You are on page 1of 3

நமச்சிவாய வாழ்க..

நாதன்நாள் வாழ்க..
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத்தான் தாள் வாழ்க...

என்னை இறைவன் நன்றாகப் படைத்தனன்


தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு….

பெரும் மதிப்பிற்குரிய கோலாப்பிலா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர்


திரு. யோகலிங்கம் சுப்பையா பிள்ளை அவர்களே, அன்பிற்குரிய துணைத்
தலைமையாசிரியர்களே, அன்பிற்கினிய ஆசிரியர் பெருந்தகைகளே, நேரம்
தூரம் என சிரமம் பாராது வருகையளித்த சிறப்பித்த பெற்றோர்களே, என்
அன்பு மாணவ செல்வங்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான
முத்தமிழ் வணக்கம்.

அழகே தமிழே அழகிய மொழியே எனதுயிரே…

ஆம் அமுத மொழியான அன்னை தமிழைக் கொண்டாட, 2023-ஆம் ஆண்டு


கோலப்பிலா தமிழ்ப்பள்ளியின் தமிழ்மொழி வாரத்திற்க்கு உங்கள்
அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் பேருவகை அடைகிறேன்.
அவனின்றி ஓரணும் அசையாது. ஆகவே, மலர உள்ளது முதல் அங்கமாக
இறைவாழ்த்து.. அதனைத் தொடர்ந்து வலம் வருகின்றன தேசியப் பண்,
மாநிலப் பண, தமிழ் வாழ்த்து, ஏபிசிடி பாடல் மற்றும் தேசிய கோட்பாடு.

தலைமையாசிரியர் ஆசிரியர் மற்றும் இன்று படைப்பு செய்யவிருக்கும்


அனைத்து மாணவர்களையும் பள்ளியில் நுழைவாயிலுக்கு அன்புடன்
அழைக்கிறேன்.

இதோ, தேன் தமிழாம் தமிழ்மொழி வாரத்தின் தொடக்கமாக ஆயக்


கலைகளில் ஒன்றான பரதக் கலையை அரங்கேற்றி நம்மைப் பரவசத்தில்
ஆற்ற வருகிறார் செல்வி லாவண்யா பூபாலன் உங்கள் பலத்தக்
கரகோஷத்துடன்.

ரம்மியாக ஆடி கண்களையும் மனதையும் குளிரச் செய்த செல்வி லாவண்யா


பூபாலனுக்கு நன்றியுடன் ஒரு சிறிய அன்பளிப்பு. அன்பளிப்பை எடுத்து
வழங்க பள்ளியின் தலையாசிரியர் திரு யோகலிங்கம் சுப்பையா பிள்ளை
அவர்களை அன்புடன் அழைக்கிறேன். இருவருக்கும் நன்றி மலர்கள்
சமர்ப்பணம்.

அன்பிற்கினிய சபையோரே,

தொடர்ந்து, நிகழ்வை அலங்கரிக்க வருகிறது மாணவர்கள் படைப்பு...


அன்புச் செல்வங்களே,
உங்களைக் காண சில தமிழ் அறிஞர்கள் வந்துள்ளனர் சில பல நீதிகளை
உங்களுக்கு எடுத்துரைப்பதற்கு…
முதலாவதாக, பெண்ணியம் பேசிய பாரதி…
பாரதி கிஷோர் இராமனுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்…
அடுத்து, சுட்டப்பழம் வேண்டுமா சுடாதப் பழம் வேண்டுமா என முருகனின்
திருவிளையாட்டில் ஆட்கொள்ளப்பட்ட ஔவைப் பிராட்டி…
ஔவை கணிஸ்கா முடியாண்டிற்கு நன்றிகள் பல..
தொடர்ந்து, இரு வரி கவிதையான திருக்குறளில் வாழ்க்கை தத்துவத்தை
அழகாக அடங்கிய திருவள்ளுவர்…
வள்ளுவன் ரிஷிராஜ் சுபா அவர்களுக்கு நன்றி மலர் சமர்ப்பணம்.

இனி, கோலப்பிலா தமிழ்ப்பள்ளியின் தமிழ்மொழி வாரத்தை


அதிகாரப்பூர்வமாகத் துவங்கி சிறப்புரையாற்ற பள்ளியின் தலைமையாசிரியர்
திரு. யோகலிங்கம் சுப்பையா பிள்ளை அவர்களைப் பணிவன்புடன்
அழைக்கின்றேன்.

நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த தலைமையாசிரியர்


அவருக்கு நன்றிகள் பல உரித்தாகுக.

அடுத்த படைப்பாக, தத்தம் பேச்சுத் திறமையைப் பறைச்சாற்றி நம்


சிந்தையை வருட வருகிறார்கள் விரும்பிடு விஞ்ஞானம் எனும் தலைப்பில்
செல்வி சரண்யா கெகாந்திரனும் தமிழர் பண்பாடு எனும் தலைப்பில் செல்வி
யோகினி கணேக்ஷ்ம்..
தமிழ் மணத்தை அரங்கெங்கும் கமழ செய்த இரு மாணவச்
செல்வங்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்..

தொடர்ந்து, தம் செவியைக் குளிர்விக்க ஒரு நன்னெறிக் கதையுடன் வலம்


வருகிறார் செல்வி சரண்யா சாமிநாதன்.
அழகாகக் கதை கூறி சென்ற மாணவிக்கு நன்றி.
முத்தாய்ப்பாக வாழ்க்கையே போராட்டம் வாழ்ந்துதான் பார்க்கனும் எனும்
வாழ்க்கை தத்துவத்தைப் பாடலாகப் பாட வருகிறார் நன் பள்ளியின் சின்ன
குயில் குகாஷினி இராஜவேல்.
இனிமையாகப் பாடி சென்ற மாணவிக்கு நன்றி.

இறுதியாக, தமிழ்மொழி வாரத்தையொட்டிய சில விளக்கத்தோடு


உங்களைக் காண வருவது தமிழ்மொழி பணித்தியத் தலைவி திருமதி மாலதி
நடேசன்.
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி…

இத்துடன் இந்நிகழ்வு ஓர் இனிய நிறைவை நாடுகிறது. காற்றைப் போல


தமிழ்மொழியைச் சுவாசிப்போம் எனக் கூறி உங்களிடமிருந்து விடைபெறுவது
நான் செல்வ ராணி கலிய பெருமாள். நன்றி, வணக்கம்.

You might also like