You are on page 1of 23

இயல் 1

அறிமுகம்

1.0 : ஆய்வு முன்னுரை

இடைநிலைப்பள்ளிக்கான தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து ஆகிய

நான்கு திறன்களும் உள்ளன. இந்த நான்கு திறன்களில் வாசிப்பு என்பதும் ஒரு முக்கியமான

திறனாகும். கதைப்புத்தகம், சிறுகதை, நாவல், நூல்கள், சஞ்சிகைகள், இதழ்கள், நாளிதழ்கள்,

கட்டுரைகள், கதைகள் வாசித்தல் என பல படைப்புகளை வாசிக்கலாம். ஆனால், இன்றைய

இடைநிலைப்பள்ளி மாணவர்கள் வாசிப்புத் திறனில் ஆளுமையை வளர்த்துக் கொள்வதில் மிகவும்

பின்தங்கியே உள்ளனர் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. மாணவர்கள் பாடநூலைத்

தவிர்த்து வேறு நூல்களை ஆர்வத்துடன் வாசிப்பது மிகவும் அரிது. பாடநூலைக் கூட வாசிப்பதற்கு

மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவவகையில் இலக்கியம் சார்ந்த படைப்புகளை

வாசிப்பது குறைந்துக் கொண்டே வருகிறது என்றால் அது மிகையாகாது. எனவே, இன்றைய

காலக்கட்டத்தில் இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் ஆர்வம் என்பது குன்றி

காணப்படுகின்றது. ஆதலால், ஆய்வாளர் மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்த ஓர்

ஆய்வினை மேற்கொள்ள முற்பட்டார். அவ்வகையில், சிறுகதைகளின் வழி இடைநிலைப்பள்ளி

மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்த ஆய்வாளர் முடிவு செய்துள்ளார்.

1.1: ஆய்வு பின்னணி

மலேசியாவில் பிற மொழி மற்றும் தமிலோளியின் பயன்பாட்டையும் அதன் தரத்தையும் மேம்படுத்த

எண்ணி அரசாங்கம் அமைச்சரவை அறிக்கையை வரையறுத்தது. இவ்வறிக்கை

தொடக்கப்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் தோன்ற வழிவகுத்தது. இதன் மூலம் தமிழ்மொழி

திறன்களுக்கான கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து என நான்கு கூறுகளும் கற்றல் கற்பித்தலில்

இடம் பெற இது வலியுறுத்தியது. அதற்கேற்ப தமிழ்மொழிக்கும் ஓர் அறிய பாடத்திட்டம்

உருவானது. இந்நிலையில் பள்ளிகளில் மொழி கற்பித்தலில் பாடங்களில் கேட்டல்-பேச்சுத்

திறன்களுக்கு அடுத்து மிக முக்கியமாகக் கருதப்படுவது வாசித்தல் ஆகும். வாசித்தல் திறனை

1
நன்கு உள்வாங்கினால்தான் மாணவர்களால் மற்ற திறன்களை நன்கு உள்வாங்க முடியும்.

பள்ளிகளில் மாணவர்கள் வாசித்தலுக்கு முதல் இடம் கொடுப்பதில்லை. இதனால், அவர்களின்

மொழி ஆளுமையும் அதனைப் பேசும் சூழலும் குறைகின்றது(அர்ஜுனன் பெருமாள், 2017).

வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதால்தான் மாணவர்கள் அதிகமான சிக்கல்களை

எதிர்நோக்குகின்றனர். எனவே, மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ஆய்வாளர்

சிறுகதைகள் வாசிக்கும் அணுகுமுறையைக் கொண்டு இந்தச் செயலாய்வை மேற்கொண்டுள்ளார்.

1.2 : ஆய்வு சிக்கல்

இன்றைய காலக்கட்டத்தில் இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடத்தின் நிலைமை மிகவும்

மோசமானதாகவே உள்ளது. வாரத்தில் மூன்று பாடவேளைகளில் மட்டுமே ஆசிரியர்கள்

தமிழ்மொழிப் பாடத்தைக் கற்பிக்கின்றனர். இந்த மூன்று மணி நேர பாடவேளையில் ஆசிரியர்கள்

வரையறுக்கப்பட்டுள்ள அனைத்துத் திறன்களையும் கற்பிக்க முடியாமல் போகின்றது. அவ்வகையில்

வாசிப்புத் திறனையும் மாணவர்கள் முழுமையாகப் பெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே

உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் அட்டவணைக்குப் பின்னரே தமிழ் வகுப்புகள்

நடத்தப்படுகின்றன. அந்த நிலையில் ஆசிரியர்கள் எல்லா திறன்களையும் மாணவர்களுக்குக் கற்றுத்

தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே கற்றல் கற்பித்தலை மேற்கொள்வர். ஆனால், ஒவ்வொரு

திறன்களும் மாணவர்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்கின்றனரா என்று கண்டறிவதில்லை.

அதற்கான நேரம் இல்லாமல் போகின்றது. அதிலும் சில பள்ளிகளில் தமிழ் வகுப்புகளில் பகுதி

நேர ஆசிரியர்கள்தான் கற்பிக்கின்றனர். இதனால், மாணவர்களை சோதனைக்கு மட்டும் தயார்

செய்கின்றனர் தவிர அவர்கள் முழுமையாக திறன்களைக் கற்பிக்கும் வாய்ப்புகள் மிகக்

குறைவாகவே உள்ளன. அதில் வாசிப்புத் திறனும் ஒன்று. நேரம் பற்றாக்குறை மற்றும் மற்ற

திறன்களை முடிக்கும் காரணத்தினால் ஆசிரியர்களால் வாசிக்கும் திறனை முழுமையாக ஒவ்வொரு

மாணவர்களும் உள்வாங்குகின்றனரா என்பதை கவனிக்க இயலவில்லை. ஆகையால், இந்தச்

சிக்கல்களினால் மாணவர்களிடையே வாசிக்கும் திறனை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவாக

இருக்கின்றன. மாணவர்களிடையே வாசிக்கும் ஆர்வமும் குன்றி காணப்படுகின்றது.

2
1.3 : ஆய்வு நோக்கம்

இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதற்குப் இரு நோக்கங்கள் உள்ளன. அவைகள் பின்வருமாறு:-

i. முதலாம் படிவ மாணவர்களிடையே வாசிக்கும் திறன் குன்றி காணப்படுவதற்கான

காரணங்களைக் கண்டறிதல்.

ii. சிறுகதைகளின் வழி முதலாம் படிவ மாணவர்களின் வாசிக்கும் திறனை

மேம்படுத்துதல்.

1.4 : ஆய்வு வினா

i. முதலாம் படிவ மாணவர்களிடையே வாசிக்கும் திறன் குன்றி காணப்படுவதற்கான

காரணங்கள் யாவை?

ii. எவ்வாறு சிறுகதைகளின் வழி முதலாம் படிவ மாணவர்களின் வாசிக்கும் திறனை

மேம்படுத்துதல்?

1.5 : ஆய்வு நன்மைகள்

இந்த ஆய்வின் முடிவுகள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்மைகள் வழங்கும் என்ற

நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வாளர் மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்த,

சிறுகதைகளை வாசிக்கும் அணுகுமுறையைப் பயன்படுத்தியுள்ளார். இந்த அணுகுமுறை

மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்த உதவியாக அமையும். மேலும், ஆசிரியர்களும் இதே

அணுகுமுறையைப் பள்ளிகளில் மற்ற படிவ மாணவர்களுக்குப் பயன்படுத்தலாம். இதன்மூலம்

வாசிக்கும் ஆர்வம் குறைத்துக் காணப்படும் மாணவர்களிடம் வாசிக்கும் ஆர்வத்தை

வெளிக்கொணர செய்யலாம். இந்த அணுகுமுறையானது மாணவர்களின் ஆர்வத்தை

மேம்படுத்துவதோடு மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கவும் துணைப்புரிகின்றது.

1.6 : ஆய்வு எல்லை

3
பேராக் மாநிலத்தில், ஈப்போ வட்டாரத்தில் பல இடைநிலைப்பள்ளிகள் அமைந்துள்ளன. ஆய்வாளர்

புந்தோங்கில் அமைத்துள்ள புந்தோங் இடைநிலைப்பள்ளியில் இவ்வாய்வை மேற்கொண்டுள்ளார்.

அப்பள்ளியில் முதலாம் படிவ மாணவர்களில் ஆறு மாணவர்களும், இரு தமிழாசிரியர்களும்

இவ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். முதலாம் படிவ மாணவர்களிடையே வாசிப்புத் திறன் குன்றி

காணப்படுவதற்கான காரணங்களைக் கண்டறிய முன்னறித் தேர்வு, தமிழாசிரியருடன் நேர்காணல்

ஆகிய ஆய்வுக் கருவிகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

1.7 : ஆய்வு மூலம்

இந்த ஆய்வில் முதன்மைச் சான்றாதாரங்கள் என்று எதுவும் பயன்படுத்தப்படவில்லை. ஆய்வில்

துணைமைச் சான்றாதாரங்களாக ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வேடுகள், புத்தகங்கள், ஆகியவை

பயன்படுத்தப்பட்டுள்ளன. வாசிப்புத் திறனைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்குப் புத்தகங்கள்

பயன்படுத்தபட்டன.

1.8 : தொகுப்புரை

இயல் ஒன்றில் ஆய்வுப் பின்னணி, ஆய்வு சிக்கல், ஆய்வு நோக்கம், ஆய்வு வினா, ஆய்வு

நன்மை, ஆய்வு எல்லை, ஆய்வு மூலம் போன்ற கூறுகள் அனைத்தும் இவ்வியலில்

இடம்பெற்றுள்ளன. இந்த இயலில் இந்தச் செயலாய்வைப் பற்றிய ஒரு சிறியக் கண்ணோட்டத்தை

இதுவரைக் கண்டோம். இதன்வழி ஆய்வாளார் மேற்கண்ட ஆய்வுக் கூறுகளைக் கொண்டு

எவ்வாறு இந்தச் செயலாய்வைச் செய்துள்ளார் என்பது இவ்வியலில் காணப்பட்டது.

4
இயல் 2

முந்தைய ஆய்வுகள்

2.0 : முன்னுரை

இந்த இயலில் முந்தைய ஆய்வுகள் தொடர்பான தகவல்கள் ஆராயப்பட்டுள்ளன. இந்த ஆய்வுடன்

தொடர்புடைய ஆய்வுகளின் தலைப்பு, ஆய்வாளரின் பெயர், ஆய்வு நடத்தப்பட்ட ஆண்டு,

ஆய்வுப் பொருள், ஆய்வுக் கோட்பாடு, ஆய்வுத் தரவு சேகரிப்பு முறை, ஆய்வு முடிவுகள்

ஆகியவை இந்த இயலில் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த ஆய்வுடன் தொடர்பான சில

ஆய்வுகள் இந்த இயலில் விளக்கப்பட்டுள்ளன.

2.1 : முந்தைய ஆய்வுகள்

‘கைருல் அன்வர்’ என்பவரால் ‘நான்காம் படிவ மாணவர்களிடையே சஞ்சிகையின் வழி வாசிக்கும்

திறனை மேம்படுத்துதல்’ எனும் தலைப்பில் ஆய்வு ஒன்று ஆராயப்பட்டுள்ளது. இவர் சுலுத்தான்

இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தன் ஆய்வை மேற்கொண்டார். ஆய்வுக்குக் கேள்விகள்

ஆய்வுக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சஞ்சிகையின் வழி மாணவர்களின் வாசிப்புத்

திறன் மேம்படுத்த முடியும் என்று இந்த ஆய்வின் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும்,

மலாயா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ‘வீ கீ சின்’ எனும் ஆய்வாளர் ‘குறியீட்டுகளின் வழி

இரண்டாம் ஆண்டு மாணவர்களிடையே வாசிப்புத் திறனை மேம்படுத்துதல்’ எனும் ஆய்வை

மேற்கொண்டார். இரண்டாம் ஆண்டு மாணவர்கள் வாசிக்கும்போது எவ்வித தொனி, ஏற்ற இறக்கம்

இல்லாமல் வாசிக்கின்றனர். இதனால், மாணவர்களிடத்தில் கருத்துக்களை உள்வாங்கும் திறன்

குறைந்துக் காணப்படுகின்றது. எனவே, குறியீடுகளின் வழி ஆய்வாளர் இவ்வாய்வினை

மேற்கொண்டார். விலக்கியல் முறை அடிப்படையில் இவ்வாய்வு பகுப்பாய்வு செய்யப்பட்டது.

5
ஆய்வின் முடிவில் குறியீடுகளின் துணையுடன் மாணவர்களின் வாசிக்கும் திறன் மேம்பட்டுள்ளது

என்பதனை ஆய்வாளர் கண்டறிந்துள்ளார்.

2.2 : தொகுப்புரை

இந்த இயலில் வாசிப்புப் பற்றிய கருத்துகள், வாசிப்பு வகைகள், வாசிப்புத் திறனை மேம்படுத்தும்

ஆய்வுகள் போன்ற கூறுகள் ஒவ்வொரு ஆய்விலும் விளக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள்

அனைத்தும் ஆய்வாளருக்கு தன் ஆய்வினை மேற்கொள்ள துணைபுரிந்துள்ளது என்பது

குறிப்பிடத்தக்கது.

இயல் 3

ஆய்வு நெறிமுறை

3.0 : முன்னுரை

6
இந்த மூன்றாவது இயல், ‘சிறுகதைகளின் வழி முதலாம் படிவ மாணவர்களின் வாசிப்புத் திறனை

மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலான தனது ஆய்வு எவ்வாறான முறையில் ஆய்வுச்

செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் உட்படுத்தவிருக்கும்

நெறிமுறைகளை இவ்வியல் விவரிக்கின்றது. ஆய்வு வடிவமைப்பு, ஆய்வு கட்டமைப்பு, ஆய்வு

அணுகுமுறை, தரவுகளைச் சேகரிக்கும் முறை, தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் முறை, ஆய்வு

கோட்பாடு என பல கூறுகளைக் கொண்டு இவ்வாய்வு முழுமையாகக் கையாளப்பட்டுள்ளது.

3.1 : ஆய்வு வடிவமைப்பு

ஆய்வு வடிவமைப்பானது ஓர் ஆய்வுக்குத் திட்டமிடலாகவும் அதனை வழி நடத்தும்

வழிகாட்டியாகவும் வளம் வருகின்றது. இந்த ஆய்வில் மீட்டுணர்தல், திட்டமிடுதல், செயல்படுத்துதல்,

உற்றுநோக்குதல் ஆகிய சுழற்சிகளைப் பின்பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலில்,

வாசிக்கும் திறன் மாணவர்களிடையே குறைந்து வருகின்ற காரணங்கள் மீட்டுணரப்பட்டது. பின்,

திட்டமிடப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டன.இறுதியாக,

செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் விளைப்பயன் உற்றுநோக்கப்பட்டது. மேலும், இந்த

ஆய்வில் அளவுசார் மற்றும் பண்புசார் முறை கையாளப்பட்டுள்ளது. மாணவர்களிடையே

வாசிக்கும் திறன் குன்றி காணப்படுவதற்கான காரணங்களை நேர்காணளின் மூலமும் அதனை

விளக்குவதற்குப் பண்புசார் முறை பயன்படுத்தப்பட்டது. மாணவர்களிடையே வாசிக்கும் திறன்

எந்த அளவில் உள்ளது என்பதனை அறிய முன்னறித் தேர்வு நடத்தப்பட்டது. முன்னறித் தேர்வின்

முடிவுகள் அட்டவணையிலும் குறிவரையிலும் விளக்கப்பட்டுள்ளது. பின், மாணவர்களிடையே

வாசிப்புத் திறன் குன்றி காணப்படும் சிக்கலைக் களைய நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன.

நடவடிக்கைகளின் முடிவுகளைக் கண்டறிய அளவுசார் முறை கையாளப்பட்டது.

7
3.2.ஆய்வு கட்டமைப்பு

சிறுகதைகளின் வழி முதலாம் படிவ மாணவர்களின் வாசிப்பு


திறனை மேம்படுத்துதல்

ஆய்வு நோக்கம் ஆய்வு அணுகுமுறை தரவுகள் சேகரிப்பு

 முதலாம் படிவ  மீட்டுணர்தல் -முன்னறித் தேர்வு


மாணவர்களிடையே -முன்னறித் தேர்வு
-நடவடிக்கைகள்
வாசிக்கும் திறன் குன்றி
 திட்டமிடுதல்
காணப்படுவதற்கான
-நேர்காணல்
காரணங்களைக் -நடவடிக்கைகளைத்
திட்டமிடுதல்
கண்டறிதல். -உற்றுநோக்குதல்
 செயல்படுத்துதல்
-பின்னறித் தேர்வு
 சிறுகதைகளின் வழி -மாணவர்களுக்கு 5
நடவடிக்கைகள்
முதலாம் படிவ வழங்குதல்.
மாணவர்களின் வாசிக்கும்
 உற்றுநோக்குதல்
திறனை மேம்படுத்துதல்.
-பின்னறித் தேர்வு

8
தரவு பகுப்பாய்வு முறை

1) பண்புசார்

2) அளவுசார்
-அட்டவணை
-குறிவரைவு ஆய்வு
முடிவு

குறிவரைவு 3.1 : ஆய்வின் கட்டமைப்பு

3.3 : ஆய்வு அணுகுமுறை

செயலாய்வு அணுகுமுறையில் நான்கு முக்கிய நெறிமுறைகள் உள்ளன. அவை மீட்டுணர்தல்,

திட்டமிடுதல், செயல்படுத்துதல், மற்றும் உற்றுநோக்குதல் ஆகும். முதலில் ஆசிரியர்

மாணவர்களிடையே வாசிப்பில் உள்ள சிக்கலை அடையாளம் காண்பதற்கு மீட்டுணர வேண்டும்.

வகுப்பறையில் கற்றல் கற்பித்தலின்போது மாணவர்களின் ஈடுபாடு எவ்வாறு இருந்தது,

மாணவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பதனை மீட்டுணர வேண்டும். முன்னறித்

தேர்வின் வழி மாணவர்கள் வாசிப்பில் உள்ள சிக்கலை அடையாளம் காணலாம். மீட்டுணர்ந்த பின்

அந்தச் சிக்கலைக் களைய நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும். திட்டமிடுவதற்கு முன்

செயலாய்விற்கான நோக்கம், செயலாய்வை நடத்துவதற்கான கால அளவு, ஆய்வுக்கு

உட்படுத்தவிருக்கும் மாணவர்கள், நடவடிக்கைக்குத் தேவையான துணைபொருட்கள்

போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும். நடவடிக்கைகளைத்

திட்டமிட்டபடியே முறையாக அதனைச் செயல்படுத்த வேண்டும். சிறுகதைகளைக் கொண்டு

மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் அந்த ஐந்து நடவடிக்கைகளும்

விளைப்பயன்மிக்கதாக இருக்கின்றதா என்பதை மீட்டுணர வேண்டும். ஐந்து நடவடிக்கைகளைச்

செயல்படுத்தும்போது, மாணவர்களைக் கண்காணித்தலும் நடவடிக்கைகளைப் பதிவுச் செய்தலும்

அவசியம். ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஆய்வாளர் உற்றுநோக்க வேண்டும். ஒவ்வொரு

9
நடவடிக்கையையும் முடித்தப் பின்னர், மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதா

என்று உற்றுநோக்க வேண்டும். இறுதியாக, மாணவர்களுக்குப் பின்னறித் தேர்வு வழங்கி அவர்களின்

வாசிப்பு திறனில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு, மாணவர்களின் வாசிப்புத் திறன்

மேம்பட்டுள்ளதா என்பதனை ஈவின் முடிவில் உறுதிப்படுத்த வேண்டும்.

3.4 : தரவு சேகரிக்கும் முறை

ஆய்வாளர் ஆய்வுத் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க முன்னறித் தேர்வு, நடவடிக்கைகள்,

உற்றுநோக்கல், நேர்காணல், மற்றும் பின்னறித் தேர்வு போன்ற கருவிகளைப்

பயன்படுத்தியுள்ளார். இவ்வாய்வில் மாணவர்களின் வாசிக்கும் திறனை முன்னறித் தேர்வின் வழி

கண்டறிந்தார். வாசிக்கும் ஆர்வம் எவ்வாறு உள்ளன, வாசிக்கும் ஆர்வம் குன்றி

காணப்படுவதற்கான காரணங்களைக் கண்டறியவும் ஆய்வாளர் முன்னறித் தேர்வைப்

பயன்படுத்தியுள்ளார். அடுத்து, ஆய்வாளர் ஐந்து நடவடிக்கைகளின்வழி தரவுகளைச் சேகரித்தார்.

இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆய்வாளர் நடவடிக்கைக்காக வைத்திருந்தார். ஒவ்வொரு

நடவடிக்கைகளின் போதும் மாணவர்கள் சிறுகதைகளை வாசிப்பதன் மூலம் அவர்களது

புள்ளிகளும் வாசிக்கும் திறனும் மேம்பட்டுள்ளதா என்பதனையும் கணக்கிட்டார். அதன்பின்,

நேர்காணலின் மூலமும் ஆய்வாளர் தரவுகளைச் சேகரித்தார். மாணவர்களிடையே வாசிப்பு திறன்

குன்றி காணப்படுவதற்க்கான காரணங்களைக் கண்டறிய ஆய்வாளர் இரு தமிழாசிரியர்களை

நேர்காணல் செய்துள்ளார். நேர்காணலின் மூலம் கிடைக்கபெற்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

இறுதியாக, ஆய்வின் நோக்கம் நிறைவேறியுள்ளதா என்ற தரவைப் பின்னறித் தேர்வை நடத்தியதன்

மூலம் தெரிந்துக் கொண்டார். திட்டமிட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்தியப் பின்,

மாணவர்களுக்குப் பின்னறித் தேர்வு நடத்தப்பட்டது. மாணவர்களின் வாசிக்கும் திறன்

மேம்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய பின்னறித் தேர்வு நடத்தப்பட்து. ஆகவே, ஆய்வாளர்

மாணவர்களுக்கு முன்னறித் தேர்வில் கொடுத்தச் ஏழு பக்கம் அடங்கிய ஒரு கட்டுரையைக்

10
மீண்டும் பின்னறித் தேர்வில் கொடுத்து வாசிக்கப் பணித்தார். இதன்மூலம் இறுதி தரவுகள்

சேகரிக்கப்பட்டன .

3.5 : தரவுப் பகுப்பாய்வு முறை

இந்த ஆய்வில் ஆய்வாளர் அளவுசார் மற்றும் பண்புசார் முறையில் தரவுகளைப் பகுப்பாய்வு

செய்துள்ளார். ஒவ்வொரு மாணவர்களின் வாசிக்கும் திறனின் அடைவுநிலைக் கணக்கிட்டுப்

பகுப்பாய்வு செய்ய அளவுசார் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுப்பாய்வு முறையின்வழி

கிடைக்கப்பெற்ற தரவுகள் அட்டவணை மற்றும் குறிவரைவுகளில் விளக்கப்பட்டுள்ளது. மேலும்,

வாசிக்கும் திறன் மாணவர்களிடையே குன்றி காணப்படுவதற்கான காரணங்கள் பண்புசார்

முறையில் விளக்கப்பட்டிருக்கும்.

3.6 : தொகுப்புரை

இந்த இயலில் ஆய்வு வடிவமைப்பு, ஆய்வு அணுகுமுறை, ஆய்வுக் கட்டமைப்பு, தரவுகள்

சேகரிக்கும் முறை, தரவுகள் பகுப்பாய்வு முறை என ஆய்வின் நெறிமுறைகள் பற்றித் தெளிவாக

விளக்கப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைகளைப் பின்பற்றியே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இயல் 4

11
பகுப்பாய்வும் விளக்கமும்

4.0 : முன்னுரை

இவ்வியலில் ஆய்வுக்காகத் திரட்டப்பட்ட தரவுகள் ஆய்வின் நோக்கங்களை அடிப்படையாகக்

கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. பகுப்பாய்வின் முடிவில் இவ்வாய்வு

மேற்கொள்ளப்பட்டதன் நோக்கம் நிறைவேறப்பட்டது. சேகரித்த தகவல்கள் அனைத்தும் விளக்க

முறையிலும், அளவுசார் முறையிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

4.1 : முன்னறித் தேர்வு

ஆய்வாளர் முதல் வாரத்தில் முதலாம் படிவ மாணவர்களுல் முதல் நிலை மாணவர்களுக்கு

முன்னறித் தேர்வினை நடத்தினார். ஏழு பக்கம் அடங்கிய ஒரு கட்டுரையைக் கொடுத்து வாசிக்கப்

பணித்தார். மாணவர்கள் வாசிக்கும்போது ஆய்வாளர் அவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்துக்

கொண்டிருந்தார். பதினைந்து மாணவர்களுள் சில மாணவர்கள் படிப்பதுபோல் பாசாங்கு செய்தனர்,

சில மாணவர்கள் அதிக பக்கம் உள்ளது என்று புகார் செய்துக் கொண்டு சலிப்புடன் வாசித்தனர்.

மற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் வாசிப்பதைக் காண முடிந்தது. மாணவர்கள் கட்டுரையை

வாசித்தார்களா என்று சோதிக்க ஆய்வாளர் அவர்களிடம் அந்தக் கட்டுரையை ஒட்டி பத்து

கேள்விகளைக் கேட்டார். ஆய்வாளர் கேட்ட கேள்விக்கு அதிகமானோர் சரியான பதில்களைக்

கூறினர். ஆனால், அவர்களுள் ஆறு மாணவர்கள் வாசித்து முடிக்கவில்லை என்றும் கேட்ட

கேள்விக்கு தவறான பதிலையும் கூறினர். இந்த ஆறு மாணவர்களும் வாசிப்பில் ஆர்வம் இன்றியும்

வாசிப்புத் திறன் குன்றியும் இருப்பதை ஆய்வாளர் கண்டறிந்தார். ஆக, இந்த ஆறு

மாணவர்களையும் ஆய்வாளர் ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களிடத்தில் தனது ஆய்வினை

மேற்கொண்டார். முன்னறித் தேர்வின் முடிவுகள் கிழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிவரைவில்

விளக்கப்பட்டுள்ளது.

12
10
8
6
புள்ளிகள்

4 2 3
2 3
2
2
0 2
1
2
3
4
5
6
மாணவர்கள்

குறிவரைவு 4.1 : முன்னறித் தேர்வின் முடிவுகள்

மேலே குறிப்பிட்டுள்ள குறிவரைவு மாணவர்களின் முன்னறித் தேர்வின் முடிவுகளைக் குறிக்கின்றது.

10 புள்ளிகளில் முதல் மாணவர் 2 புள்ளியும், இரண்டாவது மாணவர் 3 புள்ளிகளும், மூன்றாவது

மாணவர் 2 புள்ளியும், நான்காவது மாணவர் 3 புள்ளிகளும், ஐந்தாவது மற்றும் ஆறாவது மாணவர்

2 புள்ளியும் பெற்றுள்ளனர். அவர்களின் அடைவுநிலை வாசிக்கும் திறன் குன்றி இருப்பதைக்

குறிக்கின்றது. ஆகையால் மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்த ஆய்வாளர்

சிறுகதைகளை ஒரு கருவியாகக் கொண்டு ஆய்வினை மேற்கொண்டார்.

4.2 : நேர்காணல்

முன்னறித் தேர்வின் முடிவில் ஆறு மாணவர்களிடையே வாசிப்புத் திறன் மிகவும் குன்றி

காணப்பட்டிருப்பது குறிவரைவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களிடையே வாசிப்புத்

திறன் குன்றி காணப்படுவதற்கான காரணத்தைக் கண்டறிய ஆய்வாளர் இரு தமிழாசிரியரிடம்

நேர்காணல் செய்துள்ளார். மாணவர்கள் பாடநூலைத் தவிர மற்ற புத்தகங்களை வாசிப்பதில்லை.

அது ஒரு சுமையாகக் கருதுகின்றனர். நூலகம் சென்று, புத்தகம் தேடி படிப்பது சிரமான

வேலையாகக் கருதுகின்றனர். மேலும், ஓய்வு நேரங்களிலும் புத்தகம் படிக்கும் பழக்கம்

மாணவர்களுக்கு இல்லை என்று கூறினர். இதனால், மாணவர்களிடையே வாசிப்புத் திறன் குன்றி

காணப்படுகின்றது. நேர பற்றாக்குறையினாலும் ஆசிரியர்களும் வாசிப்புத் திறனை முழுமையாகக்

கற்றுக் கொடுப்பதில்லை. மற்ற திறன்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்

13
ஆசிரியர்கள் வாசிப்பு திறனை எல்லா மாணவர்களும் உள்வாங்கியுள்ளனரா என்பதை அறிய

தவறுகின்றனர். இதனாலும் கூட, மாணவர்கள் வாசிப்புத் திறனில் பின்தங்கிக் காணப்படுகின்றனர்

என்று நேர்காணலின் போது இரு ஆசிரியர்களும் தெரிவித்தனர். எனவே, புதிய

அணுகுமுறைகளைக் கொண்டு மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்புத்திட்டம் என்று புதிய வகுப்பைக் கொண்டு வந்தால் மாணவர்கள்

வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்வர். மாணவர்களும் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்து

வாசிக்கும் பழக்கத்தை அமல்படுத்தினால், மாணவர்களிடையே உள்ள வாசிப்பு திறன் குன்றி

காணப்படுவதைத் தவிர்க்கலாம் என்று கூறினார். இந்த நேர்காணலின் வழி, ஆய்வாளர்

மாணவர்களிடையே வாசிப்புத் திறன் குன்றி காணப்படுவதற்கான காரணத்தைக் கண்டறிந்துள்ளார்.

எனவே, சிறுகதையின் வழி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த முற்பட்டுள்ளார்.

4.3 : நடவடிக்கைகள்

அ) நடவடிக்கை 1

முதல் நடவடிக்கையில் ஆய்வாளர் ஒரு பக்க அளவிலான சிறுகதையைக் கொடுத்து

படிக்கப் பணித்தார். ஆய்வாளர் மாணவர்களுக்கு ‘அன்பு’ எனும் தலைப்பிலான சிறுகதையைக்

கொண்டு வாசிக்கச் செய்தார். ஆறு மாணவர்களும் சலிப்புடன் வாசித்தனர். அவர்களின் ஆர்வம்

அதிகரிக்க ஆய்வாளர் புள்ளிகள் வழங்குவதாகக் கூறினார். சிறுகதையை வாசிக்கச் செய்தப்பின்

ஆய்வாளர் ஒவ்வொரு மாணவர்களையும் படித்தச் சிறுகதையை உரக்கமாக வாசித்துக் காட்ட

பணித்தார். பின், அவர்களிடம் அதன் தொடர்பான பத்து கேள்விகள் கேட்டார். இந்த

நடவடிக்கையில் மொத்தம் 20 புள்ளிகள் வழங்க்கப்பட்டது.முதல் மாணவர் 5 புள்ளிகளும்,

இரண்டாவது மற்றும் மூன்றாவது மாணவர்கள் 3 புள்ளிகளும், நான்காவது மாணவர் 7

புள்ளிகளும், ஐந்தாவது மாணவர் 6 புள்ளிகளும், ஆறாவது மாணவர் 7 புள்ளிகளும் பெற்றனர்.

முன்னறித் தேர்வைக் காட்டிலும் மாணவர்களின் புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளதால், ஆய்வாளர்

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த இயலும் என்று அறிந்தார்.

ஆ) நடவடிக்கை 2

14
ஆய்வாளர் இரண்டாவது நடவடிக்கையாக இரு பக்க அளவிலான சிறுகதையைக்

கொடுத்து வாசிக்கச் செய்தார். ‘நட்பு’ எனும் தலைப்பிலான சிறுகதையைக் கொடுத்தும் இம்முறை

மாணவர்கள் சலிப்பின்றி வாசிப்பதைக் கண்டறிய முடிந்தது. மாணவர்கள் படித்தச் சிறுகதையை

உரக்கமாக வாசித்துக் காட்டினர். பின், ஆய்வாளர் கேட்ட கேள்விக்குப் பதில் கூறினர். இந்த

நடவடிக்கையில் முதல் மாணவர் 8 புள்ளிகளும், இரண்டாவது மாணவர் 5 புள்ளிகளும், மூன்றாவது

மாணவர் 6 புள்ளிகளும், நான்காவது மாணவர் 10 புள்ளிகளும், ஐந்தாவது மற்றும் ஆறாவது

மாணவர்கள் 8 புள்ளிகளும் பெற்றனர். நடவடிக்கை ஒன்றில் மாணவர்களின் அடைவுநிலையைக்

காட்டிலும் நடவடிக்கை இரண்டில் மாணவர்களின் வாசிக்கும் திறன் மேம்பட்டுள்ளது என்பதனை

புள்ளிகள் காட்டுகின்றது. மாணவர்களுக்கு அவர்களுக்குப் பிடித்தமான வகையில் உள்ள

சிறுகதைகளைக் கொடுப்பதனால் அவர்கள் ஆர்வத்துடன் அந்தச் சிறுகதையை வாசிப்பதைக்

கண்டார். எனவே, ஆய்வாளர் அடுத்துவரும் நடவடிக்கைகளில் மாணவர்களுக்கு விருப்பமான

சிறுகதைகளை அவர்களே தேர்ந்தெடுத்து படிக்கச் செய்யும்படி செய்துள்ளார்.

இ) நடவடிக்கை 3

மூன்றாவது நடவடிக்கையில் ஆய்வாளர் மாணவர்களுக்கென்று ஒரு சில சிறுகதைகளைக்

கொண்டு வந்தார். இம்முறை ஆய்வாளர் நான்கு பக்க அளவிலான சிறுகதைகளைக் கொண்டு

வந்தார். சிறுகதைகளை மாணவர்களையே தேர்ந்தெடுத்துப் படிக்கும்படி செய்தார். எத்தனை

மாணவர்கள் ஆர்வமுடன் தானாகவே வந்து சிறுகதையைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதனை

கண்டறிய ஆய்வாளர் முற்பட்டார். ஆறு மாணவர்களும் ஆர்வமுடன் தங்களுக்குப் பிடித்த

சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து படித்தனர். ஒரு சில மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட

சிறுகதைகளை எடுத்து படித்தனர். இது அவர்களின் வளர்ச்சியைக் குறிக்கின்றது. மாணவர்கள்

படித்து முடித்ததும் அவர்களே எழுந்து அந்தச் சிறுகதைகளை வாசித்தனர். ஆய்வாளர் அதன்

தொடர்பான கேள்விகளை மாணவர்களிடத்தில் கேட்டார். மாணவர்கள் தங்களின் பதிலைக் கூறினர்.

இந்த நடவடிக்கையில் முதல் மாணவர் 10 புள்ளிகளும், இரண்டாவது மாணவர் 9 புள்ளிகளும்,

மூன்றாவது மாணவர் 7 புள்ளிகளும், நான்காவது மாணவர் 13 புள்ளிகளும், ஐந்தாவது மாணவர்க்

10 புள்ளிகளும், ஆறாவது மாணவர் 11 புள்ளிகளும் பெற்றனர்.

15
ஈ) நடவடிக்கை 4

அடுத்த நடவடிக்கையில் ஆய்வாளர் ஆறு பக்கம் கொண்ட சிறுகதைகளைக் கொண்டு

வந்தார். மாணவர்களுக்குப் பிடித்த சிறுகதைகளை அவர்களே எடுத்து படிக்கச் செய்தனர்.

இம்முறை படித்த சிறுகதையை, மாணவர்கள் வேறு எந்த மாதிரி மாற்றி எழுதியிருக்கலாம் என்று

கற்பனைச் செய்து கூறும்படி ஆய்வாளர் கூறினார். மாணவர்கள் ஆர்வமுடன் தங்களின்

கற்பனைக்கு ஏற்ற கதைகளைக் கூறினர். மாணவர்களிடையே வாசிக்கும் திறன் இருந்தால்தான்

மாணவர்களால் அந்தக் கதையைத் தங்களின் கற்பனைக்கு ஏற்றதுபோல் மாற்றி கூற இயலும்.

அவ்வகையில் இந்த நடவடிக்கையின் மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பட்டுள்ளது

என்று கண்டறியப்பட்டுள்ளது. வாசிப்புத் திறன் மட்டுமின்றி அவர்களின் கற்பனைத் திறனும்

பெருகியுள்ளதை ஆய்வாளர் கண்டறிந்தார். இந்த நடவடிக்கையில் முதல் மாணவர் 14 புள்ளிகளும்,

இரண்டாவது மாணவர் 13 புள்ளிகளும், மூன்றாவது மாணவர் 11 புள்ளிகளும், நான்காவது மாணவர்

15 புள்ளிகளும், ஐந்தாவது மாணவர் 12 புள்ளிகளும், ஆறாவது மாணவர் 15 புள்ளிகளும்

பெற்றனர். மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பட்டுள்ளது என்பது இதன்மூலம்

அறியப்பட்டுள்ளது.

உ) நடவடிக்கை 5

இறுதி நடவடிக்கையில் ஆய்வாளர் எழு பக்கம் அளவிலான சிறுகதை ஒன்றை

வழங்கினார். இம்முறை மாணவர்கள் ஆய்வாளர் கொடுத்தச் சிறுகதையையே படித்தனர். எந்தவொரு

சிரமமுமின்றி மாணவர்கள் ஆய்வாளர் கொடுத்தச் சிறுகதையை ஆர்வமுடன் வாசித்தனர்.

ஆய்வாளர் இந்த நடவடிக்கைக்கு மாணவர்களுக்கு 20 நிமிடம் வழங்கினார். அந்த நிமிடத்திற்குள்

மாணவர்கள் சிறுகதையைப் படித்து முடித்து ஆய்வாளரிடம் வேறு சிறுகதையைக் கேட்டு

வாங்கினர். ஆய்வாளர் படித்தச் சிறுகதையைச் சார்ந்த கேள்விகளை மாணவர்களிடத்தில் கேட்டார்.

மாணவர்கள் கேட்ட கேள்விக்கு முடிந்த வரையில் சரியான பதிலைக் கூறினர். ஆரம்பத்தில்

படிக்கச் சிரமப்பட்ட மாணவர்கள் இன்று ஆர்வமுடன் சிறுகதைகளை வாசிப்பது பார்க்க

மகிழ்ச்சியாக இருந்தது. சிறுகதைகளை வாசிக்க மிகவும் பிடித்திருப்பதாக மாணவர்கள் கூறினர்.

இனி ஓய்வு நேரங்களிலும் சிறுகதைகள் வாசிக்கப் போவதாக மாணவர்கள் கூறியது இங்கு

16
குறிப்பிடத்தக்கது. இந்த இறுதி நடவடிக்கையில் முதல் மாணவர் 17 புள்ளிகளும், இரண்டாவது

மாணவர் 16 புள்ளிகளும், மூன்றாவது மாணவர் 15 புள்ளிகளும், நான்காவது மாணவர் 18

புள்ளிகளும், ஐந்தாவது மாணவர் 15 புள்ளிகளும், ஆறாவது மாணவர் 17 புள்ளிகளும் பெற்றனர்.

மாணவர்களின் புள்ளிகள் ஆய்வாளருக்கு மன நிறைவைக் கொடுத்தது. இந்த ஐந்து

நடவடிக்கைகளின் மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பட்டுள்ளதை ஆய்வாளரால் அறிய

முடிந்தது.

மாணவர்கள்
நடவடிக்கை 1 2 3 4 5 6

1 5 3 3 7 6 7
2 8 5 5 10 8 8
3 10 9 7 13 10 11
4 14 13 11 15 12 15
5 17 16 15 18 15 17

அட்டவணை 4.1 : ஆறு மாணவர்களும் ஐந்து நடவடிக்கைகளில் பெற்ற புள்ளிகள்

4.4 : பின்னறித் தேர்வு

ஆய்வாளர் ஐந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட பின், பின்னறித் தேர்வை நடத்தினார்.

ஆய்வாளர் முன்னறித் தேர்வில் வழங்கிய அதே நடவடிக்கையைப் பின்னறித் தேர்விற்கும்

பயன்படுத்தினார். மாணவர்களின் அடைவுநிலையை ஒப்பிட்டு பார்க்கவே ஆய்வாளர் இவ்வாறு

செய்துள்ளார். முன்னறித் தேர்வில் வழங்கிய அதே ஏழு பக்கம் கொண்ட வேறொரு தலைப்பிலான

கட்டுரையைக் கொடுத்து வாசிக்கச் செய்தார். மாணவர்களுக்கு வாசிக்க 20 நிமிடங்கள் வழங்கினார்.

ஆய்வாளர் மாணவர்கள் வாசிக்கும்பொழுது அவர்களின் போக்குகளைக் கண்காணித்தார்.

மாணவர்கள் ஆர்வமுடன் கட்டுரையை வாசித்தனர். ஆய்வாளர் ஒவவொரு மாணவர்களிடமும்

கட்டுரையைச் சார்ந்து கேள்விகள் கேட்டார். எல்லா மாணவர்களும் கேள்விகளுக்குச் சரியான

பதிலைக் கூறுவதோடு, வழங்கப்பட்ட கட்டுரையை ஆய்வாளரிடம் வாசித்துக் காட்டினர். இதன்வழி,

மாணவர்களின் வாசிப்புத் திறன் சிறப்பான முன்னேற்றம் அடைந்து மேம்பட்டுள்ளது என்பதை

ஆய்வாளர் கண்டறிந்தார்.

17
18 17 17 18 18
புள்ளிகள் 20 16

15

10

5
1 2 3 4 5 6
மாணவர்கள்

குறிவரைவு 4.2 : பின்னறித் தேர்வின் முடிவுகள்

மேலே குறிப்பிட்டுள்ள குறிவரைவு மாணவர்களின் பின்னறித் தேர்வில் பெற்ற புள்ளிகளைக்

குறிக்கின்றது. பின்னறித் தேர்வில் முதல் மாணவர் 18 புள்ளிகளும், இரண்டாவது மாணவர் 17

புள்ளிகளும், மூன்றாவது மாணவர் 17 புள்ளிகளும், நான்காவது மாணவர் 18 புள்ளிகளும், ஐந்தாவது

மாணவர் 16 புள்ளிகளும், ஆறாவது மாணவர் 18 புள்ளிகளும் பெற்றனர். இதன்மூலம்,

மாணவர்களின் வாசிப்புத் திறன் முன்னேற்றம் கண்டுள்ளதைக் காண முடிகின்றது.

4.5 : முன்னறித் தேர்வு மற்றும் பின்னறித் தேர்வு ஒப்பீடு

மாணவர்கள் முன்னறித் தேர்வுப் புள்ளிகள் பின்னறித் தேர்வு புள்ளிகளின்


( 20 புள்ளிகள் ) புள்ளிகள் வேறுபாடு
(20 புள்ளிகள்)
1 2 18 16
2 3 17 14
3 2 17 15
4 3 18 15
5 2 16 14
6 2 18 16
அட்டவணை 4.2 : முன்னறித் தேர்வு மற்றும் பின்னறித் தேர்வு ஒப்பீடு

18
25

20

15 முன்னறித்
புள்ளிகள்

தேர்வு
10
பின்னறித்
5 தேர்வு

0
1 2 3 4 5 6
மாணவர்கள்

குறிவரைவு 4.3 : முன்னறித் தேர்வு மற்றும் பின்னறித் தேர்வு முடிவுகளின் ஒப்பீடு

மேலே காணப்பட்ட அட்டவணையும் குரிவறைவும் ஆய்வாளர் தனது ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த

ஆறு மாணவர்களின் முன்னறி மற்றும் பின்னறித் தேர்வின் முடிவுகளின் ஒப்பீட்டைக் காட்டுகின்றது. முதல்

மாணவர் 2 புள்ளியிலிருந்து 18 புள்ளிக்கும், இரண்டவாது மாணவர் 3 புல்ல்லியிளிருந்து 17 புள்ளிக்கும்,

மூன்றாவது மாணவர் 2 புள்ளியிலிருந்து 17 புள்ளிக்கும், நான்காவது மாணவர் 3 புள்ளியிலிருந்து

18 புள்ளிக்கும், ஐந்தாவது மாணவர் 2 புள்ளியிலிருந்து 16 புள்ளிக்கும், ஆறாவது மாணவர் 2

புள்ளியிலிருந்து 18 புள்ளிக்கும் முன்னேறியுள்ளனர். ஐந்து நடவடிக்கைகளுக்குப் பின்

மாணவர்களின் வாசிப்புத் திறனில் மேம்பாடு ஏற்பட்டுள்ளது என்பதனை இதன் மூலம் கண்டறிய

முடிகின்றது.

4.4 : தொகுப்புரை

இந்த ஆய்வில் செயல்முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் யாவும் சீராக நடத்தப்பட்டன.

சிறுகதைகளின் மூலம் மாணவர்களின் வாசிக்கும் திறன் மேம்பட்டுள்ளது என்பது முன்னறித்

தேர்வையும் பின்னறித் தேர்வையும் ஒப்பீடு செய்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

இயல் 5

19
ஆய்வின் முடிவு

5.0 : முன்னுரை

இந்த இயலில் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளுக்கான விளக்கங்களும் அதற்கான

காரணங்களும் இந்த இயலில் விளக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வாய்வின் கண்டுபிடிப்புகளைப்

பற்றியும், வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளும் இவ்வியலில்

கொடுக்கப்பட்டுள்ளன.

5.1 : ஆய்வு முடிவின் சுருக்கம்

ஆய்வாளர் பயிற்றுப்பணியை மேற்கொண்டபோது, தான் கற்பித்த படிவம் ஒன்று மாணவர்களில்

ஒரு சில மாணவர்களுக்கு வாசிப்புத் திறனில் பின்தங்கி இருப்பதைக் கண்டறிந்தார். எனவே,

சிறுகதைகளின் வழி முதலாம் படிவ மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ஆய்வாளர்

முடிவெடுத்தார். அதற்கான முன்னறித் தேர்வு, பின்னறித் தேர்வு, ஐந்து நடவடிக்கைகள் என

திட்டமிட்டு செயல்படுத்தினார். ஆய்வாளர் இவ்வாய்வினை மாணவர்களிடத்தில் மேற்கொள்வதற்கு

முன்பதாக அவர்களிடம் முன்னறித் தேர்வு ஒன்றை நடத்தினார். கட்டுரை ஒன்றைக் கொடுத்து

மாணவர்களை வாசிக்கச் செய்ததில் அதில் ஆறு மாணவர்களின் அடைவுநிலை மிகவும் மோசமான

நிலையில் இருந்தது. பின், அந்த ஆறு மாணவர்களைக் கொண்டு ஐந்து நடவடிக்கைகள்

மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு நடவடிக்கையிலும் மாணவர்களின் அடைவுநிலை

குறிப்பெடுக்கப்பட்டது. ஒவ்வொரு நடவடிக்கையிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன்

மேம்படுவதைக் காண முடிந்தது. இறுதியாக, ஆய்வாளர் பின்னறித் தேர்வை நடத்தி மாணவர்களின்

வாசிப்புத் திறன் மேம்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்தார். ஆய்வின் முடிவாக சிறுகதைகளின்

வழி மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார்.

5.2 : தொடர்பாய்வுப் பரிந்துரைகள்

இந்த ஆய்வினை மற்ற பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களும் தங்களுடைய கற்றல் கற்பித்தல்

நடவடிக்கையில் மேற்கொண்டால் மாணவர்களிடத்தில் வாசிக்கும் திறன் அதிகரிக்கும். மேலும், இந்த

20
அணுகுமுறையைக் கொண்டு மாணவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்தலாம். சிறுகதைகளின்

வழி மாணவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்தலாம் என்ற தலைப்பில் வேறொரு புதிய

ஆய்வினை மேற்கொள்ளலாம். இந்த ஆய்வானது ஆறு மாணவர்களைக் கொண்டு

நடத்தப்பட்டுள்ளது. இனிவரும் தொடர் ஆய்வுகளில் அதிகமான மாணவர்களை உட்படுத்தி

ஆய்வினை மேற்கொள்ளலாம். இதன்வழி, வாசிப்புத் திறன் குன்றி இருக்கும் அதிகமான

மாணவர்கள் மேம்படுத்தப்படுவர். இந்த ஆய்வானது முதலாம் படிவ மாணவர்களைக் கொண்டு

நடத்தப்பட்டுள்ளது. தொடர் ஆய்வுகளில், மற்ற படிவ மாணவர்களை உட்படுத்தி ஆய்வினை

மேற்கொள்ளலாம். இந்த ஆய்வில் சிறுகதையை ஒரு அணுகுமுறையாகக் கொண்டு ஆய்வாளர்

ஆய்வினை மேற்கொண்டுள்ளார். தொடர் ஆய்வுகளில் வேறொரு அணுகுமுறைகளைக் கொண்டு

ஆய்வினை மேற்கொள்ளலாம்.

5.3 : தொகுப்புரை

இந்த இயலில் முன்னறித் தேர்வு, பின்னறித் தேர்வு, மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நடவடிக்கைகள்

மூலம் கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வின் முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், இனிவரும் தொடர் ஆய்வுகளுக்கான பரிந்துரைகளும் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளது.

6.0 : துணைநூற்பட்டியல்

 தேசியக் கல்வித் தத்துவம், கல்வித் திட மேம்பாட்டு பிரிவு, கல்வி அமைச்சு, 1988

 கணபதி, வி. (2007). நற்றமிழ் கற்பிக்கும் முறைகள். சென்னை: சாந்தா பப்ளிஷர்ஸ்

 சுப்புரெட்டியார், ந. (2008). தமிழ்ப் பயிற்றும் முறை. சென்னை: மெய்யப்பன் பதிப்பகம்.


 அர்ஜுனன் பெருமாள். (2017). செய்தி தயாரிப்புச் செயலி வழி மாணவர்களின் வாசிப்புத்
திறனை மேம்படுத்துதல். மலேசியா.

21
7.0 பின்னிணைப்புகள்

22
23

You might also like