You are on page 1of 2

காப்பியம் என்றால் என்ன என்பதனையும் அதன் வகைகளையும் சான்றுகளோடு விளக்கி

எழுதுக.

இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய


வகையில் (Classical Literature) அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில்
முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம். இந்த நிலை தமிழுக்கு இருக்கிறதா?
என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் மட்டுமே தமிழ் பழமையான செம்மொழி
அன்று என்று கூறிவிட முடியாது. இங்குக் கர் என்பார் கூற்று நினைத்தற்கு உரியது. அவர்
“வீரயுகத்தில் காப்பியம் மட்டுமே எழ வேண்டும் என்ற நியதி இல்லை. பல மொழிகளில்
ஹோமரின் இலியத், ஒதீசி போன்ற காவியங்களுக்குப் பதிலாக, கதை எதுவும் இன்றித் தங்கள்
தங்கள் நாட்டுச் சிற்றரசர்களையும் தலைவர்களையும் பாராட்டிப் பாடும் பாடல்கள் எழுந்துள்ளன”
என்கிறார். சங்க இலக்கியமான புறநானூறும், பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டில் பல பாடல்களும்
இத்தகைய வீரயுகப் பாடல்கள்தாம். தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான்
காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார்.
சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத்
தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே. தமிழில் தோன்றிய முதல் காப்பியமே
சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன.

வடமொழியில் ‘காவ்யா’ என்றால் பாட்டு என்பது பொருள். கவியால் படைக்கப்படுவன


அனைத்தும் ‘காவியமே’. எனவே காவ்யா - காவியம் - காப்பியம் என ஆகியது என்பர். தமிழில்
தொல்காப்பியம், காப்பியக் குடி, வெள்ளூர்த் தொல்காப்பியர், காப்பியஞ் சேந்தனார், காப்பியாற்றுக்
காப்பியனார் முதலான பெயர்கள் காணப்படுகின்றன. இவை காப்பு + இயம் என்ற சொற்களின்
சேர்க்கையாகக் கருதப்படுகின்றன. பழமரபுகளைக் காப்பது ‘காப்பியம்’ எனக் கருத இடம் உண்டு.
காப்பியம் என்ற இலக்கியமே, வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சமூக - சமய - அரசியல்
வரலாற்றையோ அல்லது வரலாறாக நம்பப்படுவதையோதான் பாடுபொருளாகக் கொண்டுள்ளது.
இவை வாய்மொழி மரபாகச் சொல்லப்பட்டு வந்த கதைகளாக அமைந்தன. இவ்வாறு வரலாற்றுக்கு
முந்தைய கால மனிதனின் வாழ்வியல், சிந்தனை மற்றும் சமய நம்பிக்கை பற்றிச் சொல்லப்பட்டு
வந்த கதைகளே ஹோமர் போன்ற கவிஞர்களால் காப்பியமாகத் தொகுக்கப் பட்டன. இவ்வகையில்
காப்பியம் என்பதும் பழமரபுகளைக் காத்து இயம்புவது அதாவது ‘சொல்லப்பட்டு வருவது’
என்பது விளங்குகிறது.
காப்பியம் ஒரே வகைச் செய்யுளால் அமைவதும் உண்டு. பலவகைச் செய்யுட்களால் அமைவதும்
உண்டு. செய்யுளாக அமைவது மட்டுமன்றி இடையிடையே உரைநடையும் பிறமொழிச் சொற்களும்
கலந்து வருவதாக அமைவதும் உண்டு.

அவைதாம்
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையும் பாடையும் விரவியும் வருமே
(தண்டியலங்காரம்-11)
ஒரே வகை யாப்பில் (செய்யுளில்) அமைவது கம்பராமாயணம். அது விருத்தத்தால் அமைந்தது. பல
வகை யாப்பில் அமைவது சிலப்பதிகாரம். உரைநடை விரவி வருவதற்கும் அதுவே சான்றாகிறது.
காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. பொருளால் தொடர்ந்து வரும் செய்யுள்
இலக்கியத்தைப் பெருங்காப்பியன் எனவும் சிறு காப்பியம் எனவும் பிரிப்பர். வாழ்த்து, வணக்கம்,
வருபொருள் என்ற மூன்று மங்கள வகைகளில் ஒன்றைக் கொண்டு அறம், பொருள்,இன்பம், வீடு
என்ற நான்குவகை உறுதிப்பொருள்களை உணர்த்தும் இயல்பினையுடையது பெருங்காப்பியம்.
தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும்
பெருங்காப்பியம் எனப் படுகின்றன. இவற்றை ஐம்பெருங்காப்பியங்கள் எனக் குறிப்பிடுவர்.
இவற்றுள் சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்பர். இவை
காலத்தால் முந்தியவை.அகவற்பாவால் இயன்ற காப்பியங்கள்.
சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்
நந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா
வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்
என்று ஐம்பெருங்காப்பியங்களை எண்ணிச் சொல்கிறார்.
அறமுதல் நான்கினும் குறைபாடு உடையது
காப்பியம் என்று கருதப் படுமே
(தண்டியலங்காரம்-10)
சிறு காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணத்தில் ஏதேனும் ஒன்று
குறைந்து வருவதாகவோ அல்லது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஏதேனும்
ஒன்று குறைந்து வருவதாகவோ கவிஞர்களால் இயற்றப் பெறுவது. வாய்மொழி இலக்கியம்,
தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது. நான்கு
பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம்.
பிற்காலத்தில் இக்காப்பியங்கள் தொடர்நிலைச் செய்யுளின் வகையைச் சார்ந்தது என்றும்
தொடர்நிலைச் செய்யுளிலும் பொருள் தொடர்நிலையைச் சார்ந்தது என்றும் அறிஞர்கள்
கருதினர்.உதயணகுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி, நாககுமார காவியம்
ஆகியவை சிறுகாப்பியங்களாகும்.
காப்பியம் அறம், பொருள்,இன்பம் வீடு ஆகிய நாற்பொருளை வலியுறுத்துவன. சமுதாய
சிந்தனைகளும்,சமய மேன்மைகளையும்,பெண்ணின் பெருமைகளையும்,இல்லற சிறப்புகளையும்
விளம்புகின்றன இக்காப்பியங்கள்.

You might also like