர்களும் , உயிரினங்களும்
கற்றலின் செயலில் செயல்படுகிறார்கள். கற்றல் அனைவரிடத்திலும் ஒரே
நிலையில் ஏற்படுவதில்லை. நுண்ணறிவு, சூழ்நிலை, ஆளுமைத்திறன் ,
மனநிலை, ஈடுபாடு, ஆர்வம், மொழி , பண்பாட்டின் தாக்கம் ஆகியவற்றை
பொறுத்து கற்றல் செயல் ஒவ்வொரு மனிதரிடம் வேறுபட்டு காணப்படும் . தனி
மனிதனின் கனவுகளும் இலட்சியங்களும் சரியாக வடிவம் பெற்றிருந்தாலும்
அதன் அடிப்படைத்தன்மை மாறாமல், வழிதவறாமல் சரியான முறையில்
வழிநடத்துவதற்கு கற்றல் துணைநிற்கிறது. இதன் மூலம் , நமது செயலின் சுவை
மாறாமல் ஆளுமைத்திறனுடன் செயல்பட முடியும். காலப்போக்கில் , இத்தாக்கம்
தனி மனிதனின் வாழ்விலும் நடத்தையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் .
குறிப்பாக அவனிடத்தில் உள்ள தனித்தன்மையை வெளிக்கொண்டுவர
உதவுகிறது . அறிவின் வழியாக பெறுவதையும் கற்றல் கற்பித்தலின் வழியாக
பெறுவதையும் கற்றல் மாற்றம் என உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் .
கற்றல் கற்பித்தலின் மூலமாக , மாணவர்கள் சிந்தனைத்திறன் மேம்படுகிறது
.தொடர்ந்து , கற்றல் கற்பித்தலின் வழியாக ஒருவரின் படைப்பாற்றல் திறன்
மேம்படுகிறது . படைப்பாற்றல் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று .
படைப்பாற்றல் சிந்தனையின் மூலம் , ஒன்றிலிருந்து இன்னொன்றையும் புதிதாக
உருவாக்க முடியும் . எந்த ஒரு விஷயத்தையும் பார்க்கின்ற கோணம் மாறுபடும்.
சிந்தனை , எழுத்து , பேச்சு , செயல் என அனைத்து நடவடிக்கையிலும் மாறுபட்ட

8
பார்வை உருவாகும் . இந்த மாறுபட்ட கோணம் சிக்கலை தீர்ப்பதற்கும் ஒரு சிறந்த
முடிவு எடுப்பதற்கும் உதவும். இறுதியாக , தெளிவிலிருந்து சிக்கலுக்கு
செல்லுதல். ஒரு துறையில் ஒருவருக்கு எளிதாக இருப்பது அத்துறையை
அறியாதே மற்றொருவருக்கு அரிதாக இருக்கக்கூடும் . ஒரு துறையில் சிறிது
கற்றவர் நிலை வேறு , சிறிதும் கல்லாதவர் நிலை வேறு. எனவே குழந்தைகளின்
அறிவு நிலையையொட்டி கற்பித்தலை தொடங்க வேண்டும்.
மொழிப்பப்பாடங்களில் கற்பிப்பதில் அன்றாட வாழ்க்கையையொட்டிய
நிகழ்ச்சிகளை கொண்டு பாடங்களை தொடங்க வேண்டும். எடுத்துக்காட்டு,
பட்டாசு என்ற சொல்லை சிறார்கள் நன்கு அறிவர். அச்சொல் குறிக்கும் பொருள்
அவர்களால் விரும்பி விளையாடுவதே காரணம். அதாவது பட்டாசு என்பது
குழந்தைகளின் பட்டறிவின் கண்ட உண்மை.

அரசியல் தனித்துவம் (AUTONOMY): ஒருவர் கற்றல் கற்பித்தல் மூலம் அவர்

தனக்குள்ள அரசியல் தனித்துவம் அதிகமாக விளங்கும். இது அவருக்கு தன்

வாழ்க்கையை எடுத்துக்கொள்ள அவருக்கு அனுமதிகளை வழங்கும்.

செயற்கைகளுக்கு தீர்வு (PROBLEM SOLVING): கற்றல் கற்பித்தல் மூலம், ஒருவர்

ஏன் செயல்படுகிறான், எப்படி திருப்திப்படுகிறான் என்பது அவருக்கு அறிந்து

கொள்ளும். இதன் மூலம், அவர் காட்டிய செயல்களுக்கு சிறந்த தீர்வுகளைப்

பயன்படுத்த முடியும். பயன்பாடுகள் அறிந்து அவையை பயன்படுத்தும் கட்டமை

(PRACTICAL APPLICATION): அறிந்த அறிவுகளைப் பயன்படுத்த முடியும் என்று

முனைக்கும் திறமை கொண்டால், அது உங்கள் உழைப்புகளில் எப்போதும்

பயன்படுத்தலாம். நேர்க்காணல் மற்றும் புதுப்பித்தல் (OBSERVATION AND

ADAPTABILITY): கற்றல் கற்பித்தல் மூலம், ஒருவர் அவருடைய சூழலில்

9
நேர்க்காணல் மற்றும் புதுப்பித்தலை அறிந்து கொள்ளும். இது அவரை சுற்றி

உள்ள சூழலில் அவருக்கு அழகான புதுப்பித்தல் முறைகளை உருவாக்கும்.

சொல்லுதல் மற்றும் கேட்டு அறிந்து பயன்படுத்துதல் (COMMUNICATION AND

LISTENING SKILLS): கற்றல் கற்பித்தல் மூலம், ஒருவர் தன் கற்ற

10
கேள்வி 2
கற்றல் கற்பித்தலில் வினாக்களின் பயன்பாடு மறுப்பதற்கு இல்லை.
வினாக்களின் தன்மைகள் கற்றலின் பயனை அடைவதற்கு வழி வகுக்கின்றன.
வினவுதல் கற்பித்தலில் கைவரப்பெற வேண்டிய ஒரு முக்கிய திறனாகும்.
என்ன , ஏன் , எப்படி , எப்பொழுது , எங்கே , யார் , என்ற அறுவகை
வினாக்களும் கற்றல் கற்பித்தலுக்கு துணையாக இருப்பதை அறியலாம். இனி
நல்ல வினாக்களின் பண்புகள் உள்ளன . அதில் ஒன்று, வினாக்கள்
சொற்சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் இருத்தல் வேண்டும்.
கேள்விகளை எடுத்துவைக்கும்பொழுது சரியான வினாக்களை பயன்படுத்த
வேண்டும் . நாம் வினாக்களில் கையாளபெரும் மொழி எவ்விதத்திலும்
ஐயத்தை விளைவித்தல் கூடாது. வினாக்கள் இல்லாத கல்வி முறையே
இல்லை என ஆணித்தரமாக கூறலாம். பண்டைய காலத்திலிருந்து இன்றைய
காலம் வரை கற்பித்தல் நடவடிக்கையில்போது ஆசிரியர் தொடுக்கும்
வினாக்களும் அவர் கையாளும் வினா உத்தி முறைகளும் மாணவர்களின்
கருத்தாடலை ஊக்குவிக்கும் முக்கிய கூறுகளாக கருதப்படுகின்றன .
கருத்தாடலின்ப்போது மாணவர்களை பல்வேறு சிக்கல்களை பற்றியும்,
தலைப்புகளை பற்றியும், நிகழ்வுகளை பற்றியும் சிந்தித்து கருத்துரைக்க
வழிவகுப்பது ஆசிரியர் திறம்பட கையாளும் வினாக்களே.
கற்பித்தலின்போது மாணவர்கள் எந்த அளவிற்கு கற்பிக்கப்படும் பாட
பொருளை கற்றுள்ளனர் என்பதை அறிய அல்லது மதிப்பீடு செய்ய ஆசிரியர்
பல்வேறு நிலையிலான வினாக்களை தொடுப்பது வழக்கமான ஒன்றாகும்.
ஆசிரியர் தொடுக்கும் வினாக்களின் தன்மைக்கு ஏற்பவே மாணவர்களும்
துலங்குகின்றன. ஆசிரியர்கள் எளிமையான வினாக்களை தொடுக்கும்ப்போது
மாணவர்கள் எளிமையான விடைகளை வழங்குகின்றன. எளிமையான
வினாக்கள் என்பவை மாணவர்கள் அதிகம் சிந்திக்க தூண்டாமல் தாங்கள்
ஏற்கனவே அறிந்துள்ளவற்றை . இத்தகைய எளிமையான வினாக்களை

சூழ்நிலை சிந்தனை வினாக்கள் என்கிறோம். வினாக்கள் மாணவர் கவனத்தை

ஈர்த்து நினைவாற்றலையும் சிந்தனையையும் தூண்டும்படியாக அமைந்திருக்க

11
வேண்டும். உத்தேச விடையையும் ஆம் அல்லது இல்லை என்ற விடையை

ஏற்பனவாகவும் உள்ள வினாக்களாக இருக்க கூடாது, ஏனென்றால்

மாணவர்களுக்கு பதில் அல்லது கற்றலில் கவனம் செழுத்த சலிப்பு தட்டும்.

வினாக்கள் வயதினையொட்டியும் அறிவு நிலையை ஓட்டியும் இருக்க

வேண்டும். மாணவர்களின் வயதிற்கு ஏற்றவாறே கேள்வியின் தரம் இருக்க

வேண்டும் இல்லெயெனில் மாணவர்களுக்கு கடினமாக இருக்கும். அதே

சமயத்தில் நாம் மிக எளிதான விடையை கொண்டுள்ள வினாக்களை தவிற்க

வேண்டும். மாணவர்களுக்கு தெரிந்ததே மறுபடியும் பதில் கொடுக்க விரும்ப

மாட்டார்கள் , இதுவும் அவர்களை சோம்பேறி தட்டும். அதுபோலவே மிகக்

கடினமான வினாக்களையும் தாவிற்க வேண்டும். பெரும்பாலும் தெளிவற்ற

வினாக்களினாலும் பயனில்லை. வினாக்கள் ஆசிரியர்கள் எதிர்பாக்கும்

பொருள்களை கோவையாக தொடர்பு துண்டிக்காமல் வருவிக்க கூடியதாய்

இருத்தல் அவசியம்.

"கற்றல் கற்பித்தல்" என்பது தமிழ் மொழியில் ஒரு பழங்கால கருத்தரங்கம்


ஆகும். இதன் வினாக்களின் தன்மைகள் அந்த கருத்தரங்கத்தில்
விளக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணமாக கற்பித்தலில் பின்வரும் வினாக்கள்

12
பயின்பாடுகள் உள்ளன: அறிவு கற்றல் கற்பித்தல் மூலம் நாம் அநேகமான
அறிவுகளை அரிதுபண்ணுவதன் மூலம் நாம் புரிந்து கொள்ளும் அறிவுகள்
அடிப்படையில் இருக்கும். புதிய பரிசு : கற்றல் அனைத்து பரிசுகளையும்
உருவாக்குவதன் மூலம், நாம் புதிய கலைகளை உருவாக்கலாம்.பாரம்பரிய
அறிவு : கற்றல் கற்பித்தல் மூலம், தமிழ் மொழியின் பரம்பரிய அறிவுகளையும்
பாரம்பரிய கலைகளையும் பாரம்பரிய உணர்வுகளையும் அறிந்து
கொள்ளலாம்.பயனுள்ள கட்டளை : கற்றல் கற்பித்தல் மூலம், நாம் உயர்ந்த
அறிவுகளை பயன்படுத்தி உயர்ந்த கட்டளைகளை அறிந்து
கொள்ளலாம்.உயர்தரமான செயல்கள் : கற்றல் கற்பித்தல் மூலம், நாம்
உயர்தரமான செயல்களை செய்வதன் மூலம், நம் உயர்ந்த காரியங்களை
உருவாக்கலாம்.இதன் மூலம், கற்றல் கற்பித்தல் என்பது மனிதர்களுக்கு அந்தச்
சக்திகளை வழங்குகிறது மற்றும் அவர்களை மேம்படுத்துகிறது. வினாக்கள்
கற்றலின் பயனை அடைவதற்கு வழி வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வினாக்களின் தன்மைகள் பின்வருமாறு: அறிவுசார் தன்மை: வினாக்கள்
அறிவுசார் திறன்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அறிவுசார்
வினாக்களை எதிர்கொள்வதன் மூலம் மாணவர்கள் தகவல்களைப்
புரிந்துகொள்வது, சிந்திப்பது, பகுப்பாய்வு செய்வது, முடிவுகளை எடுப்பது
போன்ற திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, "அறிவியல்
என்பது யாது?" என்ற வினா அறிவியல் என்ற கருப்பொருளின் அடிப்படை
அறிவை சோதிக்கும் வினாவாகும்.

ஒன்றாவதாக , புரிதலின் தன்மை: வினாக்கள் புரிதலை மேம்படுத்துவதில்


முக்கிய பங்கு வகிக்கின்றன. புரிதலின் வினாக்களை எதிர்கொள்வதன் மூலம்
மாணவர்கள் கற்றுக்கொண்ட தகவல்களைப் புரிந்துகொள்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, "கணிதத்தில் சமன்பாடு என்றால் என்ன?" என்ற வினா கணிதம்
என்ற கருப்பொருளில் சமன்பாடு என்ற கருத்தின் புரிதலை சோதிக்கும் ம்.

இரண்டாவதாக, பயன்பாட்டின் தன்மை: வினாக்கள் அறிவு மற்றும் திறன்களைப்


பயன்படுத்தி பல்வேறு சூழ்நிலைகளில் செயல்பட மாணவர்களை
ஊக்குவிக்கின்றன. பயன்பாட்டின் வினாக்களை எதிர்கொள்வதன் மூலம்
மாணவர்கள் கற்றுக்கொண்ட தகவல்களைப் பயன்படுத்தி புதிய சூழ்நிலைகளை
எதிர்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, "ஒரு கணித சமன்பாட்டை தீர்க்க எந்த

13
முறைகளைப் பயன்படுத்தலாம்?" என்ற வினா கணிதத்தில் கற்றுக்கொண்ட
திறன்களைப் பயன்படுத்தி சமன்பாடுகளை தீர்க்க மாணவர்களை ஊக்குவிக்கும்
வினாவாகும்.

அதனை அடுத்து, செயல்பாட்டு தன்மை: வினாக்கள் செயல்பாடு மற்றும்


படைப்பாற்றலை ஊக்குவிக்கின்றன. செயல்பாட்டு வினாக்களை
எதிர்கொள்வதன் மூலம் மாணவர்கள் அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி
புதிய பொருட்களை உருவாக்குகின்றனர். எடுத்துக்காட்டாக, "ஒரு புதிய வகை
வாகனத்தை வடிவமைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற வினா
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் மாணவர்களின்
படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வினாவாகும்.

அடுத்து , மதிப்பீட்டு தன்மை: வினாக்கள் மாணவர்களின் கற்றல் வளர்ச்சியை


மதிப்பீடு செய்வதற்குப் பயன்படுகின்றன. மதிப்பீட்டு வினாக்களைப்
பயன்படுத்தி மாணவர்களின் அறிவு, புரிதல், திறன்கள் மற்றும் படைப்பாற்றலை
மதிப்பீடு செய்யலாம். எடுத்துக்காட்டாக, "ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கணக்கிட
நீங்கள் என்ன சூத்திரத்தைப் பயன்படுத்துவீர்கள்?" என்ற வினா கணிதம் என்ற
கருப்பொருளில் மாணவர்களின் அறிவை மதிப்பீடு செய்யும் வினாவாகும். இந்த
ஐந்து வினாக்களுடைய தன்மைகளைப் பயன்படுத்தி கற்றல் பயனுள்ளதாக
மாற்றப்படலாம். உதாரணமாக, பாடம் முடிவில் மாணவர்களின் கற்றலைப் பற்றி
அறிய மதிப்பீட்டு வினாக்களைப் பயன்படுத்தலாம். புதிய கருத்தை
அறிமுகப்படுத்த புரிதலின் வினாக்களைப் பயன்படுத்தலாம். மாணவர்களின்
படைப்பாற்றலை ஊக்குவிக்க செயல்பாட்டு வினாக்களைப் பயன்படுத்தலாம்.
வினாக்களை உருவாக்கும்போது, கற்றல் இலக்குகள் மற்றும் மாணவர்களின்
திறன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களின் கவனத்தை ஈர்க்கவும்,
அவர்களை சிந்திக்கவும் ஊக்குவிக்கவும் வினாக்களை உருவாக்குவது அவசியம்.
வினாக்களின் தன்மைகளைப் பின்பற்றி வினாக்களை உருவாக்கும்போது, கற்றல்
செயல்முறையை மேம்படுத்தலாம். மாணவர்களின் அறிவு, புரிதல், திறன்கள்
மற்றும் படைப்பாற்றலை வளர்க்கலாம்.

14
முடிவுரை

கற்றல் கற்பித்தல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். வாழ்நாள்


முழுவதும் கற்றுக்கொள்வது அவசியம். கற்றல் கற்பித்தலின் நெறிகளைப்
பின்பற்றி, மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தலாம். முடிவுரையாக,
கற்றல் கற்பித்தல் என்பது ஒரு முக்கியமான செயல்முறையாகும். இது
மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி, வாழ்க்கைக்குத் தயார்படுத்துதல் மற்றும் சமூக
மாற்றம் ஆகியவற்றுக்கு உதவுகிறது.

15
பிரிவு 2

16
17

You might also like